பாடம் 4: தேவனோடு நேரம் செலவிடல்
தேவனுடைய பிள்ளைகள் தேவனோடு நேரத்தைச் செலவிடவேண்டியது அவசியமாகும். அவரே பெலத்திற்கும், ஞானத்திற்கும் உறைவிடமாயிருக்கிறார். நீ தேவனை நேசித்தால் அவரோடு நேரத்தைச் செலவிட விரும்புவாய். இது சுமையல்ல, ஆனால் ஆத்துமாவுக்கு மகிழ்ச்சிப்பாகும். (சங்கீதம் 63: 1) தினந்தோறும் தேவனோடு ஐக்கியம் கொள்ளுதல் மிக மிகத் தேவையாகும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த பெரிய மனிதர்கள் தேவனோடு நேரத்தைச் செலவிட்டனர். ஆபிரகாம் பலிபீடம் கட்டித் தேவனை ஆராதித்தான். (ஆதியாகமம் 12:7 , 13:4)
ஒவ்வொரு நாளும் தேவனோடு நேரத்தைச் செலவிடல் ஆவிக்குரிய பலிபீடத்தை வாழ்க்கையில் அமைப்பதற்குச் சமமாகும்.தேவனோடு நேரத்தைச் செலவிட நாம் கடைபிடிக்க வேண்டியவை:
அ) தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஆ) அமைதியான ஒர் இடத்தைத் தேர்வு செய்யவேண்டும்.
இ) தொடர்ந்து வேதாகமத்தைப் படிப்பதற்குத் திட்டம் வகுக்கவேண்டும்.
உ) கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் நோக்கமாக இருக்கவேண்டும்.
(1) பரிசுத்த மனிதர்கள் தேவனோடு செலவிட எந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்தனர் ? (ஏசாயா 50:4)
(2) இயேசு கிறிஸ்து தேவனோடு நேரத்தைச் செலவிட எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் ? (மாற்கு 1:35)
nஐபத்தினாலும், தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பதினாலும் நாம் தேவனோடு ஐக்கியம் கொள்கிறோம். nஐபத்தின் மூலம், தேவனோடே பேசுகிறோம். தேவனுடைய வார்த்தையைப் படிப்பதின் மூலம் தேவன் நமக்கு சொல்வதைக் கேட்கிறோம். நாம் வேதத்தைப் படிப்பதற்கு முன்னால் நாம் கடைப்பிடிக்க வேண்டியவை யாவை என்பதைப் பார்ப்போம்.
(3) தேவனுடைய வார்த்தையைப் படிப்பதற்கு முன்னால் நாம் எவ்வாறு nஐபிக்கவேண்டும் ? (சங்கீதம் 119:18)
(4) தேவனுடைய வார்த்தைக்குத் தக்கவாறு நாம் எவ்வாறு செயல்ப்பட வேண்டும் ? (சங்கீதம் 119:34 , 97)
(5) வேதாகமத்தின் மூலம் என் வாழ்க்கையில் நான் செய்வது என்ன ? சங்கீதம் 119:11 , சங்கீதம் 119:50 , சங்கீதம் 119:105
(6) எந்த நான்கு காரணங்களுக்காகத் தேவன் தன்னுடைய வார்த்தையை நமக்குத் தந்திருக்கிறார்? (2.தீமோத்தேயு 3:16-17)
(7) ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் நாம் வெற்றியுள்ளவர்களாக எப்படி இருக்கமுடியும் ? (யோசுவா 1:8)
(8) சீடர்கள் இயேசுவை நோக்கி nஐபம் பண்ணக் கற்றுத்தாரும் எனக் கேட்கக் காரணமாயிருந்தது என்ன ? (லூக்கா 11:1)
(9) நம்முடைய தனிப்பட்ட தேவைகள் தவிர, கிறிஸ்து தன்னுடைய சீடர்களுக்கு மாதிரியாக கற்றுக் கொடுத்த nஐபத்தின் அடிப்படையில் nஐபிப்பதைப் பட்டியலிடுக: (லூக்கா 11:2-4)
உங்களுக்குள்ளாகவே இக்கேள்விகளைக் கேளுங்கள்
வேதத்தைப் படிப்பதன் மூலமும், nஐபம் செய்வதின் மூலமும் தேவனோடு நேரத்தைச் செலவிடுவதை உங்கள் வாழ்வில் எப்பொழுது கடைபிடிக்கத் தீர்மானித்தீர்கள் ?
ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள் ?
ஒழுங்காக பரிசுத்த வேதத்தைப் படிப்பதற்கு என்ன திட்டம் தீட்டியுள்ளீர்கள் ?
சுவிசேசத்திலிருந்து துவங்கவும் முதலில் யோவான் சுவிசேசமும், மாற்கு, சுவிசேசமும் படிக்கவும். தொடர்ந்து பவுலின் நிருபங்கள், பேதுரு, யோவான் எழுதிய நிருபங்கள் அடுத்து சங்கீதம் நீதிமொழிகள், ஆதியாகமம் பிற பழைய ஏற்பாட்டின் புஸ்தகங்களைப் படிக்கவும். வேதாகமம் முழுவதையும் படிக்கவும். குறிப்பாகப் புதிய ஏற்பாட்டில் கவனம் செலுத்தவும்.
ரோமர் 10:9 , 1.யோவான் 5:13 , அப்போஸ்தலர் 2:41 , மத்தேயு 28:19 யைப் படிக்கவும்.
மனப்பாட வசனம்
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக, இதில் எழுதியிருக் கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யகவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய் (யோசுவா 1:8).
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே nஐபம்பண்ணினார் (மாற்கு 1:35).











