பாடம் 3: ஞானஸ்நானம்
நாம் இயேசு கிறிஸ்துவோடு கொண்டுள்ள உறவைப் பரிசுத்த வேதாகமம் திருமண உறவோடு ஒப்பிடுகிறது. (ரோமர் 7: 4 , எபேசியர் 5: 30-32) எந்த ஒரு உண்மையான கணவனோ அல்லது மனைவியோ தங்கள் திருமணத்தை மறைத்து வைப்பதில்லை. அதேபோல் நாம் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ள நித்தியமான உறவைப் பிறருக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடையவேண்டும். இராஐhதிராஐவும், தேவாதி தேவனுமாகிய கிறிஸ்துவோடு நாம் கொண்டுள்ள உறவை நினைத்துப்பார்த்தாலே உள்ளம் பூரிக்கிறது. இப்படிப்பட்டதான உறவை மறந்து உலக வாழ்வில் மறைப்போமானல் அது நாம் தேவனுக்கு முன்பாகச் செய்கிற பெரும் தவறாகும்.
(1) பரலோகத்தில் கிறிஸ்து நம்மை அறிக்கை செய்ய வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும் ? (லூக்கா 12:8-9)
(2) நாம் அவ்வாறு செய்ய மறுத்தால் கிறிஸ்து என்ன செய்வார்? (மத்தேயு 10:32-33)
இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்கள் அனைவரும் வெளிப்படையாக அவரோடு கொண்டுள்ள ஐக்கியத்தைக் காட்ட வேண்டும் என்பது தேவகட்டளையாகும்.
(3); இயேசு கிறிஸ்து சீடர்களுக்கு இட்ட இரண்டு கட்டளைகள் என்ன? (மத்தேயு 28:19)
(4) சுவிசேசத்தை விசுவாசித்தவர்களுக்குப் பேதுரு கட்டளையிட்டது என்ன? (அப்போஸ்தலர் 2:38-41)
(5) ஞானஸ்நானம் பெறுவதற்கு முக்கியமான நிபந்தனை என்ன? (அப்போஸ்தலர் 8:36- 37)
(6) முதலில் வருவது ஞானஸ்நானமா அல்லது விசுவாசமா ? (அப்போஸ்தலர் 10:47, 18:8)
(7) தண்ணீரில் எப்படி ஞானஸ்நானம் எடுப்பது ? (அப்போஸ்தலர் 8:38-39)
(8) ரோமருக்கு எழுதிய நிருபத்தில் ஞானஸ்நானம் எதைக் குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது ? (ரோமர் 6:3-5)
உங்களுக்குள்ளாகவே இக்கேள்விகளைக் கேளுங்கள்
எப்போது , எங்கு , பிறருக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதை அறிக்கையிட்டீர்கள் ?
கிறிஸ்துவோடு இரட்சிப்பினால் இணைக்கப்பட்ட பின்பு எப்பொழுது தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்றீர்கள் ?
ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவர்களாகிய நீங்கள், கிறிஸ்துவோடு அடக்கம்பண்ணப்பட்டு அவரோடு உயிர்த்தெழுந்து, புதிய ஐPவியம் செய்கிறீர்கள் என்று எப்படி வெளிக்காட்டுகிறீர்கள் ?
ரோமர் 10:9 யும் 1.யோவான் 5:13 யும் படிக்கவும்.
மனப்பாட வசனம்
அவருடைய வார்த்தையைச் சந்தோசமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் (அப்போஸ்தலர் 2:41).
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஐhதிகளையும் சீசராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுங்கள் (மத்தேயு 28:19).











