• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

09. யூதர்களின் வெற்றி

August 10, 2017
in எஸ்தர், கிறிஸ்தவ நூற்கள்
0 0
00. பொருளடக்கம்

அதிகாரம் 9

யூதர்களின் வெற்றி

வசனம் 9:1-4

ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே. அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப் பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள். ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது. அவர்களைப்பற்றிச் சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள். மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.

மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான். அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று. இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

இராஜ முத்திரையிடப்பட்ட மொர்தெகாயின் உத்தரவு இரண்டாவதானது. முதலாவதாக அனுப்பப்பட்ட ஆமானின் உத்தரவு, கட்டளை அங்கேதானே, அப்படியே இருந்தது. அது மாற்றப்படக்கூடாதது. அதற்கேற்றபடி மொர்தெகாய் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், யூதர்களை, அந்த முதலாவது கட்டளையின்படி கொல்ல முயற்சிப்போரை எதிர்த்துத் தாக்கி அழித்து, அந்தநாளிலே அவர்களைக் கொள்ளையிடுவதேயாகும். அந்த நாளும் வந்தது. யூதர்கள் அங்காங்கே ஒன்று சேர்ந்து, தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயத்தமாயினர். ஆனால் யூதர்களை எதிர்த்து, அவர்களைக் கொல்ல யாருக்கும் துணிவு ஏற்படவில்லை. பிரதானிகளும், தேசாதிபதிகளும், அதிபதிகளும் இராஜாவின் போர்வீரர் அனைவரும் யூதர்களுக்குத் துணை நின்றார்கள். மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அனைவரையும் பிடித்தது. முதலில், யூதர்கள் அனைவரையும் கொன்றுபோடும்படியாக எழுதப்பட்டிருந்த ஆமானின் கடிதம் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. இரண்டாவதாக வேறோரு கடிதம், யூதனான மொர்தெகாயினுடையது. அதுவும் அவர்களுக்குக் கிடைத்தது. மொர்தெகாயின் செய்கை, நாடு முழுமைக்கும் அவனைப் பிரசித்தப்படுத்தியது. அவன் மேலும் மேலும் அதிகாரம் பெற்று விளங்கினான். ஆட்சியாளர்கள் அவனைக் கண்டு மிகவும் அஞ்சினார்கள். அவர்கள் யாருடைய பக்கத்தில் நின்று செயல்ப்படவேண்டுமென்று அறிந்திருந்தனர். நமது உயிருக்கு ஆபத்துவரும்போது, நமது கொள்கைகளை நாம் எவ்வாறு மாற்றிக் கொள்கிறோம் என்பது உண்மையில் மிக வியப்பாகவே உள்ளது.

வசனம் 9:5-10

அப்படியே யூதர் தங்கள் சத்தருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.

யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.

அம்மெத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்மோன், அஸ்பாதா,

பொராதா, அதலியா, அரிதாத்தா,

பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.

ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

ஆனால் யூதர்களுக்கு விரோதிகள் இல்லாமலும் இல்லை. ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கணக்கானவர்களை யூதர்கள் தாக்கி அழித்துக் கொன்றுபோட்டனர். அவ்விதம் யூதர்களை எதிர்த்தவர்களில் ஆமானின் பத்துக் குமாரரும் அடங்குவர். யூதர்கள் அந்தப் பத்துப்பேரையும் தாக்கி, வெட்டிக் கொன்று போட்டனர். ஆனால் யூதர்கள் யாரையும் கொள்ளையிடவில்லை. மொர்தெகாயின் உத்தரவின்படி, எதிர்த்தவர்களைக் கொன்று கொள்ளையிட அவர்களுக்கு அனுமதியிருந்தது. ஆனால் யூதர்கள் யாரையும் கொள்ளையிடவில்லை. அவர்களை எதிர்த்தவர்களின் ஏதேனும் ஒரு உடமையாகிலும்கூடத் தொடப்படவில்லை. அவர்கள் தங்கள் தங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளவே போராடினர். இது அவர்களுடைய நற்பண்புகளைக் காட்டும் குறிப்புகளாகவே வேதத்தில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.

வசனம் 9:11-12

அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.

அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஜந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள். ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? ஆது உனக்குக் கட்டளையிடப்படும். உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.

இந்த நிகழ்ச்சிகளைப்பற்றிய செய்திகள் யாவும் இராஜாவின் சமுகத்தில் கொண்டுவரப்பட்டது. சூசான் அரண்மனையில் தாக்கிக் கொல்லப்பட்ட 500 பேரைப் பற்றிய அந்தச் செய்தியும் இராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அரண்மனையில்கூட யூதருக்கு எத்தனை எதிரிகள். அதிகாரம் குவிந்துள்ள இடங்களிலெல்லாம் சாத்தானின் செயல்ப்பாடுகள் இருப்பதைக் காணமுடிகிறதல்லவா? சூசான் அரண்மனையில் 500 எதிரிகள் கொல்லப்பட்டனர். ஆமானின் குமாரர்கள் பத்துப்பேரும் கொல்லப்பட்டனர் என்று அகாஸ்வேரு இராஜா எஸ்தரிடம் கூறுகிறான். இன்னுமுள்ள இராஜாவின் மற்ற நாடுகளிலும் எத்தனையோ விரோதிகள் கொல்லப்பட்டிருப்பர். இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும். உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்று இராஜா கூறினான்.

வசனம் 9:13

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றான்.

வேறொன்றும் தேவiயில்லை, எனது ஜனங்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்று எஸ்தர் கூறுவாள் என்று ஒருவேளை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் அவளுக்குத் தெரியும், மேலும் எதிரிகள், அங்கே சூசான் அரண்மனையில் இருக்கிறார்கள் என்று. ஆகையால் அவளுடைய வேண்டுதல்களை அதோடு நிறுத்திக்கொள்ளாமல் இராஜாவிற்குச் சித்தமானால், இன்றைய தினத்துக் கட்டiயின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் 10 குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்று அவள் இராஜாவினிடம் கேட்கிறாள். ஆனால் இது தேவையில்லாத பழிவாங்கல்தான். அந்தப் பத்துப்பேரும் ஏற்கெனவே கொல்லப்பட்டுவிட்டனர். அவர்களின் உடல்களைத் தூக்குமரத்தில் தூக்கிப்போடுவதால் என்ன இலாபமோ? வேதத்தில் உபாகமம் என்ற உபதேச ஆகம நூலில் கூறியுள்ளபடி ஒருவன் கொலைசெய்யப்படும்படி மரத்திலே தூக்கிப்போடப்பட்டால் அவன் தேவனால் சபிக்கப்பட்டவன் என்று அறிகிறோம் (உபா.21:22-23). இந்த ஆமானின் குமாரரான 10 பேரும் யூதர்களைத் தாக்கியவர்கள். ஆகையால் நீதி நிலைநிறுத்தப்பட அவ்வாறு செய்யப்படவேண்டும் என்று அவள் விரும்பினாள்போலும்.

வசனம் 9:14-16

அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான். அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது. ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.

சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானிலே முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள். ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள். ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.

இராஜா அப்படியே செய்யும்படி உத்தரவு கொடுத்தான். அந்தப் பத்துப்பேரும் தூக்குமரத்திலே தூக்கிப்போடப்பட்டனர். அடுத்தநாளிலும் சூசானிலிருக்கிற யூதர் கூடிச்சேர்ந்து சூசானில் முன்னூறுபேரைக் கொன்று போட்டார்கள். மற்றுமுள்ள எல்லா நாடுகளிலுமுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் 75000 பேரைக் கொன்றுபோட்டார்கள். ஆமான் யூதர்களை அழிக்க அநேகம்பேரை பகைவர்களாக்கியிருந்தான். ஆனால் யூதர்கள் ஒன்றுசேர்ந்து அவர்களை அழித்தனர். இங்கே மிக அருமையானதொரு படிப்பினை நமக்கு உண்டு. மறுபடியும் மறுபடியும் அவர்கள் கொள்ளையிட தங்கள் கைiயை நீட்டவில்லை என்று நாம் அறிகிறோம்.

வசனம் 9:17-19

ஆதார் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க்கூடி, பதினைந்தாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள்.

ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.

அதற்கு அடுத்த நாளை, அந்த யூதர்கள், இளைப்பாறி விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். அது நன்றி பாராட்டுதலுக்குரிய நாளாகும். மொர்தெகாய் அந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிற பண்டிகை நாளாக்க விரும்பினான். ஆகையால் அவன் இந்த வர்த்தமானங்களை எழுதி சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு இராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதர்களுக்கும் நிருபங்களை அனுப்பி, வருடந்தோறும், ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாம் தேதிகளை பண்டிகை நாட்களாகக் கொண்டாடும்படி செய்தான். அந்த நாளிலே அவர்கள் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும் ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும் வேண்டும் என்று அறிவித்தான். மேலும் அவன் அந்த நிருபத்தில் அந்த நாட்களில் ஏழை எளியவர்களுக்கு தானதர்மஞ் செய்யவும் வேண்டுமென்று திட்டம் பண்ணினான். பொதுவாக நாம் செய்கிற கொண்டாட்டங்களும் பரிசில் அனுப்புதலும் நமக்குத் திரும்ப அது வேறுவகையில் கொடுத்துவிடப்படும் என்ற எண்ணத்தில்தான் செய்யப்படுவதாகும். ஆனால் இங்கே ஏழை எளியவர்களுக்கு வரிசைகள் அனுப்பப்படல் வேண்டும் என்ற கொள்கை ஏற்படுத்தப்பட்டது. ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்று வேதம் கூறுகிறது (நீதி.19:17).

வசனம் 9:26-28

ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது. அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தம் தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும்,

யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,

இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.

அந்தப் பண்டிகை நாட்கள் பூரீம் என்றழைக்கப்பட்டு, இன்று யூதர்களின் பண்டிகை நாட்களாக அவர்களால் கொண்டாடப்படுகின்றன. 23 லிருந்து 28 வரையிலான வசனங்களில் ஏன் அப் பண்டிகை அப்பெயரால் கொண்டாடப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தவறாமல், குறைவில்லாமல் அந்தப் பண்டிகை கொண்டாடப்படவேண்டும் என அந்த உத்தரவு கூறுவதாக நாம் வாசிக்கிறோம். யூதர்கள் இந்த இரட்சிப்பின் நடவடிக்கையை என்றும் மறந்துவிடவே கூடாது என்று அவர்கள் விரும்புகின்றனர்.

இது கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஓர் உண்மையை என்றும் நினைவில் கொள்ள வகைசெய்யவேண்டியதாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்குச் செய்த நன்மைகள் யாவற்றையும் மறந்துபோகாமல் நாம் என்றும் நினைவில் கொள்ளவேண்டியவர்களாயிருக்கிறோம் (1.கொரி.11:24).

வசனம் 9:29

பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள்.

இந்த வசனத்தில் பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தை திடப்படுத்தும்படி எஸ்தர் என்னும் ராஜாத்தியும் யூதனாகிய மொர்தெகாயும் பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள் என்று நாம் வாசிக்கிறோம். எஸ்தரும், மொர்தெகாயும் பலத்தின்மேல் பலம் அடைந்து (சங்.84:7) அதிகாரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதை இது காட்டுகிறது.

வசனம் 9:30

யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,

மொர்தெகாயும் அகாஸ்வேரு இராஜாவின் இராஜ்யத்தில் உள்ள எல்லா நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை எழுதி அனுப்பினான். ஆண்டவராகிய இயேசுவின் அன்பு வார்த்தைகள் நம்முடைய நினைவிற்கு வருகின்றன. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோ.14:27). மேலும் அவர், நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்றார். சமாதானத்தின் வார்த்தைகள், யூதருக்கு அரச அதிகாரபீடத்திலிருந்து, எஸ்தராலும் மொர்தெகாயாலும் அனுப்பப்பட்டன. அதுபோலவே சமாதானத்தின் வார்த்தைகள் என்றென்றுமுள்ள தேவனின் சர்வாதிகாரத்திலிருந்து நமக்குக் கிடைக்க வல்லதாயிருக்கின்றன.

வசனம் 9:31-32

அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது. அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது

இந்த விருந்தும் கொண்டாட்டமும் ஒரு சாதாரண நிகழ்ச்சிமட்டுமல்ல. இது பெரிய விடுதலையும் கூட. அது கொண்டாடப்படுவதற்கான வழிவகைகளை எஸ்தர் மிகவும் கவனத்துடன் அமைத்துக்கொடுத்தாள். ஒவ்வொரு தலைமுறையினரும் மிக கவனத்துடன் இந்தச் செயல்முறைகளைப் பின்பற்றி இந்தப் பண்டிகை நிறுத்தப்படாமல் தொடரும்படி பார்த்துக்கொள்ள கடமைப்பட்டிருந்தனர். அதுபோலவே நாமும் நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் என்றென்றும் நினைவில் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். தலைமுறை தலைமுறையாக இதைச் செய்யவேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது.

எஸ்தரின் கட்டளைகளும், அந்தப் பண்டிகை கொண்டாடப்படுவது குறித்த அனைத்து மொர்தெகாயின் கட்டளைகளுமான வர்த்தமானங்கள், மறந்துவிடாதபடி ஒரு புத்தகத்தில் எழுதிவைக்கப்பட்டது. அதுபோலவே நாம் பின்பற்றி நடப்பதற்காக ஒரு புத்தகம் எழுதிவைக்கப்பட்டுள்ளது (அதுதான் சத்தியவேதம்). நாம் தினமும் ஒழுங்காக வாசித்து அதன்படி நடந்து, அதனை நமது பிள்ளைகளுக்குப் போதித்துவருகிறோமா?

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. பொருளடக்கம்

10. மொர்தெகாயின் உயர்ந்த நிலை

உண்மையான விசுவாசம் என்ன?

உண்மையான விசுவாசம் என்ன?

Recommended

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

பாடம் 01: சுவிசேஷத்தின் பரந்த காட்சி

பாடம் 07: தேவனோடு ஐக்கியப்படல்

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(4) காமம்

00. மோட்சப் பயணம்

13. அப்பொல்லியோனோடு சண்டை

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.