• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

April 16, 2016
in கிறிஸ்தவ நூற்கள்
0 0
இயேசு கிறிஸ்துவின் வரலாறு

மரியாள் கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரிலே வசித்து வந்த ஒரு கன்னிகை. இவள் யோசேப்பு என்கின்ற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்தாள். ஒரு நாள் அவள் இருந்த வீட்டில் தேவதூதனாகிய காபிரியேல் பிரவேசித்து: கிருபை பெற்றவளே வாழ்க ! கர்த்தர் உன்னுடனே இருக்கிறார். நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய் என்றான்.

மரியாளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையில் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே பயப்படாதே! தேவன் உன் மேல் பிரியமாயிருக்கிறார். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவருடைய இராஐ;ஐpயத்துக்கு முடிவிராது என்றான்.

அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும் ? நான் புருஷனை அறியேனே என்றாள்.

அதற்கு தேவதூதன் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன் மேல் வரும். உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும். ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் எனப்படும்.

இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதில் ஒரு புத்திரனைக் கர்ப்பம் தரித்திருக்கிறாள். மலடியெனப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.

அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

அந்நாட்களில் மரியாள் எழுந்து, பிரயாணத்திற்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, மலைநாட்டிலே யூதாவிலுள்ள எலிசபெத்தின் பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனாள்.

டிiடிடநளவழசல03

எலிசபெத்தின் கணவனாகிய சகரியா தேவாலயத்தில் ஆசாரியனாயிருந்தான். இவர்கள் இருவரும் கர்த்தர் இட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்னடியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்.

மரியாள் எலிசபெத்தின்வீட்டை அடைந்ததும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள். வீட்டுக்குள் பிரவேசித்து எலிசபெத்தை வாழ்த்தினாள். எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, உரத்த சத்தமாய்: ஸ்திரிகளுக்குள் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடன், என் வயிற்றிலிருக்கிற பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்.

பின்பு எலிசபெத்து மரியாளை நோக்கி: சகரியாவுக்குக் காபிரியேல் தூதன் தரிசனமானதையும், ஒரு மகன் பிறப்பான் என்பதையும் அவனுக்கு யோவான் என்று பேரிடும்படியாகவும் அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள் என்றும் அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான் என்றும் இரட்சகராகிய மேசியா வருகிறார் என்னும் நற்செய்தியை அறிவிப்பான் என்றும் சொன்னான் என்றாள்.

மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் அவளுடனே இருந்து, நாசரேத்திலுள்ள தன் வீட்டுக்குத் திரும்பிப் போனாள்.

இயேசுவின் பிறப்பு

யோசேப்பு மரியாள் கர்ப்பவதியானாள் என்று கண்டு, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட மனதாயிருந்தான். இவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே ! அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ! ஏனெனில் அவர் தமது ஐனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொணடு, அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்தான்.

அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்தூராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தான். அப்பொழுது அந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பு எழுதும்படி கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

அவ்விடத்தில் அவர்கள் இருக்கையில் அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால் பிள்ளையைச் சுற்றி முன்னணையில் கிடத்தினாள்.

அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள் ! இதோ, எல்லா ஐனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தியிருக்கக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.

அந்தக்கணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லித் தேவனைத் துதித்தார்கள். தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்திற்குப் போன பின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப்போய் நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து மரியாளையும் யோசேப்பையும் முன்னணையில் கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். கண்டு அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்டதைப் பிரசித்தம்பண்ணினார்கள்.

மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்தில் வைத்து சிந்தனை பண்ணிளாள். மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தித் துதித்துக்கொண்டு திரும்பிப் போனார்கள்.

பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.

முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதெனப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி ஒரு Nஐhடு காட்டுப்புறாவையாவது பலியாகச் செலுத்தவும் அவரை எருசலேமுக்குக் கொண்டு போனார்கள்.

அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமிலே இருந்தான். அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்தஆவியானவர் இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணும் முன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது.

அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன் அவரை உள்ளே கொண்டு வருகையில் அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்தரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்.

புறஐhதிகளுக்குப் பிரகாசிக்கிற ஓளியாகவும், உம்முடைய ஐனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும் தேவரீர் சகல ஐனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்றான்.

கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் ஏரோது ராஐhவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து யூதருக்கு ராஐhவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே ? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள்.

ஏரோது ராஐh அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடே கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர், ஐனத்தின் வேதபாரகர் எல்லோரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான்.

அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். அதேனேன்றால் யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல. என் ஐனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள்.

அப்பொழுது ஏரோது சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக் குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய் பிள்ளையைக் குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள். நீங்கள் கண்டபின்பு நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.

ராஐh சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில் இதோ அவர்கள்கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும் வரைக்கும் அவர்களுக்கு முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு சஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்கு காணிக்கையாக வைத்தார்கள்.

பின்பு அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திருப்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாய்த் தங்கள் தேசங்களுக்குத் திரும்பிப்போனார்கள்.

அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு மிகுந்த கோபமடைந்து ஆட்களை அனுப்பி தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

யோவான்ஸ்நானகன்

தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான். அவன் பெயர் யோவான். அவன் எலிசபெத்தினதும் சகரியாவினதும் மகன். இந்த யோவான் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து: மனந்திரும்புங்கள் பரலோகராஐ;யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று எசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.

இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் இவனுக்கு ஆகாரமாயிருந்தது.

அவன் தன்னால் எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக் குறித்துச் சாட்சிகொடுக்கச் சாட்சியாக வந்தான். அவன் அந்த ஒளியல்ல அந்த ஒளியைக் குறித்து சாட்சி கொடுக்க வந்தவனாயிருந்தான்.

அப்பொழுது எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும் யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் ? என்று கேட்டபொழுது அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். அப்பொழுது அவர்கள் பின்னை யார் ? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.

அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார் ? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு உம்மைக்குறித்து என்ன சொல்கிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்படி நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.

அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள். அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, தீர்க்கதரிசியானவரும் அல்ல எலியாவுமல்லவென்றால் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஐலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் எனக்குப் பின் வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர். அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு நான் பாத்திரன் அல்ல என்றான். இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தாபராவில் நடந்தன.

அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு இப்படி எல்லா நீதியையும்

நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். இயேசு ஞானஸ்நானம் பெற்று ஐலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவ ஆவி புறாவைப் போல தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி இவர் என் நேசகுமாரன் இவரில் நான் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

இயேசுவின் சீஷர்கள்

இயேசு கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது திரளான ஐனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.

அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளை கண்டார்கள். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது இயேசு அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார் அது சீமோனுடையதாயிருந்தது. அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு அந்தப் படவில் உட்கார்ந்து ஐனங்களுக்குப் போதகம் பண்ணினார்.

அவர் போதகம் பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய் மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.

அதற்கு சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை. ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.

அந்தப்படியே அவர்கள் செய்து தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மீன்களைப் பிடித்தார்கள்.

அப்பொழுது மற்றப்படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.

சீமோன் பேதுரு அதைக்கண்டு இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே நான் பாவியான மனுஷன் நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.

அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம் அவனுக்கும் அவனோடேகூட இருந்த யாவருக்கும் பிரமிப்பு உண்டானபடியினால் அப்படிச்சொன்னான்.

சீமோனுக்குக் கூட்டாளிகளான செபதேயுவின் குமாரரான யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே ! இது முதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.

அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி எல்லாவற்றையும் விட்டு அவருக்குப் பின்சென்றார்கள்.

கானா ஊரிலே கலியாணம்

கலிலேயாவிலே கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

திராட்சைரசம் குறைவுபட்ட போது இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள்.

அதற்கு இயேசு: ஸ்திரியே, எனக்கும் உனக்கும் என்ன? என் வேளை இன்னும் வரவில்லை என்றார்.

அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள் என்றாள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்றும்; ரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறகற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஐhடிகளிலே தண்ணீர்நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்.

அவர் அவர்களை நோக்கி: நீங்கள்; இப்பொழுது மொண்டு பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

அந்தத் திராட்சைரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரைமொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால் அவன் திராட்சைரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து ஐனங்கள் திருப்தியடைந்தபின் ருசிகுறைந்ததைக் காடுப்பான். நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.

இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.

அதன் பின்பு அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப் போய் அங்கே சிலநாள் தங்கினார்கள்.

பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்

இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும் சகலவியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.

அந்தப் பன்னிரண்டு சீஷர்களுடைய (அப்போஸ்தலருடைய) நாமங்களாவன: முந்தினவன் பேதுரு எனப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.

இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில் அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: நீங்கள் புறஐhதியார் நாடுகளுக்குப் போகாமலும் சமாரியர்பட்டணங்களில் பிரவேசியாமலும் காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில் பரலோகராஐ;யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள். மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள். ஆடுகளை ஓநாய்களுக்குள் அனுப்புகிறதுபோல், நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், உப்பானது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும் மனுஷரால் மிதிக்கப்படுவதற்கும் ஒழிய வேறென்றுக்கும் உதவாது.

நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்திமரக்காலால் மூடிவைக்காமல் விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது என்று சொன்னார்.

மலைப்பிரசங்கம்

இயேசு திரளான ஐனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார். அவர் உட்கார்ந்தபொழுது அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்.பரலோகராஐ;யம் அவர்களுடையது.

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.அவர்கள் ஆறுதலடைவார்கள்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள்.

இரக்கமுள்ளோர் பாக்கியவான்கள் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

இருதயத்தில் சுத்தமுள்ளோர் பாக்கியவான்கள். அவர்கள்தேவனைத்தரிசிப்பார்கள்.

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.

கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு.

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரங்களை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.

ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரப் பலவந்தம் பண்ணினால் அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு. உன்னிடத்தில் கடன் வாங்கவிரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது மனுஷரால் புகழப்படுவதற்கு மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே. அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நீயோ தர்மம்செய்யும்போது உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது.

அன்றியும் நீங்கள் nஐபம்பண்ணும்போதும் அஞ்ஞானிகளைப் போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள். அவர்கள் அதிகவசனிப்பினால் தங்கள் nஐபம்கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள். உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் nஐபம்பண்ணவேண்டிய விதமாவது:

பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுதாக. உம்முடைய ராஐ;யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத்தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் ராஐ;யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே! ஆமென் என்பதே.

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம். அங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும். இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள். மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்காதிருங்கள். அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள். விடுதலைபண்ணுங்கள். அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள். தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால் கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். தேடுகிறவன் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படிசெய்கிறவனே பரலோகராஐ;யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது அவர் வேதபாரகரைப்போல் போதியாமல் அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால் ஐனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

நல்ல சமாரியன்

நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து இயேசுவைச் சோதிக்கும்படி: போதகரே, நித்தியஐPவனைச் சுதந்தரிக்கும்படி நான் என்னசெய்யவேண்டுமென்று கேட்டான்.

அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசிக்கிறது என்ன என்றார்.

அதற்கு அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழுஇருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய். அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி குற்றுயிராகவிட்டுப்போனார்கள்.

அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியேவந்து அவனைக்கண்டு பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்குவந்து அவனைக் கண்டு பக்கமாய் விலகிப்போனான்.

பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில் அவனைக்கண்டு, மனதுருகி, கிட்டவந்து அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் வார்த்து, காயங்களைக் கட்டினான். பின்பு அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி சத்திரத்துக்குக் கொண்டுபோய் அவனைப் பராமரித்தான்.

மறுநாளில் தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து சத்திரக்காரன் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால் நான் திரும்பிவரும்போது அதை உனக்குத்தருவேன் என்றான்.

இப்படியிருக்க கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்று பேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார்.

அதற்கு அவன்: அவனுக்கு இரக்கம் செய்தவனே என்றான்.

அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.

காணாமற்போன மகன்

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியிலே எனக்கு வரும் பங்கை எனக்குத்தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப்பங்கிட்டுக் கொடுத்தான்.

சில நாளைக்குப் பின்பு இளையமகன் எல்லாவற்றையும்சேர்த்துக்கொண்டு தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய் அங்கே துன்மார்க்கமாய் ஐPவியம்பண்ணி தன் ஆஸ்திகளையெல்லாம் அழித்துப்போட்டான்.

எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு அந்தத்தேசத்திலே கொடியபஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி அந்தத் தேசத்துக் குடியானவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளைமேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினால் தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான். ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

அவனுக்குப் புத்திதெளிந்தபோது அவன்: தன் தகப்பனுடைய கூலிக்காரர் உத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது. நானோ பசியினால் சாகிறேன் நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகப் பாவமும் செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டுதன் தகப்பனிடத்தில் வந்தான்.

அவன் தூரத்திலே வரும்போதே அவனுடைய தகப்பன் அவனைக்கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ்செய்தான்.

குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே! பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன் இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள். இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொளுத்த கன்றைக்கொண்டு வந்து அடியுங்கள். நாம் புசித்துச் சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான். காணாமற்போனான், திரும்பவும்காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத்தொடங்கினார்கள்.

அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய்வருகிறபோது கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து இதென்ன என்று விசாரித்தான்.

அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார். அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினால் அவருக்காகக் கொளுத்தகன்றை அடிப்பித்தார்.

அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளேபோக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியேவந்து அவனை வருந்தியழைத்தான்.

அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக இதோ, இத்தனை வருஷமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும் என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடையகுமாரனாகிய இவன் வந்தவுடனே கொளுத்தகன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

அதற்குத் தகப்பன் நீ எப்போதும் என்னோடிருக்கிறாய் எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான், காணாமற்போனான், திரும்பவும்காணப்பட்டான். ஆனபடியால் நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான்.

மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த லாசரு

பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் அவர்கள் சகோதரன் லாசருவும் அங்கே வசித்துவந்தார்கள். இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.

ஒருநாள் லாசரு வியாதிப்பட்டிருந்தான். அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். இயேசு இதைக் கேட்டபொழுது இந்த வியாதி மரணத்துக்கு ஏதவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது. தேவனுடையகுமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.

அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது தாம் இருந்த இடத்திலே பின்னும்; இரண்டு நாள் தங்கினார். அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.

அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே மறுபடியும் நீர் அவ்விடத்துக்குப்போகலாமா என்றார்கள்.

இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான் ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இ;ல்லாதபடியினால் இடறுவான் என்றார். இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான். நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.

அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.

இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக் குறித்து அப்படிச்சொன்னார். அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைப் பற்றிச்சொன்னார் என்று நினைத்தார்கள்.

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன் இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.

இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலு நாளென்று கண்டார். யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.

அவள் அதைக் கேட்டவுடனே சீக்கிரமாய் எழுந்து அவரிடத்தில் வந்தாள். இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல் மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலிருந்தார். அப்பொழுது வீட்டிலே அவளுடனே கூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக்கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப்போகிறாள் என்று சொல்லி: அவளுக்குப்பின்னே போனார்கள்.

இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.

அவள் அழுகிறதையும் அவளோடேகூடவந்திருந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித்துயரமடைந்து அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். இயேசு கண்ணீர்விட்டார்.

அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் இவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்.

அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர் இவனைச் சாகாமலிருக்கப்பண்ணக்கூடாதா என்றார்கள். அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது. அதின்மேல ;ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது அவருக்கு எதிர்கொண்டுபோனாள். மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஐPவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் எவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். இதை நீ விசுவாசிக்கிறாயா என்றார்.

அதற்கு அவள்: ஆம் ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.

இவைகளைச் சொன்ன பின்பு அவள் போய்தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார் உன்னை அழைக்கிறார் என்றாள்.

இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார்.

மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே நாலு நாளாயிற்றே என்றாள்.

இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நீர் அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஐனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று உரத்தசத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலையினால் கட்டப்பட்டிருந்தது. அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தத. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.

அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

இயேசு நல்ல மேய்ப்பன்

இயேசு ஐனங்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள். ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். வாசலைக்காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான். ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான். ஆடகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின் செல்லுகிறது. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின் செல்லாமல் அவனை விட்டோடிப்போம் என்றார்.

இயேசு அவர்களை மறுபடியும் நோக்கி: நானே வாசல். என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான். அவன் உள்ளும்புறமும் சென்று மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஐPவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்.

நானோ நல்லமேய்ப்பன். நல்லமேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஐPவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும் ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனும் ஆன கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான். அப்பொழுது ஓநாய் ஆடகளைப் பீறி அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான். ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.

நானே நல்ல மேய்ப்பன். பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும் நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும் நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன். ஆடுகளுக்காக என் ஐPவனையும் கொடுக்கிறேன். இந்தத் தொளுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு. அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும். அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும் அப்பொழுது ஓரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். நான் என் ஐPவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான். நானே அதைக்கொடுக்கிறேன். அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அதை மறுடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.

இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.

பெத்தானியாவில் இராப்போஐனம்

இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில் ஒரு ஸ்திரி விலையேறப் பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக் கல்பரணியைக் கொண்டுவந்து அவர் போஐனபந்தியிருக்கும்போது அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.

அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

இயேசு அதை அறிந்து அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீpயை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்;. நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம்பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியனிடத்தில் போய்: நான் அவரை எங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன். நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுக்க சமயம்பார்த்துக்கொண்டிருந்தான்.

கடைசி அப்பம்பிட்குதலுக்கான ஆயத்தம்

பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய் அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.

அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான். நீங்கள் அவனுக்குப் பின்சென்று அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய் அந்த வீட்டுஎஐமானை நோக்கி: நான் என் சீஷருடன் கூடப்பந்தியிருக்கத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான். அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

அவர்கள் போய் தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.

தம்முடைய கைகளில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும் தாம் தேவனிடத்திலிருந்து வந்ததென்பதையும் தாம் தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து போஐனத்தைவிட்டெழுந்து வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து அரையில் கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர்வார்த்து சீஷருடைய கால்களைக் கழுவவும் தாம் கட்டிக்கொண்ருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார்.

அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான்.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்தென்று இப்பொழுது நீ அறியாய் இனிமேல் அறிவாய் என்றார்.

பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார்.

அதற்கு சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல என் கைகளையும் என் தலையையும் கூடக்கழுவவேண்டும் என்றான்.

இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டும் மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான். நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள், ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார்.

அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு திரும்ப உட்கார்ந்து அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறியீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால் நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு இந்த மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஊழியக்காரன் தன் எஐமானிலும் பெரியவனல்ல. அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிபடியினால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

கடைசி அப்பம்பிட்குதல்

இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.

அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்தார்கள். அவர்கள் மிகவும் துக்கமடைந்து அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.

யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: அவன் யார் என்றான் ?

இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லிதுணிக்கையைத் தோய்த்து சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு சாத்தான் அவனுக்குள் புகந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

அவர் அப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.

யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால் அவன், போய் பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது தரித்திரருக்குஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

அவன் அந்தத்துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான். அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

அவர்கள் போஐனம்பண்ணுகையில் இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, சீஷருக்குக்கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி அவர்களுக்குக் கொடுத்து: நீங்களெல்லோரும் இதிலே பானம்பண்ணுங்கள் இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதுஉடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இது முதல் இந்தத் திராட்சைப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஐ;யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள் ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுதும் உங்களோடும் சொல்லுகிறேன்.

பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என்பின்னே வரக்கூடாது. பிற்பாடு என்பின்னே வருவாய் என்றார்.

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேகவாசஸ்தலங்கள் உண்டு. அப்படியில்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன். ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருக்கும்படி நான் மறுபடியும்வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள் வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஐPவனுமாயிருக்கிறேன். என்னையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக்கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.

அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான். அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய் ? நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச்சொல்லவில்லை. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள். அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரியகிரியைகளையும் செய்வான்.

நீங்கள் என் நாமத்தினால் எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வார். என் நாமத்தினால் நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்கனைகளைக் கைக்கொள்ளுங்கள். இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம்போனார். அங்கே ஒரு தோட்டமும் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.

இயேசு தம்முடைய சீஷருடனே கூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால் அவரைக் காட்டிக் கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.

கெத்சமனே தோட்டத்தில்

இயேசு கெத்சமனே எனப்பட்ட இடத்துக்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் nஐபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடேகூட்டிக்கொண்டு போய் திகிலடையவும் மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கு ஏதவான துக்கம்கொண்டிருக்கிறது நீங்கள் இங்கே தங்கி என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, அவர்களைவிட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய் முழங்காற்படியிட்டு: பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப்பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படிசெய்யும் ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று nஐபம்பண்ணினார்.

அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே nஐபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையில் விழுந்தது.

பின்பு அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணிநேரமாவது என்னோடேகூட வழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து nஐபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரம் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று nஐபம்பண்ணினார்.

அவர் திரும்பவந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது.

அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி nஐபம்பண்ணினார்.

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைசெய்து இளைப்பாறுங்கள். இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கிறவேளைவந்தது. என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் இதோ வந்துவிட்டான். எழுந்திருங்கள், போவோம் என்றார்.

அவர் அப்படிபேசுகையில் ,பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான். அவனோடேகூடப் பிரதானஆசாரியரும் ஐனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஐனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.

இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி:யாரைத்தேடுகிறீர்கள் என்றார்.

அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே அவர்கள் பின்னிட்டுத்தரையில் விழுந்தார்கள்.

அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.

இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.

நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லியவசனம் நிறைவேறத்தக்கதாய் இப்படி நடந்தது.

அவரைக் காட்டிக் கொடுக்கிறவனாகிய யூதாஸ்: நான் எவனை முத்தஞ்செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

உடனே யூதாஸ் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.

இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின் மேல்கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதானஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதறவெட்டினான்.

அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி: அவனுடைய காதைத் தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். அந்த வேளையிலே இயேசு ஐனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப்புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள். நான் தினந்தோறும் உங்கள் நடுவில் உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார்.

அப்பொழுது, சீஷர்கள் எல்லோரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள்.

இயேசு விசாரிக்கப்படுதல்

விடியற்காலமானபோது, சகல பிரதானஆசாரியரும் ஐனத்தின்மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதானஆசாரியனிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக்கொண்டு வந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான்.

அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்தில் எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.

பிரதானஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப்

பெட்டியில் இதைப் போடலாகதென்றுசொல்லி, ஆலொசனைபண்ணின பின்பு அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் எனப்படுகிறது.

இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார். தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஐhவா என்று கேட்டான்.

அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதானஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில் அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி:; இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.

அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை. அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஐனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.

அப்பொழுது, காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் எனப்பட்ட பேர்போன ஒருவன்; இருந்தான். அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தம், கொலைபாதகத்தின் நிமித்தம் காவலில்வைக்கப்பட்டிருந்தான்.

பொறாமையினாலே இயேசுவை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து அவர்கள் கூடியிருக்கையில் அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.

அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம். அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகுபாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள். பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும்; இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதானஆசாரியரும் மூப்பரும் ஐனங்களை ஏவிவிட்டார்கள். தேசாதிபதி ஐனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்காக விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

பிலாத்து அவர்களை நோக்கி: இவ்விருவரில் கிறிஸ்து எனப்பட்ட இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்.

தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்றுஅதிகமாய்க் கூக்குரலிட்டுச்சொன்னார்கள்.

கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினால் பிரயோஐனம் ஒன்றுமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஐனங்களுக்கு முன்பாகக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

அதற்கு ஐனங்கள்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஐhவே வாழ்க, என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலைஎடுத்து, அவரைச்சிரசில் அடித்தார்கள்.

இயேசு சிலுவையிலறையப்படுதல்

போர்ச்சேவகர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப்பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன் மேல் வைத்தாhகள். திரள் கூட்டமான ஐனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.

கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதை ருசிபார்த்துக் குடிக்க மனதில்லாதிருந்தார்.

அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

போர்ச்சேவகர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தாரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஐhவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்குமேல் வைத்தார்கள்.

அப்பொழுது, அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டார்கள்.

பிரதானஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான் தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திரணியில்லை. இவன் இஸ்ரவேலின் ராஐhவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும் அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான்.

மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்து கொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஐ;யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆறாம்மணிநேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமாசபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். மற்றவர்களோ பொறு, எலியா இவனை இரட்சிக்கவருவானோ பார்ப்போம் என்றார்கள்;.

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலிலே மாட்டி அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும்: பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

இயேசு கல்லறையில் வைக்கப்படுதல்

சாயங்காலமானபோது, இயேசுவுக்கு சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கொடுக்கும்படி கேட்டான். அப்பொழுது சரீரத்தைக்கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.

யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப்போனான்.

அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது. ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று.

கலிலேயாவிலே அவருடனேகூட வந்திருந்த ஸ்திரிகளும் பின்சென்று கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய் கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதானஆசாரியரும் பரிசேயரும்

பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது மூன்று நாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது ஆகையால், அவனுடைய சீஷர்கள் ராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஐனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப் பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும் நீர் மூன்றுநாள் வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.

அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் சேவகர் உண்டேபோய் உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்துங்கள் என்றான்.

அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு காவல் வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

கல்லறை திறக்கப்பட்டிருத்தல்

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம்நாள் விடிந்து வருகையில் மகதலேனாமரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். அப்பொழுது பூமிமிகவும் அதிரும்படி கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லபை; புரட்டித்தள்ளி, அதின்மேல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய ரூபம் மின்னலைப்போலவும் அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

தூதன் அந்த ஸ்திரிகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை. தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார். கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். சீக்கிரமாய்ப்போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார் அங்கே அவரைக் காண்பீர்கள். இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது இயேசுதாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து அவர் பாதங்களைத்தளுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

எம்மாவு ஊருக்குச் செல்லும் வழியில்

வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு மகதலேனா மரியாளுக்குமுதல் தரிசனமானார். அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.

அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம்போகிறவர் போலக் காண்பித்தார்.

அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும் சாயங்காலமாயிற்று பொழுதும் போயிற்று என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்.

அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்ப்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.

அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளக்கங்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, அந்நேரமே எழுந்திருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போய் பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக்கேட்டு, தாங்கள் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைபிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.

இவைகளைக் குறித்து: அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவில்நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச்சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்.

இயேசுமறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக, பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப்பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு எனப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. மற்றச்சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள்.

அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.

மறுபடியும் எட்டுநாளைக்குப் பின் அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே கூட இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவேநின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப்பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.

தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே என்றான்.

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினால் விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார். வெளிப்படுத்தின விவரமாவது: சீமோன் பேதுருவும், திதிமு எனப்பட்ட தோமாவும் கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில்வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது சீமோன் பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன் பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்கள் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய் உடனே படவேறினார்கள். அந்த ராத்திரியில் அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. விடியற்காலமானபோது இயேசு கரையில் நின்றார். அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.

இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள்.

அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப்போடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.

ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன் பேதுரு கேட்டவுடனேதான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால் தன் மேற்சட்டையைக்கட்டிக்கொண்டு கடலிலேகுதித்தான்.

மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத்தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டுவந்தார்கள். அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப்போட்டிருக்கிறதையும் அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும் அப்பத்தையும் கண்டார்கள்.

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். சீமோன்பேதுரு படவில் நூற்றுப்பத்துமூன்று பெரியமீன்களால் நிறைந்தவலையைக் கரையில் இழுத்தான். இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஐனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத்துணியவில்லை. அப்பொழுது இயேசுவந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.

அவர்கள் போஐனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.

அதற்கு அவன் ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான்.

அவர் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.

அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கின்றாயா என்றார். என்னை நேசிக்கின்றாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினால் பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான்.

இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

இயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல்

இயேசு பாடுபட்ட பின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்-தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஐ;யத்துக்குரியவைகளை அவர்களுடனேபேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். அன்றியும் அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஐலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்தான். நீங்கள் சிலநாளுக்குள்ளேபரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமைவிட்டுப்போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.

அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஐ;யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக்கொடுப்பீர் என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதினத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின்கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்னபின்பு அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்குமறைவாக ஒருமேகம் அவரை எடுத்துக்கொண்டது.

அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரம் தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகேநின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாணத்தூரத்திலிருக்கிற ஒலிவமலை எனப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.

அவர்கள் அங்கேவந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள். அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே எனப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப்போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலபட்டத்திலும் பங்குபெறுவதற்காக அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். சீட்டு மத்தியாவின்பேருக்கு விழுந்தது. அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

பெந்தகொஸ்தே நாள்

பெந்தகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்தகாற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஓவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவபக்தியுள்ளயூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது திரளான ஐனங்கள் கூடிவந்து தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதைக் அவரவர் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய nஐன்மபாஷைகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே இதெப்படி? எல்லோரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள்.

அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்தசத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஐனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல பொழுது விடிந்து மூன்றாம் மணிவேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.

கடைசிநாட்களில் நான் மாம்சமானயாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள். உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள். என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்.

அல்லாமலும் உயரவானத்திலே அற்புதங்களையும், தாழப்பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமானநாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனொஅவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.

மீண்டும் பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி, இன்னும் அநேகவார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்று புத்திசொன்னான்.

அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம்பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம்பிட்குதலிலும், nஐபம்பண்ணுதலிலும் உறுதியாயத்தரித்திருந்தார்கள்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
இயேசு கிறிஸ்துவின் வரலாறு

பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்

0. பாக்கியவான்கள் யார்?

0. பாக்கியவான்கள் யார்?

Recommended

00. கிருபையின் மாட்சி

04. தேவனே நீதிமான்களாக்குகிறவர்

00. கிருபையின் மாட்சி

10. கிருபை அருளும் பாதுகாப்பு

Song 174 – Nanriyaal

Song 192 – Enathu

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.