அதிகாரம் 11
எருசலேமில் வாழ்ந்த மக்கள்
அந்த யூதர்கள் ஆணையிட்டுத் தி;ட்டம்பண்ணினது மட்டுமன்றி தங்கள் வாழ்க்கையையும் ஒழுங்குபடச் செய்தனர். அது ஏனோதானோ என்ற ஒரு வாழ்க்கை முறையல்ல. ஒவ்வொன்றும் மிகவும் கவனத்துடன் திட்டமிடப்பட்டது.
அந்த ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள். மற்ற ஜனங்கள் தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமில் சென்று குடியிருக்கச்செய்தனர். மற்றவர்கள் அனைவரும் யூதாவின் பல பட்டணங்களிலும் கிராமங்களிலும் குடியிருக் சிதறிப்போகும்படி செய்தார்கள். அடுத்து யூதாவின் புத்திரரைப்பற்றியும் பென்ஜமீன் புத்திரரைப்பற்றியும் குறிப்பாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் காரியங்களைச் சரிவர செய்ய விரும்பினார்கள் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும். முன்பு யெரொபெயாம், தாவீது இராஜாவின் பேரனான ரெகொபெயாமுக்கு விரோதமாய் கலகம் செய்தபோது, இந்த இரண்டு கோத்திரத்தாரும் ரெகோபெயாமுடன் துணையிருந்தனர் என்று வேதத்தில் நாம் வாசிக்கிறோம் (1.இராஜா.12:19-20).
அடுத்து, எருசலேமிலே வசித்துவந்த அந்த இரண்டு கோத்திரத்தாரின், குடும்பத்தலைவர்கள் எஸ்றாவின் வரிசைப்படுத்திக் கூறியிருக்கக் காண்கிறோம். மற்றும் தேவனுடைய ஆலயத்திலே பணிவிடை செய்துகொண்டிருந்த 822 பேரின் தலைவர்களான மூன்று ஆசாரியர்களின் பெயர்கள் கூறப்பட்டிருக்கக் காண்கிறோம். அடுத்து 242 குடும்பத்தலைவர்களின் பெயர்களையும் 128 பராக்கிரமசாலிகளின் பெயர்களையும் குறிக்கப்பட்டிருக்கக் காண்கிறோம். அதற்கு அடுத்தபடி தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற தலைவர்களிலே மூன்றுபேரையும், அவர்களுடன் இருந் 284 லேவியர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசாபின் வழி வந்தவர்களான பாடகர்களும் இதில் அடங்குவர் (1.நாளா. 16:4-5). ஜெபத்தின் ஸ்தோத்திரப்பாட்டைத் துவங்குகிறவனான மத்தனியா, மற்றப் பாடகர்களுக்குத் தலைவனான இருந்தான்.
இதே மத்தனியாவைப் பற்றி 12:8ல் துதி செய்தலை விசாரித்த தலைவர்களில் ஒருவனாக குறிப்பிடப்பட்டிருக்கக் காண்கிறோம். துதி செய்தலை விசாரிக்கும் தலைவர் என வாசிக்கும்போது எத்துணை மகிழ்ச்சி அடைய முடிகிறது. அதுபோல நம்மைப் பற்றிக் கூறப்பட ஏதுவுண்டோ? நம்முடைய தினசரி தியானங்களிலே துதி செய்தல் நடைபெறுகிறதா? எப்போதும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செய்கிறவர்களாக நினைவுகூரப்பட முடியுமா?
மறுபடியும் 23,24ம் வசனங்களில் அந்தப் பாடகர்களைப் பற்றி ருசிகரமான வேறு தகவல்களை நாம் அறியமுடிகிறது. பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி இராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது. அர்த்தசஷ்டா இராஜாவுக்குப் பாடகர்கள் எங்கிருந்தனர் என்ற செய்தி எப்படி தெரிந்தது? அவன் ஜெயித்திருந்த நாடுகளிலிருந்து ஆலோசகர்கள் நாட்டின் நிலைகள்பற்றியும் அவர்களின் தேவைகள்பற்றியும் இராஜாவுக்குத் தெரிவித்து வந்தனர். பெத்தகியா என்பவன் ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான் என்று வாசிக்கிறோம். கடைசியாக தல்மேர் அக்கூப் என்பவர்கள் வாயில் காப்பாளர்களான 172 பேருக்கு தலைவர்களாக இருந்தனர்.
அடுத்து 25 முதல் 36 வரையிலான வனங்களில் சில கிராமங்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகளில் வாழ்ந்த மனிதர்கள் எருசலேமிலிருந்து சற்று தொலைதூரத்தில் இருந்தனர் என்று காண்கிறோம். அவர்கள் சமயம் வாய்த்தபோது தங்களின் புரதான இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். இந்த இடங்களனைத்தும், அர்த்தசஷ்டா இராஜாவின் ஆளுகைக்குட்பட்டிருந்து. அந்த ஜனங்கள் தங்களின் பழைய இடங்களுக்கே குடிபெயர்ந்து சேர்ந்தபோதிலும் அவர்கள் அந்த இராஜாவின் ஆளுகைக்குட்பட்ட மக்களேயாவார். அந்த இடங்களில் ஓரிடம் சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கு என பெயர்பெற்றிருந்தது. இந்த இடம் யோப்பா பட்டணத்தருகில் இருந்தது. இங்குதான் லீபனோனிலிருந்து வெட்டப்பட்ட மரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆகையால் இந்தக் கிராமப்பகுதியில் இருந்த ஜனங்கள் தச்சுவேலை செய்பவர்களாக இருந்திருக்கலாம்.












