கிறிஸ்தியானும் இளகிய நெஞ்சனும் பேசியவாறே அந்கச் சமவெளியில் நடந்து செல்வதை என் கனவில் கண்டேன்.
இளகிய நெஞ்சனே நல்லதுதான் நீ என்னுடனே வந்தாய். நாம் போகும் இடத்தை அடைய முடியாவிட்டால் நமக்குக் கிடைக்கப் போகும் நரக தண்டனையைப் பற்றி அறிந்திருந்தால் கடின நெஞ்சன் இப்வாறு திரும்பிப் போயிருக்கமாட்டான். பாவம்! என்றான் கிறிஸ்தியான்.
அது இருக்கட்டும். நாம் போகிற இடத்திலுள்ள நித்திய மகிழ்ச்சியைப்பற்றி எனக்குக்கொஞ்சம் சொல்லமாட்டாயா? என்று ஆவலுடன் கேட்டான் இளகியநெஞ்சன். நான் சொல்லுவதைவிட அந்த மகிழ்ச்சியை அனுபவித்து உணர்வதே மேலானாதாக இருக்கும். என்றாலும் இந்தப் புத்தகம் அதைப் பற்றிக் கூறும் சில வசனங்களை வாசிக்கட்டுமா? என்றான் கிறிஸ்தியான்.
அது சரி இந்தப் புத்தகத்தில் உள்ள வசனங்கள் எல்லாம் உண்மையானவை என்று உனக்குத் தெரியுமா? என்று சந்தேகத்தோடு கேட்டான் இளகிய நெஞ்சன். நிச்சயமாக! ஏனென்றால் பொய்யே கூறாத ஒருவரால் எழுதப்பட்டு புத்தகம் இது என்றான் கிறிஸ்தியான். அப்படியா? அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? நாம் நித்திய காலமாக சாகாமல் வாழக்கூடிய நித்திய ராஐ;யம் ஒன்று இருக்கிறது என்று இந்தப் புத்தகம் கூறுகிறது. அந்த இடம்தான் மோட்சம். மோட்சத்தை நோக்கிதான் இப்போது பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்றான் கிறிஸ்தியான். ரொம்பவும் மகிழ்ச்சி! மோட்சம் எப்படி இருக்கும்? என்று ஆவலாகக் கேட்டான் இளகியநெஞ்சன்.
அங்கே நாம் அணிந்துகொள்ள மகிமையின் கிரீடம் கொடுக்கப்படும். நமது உடைகள் சூரியனைப்போல் பிரகாசமாக இருக்கும். அங்கே அழுகையும,; கவலையும் கிடையவே கிடையாது. ஆண்டவரே நமது கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி 21:4) என்றான் கிறிஸ்தியான். நம்முடனே வேறு யார் அங்கே இருப்பார்கள்? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.
ஒளிவீசும் தேவ தூதர்கள் அங்கே இருப்பார்கள். நமக்கு முன்பாக அங்கே போயிருக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே இருப்பார்கள். அவர்களில்அநேகர் ஆண்டவர்மீதுள்ள அன்பினாலும், அவருக்குக் கீழ்ப்படிந்ததின் நிமித்தமாகவும் அநேக துன்பத்தை அடைந்திருக்கிறார்கள். சிலர் வாளால் வெட்டுப்பட்டிருக்கிறார்கள். சிலர்நெருப்பில் சுட்டெரிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் காட்டு மிருகங்களுக்கு இரையாகப்போடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களோ இன்று நித்திய வாழ்வு பெற்று மோட்சத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றான் கிறிஸ்தியான். நாமும் அந்த மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டான் இளகிய நெஞ்சன்.
இந்தப் புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று சொல்லட்டுமா? நாம் ஆண்டவரை நோக்கி விருப்பத்தோடு கேட்டால் அவர் இவற்றை நமக்கு இலவசமாகத் தருவாராம் என்றான் கிறிஸ்தியான். அப்படியா? ரொம்பவும் மகிழ்ச்சி. வா, சீக்கிரமாகவே நாம் அங்கே போகலாம் என்று துரிதப்படுத்தினான். பொறு, பொறு. என் முதுகில் இருக்கிறதே பெரிய சுமை! என்னால் வேகமாக நடக்க முடியவில்லை என்று பரிதாபத்துடன் கூறிய கிறிஸ்தியான் அவன் பின்னே தள்ளாடியபடியே நடந்தான்.









