• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

(5) பெருந்தீனி

April 4, 2016
in கிறிஸ்தவ நூற்கள், கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
0 0
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(5) பெருந்தீனி

300 கிலோ நிறையுள்ள ஒரு மனிதனை நான் அறிவேன். அவர் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் நீங்கள் அசந்து போவீர்கள். அவர் உயிர் வாழ்வதற்காக உண்கிறவர்போல் தெரியவில்லை. உண்பதற்காகவே உயிர்வாழ்கிறவர்போல் தெரிகிறது. அந்தோ, பரிதாபம் ! அவருடைய பெருந்தீனியே அவருடைய உயிருக்கு உலைவைத்துவிடும் என்பதை அவர் அறியார் போலும்! தம்முடைய பிரேதக் குழியைத் தம்முடைய சொந்தக் கையால் தோண்டிக்கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறியாது போய்விட்டார். பட்டினிச் சாவுகளைவிட இக்காலத்தில் பெருந்தீனிச் சாவுகளே அதிகம். தற்கால உலகில் தலைவிரித்தாடும் பெரும்பாலான பயங்கர நோய்களுக்கக் காரணம் பெருந்தீனியே. பெருந்தீனி மனிதனைக் கொல்லும் ஒரு கொடிய பாவம் என்று பரிசுத்த வேதாகமம் பறைசாற்றியுள்ளது. பெருந்தீனிக்காரருடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் (பிலி.3:19).

ஏழு கொடிய பாவங்களுள் பெருந்தீனியும் ஒன்று ஆணவம், கோபம், பொறாமை, காமம் போன்ற பாவங்களைப்போல் பெருந்தீனியும் மனிதனைக் கொல்லக்கூடிய ஒரு கொடிய பாவமே என்று திருச்சபை முற்பிதாக்கள் எச்சரித்தள்ளார்கள். நம்மில் அநேகர் பெருந்தீனியை ஒரு பாவமாக கருதுகிறதில்லை. அநேகர் பெருந்தீனிக்காரராயிருக்கின்றனர். கிறிஸ்தவர்களிடையே உலாவும் மோசமான பாவங்களுள் பெருந்தீனியைத் தடுப்பதற்குத் தேசத்தில் சட்டமில்லையானாலும் பெருந்தீனியை எதிர்த்து எச்சரிப்பதற்குச் சத்திய வேதாகமத்தில் வேதவசனங்கள் உண்டு.

பெருந்தீனிக்காரர் தங்கள் கண்களிலிருக்கிற உத்திரத்தை உணராமல், தங்கள் சகோதரர் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோ உன் கண்ணில் பெருந்தீனியாகிய உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப் போடட்டும் என்று நீ சொல்லுவதெப்படி? பெருந்தீனிக்காரனே முன்பு உன் கண்ணிலிருக்கிற பெருந்தீனியாகிய உத்திரத்தை எடுத்துப்போடு. பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய். குடிக்கிறவனைக் கண்டு நகைக்கிறோம். அவனை அருவருக்கிறோம். ஆனால் மித மிஞ்சி உண்கிறவனைக்கண்டு நாம் நகைக்கிறதில்லை, அவனை அருவருக்கிறதுமில்லை. பெருந்தீனியை ஒரு பாவம் என்று நாம் சாதாரணமாகக் கருதாததே இதற்குக் காரணமாகும். பெருந்தீனிக்காரன் பிறரைப்பார்த்து இகழ்கிறான். தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைக்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் (லூக்.18:11). என்பதுபோல பெருந்தீனிக்காரன் மற்றவர்களை மிகமிகப் பெரிய பாதகர்களாகவும், தன்னையோ மிகமிக நல்லவனாகவும் எண்ணிக்கொள்ளுகிறான். தான் வயிற்றுச் சாமியைக் கும்பிடுகிறவன் என்பதை மறந்துபோகிறான். தான் பெருந்தீனி என்னும் பாவத்தில் கண்மூக்குத் தெரியாமல் மூழ்கிக்கிடப்பதை அறியாதிருக்கிறான். தன் பாவம் தனக்குத் தெரிவதில்லை. தங்கள் பாவத்தை மனிதர் உணருகிறதுமில்லை. தங்கள் பாவத்தைப் பெரிதாக நினைக்கிதுமில்லை. மற்றவர்களுடைய பாவமே அவர்கள் கண்ணுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. தாங்கள் அளவுக்கு மிஞ்சி உண்பது பாவம் என்பதைச் சிந்தியாமலிருக்கிறார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகுமன்றோ!

பெருந்தீனிக்காரருக்கு அவர்களுடைய சுகபோகவாழ்வே தெய்வமாகி விடுகிறது. இவ்வுலகில் ஒரே ஒரு தடவைதான் வாழமுடியும். ஆகவே அந்த ஒரு வாழ்நாளில் எவ்வளவு உண்ண முடியுமோ அவ்வளவு உண்டு, எவ்வளவு குடிக்கமுடியுமோ அவ்வளவு குடித்து எவ்வளவு இன்புறமுடியுமோ அவ்வளவு இன்புற்று, எவ்வளவு களித்து ஆடமுடியுமோ அவ்வளவு களித்து ஆடி, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பதுபோல் சம்பிரமமாய் இம்மண்ணுலகில் வாழ விரும்புகிறார்கள் மனிதர்கள். நாளைக்குச் சாகுமுன் இன்று உல்லாசமாய் உண்டு, உடுத்தி மகிழ்கொண்டாடுவோம் என்று கொக்கரிக்கிறார்கள் மனிதர்கள். அதற்கென்று பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். செல்வத்தைத் திரட்டுகிறார்கள். பொருள்களைச் சேர்க்கிறார்கள். உணவுதானியங்களை மலைப்போல் குவித்து வைத்துக்கொள்கிறார்கள். இவ்வுலக சுகபோக ஆடம்பர வாழ்க்கையே அவர்களுக்குப் பிரதானம். அவர்கள் மறுவுலக வாழ்க்கையைப்பற்றி சிறிதும் சிந்திக்கிறதில்லை. ஆண்டவர் இத்தகைய மனிதருடைய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே, நான் ஒன்றும் செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருட்களையும் அங்கே சேர்த்து வைத்து, பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்தில் இந்த இராத்திரியிலே எடுத்துக்கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். தேவனிடத்தில் ஐசுவரியவானாய் இராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார் (லூக். 12:16-21). ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாய் இருக்கிறது. மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். மனிதருடைய ஜீவஅப்பம் இயேசு கிறிஸ்துவே. எனவே மனிதனுடைய கண்ணும் கருத்துமெல்லாம் கிறிஸ்துவைச் சொந்தமாக்கிக் கொள்வதிலும், அவரையே விசுவாசித்து நேசித்து சேவிப்பதிலேயுமே இருக்கவேண்டும். இயேசு கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவதே நம்முடைய மெய்யான உணவு.

தன்னடக்கம், கட்டுப்பாடு, இச்சையடக்கம் போன்ற பண்புகள் தற்காலத்தில் மதிப்பிழந்து வருகின்றனபோலும். மனம்போனபடி, தன் இஷ்டம்போல் வாழ்வதுதான் தற்கால வாழ்க்கை முறைபோலும்! கட்டுப்பாடு, தனது கண்ணியத்தை இழந்து வருகிறதுபோலும்! இச்சைகளை நிறைவேற்றுவதிலேயே தற்கால மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறதற்கு தயங்குவதில்லை என்று கூடக்கூறலாம். தன் மனத்தையெல்லாம் ஆபாச எண்ணங்களாலும், தன கண்களையெல்லாம் அசுத்த பத்திரிகைகளாலும், தன் வயிற்றையெல்லாம் மிதமிஞ்சிய கொழுத்த உணவுகளாலும் நிரப்புவதிலேயே தன் முழுநேரம் முழுவதையும் செலவிடுகிறான் தற்கால மனிதன். அவனுக்குக் கடவுளைப்பற்றி எண்ணுவதற்குக்கூட நேரமில்லாது போய்விடுகிறது. தன் உடலை கொழுக்க வைக்கிற மனிதன் தன் ஆத்துமாவைப் பட்டினிபோட்டு கொன்று போடுவதற்கு தயங்காதிருக்கிறான். சரீரம் கொழு கொழுவெனச் செழித்தோங்குகிறது. ஆனால் ஆத்துமாவோ பட்டினி கிடந்து சாகிறது. உபாகமம் 8:3ல் ஆண்டவர் கூறியுள்ளதை மீண்டும் நினைவில் இருத்திக்கொள்வோம். மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவை, அன்றாடம் நமது ஆத்துமா உட்கொண்டு, வளர்ந்து வருகிறதா?

என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து உன் இருயத்தை நல் வழியிலே நடத்து. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் மாம்சப்பிரியனும் தரித்திரராவார்கள். தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும் (நீதி.23:19-21).

உண்பதும், உடுப்பதும், குடிப்பதும் நமது வாழ்வில் முதலிடம் பெறவேண்டியதில்லை. இயேசு கிறிஸ்துவுக்குத் தான் நாம் முதலிடம் கொடுக்கவேண்டும். ஆகாரத்தைத் தேடுவதற்கு நாம் நமது வாழ்வில் முதலிடம் அளிக்கவேண்டியதில்லை. தேவனுடைய இராஜ்யத்தைத் தேடுவதற்குத்தான் நாம் முதன்மை அளிக்கவேண்டும். இயேசு கிறிஸ்து இயம்பியுள்ளதைக் கேளுங்கள். ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக்குடிப்போம், என்னத்தை உடுப்பொம் என்று கவலைப்படாதிருங்கள்…. முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:31-33). நமது மாம்ச பசி தாகங்களைத் தீர்ப்பதில் மட்டுமே நமது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டு விடக்கூடாது. மாம்சமும் அதன் ஆசை இச்சைகளும் அழிந்துபோகக் கூடியவை. ஆனால் அழியா ஆத்துமாவுக்குரிய ஜீவ அப்பமாகிய இயேசு கிறிஸ்துவை அனுதினமும், புசித்து ஜீவத்தண்ணீராகிய இயேசு கிறிஸ்துவை அனுதினமும் அள்ளி அள்ளிப் பருகி அழியாப் பேரின்பப் பாக்கியம் பெறுவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டும். அநேகர் வாழ்க்கை முழுவதும் மாம்ச காரியங்களிலும், உலககாரியங்களிலும், பிசாசின் காரியங்களிலும், செலவிட்டுவிட்டு, வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில்: கடவுளே, என்மீது கிருபையாயிரும், என் ஆத்துமாவுக்கு இரங்கும் என்று ஓலமிடுகிறார்கள். வாழ்க்கையில் மிகமிக முக்கியமான ஆத்தும பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ளவதற்கு நாம் முதலிடம் கொடுக்காது, வாழ்க்கையின் இறுதி நிமிடத்தில் ஆத்துமாவைப்பற்றிக் கவலைப்படுவது எவ்வளவு மதியீனம்! இவ்வாழ்வில் ஆன்ம வாழ்வைக்கவனிப்பதல்லோ மாபெரும் முக்கியமான காரியம். மரணப்படுக்கையில் மனந்திரும்புதலின் நம்பிக்கை வைத்துக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் மனந்திரும்பாது வாழ்வது எவ்வளவு புத்தியீனம்! வாழ்க்கை முழுவதையும் கிறிஸ்துவின் நாம மகிமைக்காகக் செலவிடுவதல்லவோ புத்தியுள்ள செயல்! இரட்சிப்பைப்பற்றி வாழ்வில் ஒரு தடவைகூடக் கேள்விப்படாதவர்களுக்கும், சுவிசேஷத்தை அறியாதவர்களுக்கும், இதற்கு முன்னர் பாவ வாழ்க்கையைப்பற்றி ஒரு தடவை கூட எச்சரிக்கப்படாதவர்களுக்கும் மரணத்தருவாயில் மனந்திரும்புவதற்கு ஒருவேளை கடவுள் ஒரு தருணம் கொடுக்கலாம். ஆனால் இயேசுகிறிஸ்துவைப்பற்றிக் கேள்விப்பட்டும், அவரை வேண்டாம் என்று தள்ளினவர்களும், மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்டு மனந்திரும்பாதவர்களும் மரணப்படுக்கையில்கூட மனந்திரும்புவது அரிது. ஆண்டவரைத் தேடியும் காணமுடியாதுபோகும் காலம் வரும் என்று ஆண்டவர் இவ்வுலக மாந்தரைப் பலமாய் எச்சரித்துள்ளதை எப்பொழுதும் நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும்.

பெருந்தீனி நம்மைக் கல்லறைக்கு அழைத்துச்செல்வதோடு நில்லாமல், நரகத்திற்கும் அழைத்துச் சென்றுவிடும். பெருந்தீனி நம்மை மாம்ச அழிவுக்குட்படுத்துவதோடு, நரக ஆக்கினைக்கும் உட்படுத்திவிடும். எல்லாவற்றிலும் நிதானமாயும், ஒழுங்காயும், அடக்கமாயும் இருக்கவேண்டுமென்று பரிசுத்த வேதாகமம் நமக்கு அறிவுரை பகர்ந்துள்ளது. எனவே, நாம் எல்லாவற்றிலும் மிதமாயும், இச்சையடக்கமாயும் ஒழுக வேண்டும். கடவுள் நமக்கு அருளிய எல்லா ஆசீர்வாதங்களையும் பயபக்தியோடும், அளவோடும் அனுபவிக்கவேண்டும்.

உலகில் எண்ணிறந்த மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்பொழுது, நாம் மட்டும் உணவை நிதானத்தோடு பயன்படுத்தாது, மிதமிஞ்சித் தின்று நம் உடலையும் பிறரையும் சாகடித்துக் கொண்டிருப்பது பாவமாகும். பெருந்தீனி தன்னயத்தின் உச்ச கட்டமாகும். எனவே பிறகொடிய பாவங்களைப்போல் பெருந்தீனியும் அருவருத்து ஒதுக்கித் தள்ளவேண்டிய கொடிய பாவமே. ஆமோஸ் 6:4,6 வசனங்களில் ஆண்டவர் கூறியுள்ளதைக் கேளுங்கள். தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று… பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து சிறந்த பரிமளத்தைலங்களைப் பூசிக்கொள்கிறார்கள்…..

இவ்வையகத்தின் மக்களுள் ஐந்தில் மூன்று பாகத்தினர் உண்ண உணவும், உடுக்க உடையும், தங்க உறைவிடமும் இன்றி வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலரோ தங்களுக்கும் தங்கள் அவசியத்திற்கும் அதிகமான மிதமிஞ்சின பொருள்களைக் குவித்துக், பெருந்தீனி தின்று தங்களைக் கொழுக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பசிப்பிணியால் வாடுவதைப்பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? (யோ.3:17).

நாம் நமது உதடுகளால் இனிக்க இனிக்கப் பேசுகிறோம். ஆனால் நமது கைகளையோ இறுக மூடிக்கொள்ளுகிறோம். நமது கைகளால் அன்னத்தையும், ஆடைகளையும், பயன்மிக்க பிறபொருள்களையும், அள்ளி அள்ளி பிறர்க்கு அன்புடன் வழங்குவோம். பசியுற்றோர்க்கு ஆகாரம் கொடுப்போம். தாகமுள்ளோருக்கு பானம் வழங்குவோம். ஆடையற்றோருக்கு ஆடைகள் அளிப்போம். பிணியுற்றோருக்கு மருத்துவம் செய்வோம். தேவை உள்ளோருக்குச் சேவை செய்வோம். மருத்துவமனையில் இருப்போருக்கு ஆறுதலும், சுகமும் அளிப்போம். தன்னலம் கருதாது, பிறர் நலம் கருதி பிறருக்குப் பணிபுரிவோம். தன் வயிற்றைக் கொழுத்த உணவுகளால் நிரப்பித் திணித்து, வெடிக்கவைப்பதிலேயே ஈடுபட்டு உணவையும், நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! அவர்களின் பெருந்தீனியே அவர்களை வதைத்துக் கொன்றுவிடும் என்பதை அவர்கள் அறிந்துகொண்டால் நலமாயிருக்கும். காலதாமதம் ஆபத்தாக முடியும். உடனே விழித்தெழுவோம். பெருந்தீனியை ஒழித்திடுவோம்!!

நமது சரீரம் பரிசுத்தாவியானவர் தங்குவதற்கென்று கடவுளால் கட்டப்பட்ட ஆலயமாகும். நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றும் தேவனுக்குரியவை. கடவுளே நம்மைச் சிருஷ்டித்தார். நாம் பாவத்தில் வீழ்ந்தபோது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே தம்மைப் பலி கொடுத்து இரத்தக் கிரயத்தால் நம்மை மீட்டுக்கொண்டார். எனவே, நாம் முழுக்க முழுக்க கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் தங்கி வாசம் பண்ணவேண்டிய சரீரத்தை நாம் கெடுத்தால், தேவன் நம்மைக் கெடுப்பார். நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? எனவே சரீரத்திற்கு விரோதமாய்ச் செயல்படுகிற எந்தப் பாவமும் கடவுளுக்கு விரோதமாய்ச் செய்யப்படுகிற பாவமாகும். நாம் மனம்போனபடி நமது சுய இஷ்டம்போல் நடந்தால், அழிவது திண்ணம். நாம் கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள். கிறிஸ்துவின் சித்தப்படி நடக்கவேண்டியவர்கள். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்று… அறியீர்களா?? கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவைன மகிமைப்படுத்துங்கள் (1.கொரி.6:19-20).

பெருந்தீனி, மதுபானவெறி, காமம் ஆகிய மூன்று பாவங்களும் சேர்ந்து ரோம சாம்ராஜ்யத்தையே வீழ்த்தி விட்டன. அக்காலத்தில் உலகப் புகழ்பெற்றிருந்த மாபெரும் வல்லரசு மக்களாகிய ரோமர் தங்கள் கல்லறைகளைத் தாங்களாகவே தங்கள் பெருந்தீனிப்பற்றகளால் தோண்டிக்கொண்டார்கள். பெருந்தீனியால் செத்த தங்கள் பிணங்களுக்குத் தங்கள் வேசித்தனத்தால் தங்களையே குழிதோண்டிப் புதைத்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆடம்பர விருந்துகளில் விதவிதமாகக் கொழுமையான உணவு வகைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளி அள்ளித் தின்று, தங்கள் வயிற்றில் திணத்துக் கொள்ளலாம். அவர்கள் உண்ணும் அளவுக்கு வரம்பே கிடையாது. அக்கொழுமையான ஆகாரத்தில் அவர்கள் அளவற்ற ஆசை கொண்டவர்களாய், மேலும் மேலும் உண்பதற்கு பேராசை கொண்டு, தாங்கள் முன்னால் தின்றதையெல்லாம் ஜன்னலுக்கு வெளியே வாந்தி பண்ணிப் போட்டு, மீண்டும் அமர்ந்து தங்கள் வயிற்றைக் கொழுமையான ஆகாரங்களால் நிரப்பிக் கொண்டேயிருப்பது அக்காலத்து ரோம விருந்துகளில் காணப்படும் சாதாரணக் காட்சியாகும். பெருந்தீனிக்கும் குடிவெறிக்கும் விபசாரத்திற்கும் தங்களை ஒப்புக்கொடுத்த எந்த மனிதனோ அல்லது மனுஷியோ அல்லது தேசமோ கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறமுடியாது. சரீரத்தைப் பெருந்தீனியால் கொழுக்க வைத்து ஆத்துமாவைப் பட்டினி போட்ட ரோமசாம்ராஜ்யம் வீழ்ந்ததுபோல், பெருந்தீனி பாவத்துக்குட்படும் எந்த நாட்டினரும், எந்த தனிநபரும் வீழ்ச்சியுறுவது உறுதி. பிழைக்கத்தக்கதாக அல்ல, அநேகர் சாகத்தக்கதாக அளவுக்கு மிஞ்சி சாப்பிடுகிறார்கள். சுகபோகத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள். சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள் (1.தீமோ.5:6). கடவுளை மறந்து, மிதமிஞ்சி, நிதானமிழந்து உண்பதிலும் உடுப்பதிலும், குடிப்பதிலும், உல்லாசமுற்றிருப்பதிலுமேயே ஆழ்ந்து கிடக்கிறவர்கள் தங்கள் ஆத்துமாக்களைத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மனசாந்தி இழந்து, ஆன்ம சமாதானமற்று, இரட்சிப்பின் பேரின்ப மகிழ்ச்சியில்லாதவர்களால் மக்கள் அவதியுறுவதைக் காணுங்கால், தற்கால மக்கள் எவ்வளவாய்த் தங்கள் வயிற்றையே பூசித்து தங்கள் ஆத்தும வாழ்வை அறவே மறந்து விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்கள் சரீரமானது பெருந்தீனியால் சுகமாக இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. எனவே பெருந்தீனியானது சரீரத்தையும், ஆத்துமாவையும் கொல்ல வல்லதொரு கொடிய பாவமாகும். விபசாரத்தை விலக்குவது போல பெருந்தீயையும் விலக்கவேண்டும். பெருந்தீனியை நாம் விலக்காவிட்டால், பெருந்தீனி நம்மைக் கொன்றொழித்துவிடும்.

நமக்கு சரீரமட்டுமல்ல, ஆத்துமாவும் உண்டு என்பதை மறந்துபோகக்கூடாது. சரீரத்திற்கு எவ்வாறு உணவு, தண்ணீர், காற்று அத்தியாவசியத் தேவையோ, அவ்வாறே ஆத்துமாவுக்கும் கிறிஸ்து தேவையாகும். ஆத்துமாவைப் போஷிக்கும் ஜீவஆகாரம் இயேசு கிறிஸ்துவே. ஆத்துமாவுக்கு வேண்டிய ஜீவகாற்று இயேசு கிறிஸ்துவே. எனவே மனிதன் வெறும் சரீர அப்பத்தினால் மாத்திரமல்ல, ஜீவஅப்பமாகிய இயேசு கிறிஸ்துவால் பிழைக்கவேண்டியவன். மனிதனுடைய சரீரத்திற்கும், ஆவிக்கும், ஆத்துமாவிற்கும் உயிரானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே. நானே ஜீவன் என்றவர், நமக்கு ஜீவனாகாவிட்டால் நாம் செத்துப்போவோம்.

ஆத்துமாவை அறவே மறந்து, தங்கள் சரீரத்தை மட்டும் பேணிவளர்த்துக் கொழுக்கவைத்து வருகிறவர்கள் பெருந்தீனி என்னும் பாவத்திற்கு உட்பட்டவர்கள். கெட்ட குமாரன் உவமை நமக்கு அரியதொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. கெட்டகுமாரனுக்கு மனம்போனபடி உண்டு, உறங்கி, குடித்து, வெறித்து ஆடிப்பாடி உலகத்தில் சுகபோகமாய் வாழவேண்டுமென்று ஆசை உண்டானவுடனே, அப்பாவ ஆசை அவனைத் தகப்பன் வீட்டினினின்று பிரித்து விடுகிறது. அவன் கண்டதே காட்சி, கொண்டமே கோலம், தின்றதே மகிழ்ச்சி, குடித்ததே குதூகலம், ஆடினதே ஆனந்தம், பாடினதே பரமானந்தம், சுகபோகமே சொர்க்கம் என்று சிற்றின்பத்தில் சொக்கித் திளைக்கிறான். ஆனால் அது பேரின்பமல்ல, சிற்றின்பந்தான் என்பதைச் சிறிது காலத்திற்குள் கண்டுகொள்ளுகிறான். அவனுடைய சுகபோக வாழ்க்கை நீடித்து நித்திய பேரின்ப வாழ்க்கையைக் கனிந்து நிற்கமுடியாது. பாவத்திற்கோர் சிதைவுண்டு. பாவ வாழ்க்கை மனிதனுக்கு நிலையான சமாதானத்தையும் நித்திய சாந்தியையும் அளிக்கமுடியாது. எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்தத் தேசத்தில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கினான் (லூக்.15:14). மனம்போன சுகபோக சிற்றின்ப வாழ்க்கை கெட்டகுமாரனுக்கு அவன் நினைத்தவாறு நிலைவரமான திருப்தியையும், சாந்தியையும் பேரின்பத்தையும் அளிக்கமுடியாது போய்விட்டது. அவன் குறைவுபடத்தொடங்கினான். அத்தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. சரீர சுகபோகத்திற்காக ஆத்தும வாழ்வை உதறிவிட்டு வந்தவனுக்கு, இப்பொழுது சரீர சுகபோக வாழ்விற்கும் பஞ்சம் உண்டாயிற்று. அவ்வாழ்வு அவனுக்கு திருப்தியளிக்க முடியாது போய்விட்டது. ஆணவம், சினம், பொறாமை, காமம், பெருந்தீனி, சோம்பல், பேராசை போன்ற எப்பாவமும் நமக்குத் திருப்தியளிக்கவே முடியாது. நமக்குத் திருப்தியளிக்கக்கூடியவர் ஒரே ஒருவர்தான். அந்த ஒருவர் இயேசு கிறிஸ்துதான். உலக உல்லாச வாழ்க்கை, சிற்றின்ப வாழ்க்கை, கடவுளைவிட்டு சாத்தான் சொற்படி கேட்டு நடக்கும் அக்கிரமவாழ்க்கை, நமக்கு ஒருக்காலும் நித்திய சாந்தியையும், பேரின்பத்தையும் தர இயலா. இவ்வுண்மையைக் கெட்ட குமாரன் கண்டுகொண்டவுடனே, தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்த பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு மனந்திரும்பி, தன் தந்தையிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் அவனை மன்னித்து, மீண்டும் அவனைத் தன் மகனாக ஏற்றுக்கொண்டு, பூரண பேரின்ப வாழ்வு இரக்கமாய் அளித்ததுபோல், உனக்கும் எனக்கும் பரம தகப்பனாகிய இயேசு கிறிஸ்து கிருபையாய் பாவ மன்னிப்பு தந்து நித்திய பேரின்ப வாழ்வு அளிக்கத் தயாராக நம்முன் நிற்கிறார். உடனே நாம் பாவமனஸ்தாபக் கண்ணீரோடு மன்னிப்புக்காக கிறிஸ்துவை கெஞ்சுவோமாக.

தன் குற்றங்களை நினைத்து மனம் வருந்தி, இரக்கத்திற்காகச் சிலுவையிலறையுண்ட இயேசு இரட்சகரை நோக்கி ஆண்டவரே, அடியேனை நினைத்தருளும் என்று கிறிஸ்துவின் கிருபைக்காக கெஞ்சின கள்ளனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (லூக்.23:42-43) என்று கனிவோடு வாக்களித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, நீ இப்பொழுதே பாவமன்னிப்பக்காக கெஞ்சு.

கடந்த கால பாவங்களையெல்லாம் கண்ணெதிரே கொண்டு வந்து கண்ணீர் சிந்திநிற்கும் நண்பரே! இவ்வளவு கொடிய பயங்கர பாவங்களையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பொறுத்து மன்னிப்பாரா என்று தயங்கிக் கொண்டிருக்கிற நண்பரே, என் போன்ற மா பாதகர்களையும் நீசர்களையும் அவர் ஏற்றுக்கொளவாரா என்று சிறிது சந்தேகித்துக்கொண்டிருக்கும் நண்பரே! என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்றுரைத்துள்ள ஆண்டவர், அன்போடு தமது காயப்பட்ட இரு கரங்களையும் நீட்டி உன்னை மனமுவந்து ஏற்றுக்கொளாவார். உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும், உறைந்த மழையைப்போல் வெண்மையாகும். அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்தகரிக்கும்.

ஓர் எழுப்புதல் கூட்டம் நான் நடத்திக்கொண்டிருந்த காலத்தில் தொலைபேசி வாயிலாக ஒரு பெண் இவ்வாறு கூறிளாள். இரவும் பகலும் என்னை வாட்டிப்பிழியும் பயங்கரப் பாவம் என்னை அடிமைப்படுத்தியிருக்கிறது. அப்பாவத்தினின்று விடுதலை பெற முடியாது நான் தவித்து தத்தளிக்கிறேன். எண்ணிறந்த தடவைகளில் நான் வருந்தி முயன்றும் எனக்கு இப்பாவத்தின்மீது வெற்றி கிட்டவில்லை. இவ்வாறு என்னை ஆட்கொண்டு அவதிப்படுத்தும் அக்கோரப்பாவம் பெருந்தீனியே. இப்பாவத்தினின்று நான் விடுதலை அடைய வழி வகையோ இல்லையா?

இதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அவ்வழி இயேசு கிறிஸ்துவே. நானே வழி என்றுரைத்துள்ள இயேசு இரட்சகரே பாவவிடுதலைக்கு ஒரே ஒப்பற்ற வழியாகத் திகழ்கிறார். பாவமன்னிப்புப் பெற, பாவத்திலிருந்து விடுதலை அடைய, புது புனித வாழ்க்கையாற்ற, பரிசுத்த வெற்றிவாழ்க்கை நடத்த ஒரே ஒரு வழிதானுண்டு. அந்த ஒரே ஈடு இணையற்ற தனிப்பெரும் வழி இறைவனாகிய இயேசு இரட்சகரே. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்களெல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்களித்துள்ள எல்லாம் வல்ல இறைவனாகிய இயேசு இரட்சகரண்டை உடனே ஓடிவருவோம். பாவ மனஸ்தாப நொறுங்குண்ட நருங்குண்ட இதயத்தோடும் அவர் பாதத்தை இரட்சிப்புக்காக இறுகக் கட்டிப் பிடித்துக் கொள்வோமாக. பெருந்தீனி என்னும் பெரும் பாதகத்தால் பெரும்பாடுபட்ட இப்பெண் இயேசு கிறிஸ்துவண்டை சென்று தன் பாவத்தை மனஸ்தாபக் கண்ணீரோடு அறிக்கையிட்டாள். இயேசு இரட்சகரண்டை பாவமன்னிப்புக்காக கெஞ்சினாள். அப் பாவத்தினின்றும் விடுதலைக்காக ஆண்டவரை வேண்டிக்கொண்டாள். அப்பாவத்தின்மீது வெற்றி தருமாறு கிறிஸ்துவை நோக்கி ஊக்கத்தோடும் விசுவாசத்தோடும் ஜெபித்தாள். அப்பொழுது என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று திருவாக்கருளியுள்ள இயேசு இரட்சகர் அவளை ஏற்றுக்கொண்டு அவளுக்குப் பாவமன்னிப்பின் நிச்சயமளித்து, அவளைத் தமது பரிசுத்த இரத்தத்தால் சகல பாவங்களுமற கழுவிச் சுத்திகரித்து அவளைப் புது சிருஷ்டியாக்கி அவரே அவளுக்குள்ளிருந்து பரிசுத்தமாய், அன்பாய், அடக்கமாய், மீட்பாய் பொங்கி அருளிப் போந்தார். அவருடைய பழைய பெருந்தீனி இச்சைகளெல்லாம் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. அவளுக்கு ஆண்டவர் புதிய இதயத்தையும், புதிய மனதையும், புதிய உணர்ச்சிகளையும், இச்சையடக்கத்தையும் கொடுத்தார். அவள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்யானதுபோல் இதை வாசிக்கிற நீயும் கிறிஸ்துவுக்குள் புரு சிருஷ்டியாகி பரிசுத்த கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை ஆற்ற முடியும். கிறிஸ்துவையல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. நம்மைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய நமக்குப் பெலனுண்டு. மனிதரால் கூடாதுதான். ஆனால் தேவனால் எல்லாம் கூடும். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(6) சோம்பல்

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(7) பேராசை

Recommended

பாடல் 270 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

பாடல் 270 – புது வாழ்வு வாழ்ந்திடுவேன்

Song 235 – Ennavar

பாடல் 002: பரிசுத்த ஆண்டவரே என்

பாடல் 002: பரிசுத்த ஆண்டவரே என்

0. பாக்கியவான்கள் யார்?

8. எட்டாம் பேறு

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.