முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…)
ஆதாம்; – இது முதல் மனுசனுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். மண் என்பது இதன் அர்த்தம். எல்லா சிருஸ்டிப்பிலும் இவன்தான் கடைசியானவன். தேவன் ஆதாமை ஆவி, ஆத்துமா, சரீரமுள்ளவனாய் சிருஸ்டித்தார். அவனிலிருந்து ஏவாள் சிருஸ்டிக்கப்பட்டாள். இருவரும் குழந்தைகளைப்போல் குற்றமற்றவர்களாயிருந்தார்கள். அவர்கள் இருவரும் நிர்வாணமாயிருந்தும் வெட்கத்தைப்பற்றிய உணர்ச்சியில்லாதவர்களாயிருந்தார்கள். இந்நிலையிலிருக்கையில் பிசாசினால் ஏவப்பட்டு புசிக்கவேண்டாமென்று விலக்கிய கனியைப் பறித்துப் புசித்தார்கள். உடனே தாங்கள் நிர்வாணமாயிருந்ததை உணர்ந்தார்கள். நன்மை தீமை இன்னதென்று அறிந்தார்கள். தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று கர்த்தரால் ஒரு மனுசனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி அவனைக் கொலை செய்தான்.
ஆதாம் நூற்றுமுப்பது வயதானபோது தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின் எண்ணூறு வருடம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருசம். அவன் மரித்தான்.
சேத் – ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். சேத் ஆதாமின் மூன்றாவது மகன்.
சேத் நூற்றைந்து வயதானபோது ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். சேத் ஏனோசைப் பெற்றபின் எண்ண}ற்றேழு வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருசம். அவன் மரித்தான்.
ஏனோஸ் – சேத்துக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது கேனானைப் பெற்றபின் எண்ணூற்றுப் பதினைந்து வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஜந்து வருசம். அவன் மரித்தான்.
கேனான் – ஏனோசுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு கேனான் என்று பேரிட்டான். கேனான் எழுபது வயதானபோது மகலாலெயேலைப் பெற்றான். கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். கேனானுடைய நாளெல்லாம்; தொளாயிரத்துப் பத்து வருசம். அவன் மரித்தான்.
மகலாலெயேல் – கேனானுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு மகலாலெயேல் என்று பேரிட்டான். மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது யாரேத்தைப் பெற்றான். மகலாலெயேல் யாரேத்தைப் பெற்றபின் எண்ணூற்று முப்பது வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். மகலாலெயேலுடை நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருசம். அவன் மரித்தான்.
யாரேத் – மகலாலெயேலுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு யாரேத் என்று பேரிட்டான். யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது ஏனோக்கைப் பெற்றான். யாரேத் ஏனோக்கைப் பெற்றபின் எண்ணூறு வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். யாரேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருசம். அவன் மரித்தான்.
ஏனோக்கு – யாரேத்துக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோக்கு என்று பேரிட்டான். ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துப் பயபக்தியாய் தேவனோடு ஐக்கியப்பட்டு ஐPவித்தான். விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். தேவன் அவனை எடுத்துக் கொண்டபடியினால் காணப்படாமல்ப் போனான். அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.
ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின் முந்நூறு வருசம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருசம்.
மெத்தூசலா – ஏனோக்குக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு மெத்தூசலா என்று பேரிட்டான். இவன் நோவாவின் பாட்டன். மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது லாமேக்கைப் பெற்றான். மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருசம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருசம். அவன் மரித்தான்.
லாமேக்கு – மெத்தூசலாவுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு லாமேக்கு என்று பேரிட்டான். இவன் தேவனில் நம்பிக்கையுள்ளவன். லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான். லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஜந்நூற்றுத்தொண்ணூற்று ஜந்து வருசம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபந்தைந்து வருசம். அவன் மரித்தான்.
நோவா – லாமேக்குக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு நோவா என்று பேரிட்டான். நோவா ஆதாமிலிருந்து பத்தாம் தலைமுறையான மெத்தூசலாவின் பேரன். இவன் 500 வயதாகுமட்டும், இவனைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.
இவனுடைய காலத்தில் பூமி அக்கிரமத்தால் நிறைந்தபடியால், தேவன் அதை அழிக்கிறதற்குத் தீர்மானம்பண்ணினார். ஆனால் நோவா நீதிமானும், தேவனோடு ஜீவித்தவனும், நீதியைப் பிரசங்கித்தவனுமாயிருந்தான்.
அவனையும் குடும்பத்தையும், மிருக ஜாதியையும் தப்ப வைக்கிறதற்காக ஒரு பேழையை உண்டாக்கும்படி தேவன் கட்டளையிட்டார். அது 300 முழ நீளமும், 50 முழ அகலமும், 30 முழ உயரமுமாயிருந்தது. அதைச் செய்துமுடித்தபின், அதற்குள் சுத்த, அசுத்த ஐPவ ஜந்துக்களையும் சேர்த்தான். அதன் பின் தேவன் நோவாவையும் குடும்பத்தாரையும் இதற்குள் பிரவேசிக்கும்படி செய்தபின், கதவை அடைத்தார். ஏழு நாட்களின் பின், ஐலப்பிரளயம் உண்டாயிற்று. ஜலம் 190 நாட்களாய் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. பூமியின் மேல் இருந்த உயிருள்ள யாவும் நிக்கிரகமாயின. அப்பொழுது தேவன் நோவாவை நினைவுகூர்ந்து ஒரு காற்றை வீசும்படி செய்தார். பேழை 7ம் மாதம் 17ம் திகதி அரராத் மலைமுடியில் தங்கிற்று. நோவாவும் குடும்பமும் பேழைக்குள் ஒரு வருசம் ஒரு மாதம் 20 நாள் இருந்தபின், தேவன் அவர்களை வெளியே வரும்படி அழைத்தார். அவன் உடனே ஒரு பலிபீடத்தைக் கட்டி, தேவனுக்குப் பலி செலுத்தினான். தேவன் அவனை அசீர்வதித்து ஒரு உடன்படிக்கையையும் ஏற்படுத்தினார். இப்போதும் காணப்படுகிற வானவில், தேவன் உண்மையுள்ளவரென்பதற்கு நித்திய சாட்சி.
ஜலப்பிரளயத்திற்குப் பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருசம் உயிரோடிருந்தான். நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஜம்பது வருசம். அவன் மரித்தான்.
சேம் – நோவாவுக்கு மூன்று குமாரர்கள் பிறந்தார்கள். அவர்களில் சேம் நோவாவின் மூத்த குமாரன். ஜலப்பிரளயத்திற்குமுன் இவன் தொண்ணூற்று எட்டு வயதில் விவாகம் செய்திருந்தான். ஜலப்பிரளயம் உண்டாய் இரண்டு வருசத்திற்குப்பின்பு, சேம் நூறு வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான். சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருசம் உயிரோடிருந்து குமாரரையும், குமாரத்திகளையும் பெற்றான். சேமுடைய சந்ததியார் சீரியா, பலஸ்தீனா, கல்தேயா, அசீரியா, பெர்சியா, அரேபியா தேசங்களில் குடியேறினார்கள். சேமுடைய குமாரர்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
அர்பக்சாத் – அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
சாலா – சாலா முப்பது வயதானபோது ஏபேரைப் பெற்றான். ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ஏபேர் – ஏபேர் முப்பத்து நாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான். பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
பேலேகு – பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான். ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
ரெகூ – ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
செரூகு – செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான். நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருசம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
நாகோர் – நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருசம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். இவன் ஆபிரகாமுடைய பாட்டன்.
தேராகு – தேராகு எழுபது வயதானபோது ஆபிரகாம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான். இவன் ஒரு விக்கிராதனைக்காரன். தேராகு கல்தேய நாட்டில் ஊர் என்ற இடத்தில் வாசமாயிருந்தான். பிற்பாடு அவ்விடத்தைவிட்டு ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான். அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருசம். தேராகு ஆரானிலே மரித்தான்.
ஆபிராம், ஆபிரகாம் – ஆபிராம் தேராகுவின் மகன். எபிரெய ஜாதியின் முதற்பிதா. கல்தேய பட்டணமாகிய ஊர் என்ற இடத்தில் பிறந்தவன். ஆபிராம் எழுபந்தைந்து வயதுள்ளவனாயிருக்கும் போது தன் மனைவியையும், லோத்தையும் கூட்டிக்கொண்டு ஆரானைவிட்டு கானான் தேசத்துக்குப் போய், மோரே என்னும் சமபூமியில் தங்கினான். தேவன் அவனுக்குத் தரிசனமாகி, உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். சில நாட்களின் பின் பஞ்சத்தினிமித்தம் ஆபிராம் எகிப்து தேசத்துக்குப் போயிருந்தான். பிற்பாடு திரும்பிவந்து கானானில் குடியிருந்தான். இங்கே லோத்து இவனைவிட்டுப்பிரிந்து, சோதோம் பக்கமாய் போய்க் குடியேறினான். ஆபிராம் எபிரோனிலே தங்கியிருந்தான். இன்னும் ஒரு பிள்ளை கிடையாததினால், சாராயின் பேச்சைக் கேட்டு, ஆகாரை மறுமனையாட்டியாக எடுத்தான். இவனுக்கு எண்பத்தாறு வயதாயிருக்கும்போது, இஸ்மவேல் என்ற குமாரன் பிறந்தான்.
ஆபிராமுக்கு தொண்ணூற்று ஒன்பது வயதாயாயிருக்கும்போது, தேவதூதர் தரிசனமாகி, சோதோமின் அழிவைப் பற்றிச் சொன்பின், இவனுக்கு ஒரு பிள்ளை கிடைக்குமென்றும் சொன்னார்கள். அத்தருணத்தில் ஆபிராம், சாராய் என்ற அவர்களுடைய பேர்கள் முறையே ஆபிரகாம், சாராள் என்று மாற்றப்பட்டன. இதன்பின் ஒரு வருடத்தில் ஈசாக்குப் பிறந்தான். அந்தப் பிள்ளை பால் மறந்தபோது, ஆபிராம் ஒரு பெரிய விருந்துபண்ணினான். பிற்பாடு ஆபிரகாம் ஆகாரையும் அவள் பிள்ளையையும் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டான்.
தேவன் மறுபடியும் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, ஈசாக்கைப் பலியிடும்படி சொன்னார். இவ்விதமாய் அவனுடைய விசுவாசத்தைச் சோதித்தபின், தேவன் அவனை ஆசீர்வதித்தார். அவனுடைய விசுவாசத்தினிமித்தம் விசுவாசிகளின் பிதாவென்றும், அவன் தேவனோடு ஐக்கியமாய் ஐPவித்ததினால், தேவனுடைய சிநேகிதன் என்று பெயர் பெற்றான்.
ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரியையும் விவாகம் பண்ணியிருந்தான். இவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்சானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள். ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கை விட்டுக் கிழக்கே போகக் கீழ்த்தேசத்துக்கு அனுப்பிவிட்டான். கடைசியில் சாராள் மரித்தபொழுது, மக்பேலா என்னும் குகையை வாங்கி, அங்கே அவளை அடக்கம்பண்ணினான். இதனால் கானான் தேசம் தன் சந்ததிக்குச் சுதந்தர தேசமாகும் என்ற நம்பிக்கையைக் காட்டினான். ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபந்தைந்து வருசம். பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
ஈசாக்கு – இவன் ஆபிரகாம் நூறு வயதாயிருக்கும்போது, அவனுக்குச் சாராள் பெற்ற மகன். இவன் குழந்தையாயிருந்தபோது இஸ்மவேலால் பரியாசம் பண்ணப்பட்டான். வாலிபனானபோது ஆபிரகாம் இவனைப் பலிசெலுத்தப்போனான். பிற்பாடு இவனுடைய நாற்பதாம் வயதில் ரெபேக்காளை விவாகஞ்செய்து, அறுபதாம் வயதில் ஏசா, யாக்கோபு என்னும் இரட்டைப் பிள்ளைகள் இவனுக்குப் பிறந்தார்கள்.
இவன் பஞ்சத்தினிமித்தம் பெயர்செபாவிலிருந்து கேராருக்குப் போயிருந்தான். அங்கே இவனுக்கு அதிக செல்வம் உண்டாயிற்று. பெலிஸ்தரினால் இவனுக்கு எவ்வளவோ கெடுதியுமுண்டாயிற்று.
பிற்பாடு ஏசாவுக்கு யாக்கோபின்மேல் உண்டான விரோதத்தினிமித்தம், யாக்கோபு பதான் அராம் என்னும் இடத்துக்கு அனுப்பப்பட்டான். இருபது வருடங்களுக்குப் பின், ஈசாக்கு எபிரோனிலிருந்தபோது, யாக்கோபு தன் மனைவி, மக்கள், ஆஸ்தியுடன் திரும்பித் தன் தகப்பனிடம் வந்தான். அநேக வருடங்கள் சென்றபின் ஈசாக்கு தன் நூற்றி எண்பதாம் வயதில் மரித்தான். அவனுடைய இரு குமாரர்களும் அவனை மக்பேலாவில் அடக்கம்பண்ணினார்கள்.
யாக்கோபு – ஈசாக்குக்கும் ரெபேக்காளுக்கும் பிறந்த இரண்டாம் மகன். இவனும் ஏசாவும் இரட்டைப் பிள்ளைகள். யாக்கோபு ஆடு மாடுகளை மேய்க்கிறவனாகவும் ஏசா வனவாசியுமாயிருந்தான். யாக்கோபு ஏசாவை மோசம்போக்கி, சிரேஸ்ட புத்திர சுவிகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றான். இதினிமித்தம் ஏசா அவன்மேல் கோபமானான். ஆனபடியாலும் அவன் ஒரு பெண்கொள்வதற்காகவும் அவனுடைய பெற்றோர் அவனைப் பதான் அராம் என்னும் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். அவன் போகிற வழியில் பெத்தேலில் தேவன் அவனுக்குத் தரிசனமானார். அவன் அவரை வணங்கி, ஒரு பொருத்தனை செய்தான். பிற்பாடு பதான் அராமுக்குப்போய், தன் மாமனுக்குக் கீழே ஊழியம்செய்து, சம்பாதித்து, அவனுடைய இரண்டு குமாரத்திகளை விவாகம் செய்து, பிள்ளைகளையும் பெற்றான். சம்பாத்தியத்தைப் பற்றி அவனுக்கும் மாமனுக்கும் இடையில் தர்க்கமுண்டானபோது, யாக்கோபு திரும்பித் தன் ஊருக்குப் போகத் தீர்மானித்தான். அப்படியே 21 வருடங்களின்பின் கானான் தேசத்துக்கு வந்தான்.
கானான் தேசத்தைச் சமீபிக்கையில், ஏசா தனக்கு விரோதமாக வருகிறதாகக் கேள்விப்பட்டு தேவனை நோக்கி, வேண்டுதல் செய்தான். தேவதூதன் தரிசனமாகி அவனை ஆசீர்வதித்து, அவன் பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். பிற்பாடு பஞ்சத்தினிமித்தம் தன் பிள்ளைகள் ஆடு மாடுகளுடன் 130ம் வயதில் தன் மகன் யோசேப்பிடம் எகிப்துக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கேயும் 17 வருடம் ஐPவித்தபின் 147ம் வயதில் மரித்தான். யோசேப்பு அவனுடைய சரீரத்தை வாசனைத் திரவியத்தால் பக்குவம்பண்ணி, கானானுக்குக் கொண்டுபோய் மக்பேலா குகையில் அடக்கம்பண்ணினான்.
சுயவந வாளை வைநஅ












