• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

13. நெகேமியா செய்த இதர காரியங்கள்

August 10, 2017
in கிறிஸ்தவ நூற்கள், நெகேமியா
0 0
00. பொருளடக்கம்

அதிகாரம் 13

நெகேமியா செய்த இதர காரியங்கள்

வசனம் 13:1-3

அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள். அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருத்திக்கொண்டபடியினால், அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது. ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள்.

மோசேயின் பிரமாணப் புத்தகமாகிய தேவனுடைய வார்த்தைகளை வாசித்ததினால் ஏற்பட்ட விளைவுகளைப்பற்றி மேலும் இந்த அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். மேசேயினால் உபாகம புத்தகத்தில் 23:3-5 வசனங்களில் கூறப்பட்டுள்ளது அங்கு வாசிக்கப்பட்டது. அதில் அம்மோனியனும், மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஏன் சபைக்கு உட்படுத்தக்கூடாதெனில்:

1) இஸ்ரவேலர் எகிப்தைவிட்டுப் பறப்பட்டபோது அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க அவர்கள் உடன்படவில்லை.

2) அப்படி புறப்பட்ட இஸ்ரவேலரைச் சபிக்கும்படி அவர்கள் பீலேயாம் என்ற தீர்க்கதரிசியை கூலிபேசி அழைப்பித்தனர். இந்த நிபந்தனை தொடர்ந்து தேவனை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் அனைத்து மோவாபியருக்கு அம்மோனியருக்கும் பொருந்தும். ஆனால் மோவாபிய ஸ்திரியான ரூத், இஸ்ரவேலின் தேவனை ஏற்றக்கொண்டதினால் அந்தத் தடை அவளுக்கும் அவள் போன்றவருக்கும் பொருந்தாது. ரூத் தனது மாமியாகிய நகோமியினிடத்தில் உம்முடைய தேவன் என்னுடைய தேவன் என்று கூறினாள் (ரூத் 1:16). அதனால் அவள் இஸ்ரவேலுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, யூதாவின் முக்கிய மனுஷனான போவாசுக்கு மனைவியானாள் என்று நாம் வாசிக்கிறோம் (ரூத் 4:13).

இதை இந்தப் பிரமாணத்தை வாசிக்கக் கேட்டபோது, வாசிக்கக் கேட்ட யூதர்கள் உடனே செயல்ப்படத் துவங்கினர். இஸ்ரவேலிலிருந்து அப்படிப்பட்டவர்களை அவர்கள் உடனே நீக்கிப்போட்டனர். மறுபடியும் சாதாரணமான ஒரு பிரமாண வாசிப்பே இந்த நடைமுறைகளைச் செயல்ப்படுத்தியதை நாம் வாசிக்கிறோம்.

வசனம் 13:4-7

இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து, முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காவலாளருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான். இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை. பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப்போய், சில நாளுக்குப் பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, எருசலேமுக்கு வந்தேன். அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்குத் தேவனுடைய ஆலயத்துப் பிரகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன்.

யாவும் மிக நன்றாக நடந்தேறின. அலங்கங்கள் எழும்பி நின்றன. மோசேயின் நியாயப்பிரமாணங்கள் மக்களால் பின்பற்றப்பட்டன. சத்துருக்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்றெல்லாம் நினைக்கத்தான் தோன்றுகிறது. ஆனால் அது அப்படியிருக்கவில்லை. திடீரென ஓர் அதிர்ச்சி. எலியாசிப் என்ற ஆசாரியன் ஒருவன் தேவனுடைய ஆலயத்தின் அறைகளுக்கு விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்டிருந்தான். லேவியர்களும் ஆசாரியர்களும் ஆனவர்கள் மட்டுமே தேவனுடைய ஆலயத்தில் பிரவேசிக்க இடமுண்டு. இவர்கள்தாம் தேவனுடைய பணிகளைச் செய்வதற்காகக் குறிக்கப்பட்டவர்கள். ஆனால் இந்த எலியாசிப் விரோதியான தொபியாவுடன் கைகோர்த்துக்கொண்டான். தொபியாவிற்கு தங்கும் இடமாக தேவனுடைய ஆலயத்தின் ஓர் அறையை வசதிசெய்து கொடுத்துத் தங்கவைத்தான். அந்த அறை மிகப் பெரியதாகவும், காணிக்கைப் பொருள்களான தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவைகளின் தசமபாகமும் இதர காணிக்கைகளும் வைக்கப்பட வேண்டிய இடமாகவும் இரந்தது. அங்கேதான் தொபியாவிற்கு இருப்பிடம் ஒதுக்கப்பட்டது. தேவனுடைய ஆலயத்தின் தொழுகைப்பகுதியின் மையத்தில் தொபியாவிற்கு தங்கும் அறை. இது எவ்வாறு நடக்கமுடிந்தது? நெகேமியா இதனை ஏன் தடுக்கவில்லை? ஆம், நெகேமியா அப்போது எருசலேமில் இருக்கவில்லை. அவன் அர்த்தசஷ்டா இராஜாவின் அரண்மனைப் பணியிடத்திற்கு தான் முன்பு பணியாற்றிய இடத்திற்குச் சென்றுவிட்டிருந்தான். அப்படி செல்லும்போது எருசலேமில் அனைத்து காரியங்களையும் ஒழுங்கான முறையிலேயே விட்டுச் சென்றான். அங்கு சில நாட்கள் கழிந்தபின்பு மறுபடியும் எருசலேம் சென்று அங்குள்ள நடைமுறைகளைக் கவனிக்க இராஜாவினிடத்தில் அனுமதி பெறச்சென்றான். அனுமதியுடன் எருசலேமுக்குச் சென்றபோதுதான், மிகவும் அதிர்ச்சியடையத்தக்கதாய் எலியாசிப் என்ற அந்த ஆசாரியன் தேவனுடைய ஆலயத்தின் பகுதியிலே தொபியாவிற்கு ஒரு தங்கும் அறை ஒதுக்கியிருந்ததைக் கண்டான். எலியாசிப் செய்த அந்தக் காரியத்தினால் அவன் மிகவும் மனமடிவானான் என்று வேதத்தில் நெகேமியாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இது தொபியாவிற்கு ஒரு வெற்றியன்றோ! அவன் தினமும் தேவனுடைய ஆலயத்தில் நடந்தவைகளைப் பார்த்துக்கொண்டேயிருந்திருப்பான் அன்றோ? நாட்டின் நடப்புகள் அனைத்தும் அவனுக்குக் கூறப்பட்டிருக்குமன்றோ? நாமும்கூட சில வேளைகளில் சாத்தானுக்கு இடம் கொடுத்து நமது வேலைகளிலும் தொழுகைகளிலும்கூட அவனுக்குப் பங்களித்து விடுகிறோம். ஒருவேளை எலியாசிப் சாதாரணமாக ஒரே ஓர் அறைமட்டும்தானே என்று கூறமுடியும். ஆனால் அவ்வாறு அந்த ஓர் அறையை மட்டும்கூட ஒதுக்கிக்கொடுத்ததினால் பல பொருள்களை இடம்பெயர்த்த வேண்டியிருந்திருக்குமன்றோ? ஆகையால் நமது வாழ்க்கையில்கூட உலக காரியங்களுக்காக ஒரு சிறு இடத்தைமட்டும் ஒதுக்குவதும், மிகத்தவறாக தேவனுக்குரிய காரியங்களை நீக்கி வைக்க ஏதுவாகும் என்பதை நாம் உணரவேண்டும்.

வசனம் 13:8

அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.

ஆனால் இந்த இழிச்செயலில் நெகேமியாவிற்கு யாதொரு பங்குமில்லை. அவன் என்ன செய்தான்? தொபியாவோடு கலந்து பேசினானா? இல்லை. அந்த இடத்தைக் காலிசெய்துவிட்டுவிடும்படி அவனுடன் பேரம் பேசினானா? இல்லை. தேவனுடைய ஆலயத்திற்கு வெளியே எடுத்து வீசினான். அவனுடைய தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டான் என்று வேதம் கூறுகிறது. இப்போது தொபியா அதிர்ச்சியடைந்தான். அவனுடைய தட்டுமுட்டுகள் அனைத்தும் வீதியிலே வீசியெறிப்பட்டதைப் பார்த்தான். இந்த நிகழ்ச்சி, நமது ஆண்டவரைப்பற்றி ஒரு நிழக்ச்சியை நமக்கு நினைவூட்டுகிறது. ஒருமுறை நமது ஆண்டவராகிய இயேசு தேவாலயத்திற்குள் சென்றபோது, காசுக்கடைக்காரர்கள், ஆலயத்தின் உள்ளே மேசையின் அருகே உட்கார்ந்து காசுமாற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். இப்போது நெகேமியா காலம் தாழ்த்தாது செயல்ப்பட்டதுபோலவே, ஆண்டவரும் காலம் தாழ்த்தாமல், உடனே காசுக்காரார்களின் மேசைகளையும் விற்பனைக்காரார்களின் ஆசனங்களையும் கவிழ்த்துப்போட்டார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (மாற்.11:15-16).

வசனம் 13:9

பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன்.

தொபியாவின் தட்டுமுட்டுகளை வீசியெறிந்ததுடன் நெகேமியா விட்டுவிடவில்லை. அந்த அறை வீடுகளை சுத்திகரிக்கச் சொல்லி உத்தரவிட்டான். தொபியாவைப் பற்றி யாதொரு அடையாளத்தைக்கூட அவன் அங்கு விட்டுவைக்கவில்லை. ஆலயத்தைக் கழுவிச் சுத்திகரித்தான். அதன் பின்பு, நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டபின்பு, தேவனுடைய ஆலயப் பணிமுட்டுகளையும், காணிக்கைகளையும், சாம்பிராணியையும் அங்கே திரும்பக் கொண்டுவந்து வைத்தான். இதைத்தான் நாமும் செய்யவேண்டும். நமது வாழ்க்கையில் உள்ளே நுழைந்துவிட்ட உலகப்பிரகாரமான காரியங்களை நம்மைவிட்டு அகற்றிவிடவேண்டும். அடுத்து தேவனுடைய வசனங்களைப் படிப்பதன்மூலம் நமது அந்தரங்க உள்ளத்தைச் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும் (எபேசி.5:26).

வசனம் 13:10

பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.

மறுபடியும் நெகேமியா ஆலயத்திலே லேவியர்கள், பாடகர்கள் ஆன யாரும் இல்லாததைக் கண்டான். அவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் ஆலயத் திருப்பணியைவிட்டு தங்களின் வயல்களிலே வேலைசெய்யச் சென்று விட்டனர். ஏன்? அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய காணிக்கை வரவுகள் கிடைக்கவில்லை. 12ம் அதிகாரத்தில் நாம் வாசித்த மகிழ்ச்சியும், காணிக்கை செலுத்துதலும் என்ன ஆயிற்று? அது மௌ;ள மௌ;ளக் குறைந்து கடைசியில் ஒன்றும் இல்லை என்ற அளவிற்கு வந்துவிட்டது. வருமானமில்லாததால் அந்த ஆசாரியர்களும் லேவியர்களும் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். ஆலயமும் ஆலயப்பணியாளர்களால் களவாடப்பட்டுவிட்டது.

வசனம் 13:11

அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன்.

நெகேமியா உடனே செயல்ப்பட்டான். தலைவர்களிடம் சென்று தேவனுடைய ஆலயம் புறக்கணிக்கப்பட்டது ஏன்ஸ்ரீ என கேள்வி எழும்பினான். காணிக்கை கொடுக்காமல் போனது 8னங்களே, ஆயினும் நெகேமியா தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. ஜனங்கள், தேவனுக்கு முன்பாகப் பிரமாணங்கள் வாசிக்கப்பட்டபோது, ஆணையிட்டுக்கொடுத்த பிரமாணங்களை அவர்கள் மறந்துவிட்டனர்போலும். தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லை என்ற வாக்குத்தத்தத்தை, அவர்களுக்கு நினைவூட்டி தூண்டியெழுப்ப வேண்டியவர்கள் அந்தத் தலைவர்களன்றோ? அவர்கள் செய்யத் தவறிவிட்டனர். அல்லது லேவியர்களை உற்சாகப்படுத்தவும் தவறிவிட்டனர். அதன் விளைவாகத்தான் தேவனுடைய ஆலயப்பணி தடைப்பட்டது. அந்தத் தலைவர்கள் வந்து அதைச் செய்யும்வரை நெகேமியா காத்திருக்கவில்லை. அப்பணியை லேவியரையும் பாடகரையும் கொண்டு வந்து சேர்க்கும் பணியையும் நெகேமியாவே செய்தான். லேவியரையும் பாடகரையும் அழைத்துவந்து அவரவர் இடத்தில் ஒழுங்குற இருக்கச் செய்தான்.

வசனம் 13:12-13

அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியரில் பெதாவையும், இவர்களுக்குக் கைத்துணையாகத் தனியாவின் குமாரன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன். அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.

யூதர்கள் நடந்தவைகளைப் பார்த்தபோது தங்களின் கடமைகளை உணர ஆரம்பித்தனர். தேவ ஆலயத்தின் பொக்கிஷ அறைகளிலே தானியம் திராட்சைரசம், எண்ணெய் ஆகியவைகளின் தசமபாகம், காணிக்கைகளாகக் கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டது. இந்தக் காணிக்கை செலுத்தும் வேலை தொடர்ந்து ஒழுங்காக நடைபெறத்தக்கதான நடவடிக்கைகளையெடுக்க நெகேமியா திட்டம் வகுத்தான். அந்தப் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக இருக்க நான்கு பேரை நெகேமியா நியமித்தான். அவர்களின் முக்கிய வேலைகளில் ஒன்று இந்தக் காணிக்கைகளின் அவரவர் பங்கினை அவரவர்களுக்கு ஒழுங்காகச் சேர்ப்பித்தலாகும். அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். எவ்வளவு உன்னதமான ஒரு நம்பிக்கை. உண்மையுள்ளவர்கள் எனப்படுவது ஒரு நாளுக்கோ அல்லது ஓராண்டு காலத்திற்கோ மட்டும் உரிய தகுதி அல்ல. அது எப்போதும், எக்காலத்திற்கும் ஏற்ற ஓர் உண்மையான தகுதியாகும்.

வசனம் 13:14

என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும்.

மறுபடியும் நெகேமியா ஜெபிக்கிறான். 5ம் அதிகாரம் 19ம் வசனத்தில் உள்ளது போன்றதொரு ஜெபம். அதுபோல இந்த 13ம் அதிகாரத்தில் மூன்று முறை அவன் ஜெபம் செய்துள்ளதை நாம் காண்கிறோம். தேவனே என்னை நினைத்தருளும் – அவனுடைய நன்றியுள்ள அன்பிற்காக நெகேமியா நல்ல பரிசொன்றைக் கேட்டகவில்லை. அவனுடைய வேண்டுதல் எல்லாம் தேவனுடைய ஆலயப் பணிக்காக, அவன் செய்தவைகளுக்காக, தேவனை நோக்கி தேவனே என்னை நினைத்தருளும் என்று வேண்டுகிறான். அதுபோல நாம் எளிமையான வேண்டுதலைச் செய்வோமா?

வசனம் 13:15

அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.

மறுபடியும் நெகேமியா ஒரு ஒழுங்கீனத்தைக் காண்கிறான். யூதாவில் சில ஜனங்கள் ஓய்வுநாளிலே, பிரமாணத்தின் கட்டளையை மீறி வேலைசெய்கிறதை அவன் பார்க்கிறான். சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சைரசம், திராட்சைப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஒய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டு வருகிறதையும் கண்டான். நெகேமியா நேரே அவர்களிடத்தில் சென்று அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டான். இம்மாதிரியான ஒழுங்கீனங்களும் நெகேமியா எருசலேமைவிட்டுச் சென்றிருந்தபோதுதான் ஏற்பட்டிருந்தது. யோவாஸ் இராஜாவின் நாட்களிலும் இதுபோலவே இஸ்ரவேலின் மக்களிடையே நடந்தது. அக்காலத்தில் யோய்தா ஆசாரியனாய்க் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். யோவாஸ் சிறுவனாக இருந்தபோது அவனுக்கு ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து அவனைக் காப்பாற்றி அவனை இராஜாவாக்கி அபிஷேகம் பண்ணினான் ஆசாரியனான அந்த யோய்தா. இராஜாவாக இருந்தபோது, யோவாஸ் சில நல்ல காரியங்களைச் செய்தான். தேவனுடைய ஆலயத்தைச் சீர்படுத்தி பலப்படுத்தினான். ஆலயத்தின் பணிமுட்டுகளையும் மறுபடியும் செய்வித்து ஆலயத்தில் சேர்ப்பித்தான். அப்பொழுது ஜனங்கள் தேவனைத் தொழுது துதித்து, சர்வாங்க தகனபலிகளை இடைவிடாது செலுத்திவந்தனர். யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் இவை செய்யப்பட்டனவென்று வேதம் கூறுகிறது (2.நாளா.24:14). ஆனால் யோவாஸ் இராஜாவாக இருந்த நாளெல்லாம் இது நடைபெறவில்லை. ஏனென்றால் யோய்தா இறந்து, அடக்கம் செய்யப்பட்டுப் போனபின் யோவாஸ் தேவனுடைய ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டுத் தோப்பு விக்கிரகங்களையும், சிலைகளையும் சேவிக்கச் சென்றுவிட்டான். தேவன் கடுங்கோபங்கொண்டு, யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் தேவனுடைய ஆவி இறங்கி, அவர்களைக் கடுமையாய் எச்சரித்து அந்தக் குற்றத்தை வெளிப்படுத்திக் காட்டினார். ஆனால் யோவாஸ் சகரியாவின் வார்த்தையை அசட்டைபண்ணி, சகரியாவைக் கல்லெறிந்து கொல்ல உத்தரவிட்டான். தனது உயிரை பகைஞரிடமிருந்து காப்பாற்றி, இராஜாவாக அபிஷேகம் பண்ணினவன் யோய்தா. அதை மறந்து அவனுடைய மகனை இப்போது கல்லெறிந்துகொல்ல உத்தரவிட்டான். சகரியா கல்லெறிந்து கொல்லப்பட்டான். கர்த்தரை விசுவாசமாய்ப் பின்பற்றும் ஒருவன் கொடுரமான மற்றொருவனால் கொல்லப்படுதல் எவ்வளவு துயரமான செய்தியன்றோ! நாம் தேவனைப் பின்பற்றுவது உறுதியானதுதானா அல்லது நமது நண்பர்கள், குடும்பத்தினருக்காகச் செய்யும் செயலா?

வசனம் 13:16-18

மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள். ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன? உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார். நீங்களோவென்றால் ஓய்வநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன்.

ஒய்வுநாளிலே, மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீயரும் அங்கே இருந்தனர். அதற்காக நெகேமியா நகரத்தில் இருந்த தலைவர்களிடம் சென்று நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கை என்ன? உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா தேவன் உங்கள் மேலும் இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பணினார். நீங்கள் அதையே மறுபடியும் செய்கிறீர்களே என்று கடுமையாகக் கண்டித்துக் கூறினான்.

வசனம் 13:19

ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன்.

அந்தத் தலைவர்கள் ஏதாகிலும் பரிகாரம் செய்வர் என்று நெகேமியா காத்திருக்கவில்லை. அவனே செயல்ப்படத் துவக்கினான். ஒய்வுநாளுக்கு முன்னே, மாலை மயங்கும்போது, எருசலேமின் பட்டண வாசலின் கதவுகளைப் பூட்ட அவன் கட்டளையிட்டான். ஒய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறக்கக்கூடாதென்று அக்கட்டளையிலே கூறினான். அடுத்து அவனுடைய சொந்த வேலைக்காரரை, காவலர்களாகவும் வாசலண்டையிலே நிறுத்தி ஒய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்குப் பார்த்துக்கொள்ளச் செய்தான். யாதொன்றும் நிச்சயமாக இருக்கவேண்டும் என்று திட்டம் பண்ணிக்கொண்டான்.

வசனம் 13:20-21

அதினால் வர்த்தகரும், சகலவித சரக்ககளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள். அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன். அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளிலே வராதிருந்தார்கள்.

ஆனால் சில வர்த்தகர்கள் தங்கள் தவறுகளை விட்டுவிடவில்லை. வெள்ளிக்கிழமை இரவுகளில் எருசலேமின் அலங்கங்களுக்கு வெளியிலே வந்து தங்கியிருக்க முயன்றனர். அவர்கள் அடுத்தநாள் காலையில் கதவுகள் திறக்கப்படும்போது உள் சென்றுவிட எண்ணினர். அவர்களுக்கு நெகேமியாவைப்பற்றித் தெரியாதுபோலும். அவன் நேரே அந்த வர்த்தகர்களிடம் சென்று, நீங்கள் அலங்கத்தண்டையிலே காலைவரை இராத்தங்குகிறதென்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச்செய்தால் உங்கள்மேல் கைபோடுவேன் என்று திடசாட்சியாய் அவர்களைக் கடிந்துகொண்டான். அதுமுதல் அவர்கள் ஒய்வுநாளில் வராதிருந்தார்கள்.

வசனம் 13:22

ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்கவாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக.

அடுத்து நெகேமியா வாசலைக் காக்கும்படி லேவியரை நியமித்தான். அவர்கள் நியமனப்பணி ஒய்வு நாளை ஆசரிக்க துணைசெய்வதேயாகும். முதலில் அவர்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, பின் வாசலைக் காக்கும் பணிக்கு வரும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டான். நாம் தேவனுக்கடுத்த எந்தத் திருப்பணியைச் செய்யும் முன்பும் நம்மை நாமே நன்கு சுத்தம் பண்ணிக்கொண்டு பின் பிற பணிகளைச் செய்வது சாலச்சிறந்தன்றோ? அப்பம் பிட்குதலைப்பற்றி, பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு, பவுல்: அப்போஸ்தலனும் நம்மை நாமே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன் என்று கூறியுள்ளார் அல்லவா? (1.கொரி.11:28)

மறுபடியும் நெகேமியா, தனது ஜெபத்தில் என்னை நினைத்தருளும் என்று வேண்டுகிறான். உமது மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக என்று அவன் கூறி தேவனுடைய கிருபையில் சார்ந்து நிற்கிறான். நெகேமியா தேவனை நன்கு அறிந்தவன்.

வசனம் 13:23-25

அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன். அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது. இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத்தவிர, யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள். அவர்களையும் நான் கடிந்துகொண்டு, அவர்கள்மேல் வரும் சாபத்தைக்கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களைத் தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:

நெகேமியா மற்றொன்றையும் விட்டு வைக்கவில்லை. சில யூதர்கள் அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டு இருந்ததை அவன் கண்டான். அவர்களின் பிள்ளைகள் யூதருடைய மொழியை அறிந்து பேசமுடியவில்லை. அவர்கள் தங்கள் தாய்மொழிகளை வேறுமொழிகளிலேயே பேசினர். நெகேமியா கடுங்கோபங்கொண்டு, அவர்களைக் கடிந்துகொண்டு, அவர்கள்மேல் வரும் சாபத்தைக்கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப்பிய்த்து, அவர்களும் அல்லது அவர்கள் பிள்ளைகளும் ஒருபோதும் அதுபோல் இனிச் செய்யமாட்டோம் என்று அவர்களைத் தேவன்மேல் ஆணையிடப்பண்ணினான்.

வசனம் 13:26-27

இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை. அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான். தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார். அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்கள். நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன்.

இதேபோன்ற குற்றத்தைச் செய்தவர்களிடம் எஸ்றா நடந்து கொண்ட விதம் வேறு. நெகேமியா நடந்து கொண்ட விதம் வேறு. எஸ்றா இது போன்றதொரு செயலைப் பார்த்து அழுதான். அழுது அந்நிய ஜாதியரான மனைவியரை அவர்கள் மணந்துகொண்ட யூதர்கள் ஒதுக்கிவிடவேண்டும் என்று பணித்தான். நெகேமியாவோ கடுங்கோபத்துடன் பாய்ந்து, உரக்கப்பேசி, அவர்களை அடித்து இனி அவ்வாறு செய்வதில்லையென்று ஆணையிடுவித்தான். இது ஏன் ஒரு பெரிய பாவச் செயல் என்றும் நெகேமியா இந்த வசனங்களில் விளக்குகிறான். தேவனாலே சிநேகிக்கப்பட்டவனான சாலோமோன் இராஜா இத்தகைய பெரிய பாவத்தைத்தான் செய்தான். தேவன் எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்திருந்தார். ஞானம், செல்வம், சமாதானம், யாவற்றிலும் அவன் மிகுந்திருந்தான். என்றபோதிலும் அவனை அந்நிய ஜாதியான ஸ்திரீகள் பாவம் செய்யப்பணினார்கள். அவன் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்யாமல் பொல்லாப்பானதைச் செய்தான் (1.இராஜா.11:1-4). தேவன் சாலோமோனை நோக்கி, உன் குமாரனுடைய கையிலிருந்து உனது இராஜ்ய பாரத்தைப் பிடுங்கிக்கொள்வேன் என்று அதனால்த்தான் சொன்னார். இப்போது நெகேமியா யூதர்களைப் பார்த்து சாலோமோன் செய்ததைப்போல நீங்களும் அந்நிய ஜாதியாரான ஸ்திரீகளை விவாகம்பண்ணப்;போகிறீர்களா? என்று கேட்டான். சாலோமோனின் வரலாறு அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்த உதாரணமாகும். நெகேமியா அவர்களை எச்சரித்து அவர்கள் சாலோமோனைப்போலத்தான் இருந்தனர் என்று கூறிய தேவன் எப்போதும் மாறாதவர் என்றும் அவர்கள் செய்த பாவம் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான பாவம் என்றும் விளக்கிக் கூறினான்.

வசனம் 13:28

யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான். ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன்.

இப்போதாவது நெகேமியாவின் பணிமுடிந்துவிட்டதா? அவன் ஓய்வெடுத்துக்கொள்ளக்கூடுமோ? முடியவில்லையே! இப்போது ஒரு பெரிய தவறைக் கண்டான். பிரதான ஆசாரியனான எலிபாசின் பேரனான ஒருவன் சன்பல்லாத்தின் மகளை மணந்துகொண்டு அவனுக்கு மருமகனானான். சன்பல்லாத்தைப்பற்றி 6ம் அதிகாரத்திற்குப் பின் நாம் வாசிக்கவில்லை. அவன் கொடுத்த தொல்லைகளை நிறுத்திவிட்டான் என நாம் நினைத்தால் அது அப்படியல்ல. அவன் கொடுத்த தொல்லைகள் போதாதென்று வேறு வழியிலே இப்போது தொல்லைகொடுக்கத் துவங்கியுள்ளான். சாத்தான் எப்போதும் ஒய்ந்துபோவதில்லை. அவன் ஒரு வழியில் ஜெயிக்க முடியாவிட்டால் வேறுவழியில் தன் கைiயை ஓங்குவான். இங்கு சன்பல்லாத்தும் தொபியாவைப்போலவே ஆசாரியப்பணியின்மூலம் தனது தீயகரங்களை நீட்ட முற்படுகிறான். அவனுடைய மகள் எலியாசீபின் பேரனை மணந்துகொண்டாள். இது சத்துருக்களுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியே. முதலில் தொபியா எலியாசீபின் மூலம் தேவாலயத்தில் ஓர் அறையைப் பெற்றான். இப்போது சன்பல்லாத்து, திருமணஉறவினால் அவனோடு சம்பந்தம் ஏற்படுத்திக்கொண்டான். சன்பல்லாத்தும், தொபியா ஆகிய இருவருமே தேவாலயத்தின் உள்விவகாரத்தில் மிக்க ஆதீனம் செலுத்தும் தகைமையைப் பெற்றுவிட்டனர். சன்பல்லாத்திற்குப் பெருமகிழ்ச்சியன்றோ? இல்லை. இல்லை நெடுநாளைக்கு அல்ல. நெகேமியா விடவில்லை. எலியாசிபின் பேரன் செய்த குற்றத்திற்காக நெகேமியா அவனை எருசலேமைவிட்டே துரத்தினான்.

நெகேமியாவின் வேகம், விவேகம், இவைகளைப் பார்க்கும்போது, அவன் வயது சென்றவனாக இருந்தும் தேவனுடைய காரியங்களைச் செய்ய அவனுக்குள்ள திறனைப் பாராட்டவேண்டியுள்ளது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், மனம் தோய்ந்து, தன் கரங்களை அவன் சாய்க்கவில்லை. அல்லது நான் என்ன செய்யுமுடியும் ? என்று எப்போதும் கூறியதுமில்லை. அந்தக் காரியத்தையும் மற்றோர்வசம் விட்டதுமில்லை. எப்போதும் சுறுசுறுப்பாகவே துணிந்து செயலாற்றி வந்துள்ளான். அவன் திரும்பி எருசலேமுக்கு வந்தபின், அந்தக் குறுகிய காலத்தில் எத்தனை முக்கிய அலுவல்களை அவன் செய்துள்ளான்.

தொபியாவின் தட்டுமுட்டுகளை அந்த அறையைவிட்டு வீசியெறிந்து, அந்த அறையைச் சுத்தம் செய்வித்தான்.

லேவியர்களை அவர்களின் பணிகளில் மறுபடியும் கொண்டுவந்து அமர்த்தி தசமபாக காணிக்கைகள் ஒழுங்காகச் செலுத்தப்படும்படி செய்தான்.

பொக்கிஷ பாதுகாவலர்களை முறைப்படி நியமித்தான்.

ஒய்வுநாளில் நடைபெறும் வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்தச்செய்தான்.

வாயிற்கதவுகளை அடைக்கச் செய்தான்.

வாசலில் காத்திருக்க முயன்ற வர்த்தகர்களை எச்சரித்து விரட்டியடித்தான்.

வசனம் 13:29-30

என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும். இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,

மேற்கூறிய அனைத்துக் காரியங்களையும் பார்க்குமிடத்து அவைகளில் ஏதேனும் ஒன்றுமட்மேயானாலும் ஒரு பெரிய சாதனையாகவே கருதமுடியும். ஆனால் நெகேமியாவோ சுற்றிச்சுழன்று, அவன்தானே இவை அனைத்துக் காரியங்களையும் வெற்றியுடன் செய்துமுடித்தான். தனக்குக் களைப்பாக உள்ளதென்றோ, அல்லது கடினமென்றோ எதையும் குறித்து முறுமுறுக்கவில்லை. அவனுடைய அக்கறையெல்லாம், தான் ஓர் ஆசாரியானாக பணியாற்றவேண்டுமே என்பதும் தேவனாகிய கர்த்தரோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றவேண்டுமே என்பதுமேயாகும். அவனுடைய எண்ணம் எல்லாம் தேவனுடைய ஆலயத்தைப்பற்றியதாகவேயிருந்தது. அதனைச் சிதைக்க வேறெந்த எண்ணமும் அவனில் இல்லை. ஆகையால் ஜனங்களையும் லேவியரையும் ஆசாரியரையும் அவன் தூய்மைப்படுத்த அவரவர் கடமைகளை அவரவர் நன்கு உணரும்படி செய்துவிட்டான்.

வசனம் 13:31

குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

அவனுடைய கடைசிப்பணி விறகுகாணிக்கை. அது குறிக்கப்பட்ட காலத்தில் செலுத்தப்பட அவன் திட்டம் பண்ணினான். அதுமட்டுமின்றி ஜனங்கள் செலுத்தவேண்டிய முதற்பலன்களான காணிக்கைகளும் செலுத்தப்பட திட்டம்பண்ணினான். அவைகள் ஒழுங்காகக் கொண்டுவரப்பட திட்டம்பண்ணினான். நெகேமியாவிற்கு ஒழுங்கு திட்டத்தில் அதிக அக்கறையுண்டு. தேவனும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படவேண்டுமென்று விரும்புகிறார். நாமும், அவ்வாறே செய்யவேண்டும். வேதமும் அவ்வாறே கூறுகிறது. சகலமும் நல்லொழுக்கமும் கிரமமாயும் செய்யப்படக்கடவது (1.கொரி.14:10).

நெகேமியாவின் கடைசி வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளபடி தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும் என்பதாகும். கர்த்தர் சொல்லியுள்ளபடி கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது (1.கொரி.15:58). ஆதலால் நெகேமியாவின் பிரயாசங்கள் விருதாவாயிராபடி தேவன் அவனுடைய வேண்டுதலை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார்.

எஸ்றா, நெகேமியா ஆகிய இருவருமே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற தங்கள், தங்களின் வெவ்வேறான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். தேவனுடைய சித்தத்தை வெளிப்படுத்திக் காட்டி இருவரும் செயல்ப்பட்டனர். அர்களின் தேவ திருப்பணிக்கான தெய்வீக வாழ்க்கை நமக்கு பயனுள்ள ஆன்மீக படிப்பினையன்றோ!

தேவனே எனக்கு நன்மையுண்டாக, என்னை நினைத்தருளும், ஆமென்.

31.03.2004

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. பொருளடக்கம்

00. பொருளடக்கம்

00. பொருளடக்கம்

01. இராஜாவின் விருந்து

Recommended

Song 056 – Yutha Raja

00. பொருளடக்கம்

00. பொருளடக்கம்

Song 154 – Enniladanga

0. பாக்கியவான்கள் யார்?

1. முதலாம் பேறு

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.