பாடம் 1: சீஷத்துவத்தின் கிரயம்
“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோ.7:37) “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28) எவர்களெல்லாரும் நித்திய ஜீவனுக்கும், பாவமன்னிப்புக்கும், சமாதானத்துக்கும், இளைப்பாறுதலுக்கும் கர்த்தரிடத்தில் வருகிறார்களோ அவர்களுக்கு இவ்வெளிப்படையான அழைப்பு, தான் ஒரு இழந்து போன பாவி என்கிற நிலையோடு கர்த்தராகிய கிறிஸ்துவிடம் வருவதே இரட்சிப்புக்கு அடிப்படை தேவையானதும்” (லூக்.19:10, யோ.1:12) போதுமானதுமாகும். ஆனால் “மெய்யான சீடர்களுக்கான” அழைப்பு கடினமான நிபந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. இந்நிபந்தனைகளை ஒருவன் நிறைவேற்றவில்லையெனில் அவன் இயேசு கிறிஸ்துவின் சீடனாக இருக்க முடியாது. (லூக்.14:26,27,33) சீடத்துவத்திற்கு தேவையான இந்நிபந்தனைகள் உண்மையாகவே விலை அதிகமாக உள்ளது. சுயத்திற்கு என எவ்வுரிமையும் வைத்துக் கொள்ளாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்திற்கு முழுமையாக அர்ப்பணிப்பதே சீடத்துவமாகும். இரட்சிப்புக்காக இந்நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. தேவனுடைய அன்பை பெற நாம் அவரின் மெய்யான சீடராக வேண்டுமென பரிசுத்த வேதாகமம் எங்கும் சுட்டிக்காட்டவில்லை. எல்லா சீடத்துவமும் -மனமுவந்து செய்ய வேண்டியதாகும். கர்த்தரின் மேலுள்ள அன்பின் அடிப்படையிலே தான் சீடத்துவத்தின் அழைப்புக்கு மறுமொழி கொடுக்க வேண்டும்.
இவ்வுலக வாழ்க்கையில் வெற்றியே குறிக்கோளாக உள்ளது. சிறப்பான அங்கிகரிப்பை அடையும்படியாய் தொழில், விளையாட்டு, வியாபாரம் மற்றும் சமுதாய சூழலில் மக்கள் மீது கடினமான நிபந்தனைகள் சுமத்தப்படுகிறது. நீண்டதூரம் ஓடும் ஓட்ட பந்தயவீரன், தேர்ச்சியடையும்படியாய் ஒரு நாளில் 50 மைல் அல்லது அதற்கு மேல் ஓடி பயிற்சி பெறுகிறான். ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உழைத்து வாரத்தின் ஏழு நாட்களும் உழைக்கிறான். இசையில் தேர்ச்சி பெற இசைவல்லுனன் பல மணி நேரங்கள் சொல்லப்போனால் வாழ்நாள் முழுதும் பயிற்சி செய்கிறான். இவர்களெல்லாம் வெற்றி பெறுவது ஒன்றையே நோக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், கர்த்தராகிய இயேசு மட்டும் கடினமான நிபந்தனைகளை விதிக்கும் பொழுது அவைகள் நமக்கு வெறித்தனமாக காணப்படுகிறது. உலகில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெற்றிக்கு எது நியாயமாகவும், தேவைகளாகவும் காணப்படுகிறதோ அது, நித்தியத்தை முன்னிறுத்தி, தேவனுடைய இராஜ்யத்திற்கென வருகிற வேளையில் நியாயமற்றதாகவும், தேவையில்லாததாகவும் காணப்படுகிறது. உண்மையான சீஷத்துவத்திற்குரிய காரியத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து தம்முடைய வாயினாலே கூறியிருக்கிற நிபந்தனைகளெல்லாம் வேதபுத்தகத்திலே எழுதிப்பதித்து வைக்கப்பட்டுள்ளது.
லூக்கா 14 ம் அதிகாரம் சீஷத்துவத்தைப் பற்றி கூறுகிற மிக முக்கியமான அதிகாரமாகும். நம்முடைய கர்த்தராகிய இயேசுவை விமர்சித்த மதத்தலைவர்கள் அவரிடத்தில், வருவதற்கு மறுத்தனர் (வசனங்கள் 1 முதல் 14 வரை) இத்தருணத்தில் பெரிய விருந்தைப் பற்றிய உவமையை அவர் கூறினார் (வசனங்கள் 16 முதல 24 வரை) ஏராளமானோர் அவ்விருந்துக்கு அழைக்கப்பட்டார்கள் ஆனால் அவர்கள் நொண்டி சாக்குகளை கூறி விருந்தில் பங்குபெறவில்லை. கர்த்தரை ஏற்றுக் கொள்ள மறுத்து இவ்விதமான சாக்குப் போக்குகளை இவ்விமர்சகர்கள் பயன்படுத்தினார்கள் என்பது வெளிப்படையான உண்மை. உவமையில் வருகிற எஜமான் தன்னுடைய வேலைக்காரர்களை பார்த்து, சாலையோரம் மற்றும் தெருவோரத்திற்கு சென்று ஏழைகளையும் ஊனமுற்றோர்களையும் விருந்துக்கு அழைத்துவரக் கட்டளையிட்டார். புறக்கணிக்கப்பட்ட புறஜாதிகளை வெளிப்படையாக இப்பகுதி சுட்டிக் காட்டுகிறது. எஜமானின் அழைப்பை அற்பமாக எண்ணி நிராகரித்தவர்கள் இப்பொழுது வெளியாக்கப்பட்டார்கள். இத்தருணத்தில் திரளான ஜனங்களை கர்த்தர் பார்த்து, உண்மையான சீடர்களுக்கான கடும் நிபந்தனைகளைக் கூறுகிறார். தெரிந்தெடுக்கப்பட் ஒரு குழுவிற்கல்லாமல் ஒரு பொதுவான கூட்டத்திற்கே கர்த்தராகிய இயேசு நிபந்தனைகளை கூறுகிறார். ஆகவே, சீடத்துவநிபந்தனைகளை அர்பணித்த சில விசுவாசிகளுக்கு மட்டுமேயென சுருக்கி விட நம்மால் முடியாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் எனப் பறைசாற்றும் எல்லாருக்கும் இது உரியது.
போட்டி இல்லை: விசுவாசம் கிறிஸ்துவுக்கே
“யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும், மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும், சகோதரிகளையும் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்” (லூக்.14:26).
கர்த்தராகிய இயேசு தன்னுடைய வருங்கால சீடர்களிடத்தில் அவர்களின் மேன்மையான அன்பை கேட்கிறார். பூமியிலுள்ள எல்லா விசுவாசத்திற்கும், அன்புக்கும் மேலாக இரட்சகர் இருக்க வேண்டும். குடும்ப பிணைப்பிலே மிக நெருங்கியவர்களாக இருப்பவருக்கு மேலாக கிறிஸ்து இருக்க வேண்டும் “வெறுக்காவிட்டால்” என்ற சொல், நாம் புரிந்து கொண்டிருக்கிற “வெறுப்பு” என்ற சொல்லின் பொருளில் கூறப்படவில்லை. “குறைவாக கருதுதல்” என்கிற அர்த்தத்தில்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையில் இதை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னுடைய தாயாரும், சகோதரர்களும் தன்னுடன் பேச விரும்பி அவரை அழைக்கிற தருணத்தில், “என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி, இதோ என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்” (மத்.12:48-50). பூமிக்குரிய குடும்பத்தினரை விட கீழ்ப்படிந்து கர்த்தருடைய் சித்தத்தை செய்கிறவர்கள் அவருக்கு மிக நெருக்கமாக இருந்தனர். நம்முடைய நெருங்கிய உறவினர்களிடத்திலிருந்து தான், தேவனுடைய சித்தத்திற்கு பெரிய எதிர்ப்பு நமக்கு வருகிறதை அடிக்கடி காணமுடியும், இயேசு கூறுகிறார் “ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே” (மத்.10:36). கண்டிப்பாக, கர்த்தர் முதலாவது வர வேண்டும். எந்த நபர்களை விடவும் அவரிடத்தில் முதன்மையான அன்பு வைத்திருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்கு முன்பாக நம்முடைய சுயத்தைக் கூட முன்னிலைப்படுத்த முடியாது. சீடன் தன்னுடைய ஜீவனைவிட கிறிஸ்துவையே முதன்மையாக வைத்திருக்க வேண்டும். வேலையோ, பயணமோ, படிப்போ, அந்தஸ்தோ, சுயவளர்ச்சியோ ஒரு சீடனுடைய வாழ்க்கையில் கர்த்தராகிய கிறிஸ்துவிட மேலானதாக இருக்கக் கூடாது. அவரே முதன்மையானவருமாய், முதல்வருமாய் நிற்க வேண்டும் அவருக்கு போட்டியாக யாதுமே நிற்கக் கூடாது.
மறுப்பல்ல : கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிதல்
“தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் சொல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்” (லூக்.14:27).
கர்த்தராகிய இயேசு நம்முடைய சீடர்களை எப்பாதையில் செல்லும்படியாய் அழைத்தாலும், அவர் முழுமையான கீழ்ப்படிதலை அவர்களிடம் கேட்கிறார். வெளிப்படையான தண்டனைக்கு சிலுவை ஒரு மிக முக்கிய கருவியாக அக்கால அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது. தண்டனைக்குரிய சிலுவையை சுமந்து செல்கிறவருக்கு மரணம் உண்டு என்பது அவனை பார்க்கிற எல்லாருக்கும் தெரிந்த உண்மை. சந்தோஷத்திற்கோ, வசதிக்கோ, அங்கு இடமில்லை. பூமிக்குரிய வாழ்க்கையில் முடிவுதான் அது. கர்த்தராகிய இயேசு தன் சிலுவையை சுமந்து. கல்வாரிக்கு சென்றது பயங்கரமான ஒரு காட்சியாகும். “ஊழியக்காரன் எஜமானிலும் பெரியவனல்ல.” அவர் நம்மை சிலுவையை எடுத்து பின் செல்ல அழைக்கிற வேளையில் நாம் இலகுவான எதையும் எதிப்பார்க்க முடியாது (மத்.10:38, 16:24). “ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு. என்னைப் பின் பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்து போவான், என்னிமித்தமாகத் தன் ஜீரனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக் கொள்ளுவான்” (லூக்.9:23, 24) என இயேசு கூறுகிறார்.
வேறு எந்த தலைவரும் தன்னைப் பின்பற்றுதிறவர்களுக்கு எப்பொழுதாவது ஒரு சிலுவையை கொடுத்திருக்கிறார்களா? இலகுவான ஒரு வாழ்க்கைக்கான அழைப்பாக நிச்சயமாக இது இல்லை. கர்த்தராகிய இயேசு தன்னை பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு இலகுவான வாழ்க்கையை வாக்களிக்கவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோ.16:33) அவருடைய சிலுவை இலகுவானதல்ல. அப்படியானால் நம்முடைய சிலுவை எப்படி இலகுவாக இருக்க முடியும்? சீடர்கள் மனமுவந்து தங்கள் சுயத்தை சாகடிக்க கிறிஸ்து அழைக்கிறார். மரணமே வாய்ப்பாக இருப்பிலும், தைரியமாக அவ் ஆபத்தான பணிக்கு முன்னேறி செல்கிற படைவீரரையே அவர் உருவாக்குகிறார். வீரர்கள் யுத்தக்களத்தின் முன் பகுதியிலே காணப்படுவார்கள் (2. சாமு.11:15-16). அது மகிமையின் இடம்; அதே வேளையில் மரணத்தின் இடமும் அதுதான். சீஷர்கள் எதை செய்ய கர்த்தர் அழைத்தாரோ அவைகளை அவர்கள் கீழ்ப்படிதலோடு செய்ய வேண்டும். சிலுவையாலே மரணத்திற்கு நம்மை அழைத்தார். அதற்கு மறுப்பு கூற நமக்கு உரிமை இல்லை.
திரும்பி போகுதல் அல்ல – கிறிஸ்துவுக்காக உறுதியாக இருத்தல்
கர்த்தர் முதலாவது தன்னுடைய சீடர்களிடம் சீடத்துவத்தின் விலையைக் குறித்து எச்சரித்தபிறகு, அவர்களிடம் என்றுமே மாற்ற முடியாத ஒப்புக் கொடுத்தலைப் பற்றி கூறுகிறார். “செலவைக் கணக்கில் கொள்” (லூக்.14:30) என்று அவர்களிடம் கூறினார். கிறிஸ்தவனாகிறதற்கு கிரயம் கொடுக்க வேண்டியதில்லை. இரட்சிப்புக்கு பணமும் விலையும் தேவையில்லை (ஏசா.55:1) கிருபையினாலேயே. அன்றி கிரியைகளினாலல்ல (எபேசி.2:8-9) ஆனால் கர்த்தராகிய இயேசுவை பின்பற்ற பெரிய கிரயம் செலுத்த வேண்டியது அவசியமாயிருக்கிறது. மெய்யான சீடர்களாக நாம் தெரிந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக, நாம் அதற்குரிய கிரயத்தை சந்திக்க ஆயத்தமுள்ளவர்களாயிருக்க வேண்டும். கோபுரத்தை கட்ட மனதாயிருந்து அதை கட்டியெழுப்ப போதுமான பணமில்லாத மனிதனை குறித்து கர்த்தர் ஒரு விளக்கம் கூறினார். அவனால் அதை முடிக்க முடியவில்லை. அதனால் மற்றவர்களால் பரிகாசம் பண்ணப்பட்டான். மேலும் ஞானமில்லாமல் கொஞ்சம் படைவீரர்களைக் கொண்டு யுத்தத்திற்கு புறப்பட்டுச் சென்ற ராஜாவைப் பற்றி ஒரு விளக்கம் கூறினார். யுத்தம் துவங்குவதற்கு முன்பாகவே, அவன் சமாதானத்தை தேட வேண்டும் (லூக்.14:28-32). இதில் உள்ள பாடம் தெளிவாக இருக்கிறது செலுத்த வேண்டிய கிரயத்தை கருத்தில் கொள்ளாமல் இயேசு கிறிஸ்துவுக்கு எந்த ஒரு நபரும் உறுதியான சீஷனாக இருக்க முடியாது.
இப்பகுதியின் மூன்றாவது நிபந்தனை, சீடன் தான் பின் வாங்க முடியாது என்கிற உண்மையை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டுமென கர்த்தர் தெளிவுப்படுத்துகிறார். “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான்” (வசனம் 33)
வெறுத்துவிடல் அல்லது எல்லாவற்றையும் விட்டுவிடல் என்பது நாம் திரும்பி செல்வதற்கு நமக்கு பின்னால் இருக்கும் பாலங்களையெல்லாம் எரித்து நிர்மூலமாக்குவதே ஆகும். அதனால் நாம் திரும்பி செல்ல முடியாது. கர்த்தரை தவிர மற்ற எல்லா ஆதாரங்களையும் நீக்கிபோட வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் தன்னுடைய வாழ்க்கையை கர்த்தருக்கு முன் நிறுத்தி “எல்லாவற்றையும் வெறுத்துவிடல்” என்றால் என்ன என்பதின் பொருளை அறிந்து கொள்ள வேண்டும். பன்னிருவரும் தங்களுக்கு சொந்தமாயிருந்த படகுகள், வலைகள், வீடுகள் தொழில்கம் மற்றும் குடும்பங்கள் விட்டு கர்த்தரை பின்பற்றினார்கள். “இதோ நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோம் (மாற்.10:28) என்று பேதுரு கர்த்தரைப் பார்த்து கூறினார். இரட்சகர் பேதுருவைப் பார்த்து கர்த்தரின் நிமித்தமும், சுவிசேஷத்தின் நிமித்தமும் வீட்டையும், நிலத்தையும் விட்டவர்கள் இம்மையில் நூறத்தனையாகவும், மறுமையில் நித்திய ஜீவனையும் அடைவார்கள். ஏராளமான விசுவாசிகள் வீடுகளையும், சொந்த நாட்டையும் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் படியாக விடவேண்டியதாயிருக்கிறது. நல்ல வேலைகளையும், நல்ல வருமானத்தையும் விட்டிருக்கிறார்கள். தங்களுக்கு உரியதை விற்று சுவிசேஷ வேலைக்காய் பயன்படுத்தியிருக்கிறார்கள். கர்த்தர் எதையெல்லாம் எதிர்பார்க்கிறாரோ அவையெல்லாம் சீடர்களால் நிறைவேற்றப்படும் ஏனெனில் சீடனைப், பொறுத்தமட்டில் எவ்விதத்திலும் தான் விட்டு வந்த வாழ்க்கைக்கு திரும்புவதில்லை.
நிபந்தனைகளின் சுருக்கம்
“உண்மையான சீடத்துவம்” என்கிற புத்தகத்தில் வில்லியம் மேக்டோனால்ட் இயேசு கிறிஸ்துவின் சீடனாயிருக்க தேவையான ஏழு அத்தியாவசிய நிபந்தனைகளை தெளிவுற கூறி உள்ளார். அவைகள்:
- இயேசு கிறிஸ்துவின் மேல் உன்னதமான அன்பு (லூக்.14:26)
- சுயத்தை வெறுத்தல் (மத்.16:24)
- விருப்பத்தோடு சிலுவையை தெரிந்தெடுத்தல் (மத்.16:24)
- இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதில் வாழ்வை செலவிடுதல் (மத்.16:24)
- கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களின் மீது ஊக்கமான அன்பு (யோ.13:35)
- உறுதியாக தொடர்ந்து தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருத்தல் (யோ.8:31)
- கிறிஸ்துவைப் பின் பற்ற எல்லாவற்றையும் விட்டுவிடல் (லூக்.14:33)
கிறிஸ்து எங்கே சென்றாலும் அவரை பின்பற்றுவோம் என்ற வேண்டுதலுடன் சிலர் அவரிடத்தில் வந்தார்கள் (லூக்.9:57) ஆனால் அவரே, இவர்கள் நோக்கத்தை கீழாக மதிப்பிட்டதை அறிந்தார். அவர்கள் வசதியை விரும்பினார்கள். ஆனால் கிறிஸ்துவுக்கு வாழ்வதற்கு வசதியில்லாதிருந்தது (வசனம் 58). கிறிஸ்து மற்றவர்களை தன்னை பின்பற்ற அழைத்தபொழுது அவர்களோ வசதிகளுக்கு முதலிடம் கொடுத்தனர் (வசனம் 59) ஆனால் அவர் கூறினார் அவரே முதல்வராக இருக்க வேண்டுமென்றார். அவர்கள் குடும்பங்களை நினைத்து அவற்றின் கடமையை முன்நிறுத்தினார்கள் (வசனம் 61) ஆனால் “அதற்கு இயேசு, கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டு பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்” (வசனம் 62). உண்மையான சீடனுக்கு இயேசு கிறிஸ்து எதை முதன்மையென கருகிறாரோ அதுவே மிகமுக்கியமானது. அவன் இவ்வாழ்வை துவங்கிவிட்டால், அங்கே பழைய வாழ்வை திரும்பி பார்ப்பதற்கு முடியாது.
முடிவுரை:
ஒரு சிந்தனைவாதி இப்படி கேட்கிறார், “சீடனாக இருப்பதால் என்ன பயன்கள்”? கிரயம் அதிகமாக இருப்பதால், அதற்கேற்ப்ப பயன் உண்டா? இதே கேள்வியை பேதுரு வித்தியாசமான வடிவத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எழுப்பியிருக்கிறார். “இதோ நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மை பின்பற்றினோம் என்றான். அதற்கு அவர் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும் இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற் வோவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்.18:28-30) பரலோக பொக்கிசங்களையும், கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக பலன்களையும் தவிர இப்பூமியில் நாம் என்ன பயன்பெறுவோம்? பிரிந்தெடுக்கப்பட்ட, பரிசுத்தமான வாழ்க்கை பாடுகளும், உபத்திரவங்களும், தியாகமும் நிறைந்த ஒன்றாக இருக்கலாம். கர்த்தராகிய இயேசுவின் கட்டளைகளுக்கு ஜாக்கிரதையாய் கீழ்படிந்து அவரை பின்பற்றுகிறவர்களுக்கு பூமிக்குரிய பயன்கள் ஏதாவது இருக்கிறதா? ஜெபத்தில் வல்லமை, சமாதானம், சந்தோஷம், வல்லமையான ஊழியம், ஆவியின் கனி, கிறிஸ்துவை போன்ற குணங்கள் போன்றவை பரிசுத்தமாக்கப்பட்ட ஒப்புக்கொடுத்த வாழ்வின் விளைவாகும். நிச்சயமாகவே கிறிஸ்துவை உறுதியாக பின்பற்றுகிறவர்கள் மாய்ந்து போகிற பூமிக்குரியவைகளுக்காக அல்லாமல் மேலானவைகளையே நோக்கமாக கொண்டவர்கள். அவ்வாறு இல்லாதவர்கள் “நஷ்டமடைவார்கள்” (1.கொரி.3:15) ஒரு வேளை பூமிக்குரிய எவ்வித பயனும் இல்லையென்றாலும் கிரயம் எதுவானாலும் ஆழமான அன்பினாலும், நன்றி உணர்வாலும் அவரை சேவிப்பதே போதுமானது (2.கொரி.5:14-15).
பாடம் 1 ற்கான கேள்விகள்
சீஷத்துவத்தின் கிரயம்
லூக்கா 14:28-33 லிருந்து சீஷத்துவத்தின் கிரயத்தைக் குறித்து போதிக்கிறது நீங்கள் இதை உங்கள் வாழ்க்கையில் எப்படி செயல்படுத்துவீர்கள்?
- மத்தேயு 10:38; 16:24 மற்றும் லூக்கா 9:23-26 சீஷத்துவத்தின் நிபந்தனைகளை வெளிப்படுத்துகிறது பின் வரும் கோட்பாடுகளை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும்.
“தன் சிலுவை”
“என்னை பின்பற்று”
“தன் ஜீவனை இழத்தல்”
- பின் வரும் வசனங்களின் மூலம் போதிக்கபடும் சத்தியங்கள் என்ன?
லூக்கா 14:26
லூக்கா 14:33
யோவான் 8:31-32
யோவான் 13:35
4.லூக்கா 9:57-62 லிருந்து கிறிஸ்துவை பின்பற்ற இருக்கிற தடைகளை உங்களால் அடையாளப்படுத்த முடிகிறதா?
5.உட்கார்ந்து, செலவை கணக்குபார், 3, மற்றும் 4-ம் கேள்விகளுக்கான பதிலை ஆராய்ந்து பார்த்து இயேசுவின் சீடராக முற்றிலுமாய் ஒப்புக்கொடுக்க தடைகளாக இருப்பது என்ன? இத்தடைகளை மேற்க்கொள்ள என்ன செய்யப்போகிறீர்.












