- ஐந்தாம் பேறு
‘இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” மத் 5:7
இதுகாறும் நாம் தியானித்துக்கொண்டிருந்த நான்கு அருட்பேறுகளிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய போதனையின் முக்கிய அம்சங்களாகிய ஆவிக்குரிய விழிப்புணர்வு, மறுரூபமாகுதல் ஆகியவைகளில் ஒரு தெளிவான வளர்ச்சி இருப்பதைக் கவனித்தோம். முதலாவது, நான் ஒன்றுமில்லை: என்னிடத்தில் ஒன்றுமில்லை என்னால் ஒன்றும் கூடாதென்னும் ஆவிக்குரிய வறுமையாகிய மெய்ந்நிலையை அடைகிறோம். இரண்டாவதாக பாவஉணர்வு அதாவது, தேவனுக்கேற்ற துக்குத்தை உண்டாக்குகிற ஒரு வகையான குற்ற உணர்வு ஏற்படுகிறது. மூன்றாவதாக, நம்மையே சார்ந்திருப்பதை விடுத்து தேவனுடைய சமுகத்தில் தூளிலும் சாம்பலிலும் உட்காரத்தக்கதான மனத்தாழ்வை அல்லது சாந்த குணம் உண்டாகிறது. நாலாவதாக, கிறிஸ்துவையும் அவருடைய இரட்சிப்பையும் பெரிதும் வாஞ்சிக்கிற ஒரு மாபெருந் தேட்டம்-அதாவது கிறிஸ்துவைப் பற்றும் நீதியின்மேலுள்ள பசியும் தாகமும் தொடர்கிறது. ஆயினும் இவைகளெல்லாம், ஒருவழியில், எதிர்மறைப் பண்புகளேயாகும்: அதாவது விசுவாசிக்கிற பாவியானவன் தனக்குள்ளே காண்கிற குறைபாடுகளைக் குறித்துள்ள கருத்துணர்வும், நலமானவைகளை நாடித்தேடுகிற பேரார்வமுமாயிருக்கின்றன. ஆயினும் அடுத்து வருகிற நான்கு அருட்பேறுகளிலும் விசுவாசிகளிடம் மறுபிறப்பின் விளைவாகிய புதிய சிருஷ்ரிப்பின் கனிகளையும், மறுரூபமாக்கப்பட்ட நிலைமையிலுள்ள நல்லொழுக்கத்தின் ஆசீர்வாதங்களையும் காணலாகும். தேவனுடைய சத்தியத்தின் ஒழுங்கு முறையின் சிறப்பினை மறுபடியும் எவ்வளவு நன்றாய் இது நமக்குக் காண்பிக்கிறது. பாருங்கள்!
‘இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்: அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” தாங்கள் செய்கிற புண்ணியங்களில் நம்பிக்கையுடைய மக்களால் இந்த வேத வாக்கியமானது பெரியும் திரித்துக் கூறப்படுகிறது. கிரியைகளினால் உண்டாகிற இரட்சிப்பைக் குறித்து வேதாகமம் போதிக்கிறதென்று வற்புறுத்துகிற இவர்கள் தங்களுடைய அழிவுக்கேதுவான தவறான கொள்கைக்க இவ்வேத வாக்கியத்தை ஆதாரமாய்ப் பயன்படுத்துகின்றனர். ஆயினும் நம்முடைய கர்த்தரின் நோக்கமோ நம்முடைய சீடர்களின் மெய்hன ஒழுக்க நலத்தினை விளக்குவதேயல்லாமல், தேவனிடமிருந்து வருகிற இரக்கத்தின்பாலுள்ள பாவிகளின் நம்பிக்கைக்கு ஆதாரமாகிய அடித்தளத்தைச் சுட்டிக்காண்பிப்பதன்று. நல்லொழுக்கத்திள் முதன்மையான பண்பு நலம் இரக்கம் பாராட்டுதலாகும். நம்முடைய கர்த்தருடைய உபதேசத்தின்படி, தம்முடைய உன்னதமான காருண்யத்தில் களிகூருகிற தேவனுடைய மகிழ்ச்சியோடு நெருக்கமான தொடர்புடைய அவர்தம் தூய்மையான இறைமை நலத்தின் இன்றியமையாய்ச் சிறப்புக்கூறு இரக்கமேயாகும்.
எல்லா அருட்பேறுகளிலும் இவ்வருட்பேறு மத்தேயு 5 ஆம் அதிகாரத்தில் வரும் இடம் இதை விளக்க உதவுகிற மற்றுமொரு திறவுகோலாயிருக்கிறது. முதல் நான்கு அருட்பேறுகளும் பரிசுத்த ஆவியானவரால் உயிர்ப்பிக்குப்பட்ட ஓர் ஆத்துமாவின் இருதயத்தில் நிகழ்கிற ஆவிக்கரிய அடிப்படை பயிற்சிகளை விளக்குகின்றன. முந்தின வேதவாக்கியத்தில் ஒருவன் கிறிஸ்துவின்மேல் பசிதாகமாயிருப்பதையும், பின்னர் அவரால் நிரப்பப்படுவதையும் நாம் காண்கிறோம். இவ்வாறு கிறிஸ்துவினால் நிரப்புப்படும்போது ஏற்படுகிற முதல் விளைவுகளையும் சாட்சியங்களையும் நமக்கு இவ்வருட்பேறு காண்பிக்கிறது. கர்த்தரின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்ட, இரட்சிக்கப்பட்ட பாவியாகிய ஒருவனே இப்பொழுது இரக்கம் பாராட்டுகின்றான்.
தேவனுடைய இரக்கத்தைக் குறித்து நாம் உரிமைபாராட்ட வேண்டுமெனில், நாமும் மற்றவர்களுக்கு இரக்கம் பாராட்டவேண்டுமென்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறரா? இல்லை. அவ்வாறு எதிர்பார்க்கப்படுமாயின், அது தேவகிருபையின் முழு நிறைவான தீர்மானத்தைக் கவிழ்த்துப்போடுவதாகவல்லவோ முடியும்! அவருடைய அதிசயமான இரக்கத்தைப் பெற்று மகிழ்கிற நான் மற்றவர்கள்பால் இரங்கி அவர்களுக்கு உதவி செய்யாமலிருக்க முடியாது.
இரக்கம் பாராட்டுதல் என்றால் என்ன? அது பிற மக்களோடு பிற கிறிஸ்தவர்களோடும் பழகும் கிருபையுள்ளம் ஆகும். அது தம் நோய்போல் பிறர்நோய் கண்டு உருகுகிற அன்பும் அறமுமாம். அது சிறுமைப்படுகிற மக்களின் பாடுகளை மனவுருக்கத்தோடு நோக்கும் ஓர் ஆவியாகும். பழி வாங்கும் மனப்பான்மையின்றி இன்னா செய்தார்க்கும் இனியவே செய்கிற கிருபையும் அதுவே.
அது மன்னிக்கிற ஆவியாகும்: பதிலுக்குப் பதில் செய்யாமலிருக்கிற ஆவியும் அதுவே. தன்னுடைய நேர்மையை நிலைநாட்ட முற்படுகிற எல்லா முயற்சிகளையும் கைவிடுகிறதும், தீமைக்குத் தீமை செய்யாமல் நன்மை செய்வதும், பகைமையுள்ள இடத்தில் அன்புகூருவதுமாகிய ஆவியாகும். இதுவே இரக்கம் பாராட்டுதலாகும். மன்னிக்கப்படும்போது இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆத்தமா இரக்கத்தின் எழில் நலத்தைப் பாராட்டுகிறது: தனக்குக் காண்பிக்கப்பட்ட அதே கிருபையைத் தீமை செய்கிற ஏனைய மக்களிடமும் காண்பிக்கும்படி பேரார்வங்கொள்கிறது.
இவ்வாறு இரக்கம் பாராட்டுகிற மனநிலத்தினை நாம் நம்முடைய வீழ்ச்சியுற்ற மானிட சுபாவத்தின் உடைமையாகக் கருத முடியாது. கிறிஸ்தவர்களல்லாத வேறு சிலமக்களிடம் இரக்கம் பாராட்டுகிற அருங்குணத்தை நாம் காணலாகும். மற்றவர்களுடைய பாடுகளையும் துயரங்களையும் கண்டு அவர்களும் இரங்குகிறார்கள். தமக்குத் தீமைசெய்தவர்களை மன்னிக்கும்படி எப்பொழுதும் ஆயத்தமாயிருகஇகிறார்கள். பொதுவாக நோக்குமிடத்து இது பாராட்டுதற்குரிய ஒன்றுதான். ஆயினும் ஈண்டுக் கிறிஸ்துவானவர் தாதே தம்முடைய ஆசீர்வாதத்தை வழங்குகிற இரக்கம் பாராட்டும் நிலையைவிட மிகவும் குறைவுடையதேயாகும். மாம்சத்தின் அடிப்படையில் இயங்கும் தன்மை ஆவிக்குரியதல்ல. ஏனெனில் அத்தன்மை வேதாகமத்தின் அடிப்படையிலோ அல்லது தெய்வீக அதிகாரத்தின் கீழோ இயங்குகிறதில்லை. தேவனுடைய இரக்கத்தினால் கவரப்பட்டு, அந்த இரக்கத்தோடு நெருங்கிய உறவுகொண்டு இயங்கும் இரக்கத்தன்மையையே இவ்வருட்பேறு விளக்குகிறது.
தேவனுடைய பிள்ளைகளிடம் பரிசுத்த ஆவியானவரால் புதுப்பிக்கப்பட்ட புதிய சுபாவத்தின் விளை பலனைத்தான் இரக்கம் பாராட்டுதல் என்று இவ்வேதப் பாடம் கூறுகிறது. எவ்வகையிலும் தகுதியில்லாத நன்மைப்போன்ற கீழ்மக்களிடம் தேவன் பாராட்டுகிற கிருபை, இரக்கம், நீடியபொறுமையாகிய அவருடைய அதிசயமான குணங்களைத்தியானிக்கும்பொழுதுதான், இரக்கம் பாராட்டுதல் நம்முள் செயல்படத் தொடங்கும். என்மேலுள்ள தேவனுடைய உயர்தனி இரக்கத்தினை எவ்வளவு அதிகமாய்த் தியானிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் வாயிலாக அவியாத அக்கினியினின்றும் விடுவிக்கப்பட்டுள்ள விடுதலையே நான் நினைவுசுறுவேன். தேவ கிருபைக்கு நான் எவ்வளவு அதிகமாயக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதனை உணரும்பொழுதுதான், எனக்குத் தீமை செய்து, என்னைப் பகைத்து வெறுக்கிற யாவர் மேலும் நானும் அவ்வளவு அதிகமாக இரக்கம் பாராட்டவும் நன்மை செய்யவும் நாடுகிறேன்.
உன்னதத்திலிருந்து புதிதாய்ப் பிறக்கும்போது ஒருவன் பெற்றுக்கொள்கிற ஆவிக்குரிய சுபாவத்தின் பண்பு நலன்களில் ஒன்று இரக்கம் பாராட்டுதலாகும். தேவனுடைய மக்களிடம் காணப்படுதலாகும். தேவனுடைய மக்களிடம் காணப்படுகிற இவ்விரக்கம் பாராட்டுதல் பரலோகத்திலுள்ள அவர்களுடைய பிதாவிடமுள்ள ஏராளமான இரக்கத்தின் பிரதிபிப்பமேயாகும். இரக்கம் பாராட்டுதல் என்பது நம்முள் வாசமாயிருக்கிற இரக்கமுள்ள கிறிஸ்துவினாலுண்டாகிற, இயல்பானதும் தேவையானதுமான விளைபலன்களும் ஒன்றாயிருக்கிறது. இது நம்முடைய நடைமுறைவாழக்கையில் எப்பொழுதம் செயற்படாமலிருக்கலாம்: மாம்சத்திற்குரிய சிற்றின்ப நுகர்ச்சியினிமித்தமாக மூடி மறைக்கப்படலாம்: அல்லது தடை செய்யப்படலாம். ஆயினும் பொதுவான ஒரு கிறிஸ்தவனுடைய நல்லொழுக்கத்தின் நிலையான தன்மையையும், சிறப்பாக அவனுடைய நடைமுறை வாழ்க்கையின் பழக்க வழக்கங்களையும் கருத்திற்கொண்டு நோக்குவோமாயின், இரக்கம் பாராட்டுதலானது, யாதொரு ஐயப்பாட்டிற்குமிடமின்றி, புதிய மனிதனுடைய சிறப்புடைத் தன்மையாய் அமைகிறது.
‘துன்மார்க்கனோ கடன் வாங்கிக் செலுத்தாமற் போகிறான்: நீதிமானோ இரங்கிக் கடன் கொடுக்கிறான்” (சங் 37:21). தன்னுடைய சகோதரனால் தீமை செய்யப்பட்டபோதிலும், பகைவர்கள் லோத்தையும் அவனுடைய எல்லா உடைமைகளையும் கைப்பற்றிச் சென்றுபொழுது, அவர்களைத் தொடர்ந்து முறியடித்து லோத்தையும் அவனுடைய எல்லா உடைமைகளையும் விடுவித்துக்கொண்டு வந்தது ஆபிரகாமுடைய இரக்கம் பாராட்டுதலேயாகும் (ஆதி 14:1-16). யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் மிகவும் கொடுமையாய் நடத்தப்பட்டானாயினும், அவர்களைத் தாராளமாய் மன்னிக்கும்படி செய்தது யோசேப்பின்பாலுள்ள இரக்கும் பாராட்டுதலேயாகும் (ஆதி 50:15-21).
கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, மீரியாம் கர்த்தரால் குஷ்டரோகத்தினால் வாதிக்கபட்டபொழுது கர்த்தரை நோக்கி, ‘என் தேவனே, அவளுக்கும் இரக்கும்” என்று மோசே கெஞ்சி மன்றாடினது அவனிடமுள்ள இரக்கம் பாராட்டதலேயாகும் (எண் 12:13). கொடுங்கோலனாகிய சவுல் தன் கையில் அகப்புட்டபோது பகைவனாகிய அவனைக் கொல்லாமல் அவனுடைய உயிரைத் தப்புவித்தது தாவிதின் இரங்கும் சிந்தையல்லவா? (1சாமு 24:1-22, 26:1-25). துக்கமான, அதேவேளையில் கருத்தைக் கவருமாறுள்ள மாறுபாடு முறைமையில் யூதாசைக் குறித்து, ‘அவன் தயை செய்யநினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளுவனைக் கொலை செய்யும்படி தேடினான்” (சங் 109:16) என்று சொல்லுப்படுகிறது.
ரோமர் 12:8 ஆம் வசனத்தில், இரக்கஞ் செய்கிறவன் உற்சாகத்துடன் செய்யக் கடவன். என்றுரைக்கும் அப்போஸ்தனாகிய பவுல், இரக்கஞ் செய்கிற நம்மிடம் காண்படவேண்டிய ஆவியைக்குறித்தள்ள உயிர்நிலையான போதனையை நமக்கு வழங்குகிறார். இது ஏழைச் சகோதரர்களைத் தாங்கி அவர்களை ஆதரிக்கும் வகையில் நாம் வழங்குகிற பண உதவியைப்பற்றிய ஒரு நேரிடை அறிவுரையாயிருக்கிறது: ஆயினும் அல்லற்படுகிற மக்களிடம் காண்பிக்கும்படியான எல்லா வகையான காருணியச் செயல்களும் இந்த அன்புடைக் கொள்கைக்குள் அடங்கிவிடும்.
இரக்கஞ் செய்கிறவன், தனது விருப்பத்தோடு அவனுடைய மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துமாறு, உற்சாகத்துடன் செய்ய வேண்டும். உவகையோடும் உற்சாகத்தோடும் ஆற்றும் உதவியானது இவ்வுதவியைப் பெற்றுக்கொள்ளும் மக்களின் உணர்வுகளுக்கு விடுதலையளிக்கிறது: அல்லற்படும் மக்களின் துயரத்தை ஆற்றுகிறது. இத்தகைய உவகையுடன் கூடிய உற்சாகமானது ஆற்றுப்படுகிற உதவியின் தரத்தை மிகவும் உயர்த்துகிறது. இவ்வாறு கொடுத்து மகிழ்கிற இன்பத்தினை உணத்துகிற கிரோக்க மொழியிலுள்ள சொல்லானது, இரக்கஞ் செய்கிறவனுடைய அகத்தின் அன்பையும், புறத்தே இன் சொல்லுடன் கூடிய முகத்தின் மலர்ச்சியையும் வெளிப்படுத்துகிற ஓர் எழில் மிகு சொல்லுவாயிருக்கிறது. இவ்வாறு இரக்கஞ் செய்கிறவனுடைய அகத்தின் அன்பும் முகத்தின் மலர்ச்சியும் உதவி நாடி வருகிற மக்களுக்குக் காலைக் கதிரொளியாயும், அல்லற்பட்டு அழுகிற மக்களுக்கு அருமருந்தாயுமிருக்கிறது. ‘உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2கொரி 4:6) என்று வேதாகமம் நமக்கு அறிவிக்குpறபடியால், தம்முடையய கடிந்துரைக்குச் செவி கொடுத்துச் சேருகிற நம்முடைய ஆவியைக் கூர்ந்து நோக்குகிறார் தேவன் என்பதனை நாம் உறுதியுடன் நம்பலாகும்.
‘அவர்கள் இரக்கம் பொறுவார்கள்” இம்மண்ணுலகில் வாழக்கிற நம்முடைய வாழ்க்கையின்மீது தேவன் தாமே தம்முடைய அரசாங்கத்தில் பிறப்பித்துள்ள ஒரு கற்பனையை அல்லது பிரமானத்தை இச்சொற்கள் விளக்குகின்றன. ‘மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலா 6:7) என்னும் நாமெல்லாரும் அறிந்துள்ள வேதவாக்கியமானது இதனைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது. தங்களுடைய கொடுக்கல்- வாங்கல்களில் இரக்கும் பாராட்டுகிற கிறிஸ்தவர்கள் தம்முடன் வாழ்கிற ஏனையமக்களிடமிருந்து இரக்கம் பெறுகின்றனர். ஏனெனில் ‘நீங்கள் மற்றவர்களுக்க அளக்கும் அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (மத் 7:2). ஆகையால்தான் ‘நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்” (நீதி 21:21) என்று எழுதப்பட்டுள்ளது.
‘தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்” (நீதி 11:17) என்னும் திருவாய் மொழிக்கிணங்க இரக்கம் பாராட்டுகிற மனிதன் தனக்குத் தானே நன்மை செய்கிறான். ஈத்துவக்கம் இன்பத்திலும் இரக்கம் பாராட்டுவதிலும் நமக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. தன்னலம் படைத்த மனிதனுடைய செல்வமும் மகிழ்ச்சியும் இரக்கம் பாராட்டுகிற மனிதனுடைய மனநிறைவுடன் ஒப்பிடத் தக்கதன்று. ‘தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்” (நீதி 14:21). தேவன் தாமே மனநிறைவு கொள்ளுதற்கு மூலாதரமாயிருப்பதும் இரக்கம் பாராட்டுதலேயாகும். ‘அவர் கிருபை செய்ய விரும்புகிறார்” (மீகா 7:18). ஆகையால் இரக்கம் பாராட்டுதலே நம்முடைய விருப்பமாயும் இருக்கவேண்டும்.
‘அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” இரக்கம் செய்கிற இக்கிருபையின் வாயிலாக இரக்கம் பாராட்டுகிற கிறிஸ்தவன் தன்னுள்ளுத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைகிறான்: கர்த்தருக்கு தம்முடைய அருளாட்சியில் அவனுடைய இரக்கத்தின் பலனை அவனோடு வாழ்கிற மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு வகை செய்கிறார்.அதனோடமையாது அவன் தேவனிடமிருந்தும் இரக்கத்தைப் பெற்றுக்கொள்கிறான். ‘தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவர்” (சங் 18:25) என்னம் வசனத்தின் வாயிலாக, தாவீது இவ்வுண்மையை அறிவிக்கிறான். இதனையே மறைமுகமாகத் தம்முடைய சீடர்களுக்கு கண்டித்துணர்த்தும்போது, ‘மனிதர்களுடைய தம்பி தங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்ககள் தப்பிதங்களையும் மன்னிக்க மாட்டார்” (மத் 6:15) என்று நம்முடைய இரட்சகர் சொல்லுகிறார்.
‘அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” முன்னுள்ளு அருட்பேறுகளுடன் இணைந்து வருகிற வாக்குத்தத்தங்களைப் போலவே, இவருட்பேறு தனது வாக்குத்தத்தத்தின் இறுதி நிறைவேறுதலுக்காகத் தன்னுடைய எதிர்காலத்தை ஆவலுடன் நோக்கிக் கொண்டிருக்கிறது. 2தீமோ 1:16-18 ஆம் வசனங்களில், ‘ஓநேசிப்போருவின் வீட்டாருக்கும் கர்த்தர் இரக்கங்கட்டளையிடுவாராக” என்றும் ‘அந்த நாளிலே அவன் இரக்கத்தைக் கண்டடையும்படிலு கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ் செய்வாராக” என்றும் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியுள்ளதை நாம் காணலாகும். யூதா 21 ஆம் வசனத்திலும், ‘நித்திய ஜீவனுக்கேதுவாவ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்குத்தைப் பெறக் காத்திருங்கள்” என்று பரிசுத்தவான்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மகிமையுள்ள கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது, அவருக்குச் சொந்தமானவர்களா அவரால் மீட்கப்பட்டுள்ள மக்களாகிய நம்மை ஏற்றுக்கொள்ளுகிற அனுபவத்தை இது குறிப்பிடுகிறது.










