பாடம் 9: உங்கள் ஆவிக்குரிய குடும்பம், ஸ்தல சபையே
ஆதிவிசுவாசிகள் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டபொழுது, அவர்களைத் தேவன் ஒன்றாக கிறிஸ்துவுக்குள் இ;ணைத்தார். அவர்கள் ஒருமனப்பட்டு, ஒருமித்திருந்தார்கள் (அப்போஸ்தலர் 2:44,46). இ;யேசு கிறிஸ்து நமக்கு எப்படித் தேவையோ, அதேபோல் உடன் விசுவாசிகளும் ஒருவருக்கொருவர் தேவையாயிருக்கிறார்கள். கிறிஸ்துவுக்குள் நாம் நம்முடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் தேவனுடைய குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கிறபடியால், நாம் ஆவிக்குரிய சமூகமாக காணப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவயவங்களாக இருக்pறோம். (1.கொரிந்pயர் 12:27). இவ்வித ஐக்கியம் ஸ்தலசபைகளில் காணப்படவேண்டியது அவசியமாகும்.
1) மக்கள் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்த பொழுது எதில் அவர்கள் சேர்த்;துக் கொள்ளப்பட்டார்கள்? (அப்போஸ்தலர் 2:41)
ஏன் அப்படி நடந்தது, உங்கள் கருத்து என்ன?
2) ஆதிவிசுவாசிகள் செய்த நான்கு பணிகள் என்ன? (அப்போஸ்தலர் 2:42)
3) எந்த நாளில் விசுவாசிகள் கூடினார்கள், கூடுகின்ற பொழுது அவர்கள் செய்தது என்ன? (அப்போஸ்தலர் 20:7)
4) விசுவாசிகளை மொத்தமாகச் சபை என்று அழைத்தனர், அதன் அர்த்தம் அழைக்கப்பட்டவர்கள் என்பதாகும். என்ன வழியில் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்? (1 பேதுரு 2: 9)
5) சபை இருக்கின்ற இடத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. உதாரணமாக, 1.தெசலோனிக்கேயர் 1:1, சபையின் பெயர் என்ன?
6) ஒரு கூட்டம் சபைகள் அவைகள் இருக்கின்ற மாநிலத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. கலாத்தியர் 1:22, அவர்கள் எப்படி அழைக்கப்பட்டார்கள்?
7) சபையின் தலைவர் யார்? (எபேசியர் 5:23)
8) ஸ்தல சபைகளின் தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்? (அப்போஸ்தலர் 20:17, தீத்து 1:5)
9) சபையிலுள்ள உறுப்பினர்கள், சபையின் தலைவர்களோடு என்ன மனநிலை உடையவர்களாக இருக்கவேண்டும்?
சபையின் தலைவர்களுக்கு உள்ள பொறுப்பு என்ன? (எபிரெயர் 13: 17)
10) எபிரெயர் நிருபத்தில் 10:25 ல் உள்ள எச்சரிப்பு என்ன?
உங்களுக்குள்;ளாகவே இக் கேள்விகளைக் கேளுங்கள்
நீங்கள் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் எடுத்த பின்பு எப்பொழுது ஸ்தல சபையில் அங்கமானீர்கள்?
இவ் ஐக்கியத்தில், நடைமுறை செய்கைகளில் எவ்வாறு செயல்படுகிறீர்கள்?
செயல்பாடுகளை எவ்வாறு நீங்கள் முன்னேற்ற முடியும்?
ரோமர் 10:9, 1.யோவன் 5:13, அப்போஸ்தலர் 2:14, மத்தேயு 28:19, யோசுவா 1:8, மாற்கு 1:35, மத்தேயு 7:7, யோவன் 10:10 ன் பிற்பகுதி, 1.கொரிந்தியர் 10:13, நீதிமொழிகள் 28:13, லூக்கா 6:46 யை படிக்கவும்.
மனப்பாட வசனம்
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், nஐபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள் (அப்போஸ்தலர் 2:42).










