அதிகாரம் 4
பணியும் போராட்டமும்
வசனம் 4:1-2
நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத்து கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரை சக்கந்தம்பண்ணி: அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான்.
தேவனுடைய வேலைகள் செய்யப்படும்போது, எதிரிகளின் தாக்குதல்கள் ஏற்படுதல் என்பது எப்போதும் நடக்கிறதொன்றேயாகும். சன்பல்லாத்திடம் இருந்துதான் மறுபடியும் தொல்லைகள் ஆரம்பமாயின. அலங்கங்கள் கட்டப்படுகின்றனவென்று கேள்விப்பட்டவுடன் கேள்விப்பட்டவுடன் அவன் மிகவும் கோபங்கொண்டான். சாதாரணமாகக் கட்டப்படும் அந்தச் சுவரின் வேலை அவனுக்குக் கோபமூட்டடியது ஏன்? அந்த மதில்கள் இடிபாடுகளாக இருப்பதையே அவன் பார்த்துக்கொண்டிருக்க விரும்பினானோ? அவன் ஒரு சாதாரண முறைத்தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தான். இழிவுபடுத்திப் பேசும் முறைதான் அது. அந்த எளிமையான யூதர்களைச் சக்கந்தம் பண்ணினான். அவர்கள் என்ன செய்துவிடுவார்கள்? தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவர்களால் கூடுமோ? சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர்கொடுப்பார்களோ? அவைகளைக்கொண்டு அந்தச் சுவர்களைக்கட்டி முடிப்பார்களோ? என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி கேட்டான் அவன். அவர்கள் ஆரம்பித்தது மிகவும் மிகவும் பெரியதானதொரு வேலை என்பதனை அந்த யூதர்கள் நன்கு அறிவர். கற்கள், வேண்டிய அளவிற்குக் கிடைத்தன. ஆனால் எரித்து அழிக்கப்பட்டுப்போன கதவுகள் தான் சரிசெய்யப்பட வேண்டியிருந்தன (1:3, 2:13). ஆனால் சன்பல்லாத்து மிகவும் கோபமடைந்திருந்ததினால் நேரே சமாரியாவின் சேனைகளிடம் சென்று, மற்றும் அந்நகரத்தின் முக்கிய மனிதர்களையும் சந்தித்து, மேற்கண்ட கேலிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டிருந்தான்.
வசனம் 4:3
அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான்.
தொபியாவும் சன்பல்லாத்துடன் அவனது சக்கந்தகப் பேச்சுக்களினாலே சீக்கிரமே சேர்ந்து கொண்டான். அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்து போகும் என்றான் அவன். அவர்களிருவரும், யூதர்கள் செய்யம் முயற்சிகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது மதில்கள் கட்டப்பட ஆரம்பமாகி வளர்ந்துவருகிறதைப் பார்த்து அந்த யூதர்களைப் பரிகாசம் செய்து தாக்க முற்பட்டனர். இன்றைக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையும், தேவனுக்கடுத்த வேலைகளையும் கண்டு சத்துருக்கள் அவ்வாறே தாக்க முற்படுகின்றனர். நமது தன்னம்பிக்கைகளையும் செய்களையும் கண்டு பரிகசித்துச் சிரிக்கிறவர்களைக் கண்டு பொறுத்துக்கொண்டிருப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். அத்தகைய பரிகாசச் சிரிப்புகள் ஒரே நேரடித்தாக்குதலைவிட மோசமானதாகும். அதை எதிர்ப்பது சற்று கடினமே.
வசனம் 4:4-5
எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்தில் சூறைக்கு ஒப்புக்கொடும். அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும். அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக. கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.
ஆனால் இத்தகைய இழிவான எதிர்ப்புகளை முறியடிக்க யாரிடமும் போக வேண்டும் என்பது நெகேமியாவிற்கு தெரியும் தேவனிடம் அவன் முறையிட்டான். நாம் சரிவரப் படித்துப் பார்த்தால் அவனுடைய அந்த ஜெபம் சற்று கடினமாகத்தான் தோன்றும். அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூரைக்கு ஒப்புக்கொடும் என்று ஜெபிக்கிறான். அது நியாயப்பிரமாண சட்டங்களின் காலம். இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் ஏற்பட்ட கிருபையின் காலம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. கிறிஸ்தேசு சிலுவையின்மீது செய்த வேண்டுதல், பிதாவே இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே (லூக்.23:24) என்பது நமக்காகத்தான் என்று நாம் அறிவோம். அந்த வேண்டுதலினால்தான் இன்று நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசி.2:9) என்று வேதம் கூறுகிறது. நெகேமியா இத்தாக்குதல்கள் தேவன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களே என்று கூறுகிறான். அவர்கள் எள்ளிப்பேசியது தேவனுக்கடுத்த வேலைகளையே. தேவன் அதற்காகக் கோபம் அடையவேண்டும். ஆகையால்தான் நெகேமியா தேவனிடத்தில் அவருடைய உதவிக்காக மன்றாடி ஜெபிக்கிறான்.
வசனம் 4:6
நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம். அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது. ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள்.
அதுமட்டுமன்றி, நெகேமியா அவர்களின் பரிகாசங்களுக்கு ஏதும் பதில் பேசவில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும்…. இருந்தார் (2.பேது.2:23) என்று வேதம் இயேசுவைப் பற்றிக் கூறுகிறது. அது போலவே நெகேமியாவும் இருந்தான். நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம், என்றுள்ள அடுத்த வார்த்தைகள் நெகேமியா என்ன செய்தான் என்று விளக்குகின்றன. தொடர்ந்து நெகேமியா கட்டும் பணியைச் செய்தான். அவனைத் தடுக்கக்கூடியது ஏதுமில்லை. சிரிப்பு, பரிகாசம், சக்கந்தம் ஏதம் அவனைத் தடுக்கவில்லை. தேவனாகிய கர்த்தருடைய வேலையை அவன் செய்து வந்ததினால், அதை நிறுத்தினால் அது சத்துருக்களின் வெற்றிக்கான வழி என அவன் நினைத்திருந்தான். ஆகையால் அவன் கட்டும் பணிகளை நிறுத்தவேயில்லை. அவனுடைய இதர நண்பர்களும் அவ்வாறே தொடர்ந்து கட்டும் பணியைச் செய்தனர். சீக்கிரமே, அந்த அலங்கங்கள் அனைத்தும் இணைத்துக் கட்டப்பட்டு பாதி உயரத்திற்கு எழுப்பப்பட்டு விட்டன. ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் சிறுகட்டும் பணி, அடுத்தவரின் கட்டுமானப் பணியோடு இணைக்கப்பட்டு முழுத்தொடர் இணைப்பும், ஒரேமதிலாக எழுப்பப்பட்டு வளர்ந்து வருகிறது எனக்காணும்போது, அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ஆறாம் வனத்தில் கடைசி பாகம் ஜனங்கள் வேலை செய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள் எனக் கூறுகிறது. அந்த அலங்கத்தின் மதில்களை அவர்கள் கட்ட விரும்பினார்கள். அதைக் கட்டினார்கள். இங்கே நாம் முக்கிய ஒன்றினைக் கவனிக்க வேண்டிய முன்மாதிரியைக் காண்கிறோம். அவர்கள் கட்டாயம் அதைச் செய்யவேண்டும் என்பதில்லை, அல்லது அது அவர்களின் கடமைப்பணியுமல்ல, அல்லது அதைச் செய்யப் பயப்படுத்தப்படவுமில்லை. அதைக் கட்டவேண்டுமென்று விரும்பினார்கள். தங்கள் மனதிலே அப்படி ஒரு முடிவை முதலில் எடுத்தார்கள். நம்மில் பலரும் தேவனுடைய பணியைச் செய்ய முதலில் அத்தகைய தீர்மானத்தை எடுக்கிறோமா? அதைச் செய்கிறோமா? அதைச் செய்கிறோமா? இவர்களோடு ஒப்பிட்டு நம்மை ஆராய்வோமாக.
வசனம் 4:7
எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டு வருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி,
இப்போது அதே வேலை மிகவும் கடினமானதாகிவிட்டது. தேவனுடைய வேலை வெற்றியோடு செய்யப்பட்டு வளர்ந்தேறி வருவதை சத்துரு சகித்துக்கொள்ளமாட்டானன்றோ? அவன் முன்னே வந்து அப்பணியை நிறுத்திவிட முயற்சி செய்வானல்லவா? ஆகையால் சன்பல்லாத்தும், தொபியாவும் மறுபடியும் இடையூறு செய்யமுன்வருகிறார்கள். இப்போது, அவர்களுடன் அராபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் சேர்ந்துகொண்டார்கள். மதில்கள் கட்டப்பட்டு, வாசல்கள் பழுது பார்த்துக் கட்டப்படுகின்றனவென்று கேள்விப்பட்டவுடன் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள். இந்த மதில்கள் கட்டும் விஷயத்தில் சன்பல்லாத்தும் அடிக்கடி எரிச்சலடைந்து தனது கோபத்தை எல்லாருக்கும் பரப்பிக்கொண்டிருந்தான். இந்த ஒரே கலகப்பிரியன் யாது செய்துவிடமுடியும் என்று நினைக்கும்போது நமக்கு சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.
அவனுடைய கோபத்தின் விளைவாக அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு எருசலேமைத் தாக்கவும், அந்தக்கட்டுமான வேலையத் தடுக்கவும் முற்பட்டான். அவர்கள் எல்லாருமாக சேர்ந்து இந்த மதில்கள் கட்டப்படும் பணியை நிறுத்திவிட வேண்டும் என்பதற்காக ஒரு போர் முயற்சியை மேற்கொள்ளத் தலைப்பட்டனர்.
வசனம் 4:8-10
எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள். ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம். அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது. மண்மேடு மிச்சமாயிருக்கிறது. நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள்.
நெகேமியாவிற்கு அவர்களின் திட்டங்கள் தெரிய வந்தது. மனிதர்கள் தங்களின் திட்டங்கள் தனிப்பட்டவைகள் என்று நினைக்கலாம். ஆனால் அனைத்தையும் தேவன் அறிவார் (1.யோ.3:22). மேலும் 8-12 இரா 6ல் கூறியுள்ளபடி சீரியாவின் இராஜாவிற்கு எப்படித் தெரிந்துவிடுகிறதென்று சில சொந்த ஆட்களைச் சந்தேசித்து அந்தத் துரோகி யார் என்று விசாரணை செய்யும்போது ஓர் ஊழியக்காரன்…. நீர் உம்முடைய பள்ளியறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்று சொன்னான் என்று காண்கிறோம்.
சத்துருக்களின் திட்டங்களை நெகேமியா கேள்விப்பட்டவுடன் செயல்ப்படத்துவங்கினான். யூதர்கள் தேவனிடத்தில் சென்று தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும் பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம் என்று கூறுகிறான். இதற்குமுன் செய்தது போலவே நெகேமியா சரியான முறையைப் பின்பற்றினான். பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி… ராஜாவைப் பார்த்து வேண்டிக்கொள்கிறேன் (2:4-5) என்று நெகேமியா ஜெபத்தோடு செயல்ப்பட்டான். இவை இரண்டும் ஒன்றாக இணைந்திருக்கவேண்டும். ஜெபம் பண்ணி விழித்திருங்கள்.
இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் யூதா மனிதர் சொன்னார்கள் என்பது அங்கு கட்டும் பணியைச் செய்து வந்த அனைத்து மக்களும் ஒப்புக்கொண்டு சொன்னதைத் தான் குறிக்கும். கட்டும் பணியின் அலங்கங்களின் பாதி பகுதி மட்டும் கட்டி முடித்தபின் அவர்கள் மிகவும் சோர்வடைந்திருந்தனர். அதற்குக் காரணம் அப்பணியைச் செய்தவர்கள் அனைவரும் சேர்ந்து சரீரப்படியான பணியில் ஈடுபடவில்லை. மேலும் பாதி வேலை நேரம் என்பது கஷ்டமான வேலையின் நேரமேயாகும். அவர்கள் மகிவும் சோர்வடைந்திருந்தனர். மேலும் அதிகமான குப்பை மேடுகளும் இடிபாடுகளும் சேர்ந்திருந்த குவியல்களினிமித்தம் தொடர்ந்து கட்ட முடியவில்லை. நமது வாழ்க்கையிலும் கூட எத்தனை முறை நாம் பலவகை குப்பை கழிவுகள் போன்ற இடர் பாடுகளினால் தேவனுடைய பணியைச் செய்ய முடியாமல் திகைக்கிறோம். உன்னுடைய வாழ்க்கையில் உள்ள அப்படிப்பட்ட குப்பைகள் என்னவென்பதனை நீ உணர்ந்திருக்கிறாயா? எவ்வளவு அருமையான நேரத்தையும், பணத்தையும் நீ அதற்காக, வீணாக செலவு செய்ய நேர்ந்துள்ளது? இங்கே அதுபோன்ற பயனற்ற காரணங்களுக்காகவே அவர்கள் கட்டும் பணியை நிறுத்திவைக்க வேண்டியதாயிற்று. பாவம் நெகேமியா. முதலாவது அவனுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அவனது விரோதிகள் அடுத்து அவர்களது பணியிடங்களில் இருந்த குப்பைக்குவியல்கள்.
வசனம் 4:11
எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள்.
இந்தக் குப்பை குவியல்களைக்கூட நெகேமியாவின் சத்துருக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர். இங்கே ஏராளமான குப்பை மேடுகள் பெரியகுவியல்களாக உள்ளன. நாங்கள் வருவதை அவர்கள் காணக்கூடாமல் அவை மறைந்துவிடும். நாங்கள் அவர்கள்மேல் விழுந்து அவர்கள் தாக்கும்வரை அவர்கள் அதை உணரமுடியாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டனர். அந்தக் குப்பைகுவியல்கள் மட்டும் தானாக தீங்கொன்றும் செய்யமுடியாது. அது அங்கே குவியல்களாகமட்டும் அமைந்திருந்து. ஆனால் அது சத்துருக்கள் நெருங்கி வருவதை முழுவதும் முழுவதுமாக மறைத்து நிற்கும். நமது வாழ்க்கையிலும்கூட அத்தகைய நிகழ்ச்சிகளே நடக்கின்றன. நமது வாழ்க்கையிலுள்ள சில தீய பழக்கக்குவியல்கள் நமது சத்துரு நமக்கு விரோதமாக நம்மை வஞ்சித்து செய்யும் செயல்களை அறிந்துகொள்ள முடியாதபடி நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன. நாம் அத்தகைய குப்பைகளை நம்மைவிட்டு அகற்றுவோமாக.
அந்தச் சத்துருக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதனைத் திட்டமாகக் கூறுகின்றனர். அதாவது அந்த யூதர்களைத் தாக்கிக்கொன்று அந்த வேலையை நடைபெறவிடாமல் தடுத்துப்போட நினைக்கின்றனர். அவர்கள் அந்த வேலையை நிறுத்துமுன் அந்த யூதர்களைத் தாக்கிக் கொல்லவேண்டும் என்று நினைக்கின்றனர். கொல்லவேண்டுமே என்பது அவர்களுக்குக் கவலையளிக்கவில்லை. முதலில் கொல்லத்தான்வேண்டுமென்றாலும் அதற்கு அவர்கள் சம்மதித்திருந்தனர். எப்படியாவது கட்டும்பணியை நிறுத்திவிட வேண்டும். அதுதான் அவர்களுக்கு மிகவும் முக்கியம்.
வசனம் 4:12
அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள்.
வேலையை நிறுத்தச் செய்யும் முயற்சிகளில் அவர்கள் மேலும் என்ன செய்தார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் இந்தக் கொடுரமான திட்டங்கள் அங்கே அருகில் இருந்த பல யூதருக்கும் தெரிய வந்தன. அவர்கள் நெகேமியாவினிடத்தில் வந்த அதை அவனுக்கு அறிவித்தனர். விரோதிகள் எங்கும் வேண்டுமானாலும் நம்மைத் தாக்கத் தயாராக உள்ளனர் என்று அவர்கள் அவனிடம் கூறினர்.
வசனம் 4:13
அப்பொழுது நான்: அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈ ட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன்.
நெகேமியா உடனே செயல்ப்படத் துணிந்தான். அவன் காத்திருந்து பார்க்கவில்லை. மதில்களைப் பாதுகாக்கத் திட்டமிட்டான். அவன் அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும் பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடம்பம் குடம்பமாக நிறுத்திவைத்தான். அவர்கள் போரிட்டு, வென்று பாதுகாத்துக் கொள்ளத் தயாராக நிறுத்தப்பட்டனர். கர்த்தருடைய வேலைக்காக குடும்பங்குடும்பமாக உழைத்தல் என்பது மிகவும் மகிமையான செயல் ஆகும்.
வசனம் 4:14
அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.
அந்த ஜனங்கள் சற்றே பயந்திருந்தனர் என்பதனை நெகேமியா அறிந்தபோது பிரபுக்கள், அதிகாரிகள், மற்ற ஜனங்கள் யாவரையும் தன்னிடத்தே அழைத்து, அவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்று கூறினான். தேவனாகிய கர்த்தர் இதுபோல் தமது மக்களுக்குப் பலமுறை கூறியுள்ளார். எரேமியாவைத் தமது பணிக்காக அழைத்தபோது அவனிடத்தில் தேவன் அவ்வாறுதான் கூறினார். நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம். உன்னைக் காக்கும்படி நான் உன்னுடனே இருக்கிறேன் என்றார். (எரேமி.1:8, உபா.31:6-8, ஏசா.1:2,5, லூக்.12:7,32). நெகேமியாவும் அதே காரணத்தை விளக்கிக்கூறுகிறான். மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து….. உங்கள் குடும்பங்களுக்காகவும் உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்று சொன்னான். பரலோகத்தின் சிங்காசனத்திலே வீற்றிருக்கிறவர் யார் என்பதனையும் எவ்வளவு சீக்கிரம் நாம் மறந்து விடுகிறோம். நாம் இது குறித்து நினைவூட்டப்பட வேண்டியவர்களாக இருப்பது என்னே!
வசனம் 4:15
எங்களுக்குச்செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம்.
யூதர்களுக்குத் தங்களின் திட்டம் தெரியவந்துவிட்டது என்று அந்தச் சத்துருக்கள் கேள்விப்பட்டனர். நெகேமியா கர்த்தரைத் துதித்துப் போற்றினான் கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி…. (சங்.33:10) என்று தாவீது கூறுகிறான். எல்லா யூதர்களும் அலங்கங்களைக் கட்டும் பணியை மீண்டும் துவக்கியுள்ளதையும் அந்தச் சத்துருக்கள் காண்கின்றனர். அவர்களின் எல்லாத் திட்டங்களும் பயனற்றுவிட்டதை அறிகின்றனர்.
வசனம் 4:16-17
அன்றுமுதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள். அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள். அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.
ஆனால் யூதர்களைப் பொறுத்தவரையில் அவர்களிடத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. விரோதிகளின் திட்டங்கள் அவர்களை ஆயதபாணிகளாக வைத்தது. அவர்களில் பாதிப்பேர் ஆயுதந்தரித்தவர்களாக பாதுகாப்பிற்கு நெகேமியாவினால் நிறுத்தப்பட்டனர். ஈட்டிகளையும் வில்லுகளையும் அவர்கள் பிடித்து நின்றனர். மற்றப் பாதிப்பேர் கட்டும் பணியைச் செய்தனர். சுமை சுமக்கிறவர்களும் சுமையேற்றுகிறவர்களும் ஒரு கையினாலே வேலைசெய்து மறுகையினாலே ஆயதம் பிடித்திருந்தார்கள். கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக் கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள். அவர்கள் Nடீதவைக்கேற்றபடி குறிப்பிட்ட இடங்களிலே நின்றவர்களாய் போருக்குத் தயாரான நிலையில் இருந்தனர்.
வசனம் 4:18
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள். எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.
கர்த்தர் நம்மை எப்போதும் ஆயத்தமாயிருக்க சொல்லியிருக்கிறாரன்றோ? தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்….. நீதியென்னும் மார்க்கவசத்தையும் தரித்தவர்களாயும் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைத் தரித்தவர்களாயும் விசுவாசமென்னும் கேடகத்தையும்… ரட்சண்யமென்னும் தலைச்சீராவையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபேசி.6:10-17) என வேதத்தில் வாசிக்கிறோம். அடுத்து நெகேமியா எக்காளம் ஊதகிறவனை அவனண்டையில் நிற்கும்படி செய்தான். எக்காளம் ஊதும்போது யாவரும் அவ்விடத்தில் வந்து அவன் சொல்லியிருக்கிறபடி செய்ய அவர்களுக்குச் சொல்லிவைத்தான்.
வசனம் 4:19-20
நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது. நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம். நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள். நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.
நெகேமியா அவர்களுக்கு விளங்க கூறி வேலைபெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது. ஒருவருக்கொருவர் நாம் தூரமாயிருக்கிறோம். எக்காள சத்தத்தை எங்கே கேட்கிறீர்களோ அவ்விடத்திலே கூடுங்கள் என்று சொன்னான். மேலும் அவன் முக்கியமான அழகிய ஒரு செய்தியைக் கூறுகிறான். நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார் என்கிறான். அனைத்து சத்துவமும் எங்கே உள்ளதென்று நெகேமியா அறிவான். அதைச் சொல்ல அவன் ஒருபோதும் மறக்கவில்லை.
நாமும் தேவனுடைய வேலையைச் செய்யும் பணியில் வேறுபட்டுள்ளேர். சிலர் மிகத் தொலைவில்கூட உள்ளனர். நாம் ஒன்றுபடி வேண்டியுள்ளர். ஒருவருக்காக ஒருவர் தேவனிடத்தில் வேண்டுதல் செய்வதே அந்த ஒன்றுபடுதல் ஆகம். ஆனால் என்றோ ஒருநாள் எக்காள சத்தத்தினால் நாம் ஒன்று சேர்க்கப்படுவோம். கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். (1.தெச.4:15-18).
வசனம் 4:21
இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம். அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.
அவ்வாறே அவர்கள் செயல்ப்பட்டனர். இப்படியே நாங்கள் வேலைசெய்து கொண்டிருந்தோம் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களைத் தடுப்பது ஏதமில்லை. அந்தப் பகைஞரின் முயற்சிகளை அவர்கள் புறக்கணித்து அவர்களின் தாக்குதலை எதிர்க்கக் காத்திருந்தனர். தேவனுடைய வார்த்தைகளான, கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்கு தகுதியானவன் அல்ல (லூக்.9:62) என்ற சத்தியத்திற்கு நெகேமியா ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகிறான்.
மேலும் நெகேமியா வேலைநேரத்தையும் குறிப்பிட்டு அவர்களில் பாதிப்பேர், கிழக்கு வெளுக்கும் நேரம் முதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள் என்று கூறிகிறான். இது பகலின் மிக அதிக நேரம். அது மட்டுமன்றி சூரியன் அஸ்தமித்த நேரம் தொடங்கி நட்சத்திரங்கள் தோன்றும் நேரம் வரையிலான குறகிய நேரம்கூட சேர்த்துக் கணக்கிடப்படுகின்றதன்றோ? தேவனுடைய திருப்பணியில் நம்மில் எத்தனை பேர் அத்துணைப்பகல் நேரத்தையும் செலவிடுகிறவர்களாக உள்ளோம் என்பதனை எண்ணிப் பார்க்கக்கடவோம்.
வசனம் 4:22
அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி,
மற்றுமொரு செயல் திட்டத்தை, நெகேமியா அறிவிக்கிறான். ஒவ்வொரு இராமாறு காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்க வேண்டும் என்று கூறுகிறான். எருசலேமைப் பாதுகாப்பின்றி விட்டுச் செல்ல அவன் விரும்பவில்லை. அதனால் இந்தச் செயல் திட்டம்.
வசனம் 4:23
நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றிக் காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம். அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.
இந்த வசனம், யூதர்கள் எவ்வளவு தியாகமனதோடு பணியாற்றினார்கள் என்பதை விளக்குகிறது. நெகேமியாவும் அவனுடைய சகோதரரானவர்களும், வேலைக்காரர்களும், வஸ்திரங்களைக் களைந்து போடாதிரந்தனர். வஸ்திரங்களைத் துவைக்கத் தண்ணீர்களண்டையில் செல்லும்போதுகூட தங்கள் ஆயுதங்களுடன் சென்றனர்.
கர்த்தரின் ஆயுதசாலையிலே, பட்டயத்தைப்பற்றி தேவவசனமாகிய ஆவியின் பட்டயம் என கூறப்பட்டிருப்பதை நாம் எபேசியர் 36:17ல் வாசிக்கிறோம். நீ, இந்தப் பட்டயத்தை உனது தேவபணியில், தரித்துக்கொண்டு எங்னும் செல்கின்றாயா? இதன் பொருள் நீ வசனங்களடங்கிய ஒரு வேதபுத்தகத்தைச் சுமந்து செல்ல வேண்டும் என்பதல்ல. உனது மனதிலே வேதவசனங்கள் இருக்கவேண்டும். தாவீது நான் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் எனக் கூறக் காண்கிறோம் (சங்.119:11). தேவைப்படும் போதெல்லாம் அது அங்கிருந்து நமக்குப் பயன்படவேண்டும். அது நமது மனதில் வைக்கப்பட நாம் தினமும் வேதத்தை வாசித்து, அவசியமானால் மன்பாடம் செய்யவேண்டும். வேதத்தை எடுத்து, திறந்து ஓரதிகாரத்தை வாசித்தால் மட்டும் போதாது. தினசரி வாசித்தலும் மனப்பாடம் செய்தலும் மிக முக்கியமாகும். அப்போதுதான் அது நமது மனதில் பதிய வைக்கப்படும். பரிசுத்த ஆவியின் ஏவதலால் நமக்குத் தேவவைப்படும்போது அது நினைவிற்கு கொண்டுவரப்படும். வேதத்தை நாம் படிக்காமலும், அதைப்பற்றி தியானிக்காமலும் இருந்தோமானால் அது நமக்கு நெஞ்சில் நிற்பது எப்படி?









