பாடம் 10: நித்தியஐPவனின் வழிகுறித்துப் பிறரோடு பகிர்ந்துகொள்ளல்
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நித்திய ஐPவனைப் பெற்றிருக்கின்ற மக்களில் நீங்களும் ஒருவர், இப்பொழுது பரலோக வாழ்விற்கு நேராகப் பயணம் செய்கின்றீர்கள். மற்றெல்லாரும் அழிவுக்கு நேராகச் செல்கின்ற அகலமான பாதையிலே பயணம் செய்கின்றனர் (மத்தேயு 7:13-14) நீங்கள் இழந்து போனவர்களைக் குறித்து கவலை உள்ளவர்களாக இருக்கிறீர்கள். உலகில் நீங்கள் சாட்சியாக இருக்கவேண்டுமென்று இயேசு கிறிஸ்து உங்களை அழைத்திருக்கிறார் (அப்போஸ்தலர் 1:8) ஒரு சாட்சி என்ற முறையில், இயேசு உங்கள் வாழ்க்கையில் செய்வதையும், பிறர் எப்படி அவரை ஏற்று கொள்ள முடியும் என்பதையும் கூறலாம். ஒருவர் பரலோகத்திற்;கு நிச்சயமாக செல்ல முடியும் என்பதை உங்களால் காட்ட முடியுமா ?
பின்வரும் கேள்விகளும், வசனமும், நீங்கள் ஒருவருக்கு ஒழுங்காக நற்செய்தியை கூறுவதற்கு உதவியாக இருக்கும்.
பிரச்சனை:
ஒருவர் ஏன் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டபின், எப்படி இரட்சிப்பை அடைய முடியும் என்பதைக் கூறவும்.
1) பாவி யார் ? பாவம் எப்படி விளக்கப்படுகிறது ? (ரோமர் 3:23, ஏசாயா 53:6)
2) பாவத்தின் தண்டனை என்ன ? (ரோமர் 6:23)
3) சரீர பிரகாரமான மரணம் என்பது ஆத்துமா உடலை விட்டுப் பிரிவதாகும். ஆவிக்குரிய அல்லது இரண்டாம் மரணம் என்பது, ஆத்துமா தேவனை விட்டுப் பிரிவதாகும். (வெளிப்படுத்தல் 20:11-15) வசனம் 12ல், புஸ்தகத்தில் என்ன? ஐPவ புஸ்தகத்தில் என்ன இருக்கிறது ? இரண்டாம் மரணம் என்றால் என்ன ?
தீர்வு:
இயேசு கிறிஸ்து சிலுவையில் ஏன் மரித்தார் என்ற கேள்விக்குப் புத்தி கூர்மையாகப் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் பதில் சொல்ல முடியாது. ஒருவேளை “நம்முடைய பாவத்திற்காக அவர் மரித்தார் என்று பதில் கூறினாலும், உண்மையான அர்த்தத்தைப்புரியாமல் கூறுவதாகும். நாம் சில கேள்விகளுக்கு செல்வோம்.
4) மக்களை இரட்சிப்புக்கு கொண்டு வர, தேவனுடைய வழி என்ன ? (ரோமர் 1:16)
5) நற்செய்தி (சுவிசேசம்) யில் அடங்கியுள்ள மூன்று பிரிவுகள் யாவை ? (1.கொரிந்தியர் 15: 3-4)
6) நற்செய்தியின் கருத்து என்ன ? (1.கொரிந்தியர் 1:18)
7) 1.பேதுரு 2:24 யை கவனமாகப் படிக்கவும் யார் பாவத்தை சுமந்தார் ? யாருடைய பாவத்தைச் சுமந்தார் ? என்னவிதமான இரண்டு விளைவுகள் கூறப்பட்டுள்ளது ?
8) ஏசாயா 53:4-5 யை எழுதவும், அது மேற்குறிப்பிட்டுள்ள பதில்களுக்கு ஒத்ததாகக் காணப்படுகிறது.
நம்முடைய பாவங்களுக்காக இயேசுவை யார் அடித்தது ?
எந்த வழியில் எபேசியர் 2:8-9 மேற்கூறப்பட்டவைகளுக்கு ஒத்து இருக்கிறது ?
தேவைகள்:
9) இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதோடு, இரட்சிப்படைவதற்குத் தேவையான பிற அம்சங்கள் எவை ? (அப்போஸ்தலர் 20:21)
10) இயேசு கிறிஸ்துவுடன் நான் என்ன செய்ய வேண்டும் ? ( யோவன் 1:12)
11) இயேசு கிறிஸ்து யார் ? (யோவன் 1:1, 14)
12) யோவான் 5:24, 1.யோவன் 5:12 உள்ள வாக்குதத்தம் என்ன ?
உங்களுக்குள்ளாகவே இக் கேள்விகளைக் கேளுங்கள்
உண்மையான விசுவாசியாக நீங்கள் வாழ்கிறீர்களா ? பிறரோடு பேசுகின்ற பொழுது எப்படி பேச்சை துவங்குகிறீர்கள் ?
என்னென்ன வசனங்களை மனப்பாடம் செய்துள்ளீர்கள் ? அதலால் பரலோகத்தின் வழியை உங்களுக்கு பிறருக்குக் காட்ட முடியும்.
ரோமர் 10:9, 1.யோவான் 5:13, அப்போஸ்தலர் 2:41, மத்தேயு 28:19, யோசுவா 1:8, மாற்கு 1:35 , மத்தேயு 7:7, யோவான் 10:10ன் பிற்பகுதி, 1.கொரிந்தியர் 10:13, நீதிமொழிகள் 28:13, லூக்கா 6:46 , அப்போஸ்தலர் 2:42.
மனப்பாட வசனம்
குமாரனை உடையவன் ஐPவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஐPவன் இல்லாதவன் (1.யோவான் 5:12).
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார் (அப்போஸ்தலர் 1:8).











