பாக்கியவான்கள் யார்?
(மலைப் பிரசங்கத்தின் முதற்பகுதி)
அறிமுகம்
முதலாவது பேறு
‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்யம் அவர்களுடையது”
இரண்டாம் பேறு
‘துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்”
மூன்றாம் பேறு
‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்”
நாலாம் பேறு
‘நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்பதியடைவார்கள்”
ஐந்தாம் பேறு
‘இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்”
ஆறாம் பேறு
‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்”
ஏழாம் பேறு
‘சாமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்”
எட்டாம் பேறு
‘நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே”
முடிவுரை: அருட்பேறுகளும் கிறிஸ்துவும்
அறிமுகம்
கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தின் அமைப்பு, நோக்கம், நடைமுறைப்படுத்தல் குறித்துப் பெரிதும் கருத்து பேறுபாடுகள் உள்ளன. கிறிஸ்தவர்களுக்குரிய நன்னெறிக்கோட்பாடுகளின் தொகுப்பு எனவும் எல்லா மக்களுக்காகவும் அருளப்பட்டுள்ன ஒரு நலமார்ந்த வாழ்க்கைத் தத்துவமாகவும் அதனை மதிக்கின்றனர். காலஞ்சென்ற டால்ஸ்டாய் போன்ற அறிவுடைப் பெருமக்கள், மற்றையோர் அதன் குறிக்கப்பட்ட காலச் சமயநிலையைச் சுட்டிக்காட்டி, இந்நிகழ்காலத்தில் சமயநிலையில் வாழ்கிற பரிசுத்தவான்களுக்கு அது உரிதன்று எனவும் இனி வரவிருக்கிற கிறிஸ்துவின் ஆயிரம்வருட ஆட்சிக்காலத்திலுள்ள விசுவாசிகளுக்கே உரியதாகுமெனவும் வற்புறுத்துகின்றனர். ஆயினும் அதன் மெய்யான உணர்வைத் தூண்டுமாறு இரண்டு வேத வசனங்கள் வெளிப்படுத்துகின்றன. மத்தேயு 5:1-2 வசனங்களில் கிறிஸ்துவானவர் இங்கு தம்முடைய சீடர்களுக்கு உபதேசித்ததாக நாம் காண்கிறோம். மத்தேயு 7:28-29 வசனங்களிலிருந்து அவர் திரள்கூட்டமான மக்களுக்கு உபதேசம்பண்ணினாரென்று நாம் தெளிவாய் அறியலாம். ஆகவே நம்முடைய கிறிஸ்து இயேசுவின் மலைச்சொற்பொழிவில் விசுவாசிகள் அவிசுவாசிகளாகிய இரு சாரார்களுக்கும் தேவையான அறிவுரைகள் அடங்கியுள்ளன என்பது தெளிவு.
குறைபாடுடைய யூதமார்க்கத்தைச் சார்ந்து வாழ்ந்துவந்த பொதுமக்களிடம் நிகழ்த்தப்பெற்ற கிறிஸ்துவின் முதலாவது சொற்பொழிவு இது என்பதனை நாம் உள்ளத்திற்கொள்ளுதல் அவசியம். அவ்வண்ணமே சீடர்களுக்கு இது அவருடைய முதற்பேருரையாகவும் இருத்தல்கூடும். கிறிஸ்துவின் நன்னெறிக் கோட்பாடுகளை உணர்த்துவதோடமையாது. பரிசேய மார்க்கத்திலுள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துமாறு, நியாயப்பிரமாணமுறைகளில் தேறின வேதபாரகர்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புமாறு இம்மலைச் சொற்பொழிவானது அமைந்துள்ளது. மத்தேயு 5:20 ஆம் வசனத்தில், ‘வேதபாரகர் பரிசேயருடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்” என்று அவர் சொல்லுகிறார். மேலும் ஐந்தாம் அதிகாரத்தில் இறுதிமட்டும, அவர் தம்முடைய பேருரையைச் செவிமடுக்கிற மக்கள் அவருடைய நிறைவான நீதியைக் காணுமளவுக்கு அவ்வளவாக விழிப்புணர்த்தும்படி நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய மெய்ந்நிலையினை விளக்கி உரைத்துள்ளார். பரிசேய மார்க்கத்தின் தலைவர் எழுத்தின்படியுள்ள நியாயப்பிரமாணத்தின் புறம்பான சடங்குகளையே வற்புறுத்துகிறபடியால், நியாயப்பிரமாணத்தின் ஆவிக்குரிய மெய்ந்நிலையைக் குறித்துள்ள அவர்களுடைய அறியாமையே பரிசேய மார்க்கத்தின் மெய்யான ஆதாரமாயிருந்தது. ஆகையால்தான், நியாயப்பிரமாணத்தின் உள்ளான மெய்ப்பொருளையும் அதன் தேவையையும் வற்புறுத்துவதன்வாயிலாக யூதமக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழும்புவது நம்முடைய கர்த்தருடைய நன்னோக்கமாயிருந்தது.
இம்மலைப் பிரசங்கமானது, மத்தேயுவின் சுவிசேஷத்தில் மாத்திரமே காணப்பபடுகிறதென்பது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கும் லூக்கா 6ம் அதிகாரத்திலுள்ள சமனான ஓரிடத்தில் நிகழ்த்தப்பெற்ற பிரசங்கத்திற்குமிடையேயுள்ள வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கனவும் எண்ணற்றனவுமாயிருக்கின்றன. நான்கு சுவிசேஷங்களுள் மத்தேயு எழுதின சுவிசேஷமே யூதேயா நாட்டின் பண்பாடுகள் நிறைந்த சுவிசேஷமாயிருக்கிறதென்பது மெய்தான். ஆயினும் கடந்த காலத்திலும் அன்றி எதிர்காலத்திலுமுள்ள யூதர்களுக்குரிய சுவிசேஷமாய்கொண்டு அதன் பயன்படுதன்மையே மட்டுப்படுத்துதல் பெருந்தவறாகும். மத்தேயு சுவிசேஷத்தின் திறப்பின் வாயிலிலுள்ள வசனத்தில் கிறிஸ்துவானவர் இரட்டிப்பான முறையில் அறிமுகப்படுத்தட்டிருப்பதானது அவ்வாறு மட்டுப்படுத்தலாகாதென்று நம்மை எச்சரிக்கிறது. அதில் அவரைத் தாவீதின் குமாரனாகவும், விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பனாகிய (ரோமர் 4:11) ஆபிரகாமின் குமாரனாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை காண்க. ஆகையால், இம்மலைப்பிரசங்கமானது எல்லாக் காலங்களிலும் ஏற்ற ஆவிக்குரிய தத்துவங்களையே விளக்கி உரைக்கிறதென்பதில் நாங்கள் முழு நிச்சயமுள்ளவர்கயரிருக்கிறோம். இந்த அடிப்படையில்தானே மேலும் இதனைத் தொடர்வோம்.
கிறிஸ்துவின் முதலாவது பிரசங்கமானது, அவருடைய முன்னோடியான யோவான் ஸ்நானகனின் பிரசங்கத்தைப் போலவே ‘மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாயிருக்கிறது” (மத்.3:2, 4:7) என்று சிறிய, ஆயினும் தீர்மானமுடைய ஒரே வாக்கியத்தில் தொகுத்துரைக்கப்பட்டுள்ளமை காண்க. பரலோக ராஜ்யம் என்றால் என்ன, அதன் முன்னேற்றம் அல்லது வளர்ச்சியின் நடைமுறைக்குரிய காலம் எது என்று நம்மைப் பெரிதும் ஆர்வமூட்டுகிற பொருள் குறித்து இந்தக் குறுகிய வேத பாடத்தில் ஆராய்வது ஏற்புடைத்தன்று. ஆயினும் பரலோக இராஜ்யத்தின் குடிமக்களையும், அவர்கள் மீது கிறிஸ்துவானவர் அறிவித்துள்ள ஆசீர்வாதத்தின் உன்னதமான முறைகளையுங்குறித்து இந்த எட்டுபேறுகள் நமக்கு அதிகமாய்ப் போதிக்கின்றன.
ஒருமுறை கிறிஸ்துவானவர் மாம்சத்தில் வந்தார். ஆயினும் மறுபடியும் அவர் வரப்போகிறார். அவருடைய இவ்விருவருகைகளும் பரலோக இராஜ்யத்துடன் தொடர்புடைய ஒரு சிறந்த நோக்கத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. தனிப்பட்ட ஆத்துமாக்களுக்குள் பரலோக இராஜ்யமாகிய பேரரசின் அடிக்கல் நாட்டி அவர்கள் நடுவிலும் அவர்கள் மீதும் அவ்வரவை நிலை நாட்டும் நோக்கத்துடன் நம்முடைய கர்த்தருடைய முதலாம் வருகை அமைந்தது. அவருடைய இரண்டாம் வருகையோ அப்பேரரசினை மகிமையில் நிலைநிறுத்தும்படி அமையும். ஆகையால், நாம் பரலோக இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களா என்றும், அந்த இராஜ்யத்தின் சிறப்புரிமைகள், காப்புரிமைகள் வருங்காலத்தின் பலன் ஆகியவை நிகழ்கால எதிர்காலங்களிலுள்ள நம்முடைய சுதந்திரத்தின் ஒரு பாகமாயிருக்கின்றனவா என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.
அதன்பொருட்டுப் பரலோக இராஜ்யத்தில் வாழ்கிற குடிமக்களின் ஓழுக்க நிலை குறித்து அறிந்துகொள்வது நமக்கு இன்றியமையாத உயிர்நிலைத் தேவையாயிருக்கிறது. இப்பேறுகள் போதிக்கிற, நம்முடைய பயபக்திக்கும் கவனத்திற்குமுரிய இப்பாடத்தின் இன்றியமையா நிலை இவ்வாறு அறிந்துகொள்ளமுடியும். அதனை நாம் முழுமையாகவே ஆராயவேண்டும். இப்பேறுகளுள் ஒன்றை மாத்திரம் ஆராயும்படி நாம் எடுத்துக்கொள்ளமுடியாது. இப்பேறுகள் அனைத்தும் ஒரு கருத்தோவியமாய்க் காட்சியளிக்கின்றன. ஒர் ஓவியன் ஒரு படத்தினை வரையும்போது, அப்படத்திலுள்ள ஒவ்வொரு கோடும் எழிலுடன் கூடிய ஒவியனின் கைவண்ணத்துடன் காட்சியளிக்கிறது. அக்கோடுகளிடையேயுள்ள உறவுமுறையே அவைகளின் ஒன்றிசைந்து ஒளிருகிற ஒருமைப்பாடுதான் வெளிப்படுத்துகிறது. ஆயினும் வேறுவேறான கலைவடிவங்களும் எழில் நுட்பங்களுமாகிய அவைகளின் சேர்க்கை நிலையில்தான், கண்களைக் கவருகிற முழுமையான படம் நம்முன்னாக் காட்சியளிக்கிறது.
அவ்வண்ணமே மலைப்பிரசங்கத்திலுள்ள இவ்வெட்டுபேறுகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட நிலைமையில் தனக்கே உரிய அழகோடும் பொலிவோடும் விளங்கி நம்முடைய ஆண்டவருடைய கைவண்ணத்தைக் காண்பிக்குமாயினும், அவைகளின் சேர்க்கை நிலையி;ல்தான் பரலோக இராஜ்யத்தில் வாழ்கிற ஒரு குடிமகனுடைய முழுமையான ஓவியத்தை நாம் பெற்றுக்கொள்ளுகிறோம்.
‘பணமுமின்றி விலையுமின்றி” (ஏசாயா 55:1) தேவனுடைய மாபெரும் இரட்சிப்பானது இலவசமாய் நமக்கு வழங்கப்படுகிறது. இது தேவனுடைய கிருபையின் வரமாகிய மகா இரக்கத்தின் ஈவு. விலைகொடுத்து வாங்கும்படி தேவன் தம்முடைய இரட்சிப்பினை விலைக்கு வழங்குவாராயின், ஏழைப் பாவியாகிய மனிதன் இதனைப் பெற்றுக்கொள்ள முடியாது. விலை கொடுத்து வாங்க அவனிடம் பணமில்லை. ஆயினும், பெரும்பான்மையான மக்களோ இதனை உணராமலிருக்கிறார்கள்: ஆம் பாவத்தின் விளைவாய் நம்முடைய அகக்கண் பார்வையே இழந்த நம்முடைய குருடான கண்களைப் பரிசுத்த ஆவியாதனவர் திறந்தருளின நாள்மட்டும் நாமும் அவர்களைப்போலவே உணர்வில்லாமலிருந்தோம். மரணத்திலிருந்து ஜீவனுக்குள் கடந்து வருகிறவர்களும், தங்களுடைய வறுமையின் கொடுமையை உணர்கிறவர்களும் பிச்சைக்காரர்களுக்குரிய நிலையின் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாகிய மக்களே தேவன் அளிக்கிற இத்திருவருட் பிச்சையைப் பெற்று மகிழ்கின்றனர். அவர்களே இம்மெய்யான செல்வத்i நாடித்தேட மேலும் முற்படுகின்றனர். ‘தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது” (மத் 11:5) என்பது இதுவே. அவர்களுடைய செவிகளுக்கு மட்டுமல்ல, அவருடைய இருதயதங்களுக்கும் அறிவிக்கப்படுவது இதுவே.
பரிசுத்த ஆவியானவர் தம்முடைய செயலின்படியே ஒருவனுடைய உள்ளத்தில் ஆவியின் எளிமையினை அதாவது வெளுமையும் சிறுமையுமான அவனுடைய நிலைமையினை உணர்த்தும்பொழுதுதான், அவனுக்கு விழிப்புணர்வு உண்டாகிறது. ‘என்னுடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தையாயிருக்கிறது” (ஏசாயா 63:6). என்னும் வேதனை நிறைந்த கண்டுபிடிப்பிலிருந்தே இவ்விழிப்புணர்வு தோன்றுகிறது. மும்மைசால் பரிசுத்தராகிய தேவனுடைய முன்னிலையில் என்னுடைய மகா மேன்மையான செயல்கள் ஒரு பொருட்டல்ல: அவைகள் யாவும் அருவருப்பானவைகளே என்னும் மெய்ந்pலையாகிய இந்த விழிப்புணர்வைத் தொடர்வதே இக்கண்டுபிடிப்பு. இவ்வாறாகவே ஆவியில் எளிமையுள்ளவன் நரகத்திற்கேயுரிய தன்னுடைய தகுதியற்ற நிலையினை உணர்ந்துகொள்ளுகிறான்.
ஆவியில் எளிமையுடைமை நம்முடைய விசுவாசத்தின் ஒரு மறைமுகமான பாகமாயிருக்கிறது. கிறிஸ்துவின் மாமிசத்தை உண்பதும் அவருடைய பரிசுத்தமான இரத்தத்தை; பானம் பண்ணுவதுமாகிய (யோவான் 6:48-58) ஆவிக்குரிய வாழ்க்கைக்கேதுவாயிருக்கிற விசுவாசத்தினால் அவரைப் பற்றிக்கொள்ளும் நம்முடைய உறுதிப்பாட்டினை, முற்றிலும் தகுதியற்ற நிலையிலுள்ள நம்முடைய உணர்வுள்ளமானது முந்திக்கொள்ளவேண்டும். தன்னயமான நம்முடைய உள்ளத்தைக் காலி பண்ணுவதும் அங்கே கிறிஸ்துவானவரை நிரமம்புவதும் பரிசுத்த ஆவியானவருடைய வேலையாகும்.
இவ்வாறாக உன்னதத்திலிருந்து மறுபடியும் பிறக்கிற ஆத்துமாக்களில் குடிகொண்டுள்ள மறைவான அருங்குணத்தை வெளியரங்கமாய் விளங்கப்பண்ணுதற்கு மூலாதாரமாயிருப்பது ஆவியில் எளிமையுடைமை என்னும் இம்முதலாவது பேறுதான். ஆவியில் எளிமையுள்ள மனிதன் அவனுடைய பார்வையில் ஒன்றுமில்லாதவன். தேவனுடைய சந்நிதியிலோ அவர் தூளும் சாம்பலிலுமிருப்பதினையே தனக்குரிய இடமாக மதிக்கிறான். பொய்யான உபதேசத்திலோ அன்றி இவ்வுலகத்தின் ஆசை இச்சைகளினாலோ அவன் தனக்குரிய இடத்தை விட்டுச் சென்றாலும், அவனை மறுபடியும் கொண்டுவருவது எப்படி என்பதனைத் தேவன் அறிவார். தேவன்தாமே தம்முடைய உண்மைக்கும் அன்பிற்குமேற்ப அதனை நிறைவேற்றுவார். தங்களைத் தாங்களே தாழ்த்துகிற தாழ்மையின் இடமே, தேவனுடைய சந்நிதியில் அவருடைய பிள்ளைகளுக்குரிய ஆசீர்வாதங்களின் உறைவிடமாகும். இவ்வாறு தேவனை மகிமைப்புடுத்துவதற்கேதுவாகிய ஆவியின் எளிமையைப் பரிந்தோம்பிக் கொப்புதற்குரிய வழிமுறையானது மத்தேயு 11:29 வசனத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆவியில் எளிமையுடையவன் இப்பொழுது தனக்கேயுரிய மாம்ச சுபாவத்தின் எதிர்மறையான ஓர் உள்ளப்பாங்கினைக் கொண்டொழுகின்றான். கிருபையின் தெய்வீகமான கிரியை அவனுக்குள்ளே நடைபெறுகிறதென்பதற்குரிய முதன்மையும் ஊறுதியான சாட்சியினை அவன் உடைமையாகக் கொண்டுள்ளான். ஆவியின் எளிமையானது மெய்யான ஆவிக்குரிய வளர்ச்சிக்காகவும் வளப்பத்திற்காகவும் தனக்குப் புறம்பே அவனை நோக்கச் செய்கிறது. அவன் பரலோக இராஜ்யத்தின் சுதந்தரவாளியாயிருக்கிறான். இவ்வாறு ஆவியின் எளிமையைத் தனது உடைமையாக்கிக்கொண்டு வாழ்கிறபடியால், அவனே பாக்கியவான்!










