இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
(லூக்.19:5)
(ஊ.ர். ளுpரசபநழn)
ணயஉhயநரள
நம்மில் அநேகர் கிருபையின் கொள்கைகளை அநேகமுறை கற்றிருக்கிறோம். ஆனால் இந்தக் கொள்கைகளைப் புதிய கிறிஸ்தவர்கள் அறிவினால் நன்கு புரிந்துகொண்டு இருதயத்தில் நேசிக்கும்படியாக மறுபடியும் மறுபடியும் அவற்றைக் கற்றுக்கொடுக்கவேண்டும்.
பலிதமாகும் அழைப்பு என்ற கொள்கையின் போதகத்தைப் புதிய மற்றும் இளைய கிறிஸ்தவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஒருவனுக்கு கடவுளின் அழைப்பு வரும்போது அதற்குக் கீழ்ப்படிந்து கடவுளிடத்தில் வருவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாதபடி ஒருவனதுள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறார் என்பதே போதனையின் கருத்து.
பலிக்கும் அழைப்பு என்பதை விரிவாக விளக்க சகேயுவின் சரித்திரத்தைப் பயன்படுத்துகிறேன். இயேசுவானவர் மக்கள் மத்தியில் மகத்தானவற்றைச் செய்கிறார் என்று சகேயு கேள்விப்பட்டிருந்தான். ஆகையால் சகேயு இயேசுவானவரைக் கண்ணாரக் காண விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒரு சிக்கல். அவன் ஒரு குள்ளன். என்ன செய்வது? ஒரு யோசனை. ஒரு மரத்தின்மேலேறி ஒரு கிளையில் உட்கார்ந்தால் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா?
இயேசுவைக் கூர்ந்து பார்க்க விரும்பினான். ஏனென்றால் இயேசுவானவர் சிறப்பான உடை ஏதும் அணியவில்லை. சாதாரணமாக மக்கள் அணியும் ஆடையே அணிந்திருந்தார்.
அவ்வாறு மரத்தின்மேல் உட்கார்ந்திருக்கையில் அவன் பெரிய அதிர்ச்சியடைந்தான். கிறிஸ்து அவனைக் கண்டு மரத்தடியில் நின்று, சகேயுவே சீக்கிரம் இறங்கி வா, இன்று நான் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று கூப்பிட்டார். சகேயு என்ன செய்யமுடியும். ஒரு காரியம்தான் அவனால் செய்ய முடியும். சகேயு கீழே இறங்கி வந்து வீட்டிற்குச் சென்றிருப்பான். கிறிஸ்துவானவர் அவன் வீட்டிற்கு வந்தபோது சகேயு அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். (லூக்.19:6). கடவுளின் பலிதமாகும் அழைப்புக்குக் கீழ்ப்படிந்தான். அவன் கிறிஸ்துவின்மீது விசுவாசியாகி தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசித்தான்.
1) இந்த பலிதமாகும் அழைப்பு, தேவகிருபைக்கு ஓர் எடுத்துக்காட்டாயிருக்கிறது. ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதைப் பொறுத்தல்ல. சகேயு நல்ல மனிதன் அல்ல. அவன் எரிகோவில் வாழ்ந்தான். எரிகோ கடவுளால் சபிக்கப்பட்ட ஒரு பொல்லாத நகரம். சகேயு மக்களிடமிருந்த வரி வசூலிப்பவன். பல சமயங்களில் அநியாயமாக வசூலித்தான். ஆகவே அவன் வேலையும்கூட தீமையாயிருந்தது. ஆயக்காரார் எப்போதும் அந்த அதிகப்படியான பணத்தைக்கொண்டு செல்வந்தர் ஆனார்கள். மக்கள் ஆயக்காரார்களை வெறுத்தார்கள். சகேயுவையும் வெறுத்து பகைத்தார்கள்.
கிறிஸ்துவானவர் சகேயுவின் வீட்டிற்குள் வந்தவுடன் ஒரு பாவியான மனிதன் வீட்டிற்கு விருந்தாளியாகப் போகிறார் என்று மக்கள் சொன்னார்கள் (லூக்.19:7). சகேயுவின் வீட்டைத் தவிர வேறு யார் வீட்டிற்கும் இயேசுவானவர் போயிருக்கலாம் என்றனர். ஆனால் கடவுள் மனிதன் நினைப்பதுபோன்று நினைப்பதில்லை. கடவுளது கிருபையும் இரக்கமும் மரத்தின் மேலிருந்து சகேயுவை நோக்கிப் பார்த்து கீழே வரும்படி செய்தது. கடவுள் தாம் தெரிந்துகொண்டவர்களேயே அழைக்கிறார். அவர்கள் அவரைவிட்டு வெகுதூரம் போயிருக்கலாம். கடவுளைப்பற்றியே நினைக்காமலிருக்கலாம். அல்லது சகேயுவைப்போன்ற ஆவலுடையவர்களாயிருக்கலாம். கடவுள் அழைக்கும் மக்களின் உள்ளத்தில் பரிசுத்தஆவியானவர் வல்லமையாய்க் கிரியை செய்கிறார். தேவகிரியை நடைபெறும்பொழுது சகேயுவைப் போன்ற ஒவ்வொரு மனிதனும் தேவஅழைப்புக்குகக் கீழ்ப்படிகிறான். சகேயுவின் சரிதை கடவுளின் பலிதமாகும் அழைப்புக்கு நல்லதோர் உதாரணம்.
2) இது ஒரு தனிப்பட்ட அழைப்பு: கிறிஸ்துவானவர் சகேயுவைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த மரத்தின்மேல் அநேகர் இருந்திருக்கலாம். ஆனால் கிறிஸ்துவானவர் சகேயுவை மட்டுமே அழைத்தார். சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா என்றார்.
வேதாகமத்தில் அநேகவிதமான அழைப்புகளுண்டு. அழைக்கப்பட்டவர்கள் அநேகர். தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்று வாசிக்கிறோம் (மத்.20:16). இது சுவிசேஷத்தைக் கேட்போருக்குள்ள பொதுவான அழைப்பாகும். இந்த அழைப்புக்கு இணங்கும் சக்தி மனிதனுக்கில்லை. ஆனால் தனிப்பட்ட அழைப்பு வலிமையும் பலிக்கும் அழைப்பாகும். தாம் பேர்சொல்லி அழைக்கும் ஒருவனதுள்ளத்தில் கடவுள் கிரியை செய்கிறார். அவர்கள் கேட்டு இணங்குவார்கள். கடவுளின் அழைப்பை ஏற்று அவரைப் பின் செல்லுவார்கள்.
பலிதமாகும் அழைப்பிற்கான உதாரணங்களை வேதத்தில் பார்ப்போம். இயேசுவானவர் மரியாளே என்றார். அவள் திரும்பி: போதகரே என்றாள். இயேசுவானவர் பேதுருவையும் யோவானையும் கடலருகே கண்டார். என் பின்னே வாருங்கள் என்றும் (மத்.4:19) மத்தேயு வரி வசூலிக்கையில் அவர் அவனிடம் எனக்குப் பின் சென்றுவா என்று அழைத்தார் (மத்.9:9). பரிசுத்த ஆவியானவர் மரியாள், பேதுரு, யோவான், மத்தேயு என்போரின் இருதயங்களில் கிரியை செய்தார். அவர்களால் கடவுளது அழைப்பைத் தடுத்து எதிர்க் முடியவில்லை. ஏனென்றால் அது ஒரு வல்லமை பொருந்தி அழைப்பு. சகேயுவைப்போல அவர்களும் இயேசுவின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து பின்சென்றார்கள். கடவுள் இவ்விதம் உம்மை அழைத்தார் என்பதையும் அதற்கு நீர் முழுஇருதயத்தோடும் என் ஆண்டவரே, என் தேவனே (யோ.22:28) என்று பதிலுரைத்து அவருக்கு உம்மை அர்ப்பணித்த நிகழ்ச்சியையும் நினைவுகூரமுடியுமா?
- இது ஓர் அவசர அழைப்பு: சகேயுவே, நீ நீக்கரமாய் இறங்கி வா. பாவி ஒரு வல்லமையான பிரசங்கத்தைக் கேட்கலாம். மனந்திரும்பி சுவிசேஷத்தை நம்பும்படியான அழைப்பைப் பெறலாம். ஆனால் பாவி நாளைக்கு நான் கிறிஸ்துவிடம் வருவேன் என்று சொல்லி செல்லலாம். கிறிஸ்துவிடம் வரும் முன்னதாக அவன் இன்றைக்கு தான் விரும்பும் அனைத்தையும் அனுபவிக்கலாம். நாளைக்கு என்ற பதம் சாத்தானுடையது. கடவுளுடைய வார்த்தையோ இன்றைக்கு என்பதே. மனிதனுக்கு வரும் தேவஅழைப்பு மனந்திரும்பு என்பதே. கடவுள் உம்மை அழைத்தால் இன்றைக்கு என்பது உமது வார்த்தையுமாகிவிடும். நாளைவரை காத்திருக்க முடியாது என்றே சொல்லுவீர். நீர் இன்றே வரவேண்டும். கிறிஸ்துவானவர் சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா என்றார். அவ்வாறே உம்மிடத்தில் சொல்லுகிறார். சீக்கிரமாய் இப்பொழுதே என்னிடம் வா.
- இது தாழ்மைப்படுத்தும் அழைப்பு: சகேயுவே, நீ சீக்கரமாய் இறங்கி வா. கீழே வருவது வேதனையான அனுபவம். நமது நற்கிரியைகள் நம்மை இரட்சிக்கும் என்று எண்ணுவதிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். நாம் கீழ்ப்படியாத பாவிகள் என்று உணரும்வரை கீழே இறங்கவேண்டும். அதன்பின் அதற்கும் கீழே வரவேண்டும். என்னை இரட்சித்துக்கொள்ள என்றால் எதுவும் செய்ய இயலாது என்ற நம்பிக்கையற்ற நிர்ப்பந்த நிலையில் கடவுளை நோக்கி கதறும்வரை தாழ்த்தவேண்டும். கடவுள் நம்மைத் தாழ்த்தும்போது பின்னர் அவர் நம்மை உயர்த்துவார். பலவான்களை ஆசனத்திலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார் (லூக்.1:52).
- இது ஓர் அன்பின் அழைப்பு: கிறிஸ்து சகேயுவைப் பார்த்து இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். சகேயுவின் வீட்டிற்கு அநேகர் போயிருப்பார்கள். அவன் அவர்களைக் கொள்ளயடித்தான். அவர்களிடத்தில் அன்பற்று நடந்திருப்பான். இத்தகைய பொல்லாதவன் வீட்டிற்கு இயேசுவானவர் ஏன் போகவிரும்பினார் என்று மக்கள் கேட்டனர். அப்படித்தான் போனாலும் ஏன் மத்தியான வேளையில் எல்லாரும் பார்க்கும்போது போகவேண்டும்? ஏன் இரவில் யாரும் அறியாத வேளையில் போயிருக்கக்கூடாது?
கிறிஸ்துவானவர் வீட்டிற்கு வெளியே நின்று தமதன்பைக் காட்டாமல், நடுப்பகலில் எல்லாரும் பார்க்கும்படியாக வீட்டின் உள்ளே சென்று அவரது அன்பை சகேயுவிடம் காட்டினார். கிறிஸ்துவானவர் மிகவும் அன்பு கூருகிறவர். அவர் உமது வீட்டிற்கும் வருவார். சகேயுவின் வீட்டைப்போன்று பொல்லாத வீடாயிருந்தாலும் வருவார். அவர் சகேயுவிடம் சொன்னதுபோல, உம்மிடம், நீ சீக்கிரமாய் இறங்கி வா , இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்று சொல்லவார்.
- இது ஒரு நிலைத்திருக்கும் அன்பு: அது ஒருபோதும் மாறாமல் நிலைத்திருக்கும். எல்லாருக்கும் விடுக்கப்படும் சுவிசேஷ அழைப்பு ஒன்றுண்டு. அது உண்மையாய் இருந்தாலும் அது பொதுவான அழைப்பே. அந்த அழைப்பைக் கேட்கும் உள்ளத்தில் பரிசுத்தஆவியானவர் கிரியை செய்யாவிட்டால் அவனது இயேசு கிறிஸ்துவைப் பற்றும் ஆசை குறைந்து மறைந்துவிடும். ஆனால் கிறிஸ்துவின் இரட்சிக்கும் அழைப்பு நிலைத்திருக்கும் அழைப்பு. அது ஒழிந்துபோகாது.
கிறிஸ்து உமது வீட்டிற்கு உம்மோடு உணவருந்த வருகிறார். கொஞ்ச நேரமிருந்துவிட்டுப் போய்விடும் விருந்தாளியைப் போன்றவர் அல்ல. தமது பரிசுத்த ஆவியானவரின் மூலம் இயேசுவானவர் உமது இதயத்தில் கிரியை செய்வதால் அவர் அங்கு தங்குவார். அவர் போகவே மாட்டார். கிறிஸ்துவானவர் வல்லமையுடன் சீக்கரமாய் இறங்கிவா. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று உம்மிடம் சொல்லுகிறார்.
- இது ஓர் அவசியமான அழைப்பு: கீழ்ப்படிய வேண்டிய ஓர் அழைப்பு. சகேயுவே, சீக்கிரமாய் இறங்கி வா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும். மறுபடியும் படியுங்கள். சகேயுவுக்கு உண்டான கடவுளின் அழைப்பு உண்மையிலேயே ஒரு கட்டளையாகும். அவன் மரத்திலிருந்து கீழே இறங்கியாகவேண்டும், ஏனென்றால் கிறிஸ்துவானவர் அவன் வீட்டில் தங்கவேண்டும். அவ்வாறு அவர் சிலுவையில் மாண்டபோது கிறிஸ்துவினால் கிரயத்திற்கு வாங்கப்பட்ட எல்லாப் பாவிகளும் இரட்சிக்கப்பட்டாக வேண்டும். அவர்களது இரட்சிப்பு கிறிஸ்துவால் வாங்கப்பட்டு கடவுளால் வாக்குக்கொடுக்கப்பட்டது. கடவுளின் பிள்ளை இரட்சிக்கப்பட்டாக வேண்டும். அவன் கடவுளது பலிதமாகும் அழைப்பைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிகிறான்.
சிலர் தாங்கள் ஒருபோதும் கிறிஸ்தவர்களாக மாட்டடோம் என்கிறார்கள். அவர்களிடம் கிறிஸ்துவானவர் இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று சொன்னால் அவர்கள் சகேயு செய்ததுபோல சந்தோஷமாக இயேசுவானவரே வரவேற்க மாட்டோம் என்பார்கள். ஆனால் கடவுள் அவர்களை மாற்றி மறுபடியும் அழைக்கும் போது அவர்கள் அந்த அழைப்பை எதிர்க்கச் சக்தியற்று இருப்பர். எதிர்க்கவும் விரும்பமாட்டார். அவர்கள் மனமுவந்து கீழ்ப்படிந்து கிறிஸ்துவைச் சந்தோஷமாக வீட்டில் ஏற்றுக்கொள்ளுவார்கள். இரட்சிக்கப்படுவார்கள். கடவுளின் இரக்கம் சந்திக்கக் கூடாதபடி யாருமே அவ்வளவு பொல்லாதவனாயும் தூரமாயில்லை. கடவுள் இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்று சொன்னால் நிச்சயம் தங்குவார். உங்ளில் அநேகர் சுவிசேஷத்தை நீண்ட காலம் எதிர்த்து வருகிறீர்கள். இன்றைக்கு எதிர்க்க முடியாது. பாவியே, நீ என்னைப் பார்த்து சிரித்தாய், என்னை வெளியே தள்ளப் பார்த்தாய், ஆனால் இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்லும் குரலை இன்று கேட்கிறாய்.
- இது மனிதனின் வாழ்க்கையை மாற்றும் அழைப்பு: சகேயுவின் வாழ்க்கை மாறியதிலிருந்து கிறிஸ்துவின் அழைப்பு ஒரு பலிதமாகும் அழைப்பு என்று அறிந்துகொள்கிறோம். சகேயு முற்றிலுமாக மாற்றப்பட்ட மனிதனானான். இயேசுவானவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று உணவு கொடுத்தான். தேவஆவியானவர் அவனுள்ளத்தில் கிரியை செய்தார். தான் பாவியென்று அறிந்தான். கிறிஸ்துவைத் தனது இரட்சிப்பிற்காக நம்பினான். தனது பாவங்கள் மன்னிக்கப் பெற்றான். விடுதலையும் சந்தோஷமுள்ளவனானான். கிறிஸ்துவுக்குள் சகேயுவும் புதிய மனிதன் ஆனான். தன் வாழ்வில் தவறானவற்றையெல்லாம் சரிசெய்தான். அவன் ஆண்டவரே, என் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு இப்பொழுதே கொடுக்கிறேன். நான் ஒருவனிடம் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். ஆயக்காரனாக அவன் மக்களிடமிருந்து திருடியவற்றிற்கு மேலாகத் திரும்பிக்கொடுத்தான். ஏழையாகிவிட்டாலும் பரவாயில்லை, மரத்திலேறுவதற்கு முன்பிருந்த சொத்துகளைவிடப் பெரிதான பரலோக செல்வத்தைப் பெற்றான். ஒரு பாவியின் வாழ்க்கை மாறும்போது கடவள் பலிதமாகும் அழைப்பினால் அவனை அழைத்துள்ளார் என அறிகிறோம். குடிகாரன் இனி குடிக்கமாட்டான். அதற்குப் பதிலாக அவன் ஜெபிப்பான். திருடன் தான் திருடினதைக் கொடுப்பான்.
ஒரு மனிதனது வாழ்க்கை மாறினதை நாம் பார்க்கும்வரை அவனை அழைத்தது கடவுளின் பலிதமாகும் அழைப்பு என்று அறிய முடியாது. மக்கள் சகேயுவின் வாழ்க்கையில் இம்மாறுதலைப் பார்த்தார்கள். ஒரு பாவியின் வீட்டிற்கு விருந்தினராக கிறிஸ்து போகிறார் என்று மக்கள் சொன்னார்கள். அவன் தனது வாழ்க்கையில் தவறானவற்றை சரி செய்வதை அவர்கள் கண்டனர். இந்த மாறுதல் மெய்யானது என்றும் அறிந்தனர். கடவுள் சகேயுவைப் பலிக்கும் அழைப்பினால் அழைத்தார் என்று நிச்சயித்தனர். இயேசுவானவர் சகேயுவிடம் இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார் (லூக்.19:9-10). சகேயு காணாமற்போயிருந்தான். கடவுளின் பலிதமாகும் அழைப்பு அவனுக்கு வந்தது. கடவுள் சகேயுவைக் கண்டு பிடித்தார்.
சகேயுவின் சரிதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஓரிரண்டு பாடங்களுள்ளன. பெருமையுடையவர்கள் தங்களைத் தாழ்த்தவேண்டும். தாழ்த்தப்பட்டவரிடம் தான் தேவ கிருபை வளர்கிறது. தாங்கள் ஒருபோதும் கிறிஸ்துவிடம் வரமுடியாது என்றுணர்பவர்களே நம்பிக்கையூட்டப்படுகின்றனர். நான் இப்போது பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போதே கடவுள் ஆயத்தம்பண்ணின இருதயங்கள் அதை ஏற்றுக்கொள்ளும். கர்த்தராகிய இயேசுவின் அன்பும் இரக்கமும் அவர்களை இழுக்கும். அவர்களே வன்மையான பலிக்கும் அழைப்பைப் பெற்றவர்கள். அவர்கள் தங்களது முழு இருதயத்தோடும் அவரைப் பின்பற்றுவார்கள்.
நீங்கள் ஏதோ ஒரு வாஞ்சையோடு கேட்க வந்திருந்தாலும் பரவாயில்லை. வாஞ்சைதான் சகேயுவை மரத்தின்மேல் ஏறச்செய்தது. ஆயினும் கடவுள் உன்னைச் சந்திக்க முடியும். நீ உன்னைத் தாழ்த்த வேண்டும் என்று கிறிஸ்து சொல்லுகிறார். அவரிடம் உன் பாவங்களை அறிக்கையிடவேண்டும். அவர் உன்னை இரட்சிக்கும்படி தமது கரத்தை நீட்ட அவர் உன்னிடம் வராவிட்டால் நீ அழிவாய் என்று அவரிடம் சொல்லவேண்டும். அவர் உன்னை முதலாவது பார்த்ததினால்தான் நீ அவரை நோக்கிப் பார்க்கிறாய். அவரே இரட்சிக்கப்பட விரும்பும்படி செய்கிறார். நீயாகவே அதனை விரும்பியிருக்கமாட்டாய். உன்னை மனந்திரும்புதலிலும் விசுவாசத்திலும் தம்மிடம் கொண்டு வரும் வல்ல பலிதமாகும் அழைப்புடன் உன்னை அழைக்கிறார் என்று நிச்சயமாயத் தெரிந்து கொள்வாய்.
சகேயுவிடம் சொன்னதுபோல் கர்த்தர் உன்னிடம் சீக்கிரமாய் இறங்கிவா. இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்று சொல்லுகிறாரா?













