நட
நடப்பதிலல்ல உட்காருதலிலே கிறிஸ்தவ அனுபவம் துவங்குகிறதென்பதைத் தெளிவாக்க முயன்றோம். தேவ ஒழுங்காகிய இந்த முறையை நாம் மாற்ற முயல்வது கேட்டை விளைவிக்கிறது. கர்த்தராகிய இயேசு நமக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தார். இப்பொழுது நாம் செய்யவேண்டியது, நம்பிக்கையுடன் அவர்மேல் சார்வதே. சுயபலத்தினால் எதையேனும் செய்ய நாம் இறங்குவோமானால், கடந்து செல்லமுடியாத பெரிய தடுப்புச் சுவருக்குமுன் நிற்கிறவர்களாவோம். ஆண்டவரை நம்பி, அவரைச் சார்கிறதினால் மட்டுமே, அவர் பலத்தினால் நாம் கொண்டு போகப்படுவதைக் காண்போம். உண்மையான ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாம் இயேசுவுக்குள் மனநிம்மதி அடைவதினால் தான் உற்பத்தியாகின்றன என்பதை நாம் மிதமிஞ்சிய வகையாக வலியுறுத்தக்கூடுமோ?
ஆனால் இதோடு அது முடிவடைகிறதில்லை. கிறிஸ்தவ அனுபவத்தின் ஆரம்பம் உட்காருதலேயானாலும், உட்காருதலுக்கடுத்ததாக நடத்தலே எப்பொழுதும் தொடருகிறதாயிருக்கிறது. மெய்யாகவே உட்கார்ந்து, அதனாலுண்டாகும் பலத்தைப் பெற்றுக்கொண்டிருந்தோமானால், அதுவே நாம் உண்மையில் நடக்கத் துவங்கினதாம். உன்னதங்களில் கிறிஸ்துவுடனேகூட நமக்குள்ள நிலையை உட்காருதல் விவரிக்கிறது. நடப்பதென்பதோ, இவ்வுலகில் அனுபவ செயல்களாக உருவாகும் அப்பரலோக மேன்மையின் வெளிப்பாடுகளாம். நாம் பரலோகத்திற்குரிய ஜனமாயிருப்பதால் இந்தப் பூலோக வாழ்வில் அந்த உன்னதத்திற்கேற்ற நடக்கையுள்ளவர்களாயிருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் பல புதிய பிரச்சனைகள் எழும்புகின்றன. அப்படியானால் இதை குறித்து எபேசியர் நிருபம் சொல்லுகிறதென்ன? அது நமக்கு இரண்டு காரியங்களை வற்புறுத்துகிறதாகக் காண்கிறோம். அவைகளில் முதல் காரியத்தைப்பற்றி இப்பொழுது கவனிப்போம்.
ஆதலால், கர்த்தர் நிமித்தம் கண்டுண்டவனாகிய நான், உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில் நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும், சாந்தமும்…… உடையவர்களாய் ஜாக்கிரதையாயிருங்கள் (4:1-3).
ஆதலால் கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்ற புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருந்து… உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாயிருங்கள் (4:17-23).
கிறிஸ்து நமக்காகத் தம்மைப்…. பலியாக ஒப்புக்கொடுத்து, நம்மில் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள் (5:2).
கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்து… வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள் (5:10,8).
நட என்ற பதம் எபேசியரில் எட்டு முறை வருகிறது. நடந்தேகுதல் என்பதே உட்கருத்து. இங்கே செவ்வைபண்ணுவது என்று பொருள்படும். இது கிறிஸ்தவ வாழ்க்கையின் இலட்சணங்கள் என்ற பொருளைக் காட்டுகிறது. இந்நிருபத்தின் இரண்டாம் பகுதியில் அதிகமாகப் பேசப்படுவது இதுவே. நல்நடக்கையின் தேர்ச்சி, நமக்கும் அடுத்தவனுக்குமுள்ள உறவையும், சம்பந்தத்தையும் பொருத்தாயிருக்கிறதால், இதை அடிப்படையாகக் கொண்டதாகவே இந்தப் பாகம் அமைந்திருக்கிறது. விசுவாசிகளுக்குள்ளும், அயலகத்தாருக்குள்ளும், புருஷர் மனைவிகளுக்குள்ளும், பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளும், எஜமான் ஊழியக்காரருக்குள்ளும் இருக்கிற உறவுமுறைகளை அனுபவ முறைக்கேற்றபடி விவரிக்கிறது இந்தப் பகுதி. நீடிய பொறுமையுடையவர்களாய், அன்பினால், ஒருவரையொருவர் தாங்கி நடவுங்கள். பொய்யைக் களைந்து அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள். இனி திருடாமல் இருங்கள். சகலவிதமான கசப்பும்… உங்களை விட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும்…. இருந்து ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து (அடங்கி) இருங்கள். கீழ்ப்படிந்திருங்கள். கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். இந்தக் கட்டளைகளைவிட அதிக சாதனையாக இருப்பது எது?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசமும் இதேவிதமாய் ஆரம்பிக்கிறது. மலைப்பிரசங்கத்திலுள்ள இப்பாகத்தின் வார்த்தைகளைக் கருத்தாய்க் கவனியுங்கள். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடே வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் (மேல்வஸ்திரத்தையும்) விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம்பண்ணினால் அவனோNடு இரண்டு மைல் தூரம் போ. உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. உனக்கடுத்தவனைச் சிநேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள். அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்களும் சிநேகிப்பீர்களானால் உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள் (மத்.5:38-48).
ஆனால் இவைகளை என்னால் செய்யமுடியாதே! இக்கட்டளைகளைக் கைக்கொள்வது அசாத்தியமல்லவா என்று நீங்கள் சொல்லுவீர்கள். என்னுடைய எஞ்சினியர் நண்பனுக்கேற்பட்டதுபோலவே நீங்களும் தீமைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை அது பயங்கரமானதாகவேயிருக்கலாம். இதை மன்னிக்கிறதென்பதே உங்களுக்குக் கூடாத காரியம்போல இருக்கும். உங்கள் நடத்தை நியாயமாகவும், உங்கள் பகைவனின் நடத்தை முற்றிலும் அநியாயமாகவும் இருக்கலாம். அவனில் அன்புகூருகிறது சிறந்த இலட்சணமாயினும் அது சாத்தியமற்றதாயிருக்கிறது.
ஆதாம் நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியைப் புசித்த நாள்முதல், மனிதன், நன்மை இது, தீமை இது என்று தீர்மானிப்பதில் முற்பட்டிருக்கிறான். ஜென்ம சுபாவ மனிதன் சரி தவறு இவை என்றும், நியாயம் அநியாயம் இவை என்றும், தான் சொந்தமாக ஓர் அளவுகோலை வகுத்துக்கொண்டு அதன்படி நடக்கப் பிரயாசப்பட்டிருக்கிறான். கிறிஸ்தவர்களாகிய நாமோ வித்தியாசமானவர்கள். ஆம், அப்படியானால் நாம் எந்த வகையில் வித்தியாசமானவர்கள்? நாம் மறுபடியும் பிறந்த நாள் முதற்கொண்டு, நீதியைக் குறித்து ஒரு புது உணர்ச்சி நமக்குள் உருவாவதினிமித்தம் நன்மை தீமை இது, தீமை இது என ஆராய்வதில், நியாமானபடி, நாமும் ஈடுபட்டவர்களாயிருக்கிறோம். ஆனால், நமக்கோ, துவக்கம் முற்றிலும் வித்தியாசமானதொன்றிலிருக்கிறது என்று நாம் உணர்ந்திருக்கிறோமா? நமக்குக் கிறிஸ்துவே ஜீவ விருட்சம். அறிவுக்குகந்ததாய் தோன்றுகிற சரி, தப்பு என்பவைகளிலிருந்து – அதாவது நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து நாம் ஆரம்பிக்கிறதில்லை. அதை நாம் இயேசுவில் ஆரம்பிக்கிறோம். ஜீவனும், ஜீவனுக்கடுத்ததுமே நமக்குரிய அடிப்படையான காரியம்.
சரியாக நடக்கப் பிரயாசப்படுவதும், பிறர் நேர்மையாக நடக்கும்படி கண்டிதம் பண்ணுவதுமே, நம் கிறிஸ்தவ சாட்சிக்கு மிகுந்த தீமையை விளைவிக்கிறதாயிருக்கிறது. தவறானது எது, சரியானது எது என்று அறிவதற்கு நாம் ஈடுபட்டிருக்கிறறோம். நியாயமாகவே நான் நடத்தப்பட்டேன்? என்று நாம் அடிக்கடி நமக்குள் கேட்டுக்கொள்கிறோம். இவ்விதமாய் நம்முடைய செய்கைகள் நேர்மையானவைகள் என்று ரூபகாரப்படுத்தும்படி நாம் யோசிக்கிறோம். ஆனால் நமக்குரிய பிரமாணம் அதுவல்ல. சிலுவை சுமத்தல் என்பதே நமக்குரிய எல்லா நீதியுமாகும். என் கன்னத்தில் அறைகிறது மற்றவனுக்கு நியாயமா என்று நீ கேட்கிறாய். இல்லவே இல்லை. ஆயினும் நியாயம் என்பதைமட்டும் நீ விரும்புவது போதுமா என்று நான் பதில் சொல்லுகிறேன். கிறிஸ்தவர்களாக நம்முடைய ஜீவிய பிரமாணம் ஒருபோதும் சரி அல்லது தவறு என்பதல்ல, சிலுவையின் பிரமாணமே நம் நடக்கையின் பிரமாணமாகும். சிலுவையின் தத்துவமே நம் நடக்கையின் தத்துவமாம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! தேவன் நல்லோர்மேலும் தீயோர்மேலும் தமது சூரியனைப் பிரகாசிக்கப்பண்ணுகிறார். அது அவருக்கு நீதி அல்லது நியாயம் என்பதாயிராமல் தம்முடைய கிருபையின் விளைவாகவே இருக்கிறது. இதுவே நம்முடைய பிரமாணமுமாயிருக்கவேண்டும். கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (4:32). இது சரி, அது தவறு என்பது புறஜாதியாருக்கும் ஆயக்காரருக்கும் உரிய பிரமாணமாகும். என் ஜீவியம் சிலுவையின் பிரமாணத்தினாலும் பரமபிதாவினுடைய பரிபூரண சற்குணத்தினாலும் ஆளப்படவேண்டும். பரலோகத்திலிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்.
தென் சீனாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரனுக்கு, மலைச்சாரலில் ஒரு நெல் வயல் இருந்தது. வறட்சியான காலங்களில் கீழேயுள்ள வாய்க்காலிலிருந்து தன் வயலுக்கு நீர் பாய்ச்ச ஒருவகை இயந்திர சக்கரம் உபயோகித்து வந்தான். அந்த வயலை ஒட்டித் தாழ்வாக அவனுடைய அயலானுக்கு இரண்டு வயல்கள் இருந்தன. ஓர் இரவு அந்த அயலான், இருவர் நிலத்துக்கும் இடையிலுள்ள கரையை உடைத்து நீரையெல்லாம் தன் வயலுக்குப்பாய்ச்சிக் கொண்டான். கிறிஸ்தவ சகோதரனோ உடைப்பைச் சரிப்படுத்தி தன் வயலில் தங்கும்படி அதிகத் தண்ணீர் இறைத்துவிட அவனுடைய அயலான் முன்போலவே மறுபடியும் செய்தான். இப்படி மூன்று நான்கு முறை நடந்தது. ஆகவே அவன் தன் கிறிஸ்தவ சகோதரரிடம்போய் இதை குறித்து விசாரித்தான். என் அயலானுடைய செய்கையைக் குறித்து எதிர்பேசாமல் பொறுமையாயிருக்க முயன்றேன். ஆனால், அவன் இப்படித் திரும்ப திரும்ப செய்வது சரியா? என்று அவர்களைக் கேட்டான். இந்தக் காரியத்தைக் குறித்து அவர்கள் ஜெபித்தார்கள். அதன்பின், ஒரு சகோதரன் நமக்குச் சரி எனப்படுகிறதைமட்டும் நாம் செய்யும்படி முயலுவோமானால், உண்மையாகவே நாம் குறைவுள்ள கிறிஸ்தவர்கள் ஆவோம்;. சரி என்பதைவிட மேலானதொன்றை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்றான். அச்சொல் அந்தச் சகோதரனுக்குள் பலமாகக் கிரியை செய்தது. மறுநாள் காலையில் கீழேயிருந்த தன் அயலானுடைய வயல்கள் இரண்டிற்கும் நீர் பாய்ச்சிவிட்டு பிறகு மாலை வேளையில் தன்னுடைய வயலுக்கும் தண்ணீர் இறைந்துவிட்டான். அப்பொழுது அவன் வயலில் தண்ணீர் தங்கி நின்றது. அவனுடைய அயலான் இச்செய்கையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு இதன் காரணத்தைக் கண்டு கொள்ளும்படி ஆரம்பித்தான். சில நாள்களில் அவனும் ஓர் உண்மைக் கிறிஸ்தவனானான்.
ஆனபடியால், என் சகோதரரே, உங்கள் நியாயத்திலேயே நிலைத்திராதேயுங்கள். நீ இரண்டு மைல் தூரம் நடந்தபடியினால் நியாயமனதைச் செய்துவிட்டதாக எண்ணாதே. நடந்து சென்ற இரண்டாம் மைல் மூன்றாம் நான்காம் மைலுக்கு முன்னடையாளமாம். கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாவதே இலட்சியம். நாம் நம்முடையதென்று சொல்லக்கூடியதும், கேட்டுக்கொள்ளக்கூடியதும் வினவக்கூடியதும் ஒன்றுமே இல்லை. நம் காரியம் கொடுப்பதே. கர்த்தராகிய இயேசு சிலுவையில் மரித்தபோது, அவர் நம்முடைய உரிமைகளை நிலைநிறுத்தும்படி அப்படிச் செய்யவில்லை. கலப்பற்ற கிருபையே அவரைச் சிலுவைக்கு நடத்தினது. ஆகவே, மற்றவர்களுக்கு உரிமையானதையும் அதற்கு அதிகமானதையுமே எப்பொழுதும் கொடுக்கும்படி கிறிஸ்துவின் பிள்ளைகளாக நாம் பிரயாசப்படுவோம்.
நாமே அநேக முறை சரியாக நடந்துகொள்ளுகிறதில்லை என்று நம்மை அடிக்கடி நினைப்பூட்டிக்கொள்ளவேண்டியது அவசியமாயிருக்கிறது. நாம் தவறுகிறோம். நம்முடைய தவறுதல்களின்மூலம் ஏற்ற பாடம் கற்றுக்கொள்வது நல்லது. குறைவுகளை, தவறுகளை அறிக்கையிடவும் அதற்கு மேலாகச் செய்யவும் நாம் ஆயத்தமுள்ளவர்களாயிருப்பது உசிதம். இதை ஆண்டவர் விரும்புகிறார். ஏன்? இப்படிச் செய்வதினால், நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள் (மத்.5:45). நடைமுறைக்கேற்ற புத்திர சுவிகாரமே காரியம். தேவன் நம்மை இயேசு கிறிஸ்துமூலமாய் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார் என்பது உண்மையே (1:6). ஆனால் நாம் பூரண புருஷராக வளர்ந்துவிட்டோம் என்று தப்பிதமாய் எண்ணிக்கொள்ளுகிறோம். பிதாவுடன் ஒரே தன்மையும் அவர் ஆவியின் சுவிகாரத்தையும் தங்களில் வெளிப்படுத்தும் அளவுக்குத்தக்குதாகவே, பிள்ளைகள் புத்திரருக்குரிய தகுதியை அடைகிறார்கள் என்றே மலைப்பிரசங்கம் நமக்குப் போதிக்கிறது. அவருடைய கிருபையை விளங்கப்பண்ணுகிறவர்களாய் அன்பில் பூரணப்பட்டவர்களாயிருக்கும்படியே நாம் அழைக்கப்பட்டோம். ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை….. ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள் என்று பவுல் எழுதுகிறார் (5:1.,2).
இது நமக்கு ஒர் அறைகூவல். நம்மால் முடியாது என்று சொல்லும் வண்ணமாக, மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தில் ஓர் அளவுகோல் அமைந்திருக்கிறது. பவுலும் எபேசியர் நிருபத்தின் இந்தப் பகுதியில் அதையே வலியுறுத்துகிறார். நம்முடைய சங்கடம் யாதெனில், இந்த நெறிகளுக்கிணங்க, பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி (5:3) நடந்துகொள்ளும் அந்த அளவைப் பெற்றுக்கொள்ளத்தக்க வழிவகைகள், இயற்கை சுபாவ முறைப்படி நம்மில் பெறாதிருப்பதே ஆகும். அப்படியானால், தேவன் நம்மிடத்தில் எதிர்நோக்கும் பரிசுத்தமான நடக்கைக்குரிய இரகசியம்தான் என்ன?
இதன் இரகசியம் நமக்குள் கிரியை செய்கிற வல்லமையின்படியே (3:20) என்ற பவுலின் வார்த்தைகளில் அடங்கியுள்ளது. இப்படியே வேறொரு இடத்திலும், நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன் என்று கூறுகிறார் (கொலோ.1:29). எபேசியர் முதல் பாகத்திற்கே நாம் மறுபடியும் வந்திருக்கிறோம். ஆம், பவுல் முதலாவது உட்காரும்படி கற்றுக்கொண்டார். அவருடைய கிறிஸ்தவ நடத்தை அவர் உட்கார்ந்ததையே சார்ந்திருக்கிறது. தாம் கிறிஸ்துவில் உட்கார்ந்திருக்கக் கண்ட பவுல், கிறிஸ்து தமக்குள் வாசமாயிருக்கிறதினால், நடக்கவும் ஏதுவாயிற்று இதனாலேயே விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்க வேண்டுமென்று எபேசிய விசுவாசிகளுக்காக வேண்டிக்கொள்ளுகிறார்(3:7).
என் கைக்கடிகாரம் எப்படி ஓடுகிறது? அசைகிறதினாலோ அல்லது அசைக்கப்படுகிறதினாலோ? புறம்பேயுள்ள ஒரு சக்தி அதை முதலில் அசைக்கிறதினாலேயே அது ஓடுகிறது. அப்பொழுதுதான் அதற்கு நியமிக்கப்பட்ட வேலையை அது செய்யும். ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாகவே அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்(2:10).
பவுல் அப்போஸ்தலன் ஜீவியத்தினால் உண்டான வெளியரங்கமான கிரியைகளெல்லாம், அவருக்குள் தேவன் செய்த உள்ளான கிரியைகளின் வெளிப்பாடுகள் அல்லாமல் வேறல்ல. தேவன் தாமே பவுலுக்குள்ளாகக் கிரியை செய்துவந்தார். அவரே பவுலுக்குள் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிற வல்லமை ஆனார். அதன் விளைவாகவே வெளியரங்கமான கிரியைகள் சிலவற்றைப் பவுல் செய்ய முடிந்தது. பிலிப்பியருக்கு அவர் எழுதும்பொழுது அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தி;ன்படி விருப்பத்தையும், செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்; என்றார்(பிலி.2:12,13). தேவன் உள்ளாகக் கிரியை செய்ய, நாம் அதை வெளியரங்கமாக்கவேண்டும். இதுவே இரகசியம். தேவனே நமக்குள் கிரியை செய்ய நாம் இடம் கொடுத்தாலொழிய வெளியரங்கமாய் நற்கிரியைகளைச் செய்யும் பிரயாசம் பயனற்றுப்போகும். கிறிஸ்துவின் தாழ்மையையும் இரக்கத்தையும் தேவன் நம்மில் நடப்பிக்க இடங்கொடாமல் இரக்கமுள்ளவர்களாயும், தாழ்மையுள்ளவர்களாயும் இருக்க அடிக்கடி நாம் முயற்ச்சி செய்கிறோம். நாம் பிறருக்கு அன்பைப் பாராட்டப் பிரயாசப்படுகிறோம். ஆயினும் நாம் அன்பற்றவர்களாய் இருக்கிறதைக்கண்டு ஆண்டவரிடம் அன்பைக் கேட்கிறோம். அதை அவர் நமக்குக் கொடாதிருக்கிறதைக் கண்டு ஆச்சரியப்படுகிறோம்.
நான் முன்பு சொன்ன உதாரணத்தையே திரும்ப சொல்லட்டும். உனக்குச் சோதனையாகவும் அடிக்கடி கஷ்டம் விளைவிக்கிறவனாகவும் உள்ள ஒரு சகோதரன் உனக்கிருக்கலாம். அவனைச் சந்திக்கும்போதெல்லாம் உனக்கு வருத்தம் உண்டாக்கக்கூடியதொன்றை சொல்லவோ செய்யவோ முற்படுகிறான். இதனால் உன் மன நிம்மதி பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் கிறிஸ்தவனானபடியினால் அவனின் அன்புகூரவேண்டும். அவனை நேசிக்க விரும்புகிறேன். உண்மையாகவே அன்பு கூரும்படி நான் நிர்ணயித்துள்ளேன் என்று நீ சொல்லிக்கொண்டு, கர்த்தாவே, அவனுக்காக என் உள்ளத்தில் அன்பைக் பெருக்கியருளும். ஆண்டவரே, எனக்குள் அன்பை ஊற்றும் என்று ஊக்கமாய் ஜெபிக்கிறாய். பின்பு உன் சித்தத்தையெல்லாம் ஒன்றுதிரட்டி பெரிய தீர்மானம் செய்தவனாய், ஜெபித்த பிரகாரமாகவே மெய்யான ஆவலோடு உள்ளான அன்பை வெளிப்படுத்த வேண்டுமென்றிருக்கிறாய். ஐயோ! பரிதாபம்! அவனுக்கு முன் நீ வரும்போதோ உன்னுடைய நன்மையான தீர்மானம் முறிந்துபோகத்தக்கதாக ஏதோ ஒன்று நடைபெறுகிறது. அவன் செய்கைகள் உனக்குக் கிஞ்சித்தேனும் உதவியாயிராமல் உன் நல்ல தீர்மானங்களுக்கு முரண்பாடாகவே இருக்கின்றன. உடனே உன்னுடைய பழைய குரோதங்கள் எழும்பிவிடுகின்றன. நீ அவனுடன் கௌரவமாய் நடந்து கொள்வதேயொழிய அவனை நேசிக்க முடியாதவனாயிருக்கிறாய். இது ஏன்? தேவனிடத்திலிருந்து அன்பைப்பெற ஆசைப்படுகிறதில் நீ தவறு செய்யவில்லை. ஆனால், தன்னில் தானாகவே அந்த அன்பைப்பெற விரும்பினதே நீ செய்த தவறு. தம்முடைய சொந்த அன்பின் ஏவுதலினாலே, உன்மூலம் தேவன் தாமே நடப்பிக்கக்கூடியதை நீ உன் சுயபெலத்தினாலுண்டாகிய தீர்மானத்தின் வல்லமையாலே செய்யும்படி பிரயாசப்பட்டதும், தேவ ஈவாகிய இயேசுவை இதற்கென்று உபயோகிக்க முற்பட்டதுமே, உன்னுடைய தவறு. இதுவே வித்தியாசம் ஆ! இதைக் காணும் கண்கள் நமக்கிருந்தால் நலமாயிருக்குமே!!
நமக்காக தேவன் கிறிஸ்துவைத் தந்தருளினார். கிறிஸ்துவுக்குப் புறம்பே நாம் பெற்றுக்கொள்ளக்கூடியது ஒன்றுமே இல்லை. கிறிஸ்துவில்லாதவைகளையோ, அவருக்கு அப்பாற்பட்டவைகளையோ அல்ல, கிறிஸ்துவிலுள்ளவைகளையே, நமக்குள் உருவாகும்படி பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். நாம் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும்…. கிறிஸ்துவினுடைய…. அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும் வேண்டும்(3:16,18,19). நாம் புறம்பாக வெளிப்படுத்துகிற கிரியைகளெல்லாம் முதலில் தேவன் நமக்குள் வைத்தவைகளேயாகும்.
1 கொரிந்தியர் 1:10,31 வசனங்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள். நாம் தேவனாலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறதில் காரியம் நின்று விடுவதில்லை. அவரே தேவனால் நமக்கு ஞானமும், நீதியும், பரிசுத்தமும் மீட்புமானவர். இது வேதத்தின் மகத்துவமான சத்தியங்களில் ஒன்று. அவர் நமக்கு… ஆனார். இதை நாம் விசுவாசித்தோமானால், நமக்குத் தேவையான எதையும் அதிலே வைத்து செய்துமுடித்தார் என்று நிச்சயித்திருக்கலாம். ஏனெனில் நமக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியினால் நம் குறைவுகளில் எல்லாம் கர்த்தராகிய இயேசு தாமே நிறைவானவர். பரிசுத்தத்தை நற்குணம் என்றும், மனத்தாழ்மையைக் கிருபையென்றும், அன்பை ஒரு வரம் என்றும் கருதி நாம் இவைகளைத் தேவனிடத்தில் தேடி அடைய வேண்டியவைகள் என்று நினைப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் நம் தேவைகள் எவையாயினும் தேவனுடைய கிறிஸ்துவானவர்தாமே எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறார்.
என்னுடைய தேவைகளில் அநேகமுறை கிறிஸ்துவை, அப்பாலுள்ள ஒருவராகக் கருதிக்கொண்டு நான் குறைவுள்ளவனாக உணர்த்தப்படுகிற விஷயங்களில் அவரைச் சம்பந்தப்படுத்திக்கொள்ள அறியாதவனாக இருந்தேன். இரண்டு ஆண்டுகள் இவ்விதமாய்க் கடந்தன. இருட்டில் தடவிக்கொண்டிருக்கிறவனாகக் காணப்பட்டேன். கிறிஸ்தவ ஜீவியத்தை உருவாக்க அவசியம் என்று எனக்குத் தோன்றிய நற்குணங்களைச் சேகரிக்கத்தக்கதாய்ப் பிரயாசம் வெகுவாய் எடுத்தும் அதில் சிறிதும் வெற்றி காணாதவனாயிருந்தேன். பின்பு 1933 ஆம் ஆண்டிலே ஒருநாள், எனக்குள் வெளிச்சம் உதித்தது. கிறிஸ்துவானவர் தம்முடைய பரிபூரணத்திலே, எனக்குப் பிணையாளியாயிருக்கும்படி தேவனால் நியமிக்கப்பட்டிருக்கக்கண்டேன். எவ்வளவோ வித்தியாசம்! காரியங்கள் அத்தனையும் எவ்வளவு வெறுமையாயின! கிறிஸ்துவுடனே சம்பந்தப்படாதவைகளாகக் கருதப்படும்பொழுது அவைகள் ஒன்றுமில்லாதவைகளாயின. இதை நாம் கண்டு கொள்ளுகிறது நம்மில் ஒரு ஜீவியம் ஆரம்பிக்கிறதற்கு ஒப்பாகும். இனிமேல் நம்முடைய பரிசுத்தமும் அன்பும் தேவனாலானதும் தேவனுடையதுமாகும். தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் காரியங்கள் யாவற்றிற்கும் இயேசுதாமே நிறைவேறுதலாய் நம்மில் வெளிப்படுகிறார்.
இப்பொழுது, கஷ்டம் கொடுக்கிற அந்தச் சகோதரனைச் சந்திக்கப்போ. ஆனால் நீ போகும்முன் தேவனை நோக்கி, கர்த்தாவே, அவனில் அன்புகூருவதென்பது என்னில் தானே முடியாக் காரியம் என்று இப்பொழுது தெளிவாகத் தெரிந்துகொண்டேன். ஆனால், எனக்குள்ளாக ஒரு ஜீவன்-தேவகுமாரனுடைய ஜீவன்-இருக்கிறதை நான் அறிகிறேன். அந்த ஜீவனின் பிரமாணம் அன்புகூருதலே, அப்படியிருக்க, நான் அவனை நேசியாதிருப்பது எப்படி? என்று ஜெபி. இப்பொழுது முயற்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவரில் அமர்ந்திரு. அவருடைய ஜீவனையே சார்ந்துகொள். இவ்விதம் தைரியம் கொண்டவனாய் அவனைச் சந்தித்துப் பேசு. இதோ! என்ன அதிசயம்! உன்னை அறியாமலே நீ அவனோடு சாதாரணமாகப் பேசுகிறதைக் காண்பாய் (தன்னறிவுக்குட்படாமலே நீ அவனோடு சகஜமாய்ப் பேசுவாய் என்று நான் சொல்லுகிறேன். ஏனெனில் சுய உணர்ச்சி பிறகுதான் வருகிறது). உன்னை அறியாமல் மெய்யாய் அவனில் அன்புகூருவாய், உன் சகோதரனாக அவனைக் கருதுவாய், உள்ளான ஐக்கியத்துடன் தாராளமாய் அவனோடு சம்பாஷிப்பாய். என்ன அதிசயம்! நான், பதைப் பதைப்பும் விசாரமுமுடையவனாய் இப்பொழுது சிறிதும் பிரயாசப்படாவிட்டாலும் என் இருதயத்தில் குமுறல் ஒன்றும் உண்டாகவில்லையே. சொல்லிமுடியாத ஏதோ ஒரு முறையில் ஆண்டவர் என்னோடுகூட இருந்தார். அவர் அன்பு ஜெயங்கொண்டது என்று நீ சொல்லிக்கொண்டு ஆச்சரியப்படுவாய்.
உள்ளானபடி, கிறிஸ்துவின் ஜீவன், தன்னில்தானே இயல்பாய் நம்மில் கிரியை செய்கிறது. அதாவது நமது சுய முயற்சிகள் எவையும் இல்லாமல், அது கிரியை செய்கிறது. முயற்சி என்பதல்ல, சார்ந்திரு என்பதே மிக முக்கியமான சட்டம். இது நம்முடைய சுய பலத்தில் சாராமல் அவருடைய வல்லமையிலேயே சார்ந்திருப்பது ஆகும். நாம் மெய்யாகவே கிறிஸ்துவில்
இருக்கிறோம் என்பதை வெளியாக்குகிறது நம்மிலிருந்து புறப்படுகிற அவரது ஜீவ ஓட்டமே. இது ஜீவ ஊற்றாகிய இயேசுவிலிருந்து உற்பத்தியாகும் மதுரமான தண்ணீராம்.
கிறிஸ்தவர்கள்போல நடிப்பவர்களாக நம்மில் அநேகர் காணப்படுகின்றனர். இன்றைக்கு, அநேக கிறிஸ்தவர்களின் ஜீவியம் வெறும் பாசாங்கே. அவர்கள் ஆவியின் ஜீவியத்தைத் தழுவி, ஆவிக்குரிய வார்த்தைகளைப் பேசி ஆவியின் நடக்கைகளை அனுசரிக்கிறார்கள். எல்லாவற்றையும் தாங்களாகவே செய்கிறார்கள். தாங்கள் கையாளும் முயற்சியே தங்கள் வழி தவறானது என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். இதைச் செய்யலாகாது, இதை சொல்லலாகாது, இதை சாப்பிடலாகாது என்று அவர்கள் தங்களை எவ்வளவாய்ப் பலவந்தம்பண்ணுகிறார்கள்! அது அவர்களுக்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது. இது நாம் நம்முடையதல்லாத ஒரு பாஷையைப் பேச முயல்வதுபோலவே இருக்கிறது. நாம் கடினப்பட்டு எவ்வளவு முயன்றாலும், அது இயல்பாக நமக்கு வருகிறதில்லை. அந்தப்படி பேச நாம் நம்மைப் பலவந்தப்படுத்தவேண்டியிருக்கிறது. ஆனால், நமது தாய் பாஷையைப் பேசும்பொழுதோ அதைவிட எளிதாய் இருக்கக்கூடிய காரியம் வேறு எதுவும் இல்லை. நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து போய்விடினும் பேசிக்கொண்டே இருக்கிறோம். அது பாய்ந்து வருகிறது. அது நமக்கு இயற்கையாக அமைந்திருக்கிறது. இயல்பாக நம்மிலிருந்து அது புறப்படுகிறதினாலே நாம் எந்தத் தேசத்தார் என்பதை எல்லாருக்கும் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் ஜீவனே நம்முடைய ஜீவியத்தின் உயிர். நம்மில் தங்கியிருக்கிற பரிசுத்த ஆவியானவரே அதை நடத்துகிறவர். இயல்பாகவே பாய்வதே அந்த ஜீவனின் சட்டம். இந்தச் சத்தியத்தைக் கண்டறிந்தவுடனே, நாம் நம் போராட்டங்களைவிட்டு நடிப்புகளை உதறித்தள்ளுவோம். பாசாங்கு செய்வது கிறிஸ்தவ வாழ்க்கைக்குப் பெரிய தீங்கை விளைவிக்கிறது. நம் வெளியரங்கமான பிரயாசங்களைவிட்டு, ஓய்ந்து நம் நடக்கை உண்மையுள்ளதாயிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்! நம் வார்த்தைகள், ஜெபங்கள், ஜீவியம் எல்லாம் முயற்சியின்றி உள்ளேயிருக்கும் ஜீவனாலே இயல்பாய் எழும்புகிற வெளிப்பாடாக இருக்குமானால் இதுவே மிகுந்த ஆசீர்வாதமாம். ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று கண்டிருக்கிறோமா? அப்படியானால், நமக்குள் அந்தப்படி அவர் நல்லவரே. அவர் மிகுந்த வல்லமையுள்ளவரே. அப்படியானால், நமக்குள் அவர் குறைவற்றவர் அல்லவா? கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் ஜீவன் எப்பொழுதும் போல வல்லமை மிகுந்ததே. வேத வசனங்களை உள்ளவாறு விசுவாசிக்கத் துணிந்தவர்களுடைய ஜீவியத்தவர்களுடைய ஜீவியத்திலும் ஆதியில் வெளிப்பட்ட வல்லமையில் எவ்வளவும் குறையாத வல்லமையுடன் அவருடைய ஜீவன் வெளிப்படும். மத்தேயு 5:20ல் வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று சொல்லும்போது ஆண்டவர் கொண்ட அர்த்தம் என்ன? பல தடவை… உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்… என்பதாகச் சொல்லி, மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு தாம் கூறின மேன்மையான ஒப்பற்ற நெறிகளுக்குமுள்ள வித்தியாசங்களைத் தெரியப்படுத்தின விதத்தை முன்பு பார்த்தோம். ஆனால் அநேக நூற்றாண்டுகளாக மனிதர்கள் நியாயப்பிரமாணத்தின் வழிகளில் நிற்க முயன்றும் முடியாதவர்களாய்த் தோல்வி அடைந்திருக்க, எப்படி ஆண்டவர் அவைகளில் அதிகக் கடினமான வழிகளை வகுக்கத் துணியலாம்? தமக்குள்ளிருந்த தம் ஜீவன் எப்படிப்பட்டதென்று அவர் அறிந்திருந்தபடியினாலேயே அவர் அவைகளை வகுக்க முடிந்தது.
அவைகளிலும் அதிகமானதும் உயர்ந்ததுமான நெறிமுறைகளைத் தம்மீது சுமத்தக் கிறிஸ்து தயங்கினவரல்லவே. மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் சொல்லியிருக்கிற இராஜ்யத்தின் சுவிசேஷங்களுக்கடுத்த நியமங்களைப் படிப்பது நமக்கு ஆறுதலாயிருப்பதின் காரணம், தம் பிள்ளைகளுக்கே உரியதாயிருக்கிற தம் சொந்த ஜீவன்பேரில் கிறிஸ்துவுக்கிருந்த நிச்சயமான நம்பிக்கையேயாகும். இந்த மூன்று அத்தியாயங்களும் தெய்வீக ஜீவியத்திற்கடுத்த தெய்வீக சட்டங்களைத் தெரிவிக்கிறது. அவர் நம்மில் எதிர்பார்க்கிற சட்டங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உயர்வானவைகளாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு நமக்கு அருளப்பட்டிருக்கிற அவருடைய போதுமான வல்லமையின் திராணியிலே அவா நிச்சயமுள்ளவராயிருக்கிறார். நமக்குள்ளிருக்கும் இந்த அவருடைய வல்லமையை, நம்மில் அவர் எதிர்பார்க்கிற எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.
கடினமான எந்தச் சூழ்நிலையாவது நமக்கு மலைப்புண்டாக்குகிறதா? அது சரியோ, தவறோ அல்லது நன்மையோ, தீமையோ என்பதைப்பற்றிய பிரச்சனையா? அப்படியானால் விசேஷித்த ஞானத்தை நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை நோக்கவேண்டியதுமில்லை. நமக்கென்று உள்ளவர் கிறிஸ்துவே. நமக்காக தேவனிடமிருந்து வந்த ஞானம் அவரே. கிறிஸ்து இயேசுவிலுள்ள ஜீவனுடைய ஆவியின் பிரமாணம், நல்லது இது, தீயது இது என்ற அவருடைய வழிமுறைகளை திரும்ப திரும்ப வெளிப்படுத்தி அதற்கேற்ப தகுதியின்படியே நமக்குள் தொடர்ந்து கிரியை செய்திருக்கிறது. அவர்களுடனே, அந்தக் கடினமான பிரச்சனையை எதிர்த்து நிற்கத்தக்க ஆவியும் நமக்குக் கொடுக்கப்படுகிறது.
நம்முடைய நடத்தையைச் சோதிக்கும்படியாகவும், மேலும் மேலும் அநேக காரியங்கள் சம்பவிக்கும் சிலுவையின் பிரமாணத்தைக் கற்றுக்கொள்ளவேண்டியது நமக்கு மிகவும் அவசியம். நம்முடைய தகுதி பழைய மனிதனுக்கடுத்ததாயிராமல், மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய (4:24) மனுஷனுக்கேற்றபடியே இருக்கவேண்டும். ஆண்டவரே, என்னை நான் நற்காத்துக்கொள்ளத்தக்க தகுதி எனக்கில்லை. எனக்குள்ளானவைகளெல்லாம் உம்முடைய மிகுந்த கிருபையாலே ஆயிற்று. எல்லா நிறைவும் உமக்குள்ளே இருக்கிறது என்று அறிக்கையிடுங்கள். நான் முதிர் வயதுள்ள ஒரு ஐப்பானிய ஸ்திரீயை அறிவேன். ஒருநாள் தன் வீட்டைக் கன்னமிட நுழைந்த ஒரு திருடனுக்குமுன் தான் நிற்கக்கண்டாள். ஆண்டவர்மேல் தனக்குள்ள குழந்தை விசுவாசத்துடன், அவனுக்கு ஆகாரம் சமைத்துக் கொடுத்து, பின்பு தன்னிடமுள்ள வீட்டுச் சாவியையும் தந்தாள். வெட்கத்திற்குள்ளாக்கும்படி செய்த அவளுடைய இந்தச் செய்கையின்மூலம், தேவன் அவனோடு பேசினார். அவளுடைய சாட்சியினிமித்தமாக இன்று அந்த மனிதன் கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரனாக இருக்கிறான்.
கிறிஸ்தவர்களில் அதிகமானவர்கள் எல்லா உபதேசங்களையும் அறிந்தவர்களாயிருக்கிறார்கள். ஆயினும் அதற்கு மாறுபாடான ஜீவியமே அவர்களில் காணப்படுகிறது. எபேசியர் முதல் மூன்று அதிகாரங்களில் சொல்லியவைகளை அவர்கள் அறிந்தவர்களாயிருந்தாலும், கடைசி மூன்று அதிகாரங்களில் சொல்லப்பட்டவைகளைத் தங்கள் அனுபவத்திற்குக் கொண்டுவராதவர்களாக இருக்கிறார்கள். இப்படி மாறுபாடுள்ளவர்களாய் ஜீவிக்கிறதைவிட, போதகங்களை அறியாதிருக்கிறதே மேலானது. தேவன் ஒரு காரியத்தைக் கட்டளையிட்டிருக்கிறாரா? அப்படியானால் அவர் கட்டளையிட்டதைச் செய்து முடிக்கத் திராணி உள்ளவனாயிருக்கும்படி உன்னைத் தேவனுக்கு ஒப்புக்கொடு. நன்மையானவை என்று நாம் கருதுகிறவைகளுக்கு மேலாக நடப்பதும், அதன்படி நடப்பதுமே கிறிஸ்தவ ஜீவியத்தின் முழுத்தத்துவமென்பதை ஆண்டவர் நமக்குப் போதிப்பாராக.
கிறிஸ்தவ நடக்கையைக் குறித்து நாம் மேலே பார்த்த காரியங்களைக் காட்டிலும் அதிகமாக நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னும் சிறிது இருக்கிறது. நட என்ற பதம் கூடுதலான மற்றொரு அர்த்தத்தைக் உடையதாயும் இருக்கிறது. முதலாவதாக அது நடத்தை அல்லது செயல் என்பதைக் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல், அது முன்னேறுதல் என்ற கருத்தை கொண்டதாயும் இருக்கிறது. நட என்பது முன்னேறுதல் என்றும் பின்தொடர்தல் என்றும் பொருள்படும். நமக்கு முன்னாக உள்ள இலக்கை நோக்கி முன்னேறுகிறதைக் குறித்து இப்பொழுது சிறிது பார்க்கலாம்.
ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப் பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால் நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (5:15-17).
மேலே கூறிய வசனத்திலே ஞானம் மதியீனம் என்பவைகளுக்குள்ளாக வித்தியாசத்திற்கும், காலம் என்பதைக் குறிக்கும் கருத்துக்கும் ஒரு வகை தொடர்பு இருக்கிறதை பார்க்கலாம். ஞானமுள்ளவர்களைப்போல…. நடந்து… காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல்… இது முக்கியமான ஒரு காரியம். இதிலுள்ளளதைப்போலவே. இதே கருத்தை வெளிப்படுத்துகிற வேறு இரண்டு பாகங்களை உங்களுக்கு முன்கொண்டுவர விரும்புகிறேன்.
அப்பொழுது, பரலோக இராஜ்யம்…. பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தாhகள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள். எண்ணையையோ கூடக்கொண்டு போகவில்லை….. நடுராத்திரியிலே, இதோ மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டுபோகப்புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள்… எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள்….. அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார். ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பின்பு மற்றக் கன்னிகைகளும் வந்து…. (மத்.25:1-13).
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேரையும் நிற்கக்கண்டேன்…. கற்புள்ளவர்கள் இவர்களே, ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே. இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். இவர்கள் வாயிலே கபடம் காணப்படவில்லை. இவர்கள்… மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள் (வெளி 14:1-5).
தேவன் துவக்கினவைகள் எவைகளோ, அவைகளை முடிக்கிறவரும் அவரே என்பதை வலியுறுத்தும் பாகங்கள் வேதத்தில் அநேகம் இருக்கின்றன. நம் இரட்சகர் முற்றும் முடிய இரட்சிக்க வல்லவராக இருக்கிறார். இரட்சிக்கப்பட்டவன் என்று பல பொருளில் (கருத்துக்களில்) நம்மைக் குறித்து இப்பொழுது நாம் சொல்ல இயலாதிருப்பினும் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனும், முடிவில் அரைகுறையாக மீட்கப்பட்டவனாக இருக்கமாட்டான். கிறிஸ்துவிலே விசுவாசமுள்ள எந்த மனிதனையும், தேவன் பரிபூரணப்படுத்துவார். நாம் விசுவாசி;கிறது இதுவே. தொடர்ந்து சொல்லப்படும் காரியங்களுக்கு உதவியாக இருக்கும்படி, இதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிறது நல்லது. உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்தி வருவாரென்று (பிலி.1:5 பவுலுடன் கூட நாமும் திடநம்பிக்கையாயிருக்கிறோம். தேவனுடைய வல்லமைக்கு எல்லை கிடையாது. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே… உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் அவர் (யூதா 24, 2.தீமோ.1:12, எபேசி.3:20 பார்க்க).
ஆயினும் , இதை நடைமுறைக்கிணங்க வாழ்வில் கொண்டு வருகையிலே – இவ்வுலகத்துக்கடுத்த இந்த நமது ஜீவியத்துக்கேற்ப அதை அனுபவரீதியாக்கும்போதே – நாம் காலம் என்கிற கட்டத்திற்குமுன் நிறுத்தப்படுகிறோம். வெளிப்படுத்தின விசேஷம் 14 ம் அதிகாரத்தில் முதற்பலனையும் (வச.4). அறுப்பையும் (வச.15). பற்றிப் படிக்கிறோம். அறுப்புக்கும் முதற்பலனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஒரே விளைச்சல் உண்டாயிருப்பதால், இது தரத்தை பொறுத்த வித்தியாசமாயிருக்கிறதற்கில்லை. அதன் வித்தியாசம் அவைகள் முதிர்கிற காலத்தைப்பற்றியதே. சில பழங்கள் மற்றவைகளைக் காட்டிலும் முன்னதாக முற்றிவிடுகிறதால் அவைகள் முதற்பலன் ஆயின.
வூக்கியன் மாகாணத்திலுள்ள என் சொந்த ஊர், ஆரஞ்சுப் பழங்களுக்குப் பெயர்பெற்றது. உலகெங்கும் அவைகளுக்கு ஈடான பழங்கள் வேறு கிடையாது என்று நான் சொல்லுவேன். ஆரஞ்சுப் பழக் காலத் துவக்கத்தில் மலைச்சரிவுகளைப் பார்ப்பீர்களானால், எல்லாத் தோப்புகளும் பச்சையாக இருக்கும். சற்று உற்றுப் பார்ப்பீர்களேயானால் இங்கும் அங்குமாக மஞ்சள்நிற ஆரஞ்சுகள் அதற்குள்ளாகத் தோன்றியிருக்கக் காண்பீர்கள். பச்சை மரங்களுக்கிடையில் தங்கப் புள்ளிகளாகத் தோன்றும் இந்தக் காட்சி, கண்களுக்கு மிக இனிமையாக இருக்கும். கடைசியில் விளைச்சல் முற்றி, தோப்பு முழுவதும் மஞ்சள் நிறமாகும். ஆனால், முதலில் இந்த முதற்கனிகளே சேர்க்கப்படும். அவைகளை ஒவ்வொன்றாக ஜாக்கிரதையாகக் கைகளினாலே பறித்துச் சேர்ப்பார்கள். இவைகளே சந்தையில் மிக அதிக விலைக்குப் போகும். சில சமயங்களில் பிந்தின பழங்களைப்போல மூன்றத்தனை விலையையும் பெறும்.
எல்லாக் கனிகளும், எப்படியும் இறுதியில் சேகரிக்கப்படும். ஆனால் ஆட்டுக்குட்டியானவர் முதற்பலனையே எதிர்பார்க்கிறார். பத்துக் கன்னிகைகள் உவமையில் உள்ள புத்தியுள்ளவர்கள் மற்றவர்களைவிட திறமையானவர்கள் என்று சொல்வதற்கில்லை. ஆயினும் அவர்கள் குறிப்பிட்ட வேளைக்குமுன் ஆயத்தமாயிருந்தனர். மற்ற ஐவரும் கன்னிகைகளே. அவர்கள் புத்தியற்றவர்கள் என்பது உண்மையேயாயினும் மாய்மாலக்காரர் என்று சொல்வதற்கில்லை. அவர்களும் புத்தியுள்ளவர்களோடுகூட மணவாளனை எதிர்கொண்டழைக்கப் போனவர்கள். அவர்களும் தீவட்டிகளில் எண்ணெய் வைத்திருந்தார்கள். அவர்கள் தீவட்டிகளை; எரிந்துகொண்டும் இருந்தன. ஆனால், அவாகள் மணவாளனுடைய பிந்தின வருகையை எதிர் நோக்காதிருந்தனர். அவர்கள், தீவட்டிகள் அணைந்துபோகிற இந்தச் சமயத்தில், தங்கள் பாத்திரங்களில் கூடுதலான எண்ணெய் வைத்திருக்கவில்லை. அவர்களுக்குக் கொடுத்து உதவும்படி போதுமான எண்ணெய் மற்றவர்களிடமும் இல்லாதிருந்தது.
உங்களை அறியேன் என்று ஆண்டவர் புத்தியில்லாதவர்களுக்குச் சொன்ன வார்த்தைகளினிமித்தம் அநேகர் இங்கு தவறாகப் பொருள் கொள்கிறார்கள். அவர்கள் கற்புள்ள கன்னிகையாக கிறிஸ்துவுக்கு….. ஒப்புக்கொடுக்க (2.கொரி.11:2). நியமிக்கப்பட்ட அவருடைய உண்மையான பிள்ளைகளாயிருந்தால், அவர் எப்படி இந்த வார்த்தைகளை உபயோகிக்கலாம் என்று, அப்படிப்பட்டவர்கள் சந்தேகப்படுகின்றனர். ஆனால் இந்த உவமையினால் போதிக்கப்படும் உள்ளான கருத்து யாதென்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும் அது, மறுமையில் ஆண்டருக்கு ஊழியம் செய்யும்படியாக நமக்கு இருக்கிற ஒரு சிலாக்கியத்தை, போதுமான ஆயத்தமின்மையால் அவருடைய பிள்ளைகள் இழந்துவிடக்கூடும் என்பதேயாகும். அவர்கள் கதவண்டை வந்து, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்று கூறினதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தக் கதவு அது? நிச்சயமாக அது இரட்சிப்பின் கதவல்ல. நீ இரட்சிப்பை இழந்தவனானால், பரலோகத்தின் வாசலண்டை வரவும், தட்டவும் இயலாதே! ஆகையால் நான் உங்களை அறியேன் என்ற ஆண்டவருடைய வார்த்தை, கீழே சொல்லப்படும் உதாரணத்தைக் கொண்டதாயிருக்கிறது.
சியாங்கை பட்டணத்தில் ஒரு போலீஸ் மாஜிஸ்திரேட்டின் மகன் சட்டத்திற்கு மீறின முறையில் வண்டியோட்டினபடியால் பிடிபட்டான். அவனை நியாயாசனத்திற்குமுன் கொண்டுவந்தார்கள். அவனுடைய தகப்பனார் நீதிபதியின் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தாh. நியாய மன்றத்தின் முறைகள் எல்லாம் உலகம் எங்கும் அநேகமாக ஒரேமாதிரியாகவே இருக்கின்றன. அந்தப்படி, உன் பெயர் என்ன? உன் விலாசம் என்ன?
உன் உத்தியோகம் என்ன? என்பன போன்ற கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. ஆச்சரியமுற்றவனாக அவன் தன் தகப்பனை நோக்கி, தகப்பனே, நீர் என்னை அறியவில்லை என்றா கூறுகிறீர் என்றான். நீதிபதி மேஜையைத் தட்டிக் கண்டிப்பான குரலில் வாலிபனே நான் உன்னை அறியேன். உன் பெயர் என்ன? உன் விலாசம் என்ன என்று வினவினார். இந்த வார்த்தைகளினால், தான் அவனை அறியவேயில்லை என்று அவர் பொருள் கொள்ளவில்லை. தன் குடும்பத்திலும், வீட்டிலும் அவர் அவனை அறிந்திருந்தார். ஆனால் இந்த இடத்தில், இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் யாரென்று அவருக்குத் தெரியாது. இப்பொழுதும் அவன் தன் தகப்பனுடைய குமாரனேயாயினும், அவன் நியாயாசன முறையின்படி எல்லாம் நடந்து, தான் செலுத்தவேண்டிய அபராதங்களைச் செலுத்தித் தீர்க்கவேண்டியவனே.
பத்துக் கன்னிகைகளும் தங்கள் தீவட்டிகளில் எண்ணெய் வைத்திருந்தார்கள். புத்தியற்றவர்களை வித்தியாசப்படுத்தினது எதுவென்றால், அவர்கள் தங்கள் பாத்திரங்களில் கூடுதலான எண்ணெயை வைத்திராததே. சிலர் உண்மைக் கிறிஸ்தவர்களாகக் கிறிஸ்துவின் ஜீவனையும், மற்றவர்களுக்குமுன் சாட்சியையும் உடையவர்களாயிருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய சாட்சி தொடர்ந்து வளருகிறதாயில்லை. ஏனெனில், அன்றாடத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியதாக அவர்கள் ஜீவியம் அமையவில்லை. அவர்கள் ஆவியைப் பெற்றிருக்கிறவர்களேயாயினும், அவர்கள் ஆவியினால் நிறைந்து இருக்கவில்லை. நெருக்கடியான காலத்தில், அவர்கள் விற்கிறவர்களிடத்திற்குச் செல்லவேண்டியிருக்கிறது. உவமையின் இறுதியிலே பத்துப் பேரும் போதுமான எண்ணெய் உடையவர்களாயிருந்தார்கள். ஆனால் அவர்களுக்குள் வித்தியாசம் எதுவென்றால், புத்தியுள்ளவர்கள் தேவையுள்ள நேரத்தில் போதுமானதை உடையவர்களாயிருக்க, புத்தியற்றவர்களோ முடிவிலே போதுமானதை உடையவர்களாயிருந்தும், அதைப் பெற்றிருப்பதின் உண்மை இலக்கை இழந்தவர்களானார்கள். கால அளவே இதில் அடங்கிய காரியம். இதையே தம் சீஷர்களுக்கு ஆண்டவர் வலியுறுத்த விரும்பினார். ஏனெனில் அவர்களைச் சாதாரணமானவர்களாய் அல்ல, விழித்திருக்கிறவர்களாகவே இருக்கும்படி உவமையின் முடிவில் ஏவினார்.
துன்மார்க்கத்திற்கு ஏதவான மதுபானக வெறி கொள்ளாமல், ஆவியினால் நிறைந்து இருங்கள் (5:18). இயேசு கிறிஸ்துவை ஏற்றக்கொள்ளுவதைப்பற்றியோ, அல்லது தம் ஊழியக்காரார் ஆவியின் வரங்களைப் பெறும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் இறங்குவதைப்பற்றியோ மத்தேயு 25ல் சொல்லப்படவில்லை. பாத்திரத்தில் கூடுதலாக இருக்கிற எண்ணெயைப்பற்றியே ஒளிவீசுவதற்கான ஆதாரம் காக்கப்படுவதைப்பற்றியே காத்திருக்கும் நேரம் எவ்வளவு அதிகமானதாயிருப்பினும் அதிசயவிதமாய் நமக்குள் தொடர்ந்து ஊற்றப்படும் ஆவியைப் பற்றியே, இங்கு சொல்லப்பட்டிருக்கிறது (உவமையில் தீவட்டி, பாத்திரம் என்று வெவ்வேறாகக் கூறியிருக்க, உள்ளபடி நாமே தீவட்டியாகவும், நாமே பாத்திரமாகவும் இருக்கிறோம்). இந்த உள்ளான நிறைவை அறியாதபடி எந்தக் கிறிஸ்தவன் மோட்சத்தில் நித்தியத்தைக் கழிக்க இயலும்? ஒரு கன்னிகையும் இதை தவிர்க்க முடியாதே! ஆகையால், நமது ஆண்டவர், இந்த நிறைவைப்பற்றிய அறிவை நாம் இப்பொழுதே அறிந்துகொள்ளும்படி பிரயாசப்படுகிறார். நாளையாவது நாழிகையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
நிறைந்து இருங்கள் என்று பரிசுத்த ஆவியைக் குறித்து இங்கு சொல்லப்பட்டிருக்கும் பதம் நாம் சாதாரணமாய் உபயோகிக்கிற ஒரு சொல் அல்ல. எப்பொழுதும் நிறைவுள்ளவர்களாகவே இருக்க உங்களை ஒப்புக்கொடுங்கள் என்பதே இதன் அர்த்தம். பெந்தெகொஸ்தே நாளிலுள்ளதுபோல இது ஓர் அனுபவத்தின் சிகரமல்ல. இது நாம் எந்த நேரமும் இருக்கவேண்டிய ஓருநிலை. இது வெளிப்பிரகாரமான ஒரு காரியமாயிருக்கிறது. ஆவியின் வரங்களுக்குச் சம்பந்தப்பட்டதாயும் வெளியரங்கமான தோற்றங்களாயும் அது இருக்கிறதில்லை. இது நம் ஆத்துமாவினுள் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாயும், அவர் தம் பிரசன்னமாகுதலாகவும் இருந்து, நம் பாத்திரத்திலிருக்கிற வெளிச்சம் மங்காமல், அவசியமானால் நள்ளிரவுக்குப் பின்னும் எரியும் என்பதின் உறுதியாகவும் இருக்கிறது.
இன்னும் பார்க்கப்போனால், இது முழுவதும் ஒருவருக்கே உரிய காரியமுமல்ல, அடுத்த வசனம் (5:19) தெளிவாக்குகிறர்போல, இது மற்ற கிறிஸ்தவர்களோடுகூட, ஒருவரையொருவர் தாங்கினவர்களாய்ப், பகிர்ந்துகொள்ளுகிற ஒரு காரியம். ஏனெனில், ஆவியினால் நிறைந்து இருங்கள் என்பது அந்த வசனத்தின்படி பார்ப்போமானால், உங்கள் இருதயத்தில் கர்த்தரைப்பாடிக்கீர்த்தனம் பண்ணி, என்பதாக மட்டும் இல்லாமல், சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு இருங்கள் என்பதாகவும், இருக்கிறது. நம்மில் சிலருக்குத் தனியாகப் பாடுவதென்பது மிகவும் சுலபமான காரியம். ஆனால் இரண்டு பேராவது, நான்கு பேராவது, தாளத்தோடும் இராகம் பிசகாமலும் பாடுவதென்பதோ அப்படியல்ல, ஆவியில் ஏகசிந்தையாயிருக்கவேண்டும் என்பதே எபேசியர் நிருபத்தின் இரண்டாம் பகுதிக்கு மையப் பொருளாக அமைந்திருக்கிற செய்தியாம் (4,3,15,16 வசனங்களைப் பார்க்க). சிங்காசனத்திற்கு முன்பாக நாமெல்லாரும் ஒருவரோடொருவர் சேர்ந்து புதுப்பாட்டைப் பாடும்படியாகவே ஆவியின் நிறைவு நமக்கு அருளப்பட்டிருக்கிறது (வெளி 14:3).
நீ புத்தியுள்ளவனானால், சீக்கிரத்தில் இந்த நிறைவைத் தேடுவாய். புத்தியற்றவனாயிருந்தால் அதைக் கடத்திப் போடுவாய். புத்தியின்மையோ அல்லது ஞானமோ இந்த ஒரு காரியத்தையே சார்ந்திருக்கிறதென்று நான் மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். நம்மில் சிலர் பிள்ளைகளையுடைய பெற்றோராயிருக்கிறோம். குணாதிசயங்களில் இந்தப் பிள்ளைகள் எவ்வளவு வேறுபட்டவர்களாயிருக்கிறார்கள்! ஒன்று உடனடியாகக் கீழ்ப்படியும், மற்றதோ, காலம் கடத்துகிறதினால் கீழ்ப்படிதலைத் தவிர்த்திட முடியம் என்று நினைக்கும். நீங்கள் இளக்காரமாயிருந்து கட்டளைகளை மீறுகிறதற்கு இடங்கொடுக்கிறவர்களாயிருந்தால், கீழ்ப்படிதலைத் தள்ளிப்போட நினைத்த பிள்ளையே ஞானவான். ஏனெனில் ஒன்றும் செய்யாதிருந்து முடிவில் வெற்றிபெறுகிறவன் அவனே. ஆனால், நீங்கள் உங்கள் வார்த்தைகளில் கண்டிப்பாய் இருந்து, உங்கள் கட்டளைகள் மீற முடியாதபடி எப்படியாகிலும் முடிவில் கீழ்ப்படியும்படியாகவே இருந்ததானால், அந்தக் கட்டத்தை உடனடியாகத் தாண்டும்படி தைரியமாய்ப் பிரயாசப்படுகிற பிள்ளையே ஞானவான்.
தேவனுடைய சித்தத்தைக் குறித்துத் தெளிவுள்ளவர்களாயிருங்கள். தேவனுடைய வார்த்தைகள் தள்ளிவிடக் கூடியவைகளானால் அவைகளினின்று, நாம் மீள முயல்வது புத்தியற்ற காரியமாய்க் காணப்படாது. ஆனால், தேவன் மாறாத சித்தமுடையவராய் மாறாத தெய்வமாக இருப்பாரேயாகில் நீங்கள் ஞானவான்களாயிருக்கப் பாருங்கள். காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட (3:19) பாத்திரத்திலுள்ள கூடுதலான எண்ணெயையே நாடி, அதையே பற்றிக்கொள்ளுங்கள்.
நம்முடைய கேள்விகள் எல்லாவற்றிற்கும், இந்த உவமை பதில் அளிக்கிறதில்லை. புத்தியற்றவர்கள் எவ்விதம் எண்ணெய் கொண்டார்கள்? இது நமக்குச் சொல்லப்படவில்லை. தம்முடைய பிள்ளைகள் முடிவில் நிறைவுள்ளவர்களாயிருக்கும்படி தேவன் கையாளும் உபாயங்கள் இங்கு சொல்லப்படவில்லை. அது நம்முடைய காரியம் அல்ல. நம்முடைய நோக்கம் முதற்பலனைப் பற்றியதேயாகும். நாம் முன்னேறும்படியாகவும், தொடரும்படியாகவும் ஏவப்படுகிறோம். அவ்வாறு முன்னேறாவிட்டால், சம்பவிக்கக் கூடியவை எவை என்று அறிய முயல்வது நமக்கடுத்ததல்ல.
நீ இந்தக் காயரியத்தைக் குறித்து சிரத்தை அற்றவனாயிருக்கிறதினால், நிறைவைத் தவிர்க்கவோ, அல்லது இதற்கான கிரயத்தை செலுத்தாதிருக்கவோ வேண்டியதில்லை என்று நினையாதே. ஞானத்துக்கும் அது காணப்படவேண்டிய காலத்துக்கும் சம்பந்தம் உண்டு. புத்தியுள்ளவர்கள் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுகிறார்கள். என்னுடைய பேனா மையால் நிறைந்து இப்பொழுது எழுதுவதற்கு ஆயத்தமாயிருக்கிறதுபோல, புத்தியுள்ளவர்கள், ஆண்டவருடனே இசைந்து, அவர் விரும்புகிறபடி எந்த நேரத் தேவைக்கும் ஆயத்தமாயிருக்கிற பிரயோஜனமாக ஆயதங்களாக அமைந்து தேவனைத் திருப்தியாக்குகிறார்கள்.
அப்போஸ்தலனான பவுலைப் பாருங்கள். அவர் பற்றி எரியும் ஆத்தும பாரமுடையவராய் இருக்கிறார். நமக்கான கர்த்தருடைய திட்டம் காலங்கள் நிறைவேறுதலோடு பிணைக்கப்பட்டிருக்கிறதைக் காண்கிறார். (1:9). வருங்காலங்களில் விளங்கும்படியான இரட்சிப்பிலே தரித்திருந்து கிறிஸ்துவின்மேல் பின்னே நம்பிக்கையாயிருந்தவர்களுள் ஒருவராயிருக்கிறார் (1:11, 2:26). இவைகள் எல்லாவற்றையும் மனதில் கொண்டவராய் அவர் செய்கிறதென்ன? அவர் நடக்கிறார். அவர் நடக்கிறதுமட்டுமல்ல, ஓடவும் செய்கிறார். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன் (1.கொரி.9:26). கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்கிறார் (பிலி.3:14). ஆவிக்குரிய காரியங்களின் இரகசியங்களைத் தெரிந்து கொண்டு ஆண்டவருடனேகூட நடக்க சிலர் ஆரம்பிக்கிறதை நான் காணும்போது ஆ, இதை அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு கண்டிருந்தார்களேயானால்! என்று என் இருததயத்தில் நினைக்கிறதுமுண்டு. நாம் நடந்து கொண்டு இருக்கிறவர்களாயிருக்கலாம். ஆயினும் காலம் குறுகியதாயிருக்கிறது. கால ஆதாயமே இப்போதைய அவசியமான தேவை. அதனால் நாம் என்னத்தைப் பெறுகிறோம் என்பது காரியமல்ல. ஆண்டவருக்கு இப்பொழுது வேண்டியது என்ன என்பதே காரியம். எந்தச் சமயத்தில் உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதங்களே ஆண்டவரின் தேவை. ஏன்? நாட்கள் பொல்லாதவைகளாயிருப்பதால் இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்தின் தேவைகள் என்னைத் திடுக்கிடச் செய்ய ஏதுவாயிருக்கின்றன. இதைப் பார்க்கும்படியான கண்கள் நமக்கு வேண்டுமே.
நம்முடைய ஆண்டவர் நம்மைக் கரிசனையின்றி பலவந்தமாய் நடத்தவேண்டிய அவசியம் ஏற்படலாம். நான் அகாலப் பிறவி போன்றவன் என்று பவுல் தன்னைக் குறித்துச் சொல்லவேண்டியதாயிருந்தது. இப்போதுள்ள நிலைக்கு வர, அவர் அநேகவிதமான கஷ்டங்களையும் கடக்கவேண்டியிருந்தும், அவர் தொடர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறார். இது எப்பொழுதும் கால அளவைக் குறித்தான ஒரு காரியமே. ஒருவேளை கொஞ்சகாலத்துக்குள், சீக்கிரமாய், தேவன் நமக்குள் கிரியை நடப்பிக்கவேண்டும். எப்படியாகிலும் அந்த அளவு நமக்குள் நடைபெறவேண்டியிருக்கிறது. நம்மை அழைத்ததினால் நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னது (1:18) என்பதை அறிந்துகொள்ளும்படியாக நம் மனக்கண்கள் பிரகாசிக்கப்பட்டு, கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து (5:17) கொண்டவர்களாக நாம் தொடர்ந்து நடப்போமாக. இல்லை, ஓடிப் பிடிப்போமாக. விடாப்பிடியாயிருக்கிற ஆத்துமாக்களைக் கர்த்தர் எப்பொழுதும் நேசிக்கிறார்.











