பாடம் 8: உங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிதல்
நாம் சுவிசேசத்தைக் (நற்செய்தி) கேட்டு விசுவாசித்த பொழுது, நாம் இயேசு கிறிஸ்துவை நம்முடைய தேவனும், இரட்சகருமாக ஏற்றுக்கொண்டோம். நாம் கிறிஸ்துவைத் தேவன் என்று பிறர் மத்தியில் அறிக்கையிட்டோம் (ரோமர் 10:9) நாம் அவரை தேவனென்று அறிந்திருக்கிறோம். நாம் பரலோகத்தில் அவரைப் பார்க்கும் பொழுது சாஸ்டாங்கமாய் பணிந்து அவரை தேவன் என்று அழைப்போம் இது மிக முக்கிய சத்தியமாகும். எனவே இதை நம் வாழ்வில் அனுபவரீதியாகக் கடைபிடித்து ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும்.
(1) இயேசு யார் ? (அப்போஸ்தலர் 10:36-38)
வானத்திலும் பூமியிலும் காணப்படுகிற எந்த ஐPவராசிகளை விடவும் அவர் குறைந்தவரா ? (வெளிப்படுத்தல் 17:14)
(2) தோமா இயேசு கிறிஸ்துவை எவ்வாறு அழைத்தான் ? (யோவன்20:28)
உன்னுடைய வாழ்வில் இதன் அர்த்தம் என்ன ?
(3) பரலோகத்திலும், நரகத்திலும் உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்யவேண்டியது என்ன ? (பிலிப்பியர் 2:10-11)
(4) இயேசு எதைக் கடிந்து கொண்டார் (லூக்கா 6:46)
ஏன் அவர்கள் செயல்கள் மாறுபாடாக இருந்தது ?
(5) விசுவாசிகளாகிய நாம் இயேசுவை நேசிக்க வேண்டும் அவரை நேசிப்பது என்றால், நாம் என்ன செய்யவேண்டும் ? (யோவான் 14:15)
நாம் இதை செய்திருக்கிறோமா ?
(6) நாம் யாருக்காக வாழவேண்டும் ? (2.கொரிந்தியர் 5:15)
(7) பவுல் ரோமபுரியில் உள்ள விசுவாசிகளுக்கு விடுத்த வேண்டுகோள் என்ன ? (ரோமர் 12:1)
நீங்கள் என்ன முறையில் இதற்கு ஏற்ப செயல்படுகிறீர்கள் ?
(8) நாம் இவற்றைச் செய்தால் நம் வாழ்வில் நடப்பது என்ன ? (ரோமர் 12:2)
உங்களுக்குள்ளாகவே இக் கேள்விகளைக் கேளுங்கள்
எப்பொழுது, எப்படி, இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் தேவனாகவும், ஆண்டவராகவும், ஏற்றுக்கொண்டீர்கள் ?
அன்றாட வாழ்க்கையில் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதால், எப்படி, கிறிஸ்து ஆண்டவராகவும், தேவனாகவும் நம் வாழ்வில் செயலாற்றுகிறார் ?
நீங்கள் சொல்லுகிறபடி, எப்படி உங்கள் நடத்தை, நேரத்தை செலவிடல், பணத்தைப் பயன்படுத்தல், திறமையைப் பயன்படுத்தல், ஒத்திருக்கிறது ?
ரோமர் 10:9, 1.யோவான் 15:13, அப்போஸ்தலர் 2:41, மத்தேயு 28:19, யோசுவா 1:8, மாற்கு 1 35, மத்தேயு 7:7, யோவன் 10:10ன் பிற்பகுதி, 1.கொரிந்தியர் 10:13, நீதிமொழிகள் 28:13யை படிக்கவும்.
மனப்பாட வசனம்
என்னை ஆண்டவரே, ஆண்டவரே, என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன ? (லூக்கா 6:46).











