• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

3. மூன்றாம் பேறு

April 16, 2016
in கிறிஸ்தவ நூற்கள், பாக்கியவான்கள் யார்?
0 0
0. பாக்கியவான்கள் யார்?
  1. மூன்றாம் பேறு

‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” மத்.5:5.

சாந்தம் என்னும் சொல்லின் சிறப்புடைமை குறித்துப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதனைச் சிலர் பொறுமை என்றும் அமைதியடக்கத்தின் ஆவி என்றும் பொருள்கொள்ளுகின்றனர். தன்னலமின்மையும், தன்னைத் தானே மறுதலித்தலுமாகிய அருங்குணம் என்பர் வேறு சிலர். தயவுடன் மற்றவர்களால் உண்டாகும் இன்னல்களைச் சகித்துக்கொண்டு பதிலுக்குப் பதில் செய்யாதிருக்கிற ஆவியே சாந்தமாகும் என்பர் இன்னும் சிலர். இவ்விளக்கங்களில் சாந்தம் என்னும் சொல்லின் பொருள்பயன் ஓரளவு தொனிப்பது மெய்தான். அதில் ஐயமில்லை. ஆயினும் மூன்றாவது அருட்பேறாகிய இதனை முறைப்படி நோக்குமிடத்து மேற்காணும் பொருள்கோளின் கண்ணே ஆழமில்லாதிருப்பது தெளிவாகப் புலப்படும். பொதுவாக நாம் சாந்தத்தினை மனத்தாழ்மையுடன் இணைத்து பொருள் விளக்கம் அளிக்கிறோம். சாந்தகுணமுள்ளவர்கள் அதாவது மனத்தாழ்மையுள்ளவர்கள் பாக்கியவான்கள். இப்பொருள் விளக்கத்திற்கு ஆதாரமாக ஒப்புடைய வேத வாக்கியங்களை நோக்குவோம்.

நம்முடைய வேதாகமத்தில் சாந்தம் என்னும் சொல்லானது முதன்முறைவாக எண்ணாகமம் 12:3 வசனத்தில்தான் காணப்படுகிறது. இந்த வசனத்தின் முன்னே காணப்படுகிற வேதவாக்கியங்களிலுள்ள முரண்பாட்டினைத் தேவனுடைய ஆவியானவர் நமக்குச் சுட்டிக்காண்பிக்கிறார். அங்கே மீரியாமும் ஆரோனும் மோசேக்கு விரோதமாய்ப் பேசி, ‘கர்த்தர் மோசேயைக் கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ?” என்று சொன்னார்கள். மேலும் மீரியாம், ஆரோன் ஆகியவர்களுடைய பெருமை, மனமேட்டிமை, தன்நல நாட்டம், பதவிமோகம் முதலான கேடுகளை அவர்களுடைய வாய்மொழியே வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு முற்றிலும் மாறாக மோசேயோ மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருத்தானென்று நாம் வாசிக்கிறோம். ஆகவே தன்னுடைய தமையன், தமக்கையாகியவர்களிடம் குடிகொண்டிருந்த ஆவிக்கு முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆவியினால் மோசே இயக்கப்பட்டானென்றுதானே நாம் பொருள்கொள்ளவேண்டும்.

மனத்தாழ்மை,, பணிவுடைமை, தன்னலத்துறவு ஆகிய அருங்குணங்களுடன் திகழ்ந்தான் மோசே. எபிரெயர் 11:24-26 வசனங்களில் இவ்வருங்குணங்கள் நம்முடைய பாராட்டுதலுக்கும் போதனைக்குமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வுலகத்தின் பாராட்டுதலுக்கும், பூமிக்குரிய செல்வங்களுக்கும் புறமுதுகுகாட்டி, அரச வாழ்வைத் துறந்து, அந்நியனும் பரதேசியுமாய் வாழ்கிற வாழ்க்கையைத் தெரிந்துகொண்டான். யேகோவாகிய தேவன் மீதியானியருடைய நாட்டில் மோசேக்கு முதன்முறையாகத் தரிசனமாகி, தம்முடைய ஜனங்களை எகிப்தினின்றும் நடத்திச் செல்லும்படி அவனுக்குக் கட்டளையிட்டபோதும், அவனுடைய மனத்தாழ்மையை நாம் மீண்டும் காணலாகும். ‘பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும் நான் எம்மாத்திரம்” என்றான் மோசே (யாத்.3:11) என்னே இவ்வாய்மொழி உணர்த்துகிற மோசேயின் மனத்தாழ்மை! மிகவும் சாந்தமுள்ளவன் மோசே.

மேற்காணும் சாந்தத்திற்குரிய சொற்பொருள் விளக்கத்தினையே ஏனைய வேதவாக்கியங்களும் அறிவுறுத்துகின்றன. இத்தகைய விளக்கமே தேவையாயிருக்குpறது. ‘சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்” (சங்.25:9). தேவன் தாமே போதித்து ஆலோசனை சொல்லும்படி சாந்தமும் மனத்தாழ்மையுமுள்ள மக்களுக்கு வாக்குப்பண்ணியுள்ளாரென்று பொருள்கொள்வதல்லாமல், இவ் வேத வாக்கியத்திற்கு வேறு பொருளுமுண்டோ? ‘இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு உன்னிடத்தில் வருகிறார்” (மத்.21:5). சாந்தம், மனத்தாழ்மை ஆகிய அருங்;குணங்களின் அவதாரத்தினையே நாம் இங்குக் காண்கிறோம். ‘சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ண வேண்டும். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு” (கலா.6:1). தவறுகிற ஒரு சகோதரனைச் சீர்பொருந்தப்பண்ணும்படி தேவன் பயன்படுத்துகிற ஒருவனுக்கும் பெரிதும் வேண்டற்பாலது சாந்தமுள்ள ஆவிதான் என்பது இதனால் விளங்குகிறதல்லவா? சாந்தமும் மனத்தாழ்மையுள்ளவராகிய இயேசுவிடமிருந்தே நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ‘சாந்தமும் மனத்தாழ்மையும்” என்னும் சொற்றொடரில் பின்னருள்ள மனத்தாழ்மைiயே முன்னருள்ள சாந்தத்தின் வளக்குமாகும். எபேசியர் 4:2 வசனத்தில் மனத்தாழ்மையும் சாந்தமும்” என்னும் முறைமையின்படி மீண்டும் இணைந்து காட்சியளித்தல் காண்க. மத்.11:29 வசனத்திலுள்ள முறைமையின்னை இடம் மாற்றி இங்கு உரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சொற்றொடரிலுள்ள இரண்டு சொற்களும் ஒரு பொருட்பன்மொழியாயிருப்பதனையே இது நமக்குச் சுட்டிக்காண்பிக்கிறது.

வேதாகமத்தில் சாந்தம் என்னும் சொல்லானது பணிவுடைமையும் மனத்தாழ்மையையும் குறிப்பிடுகிறது என்பதனை வேத வாக்கியங்களின் வாயிலாக நாம் இதுகாறும் நிலைநாட்ட முயன்றோம். இப்பொழுது இத்தகைய சாந்தமானது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப எவ்வண்ணமாய்த் தோற்றமளிக்கிறது என்பதனை நோக்குவோம். பட்டறிவினால் ஆத்துமாவில் உணரத்தக்கவாறு, கிருபையினால் உண்டாகிற தேவனுடைய செயலின் முறையான வளர்ச்சியினை, நம்முடைய கர்த்தர் இத்திருவருட்பேறுகளில் விளக்கி உரைக்கிறாரென்பதை நாம் எப்பொழுதும் உள்ளத்தில் கொள்ளவேண்டும். முதலாவதாக, ஆவியில் எளிமை அதாவது நம்முடைய போதாமை, ஒன்றுமில்லா நிலைமையாகியவைகளை உணருகிற உணர்வு ஆகும். அடுத்தபடியாக, நம்முடைய காணமற்போன நிலைமையையும் தேவனுக்கு விரோதமான நம்முடைய பாவங்களையும் பற்றிய துயர நிலையாகும். ஆவிக்குரிய அனுபவத்தின் ஒழுங்குமுறையில், இதனை தொடர்வதுதான் ஆத்துமாவின் தாழ்மை நிலையாகும்.

ஒருவனுடைய ஒன்றுமில்லாமையையும் சிறுமையையும் உணரத்தக்கவண்ணம் தேவனுடைய ஆவியானவர் செயலாற்றும்பொழுது, அவன் தேவனுடைய சமுகத்தில் தூளிலும் சாம்பலிலும் இருக்கிற நிலைக்குள் கொண்டுவரப்படுகிறான். சுவிசேஷ ஊழியத்தில் தேவன் தம் கரங்களில் எடுத்துப் பயன்படுத்துகிற ஒருவனைக்குறித்துப் பேசும்போது, அப்போஸ்தலனாகிய பவுல், ‘எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்திற்கேற்றவைகளாயிராமல் தேவபலமுள்ளுவைகளாயிருக்கின்றன. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவிற்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயுமிருக்கிறோம்” (2.கொரி. 10:4-5) என்று சொல்லுகிறார். அப்போஸ்தலன் ஈண்டுப் பயன்படுத்துகிற போராயுதங்கள், தேடிக் கண்டுபிடித்து, ஆக்கினைக்குள்ளாக்கி, தாழ்த்திக் கீழ்ப்படியுமாறு செய்கிற வேத வாக்கியங்களாகிய சத்தியங்களேயாகும். தேவ ஆவியானவரால் வல்லமையாய்ப் பயன்படுத்தப்படுகிற இந்த வேதவாக்கியங்கள் எல்லா அரண்களையும் நிர்மூலமாக்கத்தக்க வல்லமையுள்ள போராயுதங்களாயிருக்கின்றன. அதாவது பாவத்தில் உழல்கிற மக்கள் அடைக்கலமாகக் கொண்டுள்ள அவர்களுடைய எல்லாவிதமான தப்பெண்ணங்களையும், தம்மைத் தாமே நீதிகரித்துக்கொள்ளுகிற அவர்களுடைய தற்காப்பினையும் வேதவாக்கியங்களாகிய போராயுதங்கள் நிர்மூலமாக்குகின்றன. இவ்மெய்ந்நிலை விளைவுகள் மாறாதவை. இன்னும் நடைமுறை வாழ்க்கையில் காணலாகும். மேட்டிமையான சிந்தனைகள், தர்க்கங்கள், மாம்ச சிந்தையிலுள்ள பகைமை, இரட்சிப்பைப் குறித்து புதிதாய் மறுபடியும் பிறந்த உள்ளங்களில் எழுகிற எதிர்ப்பு முதலானவைகள் கிறிஸ்துவுக்குள் கீழ்ப்படியுமாறு இப்பொழுதும் சிறையாக்கப்படுகின்றன.

பொதுவாகப் பாவிகள் எல்லாரும் தனித்தனியே ஒவ்வொருவரும் நியாயப்பிரமாணக் கிரியைகளினால் தங்களை நீதிமான்களாக்கிக்கொள்ளுகிற பரிசேயர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். நம்முடைய நிர்வாணத்தையும் அவமானத்தையும் மூடிக்கொள்ளுமாறு நாமே நமக்கு ஒரு போர்வையை உண்டாக்கிக் கொள்ளுகிற மனப்பான்மையை நாம் நம்முடைய ஆதி பிதாக்களிடமிருந்துச் சுதந்தரித்துக்கொண்டிருக்கிறோம். மனுக்குலத்தில் தோன்றிய மக்களாகிய நாமனைவரும் நிலத்தில் நம்முடைய உழைப்பின் பயனாகிய விளைபொருள்களைக் காணிக்கையாய்த் தேவனுக்குச் செலுத்த முற்பட்ட காயீன் வழியில் நடக்கிறோம். அதாவது நாம் ஈட்டிய புண்ணியத்தினை ஆதாரமாகக்கொண்டு தேவனுடைய சமுகத்தில் நிற்குமாறுள்ள ஒரு நிலையை விரும்புகிறோம். நம்முடைய நற்செயல்களினால் தேவனுடைய இரட்சிப்பை விலைக்கு வாங்க முற்படுகிறோம். அவ்வண்ணமே பரலோகத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவும் வாஞ்சிக்கிறோம். ஆயினும் தேவனுடைய இரட்சிப்பின் வழியோ மாம்ச சிந்தையானது கற்றுக்கொள்ள முடியாதளவுக்கு நம்மை நாமே தாழ்த்துகிற தாழ்மையின் வழியாயிருக்கிறது. இத்தாழ்மையின் வழியானது தற்புகழ்ச்சிக்கும் பெருமைக்கும் ஆதாரமான அடித்தளத்தினை அகற்றி அப்புறப்படுத்துகிறது. ஆகையால், தேவனுடைய இரட்சிப்பானது மறுபிறப்படையாத மேட்டிமையான உள்ளங்களால் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது.

தன்னுடைய இரட்சிப்பில் தன்னுடைய புண்ணியச்செயல்களுக்கும் இடம் வேண்டுமென விரும்புகிறான் மனிதன். ‘எதையும் தேவன் அவனிடமிருந்து ஏற்றுக்கொள்ள மாட்டார். இரட்சிப்பு தெய்வீகமான இரக்கத்தினால் மாத்திரம் உண்டாகிற பொருள். தேவனது அன்பின் ஈவாகப் பெற்றுக்கொள்ளும்படி வெறுங்கையோடு வருகிறவர்களுக்கே நித்திய வாழ்வுண்டு” என்று சொல்லுவோமாயின், அது சுயநீதியைச் சார்ந்தொழுகும் மார்க்கத்தார்க்கு வெறுப்புண்டாக்குகிறது. ஆயினும் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கும், தங்களுடைய கேடும் நிர்ப்பந்தமுமான நிலைமையைக்குறித்து துயருறுவார்க்கும் அவ்வாறன்று. தேவ இரக்கம் என்னும் சொல்லானது அவர்களின் காதுகளில் இன்னிசைக் கீதமாய் ஒலிக்கிறது. இலவசமான ஈவாகிய தேவனுடைய நித்திய வாழ்க்கையானது அவர்களுடைய ஏழ்மை நிலைக்கு ஏற்புடையதாயிருக்கிறது. எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர்கள் விரும்புவதெல்லாம், நரகத்துக்குரியவர்களாகிய தமக்குத் தேவன் அருளுகிற தன்னேரில்லாத தயவு அதாவது அவருடைய கிருபைதான்! அத்தகையோருடைய உள்ளங்களில் தங்களை நீதிகரித்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிற சிந்தனைக்கு இடமில்லை. தேவனுடைய தயவுள்ள ஈவுக்கு விரோதமாகவுள்ள அவர்களுடைய எல்லா இறுமாப்புடைய எதிர்ப்புகளும் ஓசைபடாது ஓடுங்கின. தங்களைப் பிச்சைக்காரர்களாக மதித்து அந்நிலையில் மகிழ்ச்சியுடன் அவர்கள் தேவனுடைய சமுகத்தில் தங்களைத் தூளிலும் சாம்பலிலும் தாழ்த்துகிறார்கள். தேவனுடைய ஊழியக்காரன் விதித்த தாழ்மையின் நிபந்தனைகளை நாகமான் முதல் எதிர்த்தார். அவனைப்போலவே அவர்களும் முதற்கண் எதிர்த்தார்கள்தான். ஆயினும் நாகமானைப்போலவே அவர்களும் மேட்டிமை என்னும் தங்கள் இரதங்களைவிட்டு இறங்கிவந்து, தேவனுக்கு முன்பாக இப்பொழுதே தூளிலும் சாம்பலிலும் அமர்ந்திருக்கிறார்கள்.

நாகமான் தன்னைத் தாழ்த்தி, தேவனுடைய ஊழியக்காரன் சொல்லிய வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொண்டபோது, தன் குஷ்டரோகத்தினின்றும் முற்றுமாய்க் குணமாக்கப்பட்டான். அவ்வண்ணமே பாவியானவன் தன் சிறுமை நிலையை உணர்ந்து ஒப்புக்கொள்ளும் போது தேவதயவு அவன் முன்னர்க் காட்சியளிக்கிறது. ‘சாந்தகுணமுள்ளவன் பாக்கியவான்” என்னும் அருட்பேற்றினை அவனே பெற்றுக்கொள்ளுகிறான். ஏசாயாவின் வாயினால் மிகுந்த ஆவலோடும் எதிர்பார்ப்பபோடும் பேசுகிற நம்முடைய இரட்சகர், ‘சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்” (ஏசா.61:1) என்று கூறியுள்ளார். மேலும், ‘கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார். சாந்த குணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்” (சங்.149:4) என்றும் எழுதப்பட்டுள்ளது.

இரட்சிப்பைக் குறித்துள்ள தேவனுடைய வழிமுறைக்குக் கீழ்ப்படிகிற ஆத்துமாவின் தாழ்மையே இம்மூன்றாவது அருட்பேற்றின் முதன்மையான பொருட்பயனாயிருப்பினும், அதன் பயன்படும் தன்மையை அத்துடன் அடக்கிக் கட்டுப்படுத்தப்கூடாது. பச்சிளங் காயானது முதிர்ந்து சுவை மிகுந்த தீங்கனியாய் மாறுவதுபோலவே சாந்தமானது உள்ளுயிர்ப்பாகமாய்க் கிறிஸ்தவனுக்குள்ளும் அவன் வாயிலாகவும் விளைந்து முற்றிப்பழுத்த ஆவியின் கனியாயுமிருக்கிறது (கலா.5:22-23). சிட்சைகளும் பாடுகளுமாகிய தேவனுடைய பள்ளியில் பயில்கிறவர்களும், அவருடைய சித்தத்திற்குள் இனிதே அடங்கி அமைதியுடன் வாழ்கிறவர்களுமாகிய பெருமக்களிடம் காணப்படுகிற ஆவியின் அருங்குணமே இச்சாந்தமாகும். இச்சாந்தமானது ஆளுகைசெய்யும்போது, நிந்தைகளையும் பாடுகளையும் பொறுமையோடே சகித்துக்கொள்ளுமாறு விசுவாசியானவனிடத்திலுள்ள தேவ கிருபை அவனைத் தாங்குகிறது. பரிசுத்தவான்களில் மிகவும் சிறியவர்களாலும் போதிக்கப்படவும் கடிந்துகொள்ளப்படவும் அவனை அக்கிருபையே ஆயத்தமாக்குகிறது. மற்றவர்களைத் தன்னிலும் மேலானவர்களாய் மதிக்கிற மனநிலைக்குள் அவனை அக்கிருபையே நடத்துகிறது (பிலி.2:3). மேலும் அவனிடம் காணப்படுகிற நம்மைகள் யாவற்றிற்கும் உன்னதமான தேவனுடைய கிருபையே முதற்காரணமாகுமென்று சொல்லி அறிக்கையிடுமாறு அக்கிருபையே அவனுக்குப் போதிக்கிறது.

இதற்கு மாறாக, மெய்யான சாந்தகுணமானது பெலவீனமன்று. இதனை மெய்ப்பித்துக் காண்பிக்கிற சிறப்புக்குரிய நிகழ்ச்சியினை அப்போஸ்தலர் 16:35-37 வசனங்களில் காணலாகும். அப்போஸ்தலர்களின் நேர்மையின்றித் தவறான முறைமையின்படி அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டார்கள். மறுநாளில் அவர்களை விடுவிக்கும்படி அதிகாரிகள் ஆணை பிறப்பித்தார்கள். ஆயினும் சேவகர்களிடம் பவுல், ‘அவர்களே வந்து எங்களை வெளியே அழைத்து அனுப்பி விடட்டும்” என்று சொன்னான். தேவன் அருளும் சாந்தகுணமானது தேவன் அருளிய உரிமைகளைப் பாதுகாக்கும்படி எழுந்து நிற்கும். பிரதான ஆசாரியனுடைய அதிகாரிகளில் ஒருவன் இயேசுவை ஓர் அறை அறைந்தபோது, ‘நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால் தகாததை ஒப்புவி, நான் தகுதியாய்ப் பேசினதுண்டானால் தகாததை ஒப்புவி. நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில் என்னை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார் இயேசு (யோ.18:23).

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருந்தார். அவர் மாத்திரமே சாந்தமுள்ள ஆவியின் மெய்யான தன்மையினைத் தக்க சான்றுகளின் வாயிலாக விளக்கிக் காண்பித்தார். ஆயினும் அவருடைய பிள்ளைகளிடமோ இந்நலமிக்க ஆவியானது ஊசலாடுகிறது. மாமிசத்தின் எழுச்சியின் காரணமாகப் பற்பல வேளைகளில் மறைக்கப்படுகிறது. மோசேயைக் குறித்து, ‘அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினாலே பதறிப் பேசினான்” (சங்.106:33) என்று சொல்லப்பட்டுள்ளது. எசேக்கியேல் தன்னைக்குறித்து, ‘நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன். ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது” (எசேக்.3:14) என்று சொல்லுகிறான். யோனாவைக் குறித்து அவனுடைய அதிசயமான விடுதலைக்குப் பின்னர், இது அவனுக்கு மிகவும் விசனமாயிருந்தது. அவனுக்குள் கோபங்கொண்டான் (யோனா 4:1) என்று நாம் வாசிக்கிறோம். சாந்தமுள்ள பர்னபாவும் கடுங்கோபங்கொண்டு பவுலை விட்டுப் பிரிந்தார் (அப். 15:37-39) இவைகளெல்லாம் நமக்கு எச்சரிப்புகளாயிருக்கின்றன! பாருங்கள்! கிறிஸ்துவிடமிருந்து எவ்வளவு அதிகமாக நாம் கற்றுக்கொள்ளவேண்டியவர்களாயிருக்கிறோம்!

‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” சங்.37:11 வசனத்தைப் பயன்படுத்தி அதன் பொருளை நம்முடைய கர்த்தர் மறைமுகமாய்க் குறிப்பிடுகிறார். ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” இவ்வாக்குத்தத்தமானது எழுத்தின்படியும் ஆவிக்குரிய பொருளின்படியும் இருவகையான நன்மைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இம்மைக்கண் நலமானவற்றை மிகப்பெரிய அளவாக அனுபவிப்பார்கள் சாந்தகுணமுள்ளவர்களேயாவர். பேராசையும் பிறன் பொருள் கவரும் பொருளாசையுமாகிய கொடிய ஆவியினின்றும் விடுதலைபெற்று, உள்ளதுகொண்டு மனநிறைவு பெற்றுள்ளனர். ‘அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது” (சங்.37:16). போதுமென்னும் மனநிறைவு சாந்தமுள்ள ஆவியின் கனிகளில் ஒன்றாகும். ஏராளமான நிலபுலங்களை உடையவர்களாயினும், மேட்டிமையான சிந்தையுடன் அமைதியின்றி வாழுகிற மக்களோ இப்பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளமாட்டார்கள். அரண்மனையில் வாழும் கொடுங்கோலனைக்காட்டிலும் குடிசையில் வாழுகிற எளிமையுள்ளம் படைத்த கிறிஸ்தவனே பேரின்பம் துய்க்கிறான். ‘சஞ்சலத்தோடுகூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்துடன் கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்” (நீதி.15:16).

‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” நாம் பாhத்தவண்ணமே இம்மூன்றாவது அருட்பேறானது சங்கீதம் 37:11 வசனத்தை குறிப்பாய் உணர்த்துகிற ஒரு மேற்கோளாயிருக்கிறது. புதிய ஏற்பாட்டின் சத்தியத்தை வெளிப்படுத்தும்படி நம்முடைய கர்த்தர் பழைய ஏற்பாட்டின் வாசகத்தைப் பயன்படுத்துகிறார். மேலும் யோவான் 6:50-58 வசனத்திலுள்ள தண்ணீரும் இரத்தமும், யோவான் 3:5 வசனத்திலுள்ளு தண்ணீரும் உன்னதத்திலிருந்து மறுபடியும் பிறந்தவர்களுக்கு ஓர் ஆவிக்குரிய மெய்ப்பொருளை உணர்ததுகின்றன. அவ்வண்ணமே ஈண்டும் பூமி அல்லது நிலம் என்னும் சொல்லும் ஓர் ஆவிக்குரிய மெய்ப்பொருளை உணர்த்துகின்றது. பூமி என்றும் நிலம் என்றும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள எபிரெய, கிரேக்க மொழிகளிலுள்ள சொற்களை எழுத்தின்படியும் ஆவிக்குரிய பொருளின்படியும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப நாம் மொழிபெயர்க்கலாகும்.

‘அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” என்னும் இயேசுவின் வாய்மொழியானது எழுத்தின்படி ‘வாக்குத்தத்தத்தின் தேசமாகிய” கானான் நாட்டைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்று பொருள்படும். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசன வாசகத்தின் வாயிலாக அவர் புதிய ஏற்பாட்டின் காலத்திற்குரிய ஆசீர்வாதங்களை; குறித்துப் பேசினார். புதிய ஏற்பாட்டின் காலத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகளாகிய ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு, பழைய ஏற்பாட்டின் காலத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகளாகிய மாம்சத்தின்படியுள்ள இஸ்ரவேலர்கள் ஓர் உவமையாயிருக்கிறார்கள். அவ்வண்ணமே முன்னவர்களாகிய மாம்சத்தின்படியுள்ள இஸ்ரவேலருக்கு உரித்தான கானான் தேசமானது பின்னவர்களாகி ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு உரித்தான ஒட்டுமொத்தமான பரலோகத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாகிய பரம கானானுக்கு ஒப்பவையாயிருக்கிறது. புதிய ஏற்பாட்டின்கீழ்ப் ‘பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதென்பது” தேவனுடைய மக்கள் பரலோகத்துக்குரிய அதிசயமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பதாகும். அதுவே தேவனுடைய சுதந்தரரும் கிறிஸ்துவின் உடன் சுதந்தரருமாம் (ரோமர் 8:17). அதாவது கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலுள்ன சகல ஆசீர்வாதங்களாலும் பிதாவாகிய தேவன் நம்மை ஆசீர்வதித்துள்ள ஆசீர்வாதங்களாகும் (எபேசி.1:3). இந்த மெய்யான சமாதானத்துக்கும் இளைப்பாறுதலுக்குமே இஸ்ரவேலரின் கானானின் ஆசீர்வாதங்கள் ஓர் உவமையாயிற்று.

இறுதியாக, சாந்தகுணமுள்ளவர்கள் நீதி வாசமாயிருக்கும் புதிய பூமியையும் (2.பேதுரு 3:13) சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதில் எத்துணையும் ஐயமில்லை.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
0. பாக்கியவான்கள் யார்?

4. நாலாம் பேறு

0. பாக்கியவான்கள் யார்?

5. ஐந்தாம் பேறு

Recommended

Song 051 – என்னையே அற்பணித்தேன்

Song 051 – என்னையே அற்பணித்தேன்

Song 156 – En Janamae

பாடல் 011 – ஆண்டவர்  இயேசு வருகின்றார்

பாடல் 011 – ஆண்டவர்  இயேசு வருகின்றார்

00. இயேசு கிறிஸ்துவின் உவமைகள்

26. விதைக்கிறவனும் விதையும்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.