பாடம் 12: தேவனுடைய சித்தம் செய்தல்
நல்ல பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஞானமான பாதையில் வழிநடத்த விரும்புகின்றனர். அவர்கள் பிள்ளைகளை நேசிப்பதால் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றனர். அதே சமயம் பிள்ளைகளும் பெற்றோர்களுடைய யோசனைகளைக் கேட்டு பின்பற்ற விருப்பமுடையவர் களாயிருக்க வேண்டும். இப்படி இருக்குமானால் எல்லாம் நல்ல முறையில் இருக்கும். பரலோகத்தில் இருக்கிற நம்முடைய பிதா எல்லோருக்கும் நல்ல பெற்றோராவார். நாம் அவருக்காகப் படைக்கப்பட்ட போதிலும் அவர் நம்முடைய வாழ்வில் நலமானதையே விரும்புகிறார். (பிலிப்பியர் 2:13, எரேமியா 29:11) ஞானமான தேவனுடைய பிள்ளை தன் அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தை அறிய விரும்புகின்றான். (எபேசியர் 5:17) தேவன் ஆதி முதற்கொண்டே எல்லாவற்றின் முடிவுகளையும் அறிந்திருக்கிறார் (ஏசாயா 46:10) அவருடைய வழிநடத்துதலை நாம் அறிய முடியும்.
1) யோவான் 7:17ல் இயேசு கூறுவது என்ன ? இந்த வசனத்தின் அடிப்படையில், உங்களுக்குள்ளாகவே நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள் ?
2) உன்னுடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ? (மத்தேயு 6:33)
3) நீங்கள் எப்படித் தேவனுடைய சித்தத்தைத் தேடத்துவங்குவீர்கள் ? (யாக்கோபு 1:5)
4) தேவன் உங்களுக்கு என்ன செய்வார் ? (சங்கீதம் 32:8)
5) நாம் நிச்சயமுள்ளவர்களாக எப்படி இருக்க முடியும் ? (1.யோவான் 5:13-15)
6) நாம் வழி நடத்தபடுவதற்கு எங்கே நோக்கிப் பார்க்க வேண்டும் ? (சங்கீதம் 119:105)
7) நாம் கற்றுக்கொள்வதற்கு யாரை நோக்கிப் பார்க்க வேண்டும் ? (1.கொரிந்தியர் 2:12, யோவான் 14:26, யோவான் 16:13)
8) நமக்கு நல்லதென்று தெரிகின்றதை நாம் செய்கின்ற போது எற்படுகின்ற பிரச்சனை என்ன ? (ஏசாயா 55:8)
9) அவருடைய வழிகளை நாம் வாழ்க்கையில் கைக்கொள்வதற்கு நமக்கு உதவுவதென்ன ? (நீதிமொழிகள் 3:5-6)
10) சரியான பாதையை எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் ? (நீதிமொழிகள் 11:14, 15:22) யார் இந்த ஆலோசகர்கள் ? (எபிரேயர் 13:17)
உங்களுக்குள்ளாகவே இக் கேள்விகளைக் கேளுங்கள்
உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கு தடையாக இருப்பவை என்ன ?
நீங்கள் விரும்புவதைச் செய்யமுடியாத நிலையில் எது தேவனுடைய ஆலோசனையைப் பின்பற்றுவதற்குத் தூண்டும் ?
தேவனுடைய சித்தத்தைக் குறித்து இதுவரையில் நிச்சயம் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?
தேவனுடைய சித்தத்திற்கு கீழ்படிவதில் உணர்ச்சிகளின் பங்கு என்ன ?
ரோமர் 10:9, 1.யோவான் 5:13, அப்போஸ்தலர் 2:41, மத்தேயு 28:19, யோசுவா 1:8, மாற்கு 1:35 , மத்தேயு 7:7, யோவான் 10:10 ன் பிற்பகுதி, 1.கொரிந்தியர் 10:13, நீதிமொழிகள் 28:13, லூக்கா 6:46, அப்போஸ்தலர் 2:42, 1.யோவான் 5:12, அப்போஸ்தலர் 1:8, ரோமர் 8:9, எபேசியர் 5:18.
மனப்பாட வசனம்
உன் சுயபுத்தியின் மேல் சாயாமல் உன் முழு இருதயத்தோடு கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதிமொழிகள் 3:5-6).










