பாடம் 3: இயேசு கிறிஸ்து: திட்டமிட்ட குறிக்கோள் உடைய மனிதர்
“உம்முடைய சித்தத்தின் படி செய்ய, இதோ வருகிறேன்” (எபி.10:7, சங்.40:7) இயேசுவுக்கு திட்டமிட்ட குறிக்கோள் ஒன்று இவ்வாழ்க்கையில் இருந்தது. மனித வரலாற்றில் மேன்மையான மனிதராக, எப்பொழுதும் தாம் இப்பூமியில் வந்த நோக்கத்தை நினைத்தவராகவே இருந்தார். இருண்டவர்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை போன்று ஏதோ புசித்தல், குடித்தல், கொள்ளுதல், விற்றல், நடுதல் மற்றும் கட்டுதல் ஆகியவை அடங்கியதாக (லூக்.17:28-29) கிறிஸ்துவின் வாழ்க்கையிராமல், அவரின் வாழ்க்கை மேலான குறிக்கோள் உடையதாயிருந்தது. “பகற்காலமாயிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும். ஒருவனும் கிரியை செய்யக் கூடாத இராக்காலம் வருகிறது” (யோ.9:4) என அவர் கூறினார். மற்றவர்கள் அனுதின தேவைகளுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது தம்முடைய சீடர்களைப் பார்த்துக் கூறினார்; இவ்ஜீவனத்துக்குரிய சாதாரணமான தேவைகளை தேடாமல் தேவனுடைய இராஜ்யத்தை தேடுகிறவர்களாயிருங்களென்றார் (லூக்.12:22-31) அவர், தான் இங்கு வந்த நோக்கத்தில் உண்மை உள்ளவராக இருந்தார்.
சிலுவையில் செய்து முடிக்க வேண்டிய பெரிய வேலைக்கு அவர் நெருக்கி ஏவப்பட்டார். “ஆகிலும் நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானமுண்டு. அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்” (லூக்.12:50). இதை நிறைவேற்ற அவர் எருசலேமுக்கு போகத் தமது முகத்தை திருப்பினார் (லூக்.9:51) தன்னுடைய வேளையைப்பற்றி அடிக்கடி கூறி வந்தார். அவ்வேளைக்கு முன்பாக அவருடைய ஜீவனை யாரும் எடுக்க முடியவில்லை. ஆனால் அவ்வேளை வந்தபொழுது அதை மிக நன்றாக அறிந்திருந்ததார் (யோ.12:23). அவர் தம்முடைய வேளையைக் குறித்து குறிப்பிடும்பொழுது நான் என்ன சொல்லுவேன்? பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ? ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்” (யோ.12:27).
அவர் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக “நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்” (யோ.17:4) என்றார். சிலுவையிலே “முடிந்தது” (யோ.19:30) என உரத்த சத்தமாய் கூறினார். திட்டமிட்ட குறிக்கோள் உடைய மனிதராக அவர் இருந்தார். அவர் அக்குறிக்கோளை தேவனுடைய நித்திய மகிமைக்காக செய்து முடித்தார்.
அவரின் நோக்கம்: திட்டமிட்ட குறிக்கோளுடன் வந்ததில்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவகுமாரன் நித்தியமான வாசலைக் கடந்து இப்பூமியிலே மனுஷகுமாரனாக இறங்கி வந்தார். அவர் பிதாவினால் மேசியாவிற்குரிய (கிறிஸ்துவுக்குரிய) சகல வாக்குத்தத்தங்களை தன்னகத்தே உடையவராக அனுப்பப்பட்டார். அவரின் பெயர் இயேசு (கர்த்தர் இரட்சிக்கிறார்), இப்பூமியில் அவர் வெளிப்பட்டதின் நோக்கத்தை விளக்குகிறது. அவர் உண்மையாகவே இம்மானுவேல் (தேவன்நம்மோடு). ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர் என அவர் கூறினார் (எபி.10:5) அந்த சரீரம் கர்த்தராகிய இயேசுவால் தேவனுடைய நித்திய திட்டத்தின் நிறைவேறுதலுக்காக பயன்படுத்தப்பட வேண்டியதாயிருந்தது அவர் இப்பூமிக்கு வந்தது
- மீட்பை நிறைவேற்ற. தன்னுடைய சீடர்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து “உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக” (யோ.1:29) அறிமுகப்படுத்தப்பட்டார்.” இழந்து போனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்” (லூக்.19:10). “அநேகரை மீட்டும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க முன்வந்தார்” (மாற்.10:45) துன்பப்படுகிற, மரித்துக் கொண்டிருக்கிற, நரக தண்டனைக்கு உட்பட்ட மனித இனத்தை தேவன் நோக்கிப் பார்த்து தன்னுடைய நேசகுமாரனை நம்மை இரட்சிக்கும்படியாக அனுப்பினார். அவர் நம்மைச் சகல அக்கிரமங்களின்று மீட்டுக் கொள்ளும்படியாய் நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார் (தீத்.2:14).
- பாவத்தை தொலைத்துப்போட. “பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்” (1.யோ.3:8). மேசியாவின் திட்டமிட்ட குறிக்கோள் என்னவெனில்” பாவங்களை தொலைத்து நித்திய நீதியை வருவிப்பதும்” (தானி.9:21) “மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதுமாகும்” (எபி. 2:14) “அவர் மரணத்தை பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்” (2.தீமோத்.1:10). நம்முடைய உன்னதமான இரட்சகரால் பாவம், மரணம் பிசாசு முழுமையாக தோற்கடிக்கப்பட்டான்.
- வேதவாக்கியம் நிறைவேற. நம்முடைய கர்த்தர் எப்பொழுதும் தேவனுடைய வசனத்தின் புனித தன்மையை கருத்தில் கொண்டவராக இருந்தார். அவருடைய வாழ்வில் எல்லா பகுதியும் தீர்க்கத்தரிசன வசனத்தில் உறுதி செய்யப்பட்டது. அக்கிரமமான மனிதரால் அவர் கைது செய்யப்பட்டது கூட “வேத வாக்கியத்தின் நிறைவேறுதலாக” (மாற்.14:19) இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இதே சிந்தையினால் தான் சிலுவையில் தொங்கும் போது “தாகமாயிருக்கிறேன்” (1.யோ.19:28) என சத்தமிட வேண்டியதாயிருந்தது. நான் வேண்டிக்கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதர்கள் என்னை காப்பாற்ற வருவார்கள் என்றார். ஆனாலும் இவ்விதமாய்ச் சம்பவிக்க வேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்” (மத்.26:54).
- அவருடைய சபையை ஸ்தாபிக்க. மனிதர்கள் மத்தியில் இயேசு வாசம் செய்தவராக இருந்த பொழுது, பரலோகத்திற்குரிய மேலும் ஒரு திட்டத்தை நிறைவேற்றும்படியாய் சபை ஸ்தாபிக்கப்படுகிறதற்கு அஸ்திபார வேலைகளை செய்தார் (மத்.16:18) இயேசுவே கிறிஸ்து என்றும் தேவனுடைய குமாரனென்று அறிக்கையிட்ட பின்பு. அவர் “இப்பாறையின் மீது என் சபையை கட்டுவேன்” (மத்.16:18) என தன்னுடைய போதக ஊழியத்தின் நிறைவாக கூறினார். பிரசங்கங்களினாலும், போதனைகளாலும் தம்முடைய சீடர்களை தன்னுடைய ஆவிக்குரிய வீட்டை கட்டுவதற்காக உடன் ஊழியர்களாக பயிற்சி கொடுத்து ஆயத்தப்படுத்தினார். அநேக தொழுவங்களிலிருக்கும் ஆடுகளுக்காக நம்முடைய கர்த்தர் தன்னுடைய ஜீவனைக் கொடுத்து “ஒரே மந்தையும் ஒரே மெய்ப்பனும் உடையவர்களாக” செய்தார் (யோ.10:14-16).
அவரின் கண்ணோட்டம்: குறிக்கோளை அறிதல்
வாழ்க்கையில் நோக்கமின்றி காணப்படுகிறவர்களுக்கு பொதுவாக ஏற்பபடக்கூடிய வெறுமையோ, சோர்போ இயேசுவுக்கு ஒருபொழுதும் ஏற்பட்டதில்லை. வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றிய அறிவுதான் உண்மையான பொருளை தருகிறது. குறிப்பாக அவை தேவனோடு தொடர்புடைய பூமிக்கு அப்பார்ப்பட்ட வெளிச்சத்தில் காணும் பொழுது தான் பொருளுள்ளதாக அமையும். இயேசு நித்தியத்தை உண்மையான நிலையில், இருதயத்தில் கொண்ட மனிதர் (பிர.3:11) பூமிக்குரிய நிகழ்ச்சிகள் அல்லது செயல்கள் காலத்திற்கு அப்பால் நித்திய காட்சியாடு கணக்கிடப்படுபவை என்பதை கருத்தில் கொண்டு அவர் வாழ்ந்தார். தன்னுடைய வேலையை நிறைவேற்றுவது மிக முக்கியமென அவர் அறிந்திருந்தார் தன்னுடைய குறிக்கோளைப் பற்றிய அறிவே வல்லமையாக தன்னைத் தூண்டும் சக்தியாக அவருக்கு காணப்பட்டது.
- அவரின் வாழ்வில் முன்னுரிமைகள். விசுவாசிகளுடைய வாழ்க்கையில் தேவனுடைய இராஜ்யத்தின் சிறப்பை கர்த்தராகிய இயேசு கற்றுக் கொடுத்தும், தாமே கடைபிடித்தும், விளங்கப்பண்ணினார் (மத். 6:33). “முதலாவது தேவனுடைய இராஜ்யத்தை தேடுங்கள்” என்கிற சித்தாந்தத்தால் அவரின் வாழ்க்கை ஒழுங்குபடுத்தப்பட்டது. அவர் எப்பொழுதும் பிதாவிக்கடுத்தவைகளில் இருந்தார் (லூக்.2:49). அவர் ஒருபோதும் ஓர் வீணான வார்த்தையை பேசியதில்லை அல்லது ஒழுங்கில்லாத நிலையில் செயல்பட்டதுமில்லை. அவருடைய செயல்களெல்லாம் அவருடைய விருப்பங்களாலோ அல்லது கடினமான விளைவுகளாலோ ஆளப்படவில்லை. அவர் ஒவ்வொரு செயல்களையும் தன்னுடைய திட்டமிடப்பட்ட குறிக்கோளின் முன்னேற்றத்தோடு தொடர்புபடுத்தினார். அவர் எதை செய்தாலும் அக்குறிக்கோளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தார். நன்மையானதாகவே அல்லது துன்பமில்லாததாகவோ காணப்படும் எவ்வித காரியங்களும், தேவனுடைய சிறப்பானதை பின்னுக்கு தள்ளும்படியாய் அவர் அனுமதிக்கவில்லை. தன்னுடைய இலக்கை திசை திருப்பும் எதுவாகயிருப்பினும் அவைகளை அவர் தடங்கல்களாகவும் அல்லது சுமையாகவும் கருதினார். இயேசு அனுதின வாழ்க்கையில் பங்குபெற்றவராக காணப்படினும் அவர் அவைகளில் சிக்கிக் கொள்ள தன்னை அனுமதிக்கவில்லை (2.தீமோ.2:3-4).
- ஜனத்தைக் குறித்த அவரின் பாரம். ஜனத்துக்கு முரண்பாடுகளாக இருப்பவர்கள் உண்டு சிலர் அவர்களை பயன்படுத்துவார்கள். சிலர் அவர்களை கரிசனையோடு நடத்துவார்கள். கர்த்தராகிய இயேசுவுக்கு ஜனங்களைப் பற்றியும் பாரம் இருந்தது. அவர்கள் அவரின் இருதயத்தில் இருந்தார்கள். இயேசுவின் முழு வாழ்க்கையும் சுருக்கமாக விளக்குவதாயின் மற்றவர்கள் (பிறர்) (Others) என்று கூறலாம்- என ஒருவர் கூறியிருக்கிறார். திரளான ஜனங்களை அவர் பார்த்தவிதம், நமக்கு அவருடைய மக்களைப் பற்றிய பார்வையை விளக்குகிறது. அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள் மேல் மனதுருகினார்” (மத்.9:36). தன்னை நிராகரித்த ஜனங்களைப் பார்த்து “எருசலேமே, எருசலேமே ……… கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ, உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” (மத்.23:37). சங்கீதம் 23-ல் கூறியபடி ஜனங்களை “புல்லுள்ள இடங்களில் மேய்ப்பது” அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது அவரின் ஏக்கமாயிருந்தது. அவர்களை “அமர்ந்த தண்ணீர்களண்டையில்” நடத்தி ஆத்துமாவை தேற்ற விரும்பினார். பிறரைக் குறித்து எவ்வளவு அன்பான இருதயம் உடையவராயிருந்தார்.
- வேலையாட்களைப் பற்றி அவரின் பார்வை. “தம்முடைய சீஷர்களை நோக்கி அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம், ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார். (மத்.9:37-38) இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவும் கிறிஸ்து வந்தார் என்பதை இப்பாரம் அவருக்கு ஞாபகப்படுத்தியது. தன்னுடைய வேலையைக் குறித்து ஓர் அவசர நிலை இருந்ததை அவர் உணர்ந்தார். அறுவடையை நிலத்திலே அழியவிடக்கூடாது. ஆனால் அவைகள் சேர்க்கப்பட வேண்டும். அப்பொழுதும், இப்பொழுதுமுள்ள பிரச்சனை என்னவென்றால், வேலையாட்கள் சிலராக இருப்பதுதான். ஏனெனில் வயல்வெளி பெரிதாக இருக்கிறது. வேலையாட்கள் எழுப்பப்பட்டு அனுப்பப்பட்ட (தள்ளப்பட) வேண்டுமென கர்த்தர் வேலையாட்களுக்கு தரிசனத்தை ஏற்படுத்தினார். இந்நோக்கத்திற்காக தன்னுடைய சீடர்கள் ஜெப பங்காளர்களாக தன்னுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். யாரை இதற்காக ஜெபிக்க அழைத்தாரோ அவர்களை இந்நோக்கத்தை நிறைவேற்ற வெளியே அனுப்பினார் (மத்தேயு 10).
அவரின் விடா முயற்சி: திட்டமிடப்பட்ட குறிக்கோளை செயல்படுத்த
பயனுள்ள நிறைவுக்கு தைரியமான தொடர் உறுதி மிக அவசியம். நம்முடைய இரட்சகர் ஜெபம் பண்ணுதல் தொடர்பாக, வேண்டுதல் செய்யும் நண்பன் மற்றும் அநீதியான நியாயாதிபதி (லூக்.11:5-8, 18:2-7) என்னும் இரு உவமைகள் மூலம் கற்றுதருகிறார். பெரிதும் உன்னதமானதுமான வேலைகள், கஷ்டங்களை சந்திக்கும் பொழுது உற்சாகம் இழப்பதால் கைவிடப்பட்டிருக்கிறது. நம்முடைய இரட்சகரை விட எதிர்ப்புகளை சந்தித்த ஒருவரும் இவ்வுலகில் இருந்ததில்லை என்றாலும் தன் பணியை விட்டுவிடவில்லை. “அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவகுமில்லை” (ஏசா.42:4) என தீர்க்கதரிசி கூறுகிறார்.
- அவரின் ஈடுபாடு. கர்த்தராகிய இயேசு உறுதியான குறிக்கோளுடைய மனிதர். பிதாவாகிய தேவனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதை தாம் தெளிவாய் அறிந்திருந்தார். அவற்றை நிறைவேற்றுவதற்கு தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுத்திருந்தார். தன்னுடைய வேலையை நிறைவேற்றுவதில் சிலுவையே ஒரு தடையாக நிற்கமுடியவில்லை. கர்த்தராகிய ஆண்டவர் என் செவியைத் திறந்தார். நான் எதிர்க்கவுமில்லை. நான் பின்வாங்கவுமில்லை. அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடை மயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன். அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணை செய்கிறார். ஆகையால் நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன். ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப் போலாக்கினேன் (ஏசா.50:5-7). கிரயம் எப்படி இருப்பினும் நம்முடைய தலைவர் கலப்பையில் கைவைத்து விட்டு திரும்பி பார்க்க மறுத்துவிட்டார்.
- அவரின் உழைப்பு. கர்த்தராகிய இயேசு தன்னுடைய உலக வாழ்க்கையின் நாட்களில் தன்னுடைய உறுதியான மன எண்ணத்தை நிறைவேற்ற ஆயத்தமாயிருந்தார். அவருடைய செயல்களை அவரின் மனநிலையின் வெளிப்பாடாக காணப்பட்டது. தன்னையே ஒரு வேலையாளாக பாவித்து, இயேசு தன்னுடைய வேலையை பொறுமையோடு நிறைவேற்றினார். பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தை பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல நோய்களையும் நீக்கி அவர்களை சொஸ்தமாக்கினார் (மத்.9:35). மேலும் வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது (மாற்.6:31). நாம் நம்மை தொடுகிற ஒரு வசனத்தை இப்பொழுது படிக்கலாம் “இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய்” இதே இளைப்பை இயேசு புயல் அடிக்கிற வேளையில் படகில் அவர் தூங்கியதிலிருந்தும் நாம் உணரலாம் (மாற்.4:38). அவரின் உழைப்பு சிலவேளை இரவு முழுதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஜாக்கிரதை, கடின உழைப்பு ஆகியவைகள் பற்றி அவரின் வாழ்க்கையில் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. இதுவே உண்மையான சீடனின் அடையாளமாகும்.
- அவரின் சுயநலமின்மை. தனக்கு சந்தோஷத்தை தரும் காரியங்களில் தன்னுடைய மனதை செலுத்த இயேசு மறுத்தார் ஆனால் தேவனும் அவருடைய இராஜ்யத்தின் காரியங்களிலே அவரின் மனம் லயித்திருந்தது. மற்றவர்களின் காரியங்களில் மிக உற்சாகமுள்ளவராயிருந்தார். பிலிப்பியர் 2:5-8 கிறிஸ்துவின் மனநிலையை நமக்கு முன்பாக படம் பிடித்துக்காட்டுகிறது. அவரின் வெறுமையாக்குதல், பரலோகத்தைவிட்டு, பூமிக்கு வந்து ஒரு குற்றவாளியைப் போல் பிறருக்காக மரித்ததிலிருந்து வெளியாகிறது. தன்னுடைய நலனை துச்சமாக அவர் நினைத்தது நான்கு சுவிசேஷ புத்தகங்களிலும் முழுமையாக காணப்படும். இயேசு கூறினார். நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனுஷ குமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார் (லூக்.9:58). திரளான ஜனக்கூட்டம் கர்த்தரையும் அவருடைய சீடர்களையும் உணவு உண்ணக்கூட முடியாதவண்ணம் தடையாக இருந்தது. எனவே அவருடைய இனத்தார் அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரை பிடித்துக் கொள்ளும்படி வந்தார்கள் (மாற்.3:20,21).
ஆனால் அவரின் போஜனமோ தன்னை அனுப்பினவரின் சித்தத்தை நிறைவேற்றுவதாகவே இருந்தது (யோ.4:34). தன்னுடைய சீடர்களுக்கு போதித்ததுபோல அவர் எல்லாவற்றையும் விட்டுவந்தார். கர்த்தராகிய இயேசு பிற மக்களைப்போல ஒரு ஏழையாகவே இருந்தார். அவர் தரித்திரராக இருந்தார் (2.கொரி.8:9). சிலுவையண்டையிலிருந்த போர் சேவகர்கள் அவருக்கு சொந்தமாக இருந்த உடையை சீட்டுப் போட்டு எடுத்தனர்.
முடிவுரை
புதிய ஏற்பாடு இயேசு செய்ததையும், உபதேசித்தவைகளையும் பதிவு செய்துள்ளது (அப்.1:1). கர்த்தராகிய இயேசு அவருடைய பணியை தன்னுடைய ஜனங்கள் மூலமாக தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறார். பிதா தன்னிடத்தில் கொடுத்த பணியை முடித்து, தன்னுடைய சீடர்கள் தொடர்ந்து அப்பணியை செய்ய “பிதா என்னை அனுப்பியது போல நான் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
உயிர்த்தெழுந்த கிறிஸ்து நமக்கு கட்டளையிடுவது “நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக் கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார்” (மத்.28:19-20) தன்னுடைய ஜனங்கள் மூலமாக தொடர்ந்து அவர் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறாக நாம் அவருடைய ஆவிக்குரிய மாளிகையை கட்டுவதில் “தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம்”. (1.கொரி.3:9, 1.பேது.2:5).
பாடம் 3 ற்கான கேள்விகள்: இயேசு கிறிஸ்து திட்டமிட்டு குறிக்கோள் உடைய மனிதர்
- இயேசு கிறிஸ்து பூமியில் செய்த ஊழியம் எதுவாக இருந்தது? பின்வரும் வசனங்களின் மூலம் விளக்கு?
மத்தேயு 16:8
மாற்கு 14:49
லூக்கா 19:10
2 தீமோத்தேயு 1:10
- கர்த்தரைப் பற்றிய தரிசனம் மற்றும் உங்கள் வாழ்க்கையில் அவரின் நோக்கம் என்பதில் பொருள் என்ன? தரிசனம் என்றால் நித்திய கண்ணோட்டத்தில் உங்கள் வாழ்க்கையைக் குறித்து தேவனுடைய நோக்கம் மற்றும் வருங்கால ஊழியம் குறித்த உணர்வாகும். மேலும் நிகழ்கால மூழ்நிலையைத் தாண்டி அதற்கு அப்பால் தரிசனம் குறிக்கிறது.
- நீங்கள் வாழ்கிற முறையில் மத்தேயு 6:33 உங்கள் முன்னுரிமையைக் குறித்து என்ன கூறுகிறது? இவ்வசனத்தை கிறிஸ்துவை பின்பற்றுகிறவர் என்கிற நிலையில் உங்களோடு ஒப்பிட்டு பார்க்கவும்.
4.லூக்கா 11:5-8 லிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்? இவைகள் எப்படி நம்முடைய நோக்கத்திற்கும், நம்முடைய செயல்பாட்டிற்கும் பயனுள்ளதாக இருக்க முடியும்?
- உன் வாழக்கையின் குறிக்கோள், இப்பாடத்தின் விளைவாக மாற்றமடைந்திருக்கிறது? அப்படியெனில் என்னவிதமான மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளீர்?











