• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

(2) சினம்

April 4, 2016
in கிறிஸ்தவ நூற்கள், கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
0 0
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(2) சினம்

கோபம் பாவம் பழி என்பர். பொதுவாக எல்லாரும் கோபப்படக்கூடியவர்கள். சின்னஞ்சிறு குழந்தைக்குக்கூட சினம் பொத்துக்கொண்டு வந்து விடுகிறது. சாப்பிடாமல் அடம் பிடிக்கிறது. சிறுவனுக்கும் கண் மூக்கு தெரியாமல் சினம் வந்து விடுகிறது. குடும்பத்தினரை அவமானத்தில் ஆழ்த்தும் அளவுக்கு மனைவிக்குக் கோபம் வரம்பு கடந்து பொங்கிவிடுகிறது, அனைவருக்கும் தலைவலியை உண்டாக்கிவிடுகிறது. கணவன் சினத்தால் சீறீவிழுகிறான், பசியெல்லாம் பஞ்சாய்ப் பறக்கும் அளவுக்கு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் வெகுளிக்கு ஆளாகி, சினத்திற்கு இரையாகிவிடுகின்றனர். இயற்கையாகக் கோபத்திற்கு விலக்கானவர்கள் யாருமே இல்லை என்று கூறிவிடலாம்.

கோபம் இதயத்தி;ல் கொந்தளிப்பு உண்டாக்கும். குடும்பத்தில் சண்டையை உண்டாக்கும். சமூகத்தில் சச்சரவை உண்டாக்கும். நாட்டில் குழப்பத்தை உண்டாக்கும். சினத்தால் சீரழிந்த குடும்பங்களுக்கு ஓர் அளவுண்டோ? அறிவு அடக்கத்தை இழந்து சினத்திற்கு அடிமையாகும்பொழுது, அலுவல் உறவுகளும் முறிந்து போகின்றன. கோபம் என்னும் கத்தி, பொங்கும் சினம் என்னும் சாணைக்கல்லில் கூர்மையாக்கப்பட்டு, எத்தனையோ நண்பர்களின் உறவை வெட்டி வீழத்திவிடுகிறது.

திருச்சபை சினத்தைப் பழித்துக் கூறுகிறது. பரிசுத்த வேதாகமம் வெகுளியை வெகுவாய்க் கண்டித்துக் கூறுகிறது. கோபம் பிறரைத் தாக்குகிறது. நொறுக்குகிறது. பழித்துவிடுகிறது. பழிவாங்கிவிடுகிறது. கொலைசெய்துவிடுகிறது. கோபத்தால் உடலும் உள்ளமும் ஊனம் அடைகின்றன. துப்பாக்கி சுடுவோனையும் கொல்ல வல்லது, சுடப்படுவோனையும் கொல்ல வல்லது. அதுபோல், கோபம் கோபப்படுவோனையும் கொல்ல வல்லது. கோபப்படப்படுவோரையும் கொல்ல வல்லது. சினம் சேர்ந்தோரையும் கொல்லும், சார்ந்தோரையும் கொல்லும்.

வெகுளி இவ்வையகத்திற்கு வெகு வேதனையையும், வேறுபாட்டையும், அழிவையுங் கொண்டு வந்துள்ளபடியால், கடவுள் வெகுளியை வெகுவாய் வெறுக்கிறார். சங்கீதம் 37:8ல் நாம் வாசிக்கிறபடி கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு. பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். ஆண்டவராகிய இயேசு கோபத்தைக் கண்டித்துள்ளார். கோபம் பாவம் பழி என்று பறைசாற்றியுள்ளனர். மத்தேயு 5:22ல் இயேசுநாதர் இவ்வாறு இயம்பியுள்ளார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். நீதிமொழிகள் 16:32ல் சாலமோன் ஞானியர் சாற்றியுள்ளதைக் கேளுங்கள். பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன். பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். யாக்கோபு 1:19ல் பரிசுத்த வேதாகமம் மீண்டும் கூறுகிறது. ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவீர்கள்.

மனிதனிலுள்ள மிருக சுபாவத்தை வெளிப்படுத்தும் சினம் ஒரு கொடிய பாவமாகும். பலர் பார்வைக்கு வசீகரமாகத் தோன்றுகின்றனர், கவர்ச்சிகரமாகக் காணப்படுகின்றனர், நம்முடைய அன்புக்குரியவர்களாகத் தோன்றுகின்றனர். ஆனால், அவர்களுக்கு கோபம் வந்துவிட்டாலோ, அவர்களைப் பார்க்க அவ்வளவு அருவருப்பாகிவிடுகிறது. நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளைப்போல், வனவிலங்குகளைப்போல், பகுத்தறிவற்ற மாக்களைப்போல் அம் மக்கள் மாறிவிடுகின்றனர். கட்டுக்கடங்காமல் உணர்ச்சிவெள்ளப்பெருக்கெடுக்குமிடத்து அதிக இரத்தத் துடிப்பு ஏற்பட்டு, உடல் நலமே சீரழிந்துவிடுமென்று மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள். அவனுடைய ஆற்றல் பெரிதும் விரயமாக்கப்படுகிறது. கோபம் கோபப்படுவோரைக் கொல்லக்கூடிய பாவமாகும்.

வெகுளி மனிதனிலுள்ள மிருக உணர்ச்சியை வெகுளிப்படுத்துவதோடு கிறிஸ்தவ சாட்சியையும் கெடுத்துவிடுகிறது. பேதுரு ரோம போர்ச்சேவகர்கள்மீது சினம் கொண்டு வேலைக்காரனுடைய வலது காதற வெட்டினபோது, இயேசு சுவாமி அவனுடைய கோப உணர்ச்சியைக் கடிந்துகொண்டு, உன் பட்டயத்தை உறையில்போடு. பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள் என்றார் (மத்.26:52). அநேகக் கிறிஸ்தவச் சாட்சிகள் மாம்ச கோபத்தால் வலுவிழந்து போயிள்ளன.

தன்னை ஒரு சிறந்த கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்ட ஒரு பெண், தன்னுடைய கணவன் கிறிஸ்துவைக் கண்டுகொள்ளவேண்டுமே என்று அதிக அக்கறைகொண்டாள். தன்னுடைய குருவானவரைத் தன் கணவரோடு இரட்சிப்பைக் குறித்து பேசுமாறு செய்தாள். அக்குருவானவர் அந்த ஆடவனை அண்டி, அவனுடைய ஆத்தும இரட்சிப்பைக் குறித்து உரையாடியபொழுது, அவன் கூறின கூற்று குருவானவரைத் திடுக்கிட வைத்தது, போதகரே, மதப்பற்றற்றவன் நான் அல்லன். ஆனால் கிறிஸ்தவ மதம் என் மனைவியைப்போல என்னையும் கோபமுள்ளவனாக்குமானால் அம்மதம் எனக்கு வேண்டாம் என்றான்.

குருவானவர் அவனுடைய மனைவியைக் கண்டு நடந்ததைக் கூறினார். அப்பெண் தன்னுடைய கோபக் குணத்தால் தன்னுடைய கணவன் கிறிஸ்துவண்டைய வராதபடி தடுக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்து பெரிதும் மனம் வருந்தினாள். இதயம் புண்பட்டாள். தன்னுடைய கோப சுபாவத்துக்காக மனங்கசந்து அழுது, கிறிஸ்துவிடம் மன்னிப்புக்காக கெஞ்சினாள். கிறிஸ்துதாமே தனக்குப் பொறுமைக் குணத்தைக் கொடுத்தருளுமாறு இறைஞ்சினாள். கிறிஸ்துதாமே அவளுக்குச் சாந்த குணத்தைக் கொடுத்துதவினார். பரிசுத்தாவியானவர் அவளுடைய கோப சுபாவத்தைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆண்டார்.

சில நாட்களுக்குப் பின்னர் அவளுடைய கணவன் தூண்டில் போட்டு மீன் பிடிக்க வெளியே சென்றான். மீன் பிடித்த பின்னர், நீண்ட தூண்டில் கம்பைத் தன் தோளின்மேல் வைத்துக் கொண்டு அவன் இல்லம் ஏகியபொழுது அந்நீண்ட தூண்டில் கம்புடன் வீட்டிலுள்ள ஒரு விலையுயர்ந்த விளக்கு உடைந்து, சுக்கல்சுக்லாகச் சிதறிக் கீழே விழுந்தது. விளக்கு படாரென்று கீழே நொறுங்கி விழுந்த சத்தத்தைக் கேட்டுத் திகைத்து நின்ற கணவன் வழக்கப்படி தன் மனைவியிடமிருந்து வரும் கோப இடி ஓசையை எதிர்பார்த்தவனாய் அசைவற்று நின்றான். ஆனால் மனைவியிடமிருந்து கோப இடி ஓசை வராதது கண்டு வியப்புற்று அவள் முகத்தை உற்று நோக்கியபொழுது, அம்முகம் புன்முறுவல் பூத்துக் குலுங்கக் கண்டான். மனைவியின் முகத்தில் சாந்தம் தவழ்ந்தது. அமைதியும், அன்பும், பொறுமையும் பொங்கி வழிந்தன. வருந்த வேண்டாம் என் அருமைக் கணவரே, எந்தச் குடும்பமாயினும் விபத்து சாதாரணமாக நிகழ்க் கூடியதே. அதற்காக கவலைப்படவேண்டாம், என் அன்பரே என்றாள்.

வழக்கப்படி, நீ சீறிச் சினந்து விழ மாட்டாயோ? என்று வினவினான் கணவன்.

என் அன்புள்ள கணவரே, நான் இனிக் கோபப்படமாட்டேன். நான் இதுகாறும் உம்மிடம் கோபமாக நடந்து கொண்டதற்காக மிகமிக வருந்துகிறேன், மன்னிக்கவும். கிறிஸ்துவின் ஆவியானவர் எனக்குச் சாந்தமாக என் இதயத்தில் வாசம் பண்ணுகிறார். இனி நான் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டி. பழையவைகள் எல்லாம் ஒழிந்தன. எல்லாம் புதிதாயின என்றாள்.

சில ஞாயிறுகள் கழிந்த பின்னர் அக்கணவர் சிறந்த கிறிஸ்தவனாக அத்திருச்சபையில் சேர்ந்து, கிறிஸ்துவுக்கென்று சிறந்த தொண்டாற்றினார். அவருடைய மனைவியின் கோபம் என்னும் பாவம் நீங்கினவுடனே, அவளுடைய கிறிஸ்தவச் சாட்சிக்குப் புத்துயிர் உண்டாக்கிவிட்டது.

கோபம் மனதைக் குழப்பிக் கலக்கிக் கெடுத்துவிடுகின்றது. இதய சாந்தியைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகின்றது. கோபம் இருக்கிற இடத்தில் சமாதானம் இருக்கமுடியாது. மனஅமைதி நிலவ முடியாது. முகரூபம்கூட மாறிப்போய்விடும். ஆதியாகமம் 4:6ல் கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று. உன் முகநாடி ஏன் வேறுபட்டது? என்றார். ஒருவன் பொறுமையை இழக்கும்போது, அவன் மற்ற நற்பண்புகளையும் நன்மைகளையும் இழந்துவிட நேரிடும். கோபத்தால் உன் முகப்பொலிவு அழிந்துவிடும். கோபத்தால் உன் புகழ் மங்கிவிடும். கோபத்தால் உன் நண்பர் உன்னைவிட்டுப்போய்விடுவர். கோபத்தால் உன் நல்வாழ்வு போய்விடும். கோபத்தால் உன் கிறிஸ்தவ சாட்சி சீரழிந்துவிடும்.

கோபம் கொலைக்கு மூலமாகும். அதனால்தான் கோபம் பாவம் பழி என்று கூறுவர். காயீன் ஆபேலை கொலைசெய்யுமுன் அவன்மீது கோபம்கொண்டான். எரிச்சல் அடைந்தான். கோபம் துப்பாக்கியில் குண்டு வைக்கிறது. கோபம் பழிக்குக் கத்தியைத் தீட்டுகிறது. கோபம் ஈட்டி முனைக்கு விஷம் ஊட்டுகிறது. கோபம் உயிரைக் குடித்துவிடுகிறது. கோபம் குடும்பத்தைக் கெடுத்துவிடுகிறது. கோபம் நாட்டை அழித்துவிடுகிறது. கோபம் வாழ்க்கையைப் பாழாக்கி விடுகிறது. கோபம் அனைவரையும் கொல்லும் ஒரு கொடிய பாவமாகும். அனாவசிய, அநியாய, அர்த்தமற்ற, வீணான, நியாயமற்ற, குற்றமுள்ள, கோபத்தையே இங்கு குறிப்பிடுகிறோம். இக்கோபம் சுத்த மனச்சாட்சிக்கு விரோதமானது. குற்றமற்றவர்களை அநியாயமாய்த் தாக்குகிறது. பகையையும் வன்மத்தையும் மூட்டிவிடுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் சண்டை சச்சரவுகளை எழுப்பிவிடுகிறது. கோபம் கொண்டோரையும் கோபத்திற்கு ஆளானோரையும் ஒரு மிக்க சினத் தீ எரித்து கொளுத்தி விடுகிறது. சினம் சென்றவிடமெல்லாம் அழிவுச் சின்னமே காணப்படும். இத்தகைய அநியாய கோபத்தை ஆண்டவர் வெறுத்துத் தள்ளுகிறார்.

நம்மில் பலர் கோபம் என்னும் கொடி பாவத்துக்கு ஆளாகியிருக்கிறோம், அடிமையாகியிருக்கிறோம். இது நம்முடைய இயற்கைச் சுபாவம் என்றும், நம்முடைய பலவீனம் என்றும், நம்முடைய பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்ட பிறவிக் குணமென்றும் சாக்குப்போக்குச் சொல்லிவிடுகிறோம். இது ஒரு பலவீனம் அன்று. இது ஒரு பாவமாகும். கொடி பாவமாகும். நமது கோபத்தால் பரிசுத்தாவியானவரைப் பெரிதும் துக்கப்படுத்திவிடுகிறோம். ஆண்டவர் கோபத்தை அருவருக்கிறார்.

கோபம் பாவமானால் அப்பாவத்தைப் போக்குவது எப்படி? கோபத்தின்மீது நமக்கு வெற்றி கிடையாதா? கோபத்தை அடக்கி ஆள வழிவகையே இல்லையா? கோபப்பட்டுத்தான் தீரவேண்டுமா? கோபப்படாமல், சாந்தமாய், சமாதானமாய், அமைதியாய், பொறுமையாய், சாந்தியாய், நிம்மதியாய், அன்புற்று இன்புற்று வாழ கிறிஸ்தவ மார்க்கத்தில் இடமில்லையா? கிறிஸ்து இதற்கு உதவிசெய்ய வல்லமையுள்ளவரா? அவர் நமக்கு உதவி செய்வாரா? கலிலேயாக் கடல் கடும் புயலால் சீற்றங்கொண்டு பொங்கி எழுந்தபோது, அதனை அடக்கி அமைதியுறச் செய்தவர், நம்முடைய சீற்றத்தையும், சினத்தையும் அடக்கி நாம் அமைதியோடும் பொறுமையோடும், அன்போடும் வாழச்செய்வதற்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அவர் எல்லாம் வல்ல இறைவன். கோபத்தை அடக்கவேண்டிய அவசியம் இல்லாவிட்டால் ஆண்டவர் சங்கீதம் 37:8ல் கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு. பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கமாட்டார். மனிதன் சாந்தமாய், பொறுமையாய், அன்பாய் இருக்கவேண்டும் என்பதே ஆண்டவர் விருப்பம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாந்த சொரூபியாய் இருக்கிறார். அவர் அன்பின் வடிவம். அவர் சமாதான பிரபு. அவர் தம்மிடம் வேண்டுவோருக்கு கோபத்தின் மீது வெற்றிதர வல்லவராயிருக்கிறார்.

கோபத்தின்மீது வெற்றி அடைவது எப்படி? முதலாவது, கோபம் ஒரு கொடிய பாவம் என்பதை உணரவேண்டும். கோபம் குடியிருக்குமிடம் பாழாய்ப்போய்விடும் என்பதை அறியவேண்டும். கோபத்தை ஒரு சிறிய பலவீனம்தான் என்று கருதுவது தவறு. அல்லது கோபம் எனது பெற்றோரிடமிருந்து நான் சுதந்தரித்துக்கொண்ட பிறவிக்குணம் என்று பாவத்தையும் பழியையும் நமது பெற்றோர் தலையில் சுமத்திவிட்டு நான் கோபப்பட்டுக்கொண்டிருப்பது பாவமாகும். அல்லது எப்பொழுதாவது எல்லாரும் கோபப்படத்தானே செய்கிறார்கள். நானும் ஏதோ வேளா வேளைகளில் வெகுண்டு விடுவதால் அதனால் என்ன குடிமுழுகிப்போய்விடுகிறது என்று வீண் சாக்குப்போக்குச் சொல்லி, கோபத்தின் பயங்கரத்தை உணராது வாழ்வது பெரும் பாவமாகும். கோபம் கடவுளுக்கு விரோதமான கொடிய பாவம் என்பதை மறவாது, அப் பயங்கர பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, கோபத்தின் மீது வெற்றி கொள்வதற்கு விருப்பம் கொள்வதே முதற்படி.

இரண்டாவது, கோபம் என்னும் கொடிய பாவத்தைத் தயவாக மன்னித்தருளுமாறு அப்பாவத்தைக் கிறிஸ்துவிடம் அறிக்கை செய்யவேண்டும். தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான் என்று இயேசு கிறிஸ்து திருவாய் மலர்ந்தருளியுள்ளதை உற்று நோக்குமிடத்து, கோபம் நம்மை இம்மையில் எரித்து பாழாக்குவதுமல்லாமல், மறுமையில் எரிநரகத்தில் தள்ளிவிடும் என்னும் சத்தியத்தை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். நம்மைக் கொல்லும் கோபம் என்னும் அக் கொடிய பாவத்தின் அகோரத்தை உணர்ந்தவர்களாய், நொறுங்குண்ட இருதயத்தோடும், மனஸ்தாபக் கண்ணீரோடும் கிறிஸ்துவின் பாதத்தில் விழுந்து, பாவமன்னிப்புக்காகவும், அப்பாவ விடுதலைக்காகவும் கெஞ்சி மன்றாடவேண்டும். நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் (இயேசு கிறிஸ்து) உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1.யோ.1:9).

கோபம் என்னும் பாவத்தை நாம் கிறிஸ்துவிடம் அறிக்கையிடும்போது, அவர் அப்பாவத்தை மன்னித்து கோபத்தை நீக்கி நம்மைச் சுத்திகரிக்கிறார். அது மட்டுமல்ல, சாந்த சொரூபியாகிய அவர் நமக்குச் சாந்த குணத்தைக் கொடுத்தருளுகிறார். சாந்தத்துக்கு ஊற்றும் காரணமாயிருக்கிற இயேசு கிறிஸ்துதாமே நம் இதயத்திலிருந்து சாந்தமாக, பொறுமையாக, சமாதானமாக, அன்பாகப் பொங்கி வழிகிறார். முன்னால் சீற்றமும் சினமும் பொங்கி வழிந்த இதயத்திலிருந்து இப்பொழுது சாந்தமும் அன்பும் பொங்கி வழிகின்றது. முன்பு, முற்கோபத்தால் எத்தனையோ மனிதரையும் குடும்பங்களையும் நாசமாக்கிய நாம், இப்பொழுது நமது பொறுமைக்குணத்தால் எத்தனையோ பேருக்கு ஆசீர்வாதமாக வாழ்கிறோம். முன்னர் எத்தனையோ பேரைச் சினத் தீயால் சுட்டெரித்த நாக்கு இப்பொழுது எத்தனையோ பேருக்கு ஆறுதலளிக்கிறது. எத்தனையோ ஆத்துமாக்கள் கிறிஸ்துவைத் துதிப்பதற்கு ஏதுவாயிருக்கிறது. வெகுண்டு பிறரைத் துன்புறுத்திய கைகள் இப்பொழுது பிறருக்குப் பணிசெய்யும் கைகளாக மாறிவிடுகின்றன. சினந்து மக்களுக்குத் தீமை செய்ய விரைந்து சென்ற கால்கள், இப்பொழுது பிற மக்களுக்கு நன்மை செய்யச் சுற்றித் திரிகின்றன. சினம் பொங்கிய இடத்திலிருந்து இப்பொழுது சாந்தம் பொங்குகிறது. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஆண்டவர் கூறியுள்ளபடி அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.

பேதுரு பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெறமுன் வெகுண்டார், வெட்டினார், மறுதலித்தார். ஆனால் அவர் கிறிஸ்துவின் ஆவியைப் பெந்தெகோஸ்தே நாளில் பெற்றதிலிருந்து மீண்டும் ஒரு தடவையாவது அவர் நியாயமில்லாமல் கோபித்ததில்லை. கிறிஸ்துவை அவர் அதன் பின் மறுதலித்ததில்லை. அவருடைய நாவு கிறிஸ்துவை மகிமைப்படுத்தினது. அவருடைய கை அநேகரை கிறிஸ்துவண்டை கூட்டிச் சேர்த்தது. அவருடைய கால் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காக நாடெங்கும் சுற்றித்திரிந்தது. கிறிஸ்துவில் அன்புகூர்ந்து, கிறிஸ்தவ ஆடுகளை மேய்த்து, கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து, கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சியாய் மரித்து, அநேக ஆத்துமாக்களை நித்திய பேரின்பத்திற்குள் வழிநடத்தும் கிறிஸ்தவக் கருவியாக அவர் திகழ்ந்தார். கிறிஸ்து இயேசுவால் இரட்சிக்கப்பட்டது பேதுருவைப் பலவீனப்படுத்திவிடவில்லை. உறுதியும் வல்லமையும் நிறைந்தவராகவே மாற்றிற்று.

நீயும் சாந்தகுணமுள்ளவனாகலாம். தேவஆவியினால் ஆளப்படுவதே சாந்தம். உனக்கும் கோபத்தின்மேல் வெற்றி வேண்டுமா? கோபத்திலிருந்து விடுதலை வேண்டுமா? நீ சாந்த சீலனாக அநேகருக்கு ஆசீர்வாதமாக வாழ விரும்புகிறாயா? அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. உன்னை முற்றிலுமாய்க் கிறிஸ்துவிடம் ஒப்புவித்து விடு. அவரே உன் இதயத்தினின்று சாந்தமாக, சமாதானமாக, அன்பாக பொங்கிவழிவார்.

நியாயமாக நீதிக்காகப் படவேண்டிய கோபம் ஒன்றுண்டு என்று சத்திய வேதாகமத்தில் காண்கிறோம். பாவத்தைக்கண்டு, ஒழுக்கக்கேட்டை கண்டு, அநியாயத்தைக் கண்டு, அசுத்தத்தைக் கண்டு நாம் வெகுண்டு எச்சரிக்காது அவற்றைக் கண்சாடையாய் விட்டுவிடக்கூடாது. தீச்செயல்களைக் கண்டு சினந்து எச்சரிக்காவிட்டால், அப்பாவப்பழி நம் தலையின்மேல் விழுமன்றோ? ஆகவே தேவன் அங்கீகரிக்கக் கூடியதும் நியாயமானதுமான கோபம் ஒன்றுண்டு. நமது பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் படகாட்சிகளிலும் காணப்படும் அசுத்த ஆபாசங்களைப் பார்த்து நாம் பொறுத்துக் கொண்டிராமல்,அவற்றை எச்சரித்து அகற்றுவதற்கு ஆவன செய்யவேண்டும். பட்டணங்களிலும், தெருக்களிலும், வீடுகளிலும், நிறுவனங்களிலும் காணப்படும் அட்டுழியங்களை நாம் கசந்துகொண்டு, எச்சரித்து அவற்றைப் பூண்டோடு ஒழிக்க முயலவேண்டும். பாவத்தை பாவம் என்று எச்சரிப்பது கிறிஸ்தவனது கடமையாகும்.

மூன்றாவது, நியாயமான தேவகோபத்தைப்பற்றிப் படிக்கிறோம். ரோமர் 1:18 கூறுகிபடி சத்தியத்தை அநியாயத்தினால் அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லா வித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் பரிசுத்த வேதாகமம் கொலோசேயர் 3:6ல் அறைகூவியுள்ளதைக் கேளுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். கடவுள் பரிசுத்தமுள்ளவர், நீதி நியாயமுள்ளவர். அசுத்தத்தைப் பார்க்கமுடியாதபடி அவருடைய கண்கள் அவ்வளவு பரிசுத்தமாயிருக்கின்றன. அசுத்தம் எதிர்ப்படுமிடத்து, அவருடைய பரிசுத்தம் அந்த அசுத்தத்தைப் பார்க்க முடியாதபடி கோபப்படுகிறது. அவர் பாவத்தின்மீது கோபம் கொள்கிறார். பாவம் அவருக்கு ஒருக்காலும் பிடிக்காது. பாவம் அவருக்கு அருவருப்பு.

பாவிகள் தங்கள் பாவத்தைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அவற்றைவிட்டுத் திரும்பி, தம் பாவத்திற்காக சிலுவையிலறையுண்ட இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமலிருக்கும்போது தேவகோபாக்கினைக்குள்ளானவர்களாயிருக்கிறார்கள்.

கிறிஸ்து இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத பாவிகளுக்கு விரோதமாய்த் தேவகோபாக்கினை பற்றி எரியப்போகும் நியாயத்தீர்ப்பு நாள் வருகிறது. அவரை நீ விசுவாசித்து ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர் உனக்கு விரோதமாக ….. என்னைவிட்டு பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்பார்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(3) பொறாமை

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(4) காமம்

Recommended

Song 106 – Yaar Ennai

01. சீஷத்துவத்தின் நிபந்தனைகள்

02. எல்லாவற்றையும் வெறுத்துவிடல்

Song 154 – Enniladanga

00. பொருளடக்கம்

03. திரும்பி வந்தவர்கள்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.