எஸ்றா
தீர்க்க தரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை: தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள் – 2.பேதுரு 1:21.
ஆம், பரிசுத்த ஆவியானவர் வேதத்தை உருவாக்கியதை நினைக்கும்போது நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு புத்தகமும் அவராலே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் எஸ்றாவின் புத்தகமும் முக்கியமானதே. பரிசுத்த ஆவியானவர் அதை நமக்குக் கொடுத்துள்ளதால் நாம் அதை படிக்கத் தவறக்கூடாது.
தேவாலயம் திரும்பக்கட்டப்பட வேண்டுமென்றால் அதற்கு ஓர் எஸ்றா தேவை. அலங்கம் கட்டப்பட வேண்டுமென்றால் ஒரு நெகேமியா தேவை. உங்களைச் சுற்றிலும் திருச்சபைகளும், சன்மார்க்க நெறிகளும், தேவபக்தியும், குடும்பக்கட்டுப்பாடும் உடைந்து அழிந்து இருப்பதைப் பார்க்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் படிக்க வேண்டிய பகுதி இது.

பொருளடக்கம்
- எஸ்றா
- ஆலயத்தைச் சீரமைத்துக்கட்ட தேவனுடைய கட்டளை
- திரும்பி வந்தவர்கள்
- இஸ்ரவேலர் தேவாலயத்தைக் கட்ட ஆரம்பிக்கின்றனர்
- ஆலயக் கட்டடப்பணி தடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது
- ஆலயத் திருப்பணி மீண்டும் துவக்கம்
- தரியு இராஜாவின் கடிதம்
- ஆசாரியனான எஸ்றா எருசலேம் திரும்ப மன்னனிடம் அனுமதி கோரல்
- எஸ்றாவின் பயணம்
- இஸ்ரவேலர் பாவம் செய்தனர்
- மறுஜாதியான ஸ்திரிகள், மனைவிகள் விலக்கப்பட்டனர்










