யோசேப்பும் கிறிஸ்துவும்
யோசேப்பு பிதாவின் (யாக்கோபு) நேசகுமாரன்
ஆதியாகமம் 37:4
இயேசு பிதாவின் நேசகுமாரன்
மத்தேயு 3:17
(இயேசு பிதாவின் நேசகுமாரன் என்று ஏழு தடவைகள் எழுதப்பட்டிருக்கிறது.)
மத்தேயு 3:17 , 17:5 , மாற்கு 1:11 , 9:7 , லூக்கா 3:22 , 9: 35 , 2.பேதுரு 1:17
யோசேப்பு தன் பிதாவினால் சகோதரரிடத்தில் அனுப்பப்பட்டான்
ஆதியாகமம் 37:13
இ;யேசு பிதாவினால் சொந்த ஜனமாகிய யூதர்களிடத்தில் அனுப்பப்பட்டார்
யோவான் 1:11
யோசேப்பு தன் சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டான்
ஆதியாகமம் 37:18
இ;யேசு யூதர்களால் புறக்கணிக்கப்பட்டார்
யோவான் 1:11 , மாற்கு 6:3-4
யோசேப்பு தன் சகோதரர்களால் 20 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான்
ஆதியாகமம் 37:26-28
இ;யேசு தன் சீசனாகிய யூதாஸ்காரியோத்தினால் 30 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டார்
மத்தேயு 26:14-16
யோசேப்பைச் சொந்த சகோதரர்கள் அநியாயமாகக் குற்றம் சுமத்தினார்கள்
ஆதியாகமம் 37:20
இயேசுவின்மேல் வேதபாரகர், பரிசேயர், பிரதான ஆசாரியர் அநியாயமாகக் குற்றம் சுமத்தினார்கள்.
மத்தேயு 27: 12
யோசேப்பைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்
அதியாகமம் 37: 18 – 19
இ;யேசுவைக் கொலைசெய்ய அநேகமுறை வகைதேடினார்கள்.
மத்தேயு 2:16-20 , 12:14 , 17:23 , 26:59 , 27:1 , மாற்கு 14:55 , லூக்கா 19:47 , 22:2 , யோவான் 5:18 , 7:1,19, 8:37
யோசேப்பின் பலவருண அங்கியைக் கழற்றினார்கள்
ஆதியாகமம் 37: 23 – 24
இ;யேசுவின் தையலில்லாத அங்கியைப் போர்ச்சேவகர் கழற்றினார்கள்
யோவான் 19: 23 – 24
யோசேப்பின் அங்கியை ஆட்டுக்கடாவின் இரத்தத்தில் தோய்த்தார்கள்
ஆதியாகமம் 37:31-33
இ;யேசுவுக்கு சிவப்பான அங்கியை உடுத்தினார்கள்
மாற்கு 15:17-20
யோசேப்பு காவல் கிடங்கில் (சிறைச்சாலையில்) அடைக்கப்பட்டார்
ஆதியாகமம் 39: 20 – 21; சங்கீதம் 105: 17 – 20
இ;யேசு புதிய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டார். போர்ச்சேவகர் காவல் காத்தார்கள்
மத்தேயு 27: 60 – 66
யோசேப்பு ஞானதிருஸ்டியினால் வரப்போகிற காரியங்களை முன்னறிவித்தான்
(சகோதரர்கள் தன்னை வணங்குதல், எகிப்தில் ஏழு வருசம் செழிப்பு, ஏழு வருசம் பஞ்சம், சகோதரர்கள் எகிப்திலிருந்து விடுதலை முதலியன.)
எபிரெயர் 11: 22
இயேசு வரும் காரியங்களைத் தீர்க்கதரிசனமாக முன்னறிவித்தார்.
(சீசர்களில் ஒருவன் தன்னைக் காட்டிக்கொடுப்பான், சேவல் இரண்டுதரம் கூவுமுன்னே பேதுரு மூன்றுதரம் மறுதலிப்பான், மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுவார், பரிசுத்தஆவி அருளப்படுதல், எருசலேம் தேவாலயம் இடிக்கப்படுதல், அத்தியின் துளிர்ப்பு அதாவது யூதர்கள் தனிராஜ்யம் அடைதல் அகியன.)
யோசேப்பு அழகுள்ளவன்
ஆதியாகமம் 39:6
இயேசுவும் முற்றிலும் அழகுள்ளவர்
உன்னதப்பாட்டு 5:9-16 , சங்கீதம் 45:2 , வெளி 1:13-16
யோசேப்போடு கூட கர்த்தர் இருந்தார்
ஆதியாகமம் 39:2-3 , 21
இயேசுவோடு கூட கர்த்தர் இருந்தார்
யோவான் 8:29 , 16: 32 , அப்போஸ்தலர் 10:38
யோசேப்பு அடிமையாயிருந்தான்
ஆதியாகமம் 37:38 , 39:1
இ;யேசு அடிமையின் ரூபமெடுத்து மனுசர் சாயலானார்
பிலிப்பியர் 2:7 , எபிரெயர் 2:14-15
யோசேப்பு பாவத்துக்கு விலகி ஓடினான்
ஆதியாகமம் 39:7-13
இயேசு பாவத்துக்கு விலகியிருந்தார்
எபிரெயர் 7:26 , லூக்கா 23:4 , 22 , யோவான் 19:4 , 6 , 18:38 , 8:46
யோசேப்பு சிறைச்சாலையிலிருந்து சிங்காசனத்திற்கு உயர்த்தப்பட்டான்
ஆதியாகமம் 41:10
இ;யேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து பரலோகசிங்காசனத்தில் உயர்த்தப்பட்டார்
எபேசியர் 4:8-10 , சங்கீதம் 68:18 , எபிரெயர் 10:24 , பிலிப்பியர் 2:9-10
யோசேப்பு சிங்காசனத்திலிருக்கும்போது, பசியோடு தேடி வந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தான்
ஆதியாகமம் 41:57
இ;யேசு பரலோக சிங்காசனத்திலிருந்து ஆவிக்குரிய பசியோடு வருகிறவர்களுக்கு ஜீவமன்னாவைக் கொடுக்கிறவர்
எபேசியர் 4:8 , யோவான் 7:37-38 , ஏசாயா 55:1-2 , லூக்கா 11:13
யோசேப்பு புறஜாதி மனைவியை விவாகம் செய்தான்
ஆதியாகமம் 41:45
இ;யேசு புறஜாதியிலிருந்து தமக்கு மணவாட்டியைத் தேர்ந்தெடுக்கிறார்
2.கொரிந்தியர் 11:2-3
யோசேப்பு மணவாட்டியை எடுத்தபின் தன் சொந்தசகோதரர்கள் பஞ்சத்தினால் யோசேப்பிடம் வந்து அவனை வணங்கினார்கள்
ஆதியாகமம் 42:5-6
இ;யேசுவிடம் சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு யூத ஜாதி மகா உபத்திரவத்தின்மூலம் அவரை வணங்குவார்கள்
சகரியா 12:10 , வெளி 1:7
யோசேப்பின் சகோதரர்கள் அவரைக்குறித்துச் சாட்சி கொடுத்தார்கள்
ஆதியாகமம் 45:26
கிறிஸ்துவைக் குறித்து யூதர்கள் சாட்சி கொடுப்பார்கள்
வெளி 12:17
யோசேப்பு தன் சகோதரரை மகா கொடிய பஞ்சத்திலிருந்தும் கஸ்டங்களிலிருந்தும் விடுவித்து (இரட்சித்து) கோசேன் நாட்டில் குடியிருக்கப்பண்ணினான்
ஆதியாகமம் 46:34
இயேசு யூதர்களை மகா உபத்திரவத்திலிருந்தும் பஞ்சத்திலுமிருந்தும் விடுவித்து எருசலேமில் தமது இராஜ்ஜியத்தை சமாதானமாக குடியிருக்கப்பண்ணுவார்.
எசேக்கியேல் 37:14 , லூக்கா 1:31-33
யோசேப்பு நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி
ஆதியாகமம் 49:22-23
இயேசு நல்ல கனிதரும் மெய்யான திராட்சைச் செடி
(யாவருக்கும் நன்மை செய்கிறவராகவே கனிகொடுத்துச் சுற்றித்திரிந்தார்)
யோவான் 15ம் அதிகாரம் , அப்போஸ்தலர் 10:38 , கலாத்தியர் 5:22-23













