கலங்காதே மனமே கலங்காதே
நான் உன்னுடன் இருக்கையில் பயமேனோ? (2)
திகையாதே நீ கலங்கிடாதே
நான் உன்னுடன் இருக்கையில் பயமேனோ? (2)
அக்கினியில் நீ நடக்கும்போது
அக்கினி ஜுவாலை அணுகாது (2)
ஆற்றிடுவேன் உன்னைத் தேற்றிடுவேன்
காலமெல்லாம் உன்னை நடத்திடுவேன்
(கலங்காதே….)
அலைபோல் துன்பங்கள் வந்தாலும்
தண்ணீர்கள் உன்மேல் புரள்வதில்லை (2)
ஆற்றிடுவேன் உன்னைத் தேற்றிடுவேன்
காலெமல்லாம் உன்னை நடத்திடுவேன்
(கலங்காதே….)
வேதனையில் நீ துடித்தாலும்
சோதனையில் நீ துவண்டாலும் (2)
ஆற்றிடுவேன் உன்னைத் தேற்றிடுவேன்
காலெமல்லாம் உன்னை நடத்திடுவேன்
(கலங்காதே….)















