யோனா
தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது
தழயொ
(யோனா!)
‘நீ எழுந்து நினிவேக்குப் போய் அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி”
என்ற தேவ கட்டளை அவருடைய தீர்க்கன் யோனாவுக்கு வந்தது. ஆனால் அவனோ அக்கட்டளைக்கு இணங்க மனமற்றவனாய்க் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி வேறு திசையிலுள்ள யோப்பா என்னும் துறைமுகம் சென்றான். அங்கே தர்ஷிசுக்குப் போகும் ஓரு கப்பலைக் கண்டு கூலிகொடுத்து ஏறிக்கொண்டான். தங்கள் சுய விருப்பத்தை நிறைவேற்ற நினைக்கிறவர்கள் கடவுள் சமுகத்தை விட்டு விலகிச் செல்பவர்கள். கர்த்தருடைய வசனம் பிரசங்கிக்கப்படும் இடத்தை நெருங்கார். வேதபுத்தகத்தைப் படிக்க விருப்பார். கப்பம் ஏறிக்கொண்ட யோனாவுக்கு ஒரு மாய்கையான நிம்மதி. இனி தான் தர்ஷீஸ் சேர்ந்துவிடுவேன். தேவன் அவ்வளவு தூரம் கடல் கடந்து வந்து என்னைக் கூப்பிடமாட்டார் என்று யோனா எண்ணியிருப்பானா? அடித்தட்டில் யோய் அமைதியாக தூக்கிவிடலாம் என்று நினைத்தான். கனத்துக்கரிய இறைவாக்கினனான யோவா இறைவன் சமூகத்தைவிட்டு மறைந்து கொள்ளலாம் என்று நினைத்தது எவ்வளவு புத்தியீனம். வேத வாக்கியம் சொல்லுகிறது ‘உம் ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன். சமுத்திரத்தின் கடையாந்தரத்தில் போய்த் தங்கினாலும் அங்கேயும் உமது கை என்னை நடத்தும். உமது வலது கரம் என்னைப் பிடிக்கும். நான் பாதாளத்தில் படுங்கை போட்டாலும் அங்கேயும் நீர் இருக்கிறீர்” (சங் 139:7-9).
கர்த்தர் சமுத்திரத்தின் மேல் பலத்த காற்றை வரவிட்டார். தேவ பிள்ளையே, நீ தேவ சித்தத்துக்கு மாறாய் செயல்படும்போது தேவன் உன் வாழ்வில் புயல் போன்ற அனுபவங்களைஅனும்புகிறார். இது உன்னைக் கொன்று போடவல்ல, உன்னை உணர்த்துவிக்க! உன்னை எச்சரிக்க! உன்னைத் திருத்த, அவர் எடுக்கும் அன்பின் முயற்சியே என்று அறிவாயாக. கர்த்தர் எவனில் அன்பு கூறுகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார். யோனாவோ கப்பலினடித்தட்டில் உறங்கிக் கொண்டிருந்தான். மெய் தேவனையறியாத அக்கப்பலின் மாலுமி யோனாவை எழுப்பி ‘நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள். நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார்” என்றூர். இது என்ன பரிதாபத்துக்குரிய காட்சி. தேவ மனுஷனை ஜெபிக்கும்படி சொல்ல ஒர் அந்நியனைக் கடவுள் அனுப்பினார்.
தேவஜனமே! கர்த்தரை நோக்கி ஊக்கமாய் வேண்டிக்கொள்ளு வேண்டிய இந்தக் கட்டத்தில் வேலையற்றவர்களாய்த் தூங்கிக்கொண்டிருக்கிறீர்களா? நமது நாடும், பிற நாடுகளும் வெறித்தவனைப் போல் தள்ளாடி நாசத்துக்குப் போய் கொண்டிருக்கும் வேளையில் ஆண்டவரின் அடியார் தூங்குகிறீர்களா? விழித்திருந்து ஜெபியுங்கள் (லூக் 21:35). நாம் அழிந்து போகாதபடி ஒரு வேளை கர்த்தர் நம்மை நினைத்தருளுவார்.
யார் நிமித்தம் இந்த ஆபத்து தங்களுக்கு நேரிட்டது என்று அறியும்படி அவர்கள் சீட்டுப்போட்டார்கள். சீட்டு யோனாவின் பேருக்கு விழுந்தது. யோனா என்ற ஒருவனின் பாவத்தினிமித்தம் கப்பலில் இருந்த யாவருக்கும் ஆபத்து வந்தது. திருச்சபைகளுக்குள்ளும் ஓரிருவரின் முரட்டாட்டச் செயல்களினால் சபைமுழுவதற்குள்ளும் சச்சரவுகளும், கலகங்களும் ஆவிக்குரிய வீழ்ச்சியுமுண்டாகின்றன. முற்காலத்தில் ஆகான என்ற ஒருவன் கடவுளின் கட்டளைளை மீற சாபத்தீடான பொன்பாளம், வெள்ளி, பாபிலோனியச் சால்வை ஆகியவற்றைப் பதுக்கி வைத்தான். அதன் விளைவு இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தைப் பிடிக்க முடியாமல் முறிந்தோடினார்கள். ஒருவனின் பாவம் அநேகருக்குத் தோல்விக்குக் காரணமாயிற்று (யோசுவா 7:4, 21)
கப்பலில் இருந்தவர்கள் யோனாவை முன்னிறுத்தி விசாரணை நடத்தினார்கள். தேவனின் கரம் தன்னைக் கண்டு பிடித்தது என்பதை அறிந்துக் கொண்ட யோனாதன் தேவனைப் பிற மதத்தவருக்கு அறிவிக்கத் தயங்கவில்லை. அவரே பரலோகத்தின் தேவன். அவர் சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கினவர். தான் அவரிடம் பயபக்தியுள்ளவன் என்று சொன்னதுமன்றி, தான் கர்த்தருடைய சமுகத்திலிருந்து விலகி ஓடிப்போகிறவன் என்பதையும் அறிவித்தான். கடலில் அமைதி ஏற்பட வேண்டுமானால் என்ன செய்யவேண்டுமென்றுஅவர்கள் அவனைக் கேட்டபொழுது அவன் ‘என்னைத் தூக்கிக் கடலில் எறிந்துவிடுங்கள். அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும். என்னிமித்தமே இந்தப் பொல்லாப்பு உங்களுக்கு நேரிட்டது என்றான். யோனாவின் இந்த மனமாற்றம் உண்மையானது. தன் பாவத்தை மறைக்காமல் முழுவதுமாய் அறிக்கையிட்டான். அதற்ரிய தண்டனை எதுவாயினும் அது நியாயமானது. தனது குற்றத்துக்காகக் கப்பலிலுள்ளவர்கள் எவரும் மாளக்கூடாது என்று முடிவெடுத்தான். அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்புதை அறிந்துக்கொண்டான். தன்னுடைய பிராணனையும் அவன் மதியாமல் அவர்களுக்காகச் சாகத்துணிந்தான். தன்னைத் தேவனின் கையில் ஒப்படைத்தான். தேவரீர் உமக்குச் சித்தமானபடி எனக்குச் செய்யும், எனது கீழ்ப்படியாமையினிமித்தம் இந்த மக்கள் சாகவேண்டாம் நீர் எனக்கு என்ன தண்டனையளித்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன், நான் சாக ஆயத்தம்” என்று வேண்டிக்கொண்டான். தன் இனத்தவர், இரட்சிக்கப்படுவதற்காக அவர்களுக்குப் பதிலாய்த் தானே கிறிஸ்துவை விட்டுச் சபிக்கப்பட்டவனாவதற்கும் பவுல் ஆயத்தமாயிருந்தான் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க (ரோம 9:3).
அநேகமான பேர் தாங்கள் பாவ அறிக்கை செய்வது தங்களுக்கத் தண்டனை வரக்கூடாது அல்லது கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்ற நோக்கத்தோடே செய்கின்றனர். இது உண்மையான பாவ உணர்வல்ல. எகிப்து மன்னர் பார்வோனும்கூட ‘நான் பாவம் செய்தேன், கர்த்தர் நீதியுள்ளவர், நானும் என் ஜனமும் துன்மார்க்கர்” என்று அறிக்கையிட்டுள்ளானே. எதற்காக? எனக்காக விண்ணப்பம்பண்ணுங்கள் என்றானே, எந்த நோக்கத்திற்காக? இவனும் பாவ உணர்வு கொஞ்சமேனும் ஆழமுள்ளதா? இல்லவே இல்லை. தன் நாட்டில் வந்த வாதை நீங்கப் போகவேண்டும். அவ்வளவுதான். அவனில் எந்த மாற்றமும் இல்லை. அவன்இருதயம் கடினப்பட்டது (ஆதி 9:27, 35).
உண்மையான பாவ அறிக்கை தண்டனைக்குத் தப்பவேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்படுவதல்ல. அது தன் பாவத்துக்குத் தண்டனை றியாயமானதே என்பதை மனதார ஏற்று தேவன் தனக்கு இரக்கும் காட்டுவதற்குக்கூட தான் தகுதியற்றவன் என்பதை உணர்ந்து கொள்ளுகிறது. மனந்திருந்தி வந்த இளைய மகனில் இந்த உணர்வைக் காணலாம். அவன் சொன்னதாவது: இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல (லூக் 15:21). தானியேலும் பாவ அறிக்கை செய்கையில் ‘நாங்கள் பாவம் செய்து அக்கிரமக்காரராயிருந்து துன்மார்க்கமாய் நடந்தோம், நீதி உமக்கே உரியது, வெட்கம் எங்களுக்கே உரியது” என்றான் (தானி 9:5-7).
யோனா தன்னைப் பெருங்கடலில் எறிந்துவிடும்படி சொன்னபிறகும்கூட கப்பல் பிரயாணிகள் அதை எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படியாயினும் அவனைக் காப்பாற்ற எண்ணினர். தங்களால் இயன்றவரைத் தண்டு வலித்துப் பார்த்தனர். ஒன்றும் முடியவில்லை. மனிதனின் உயிர் விலையேறப்பெற்றது. அதை அற்பமாய் எண்ணக்கூடாது என்ற உயரிய எண்ணம் எல்லா மக்களிடையேயுமுள்ளது. கர்த்தர் ஒருவனைக் காப்பாற்றாவிட்டால் மனிதரால் என்ன செய்ய முடியும்? ஒருவன் பாவத்தில் அழிந்து போவதிலிருந்து அவனை எந்த மனுஷனும் காப்பாற்ற முடியாது (சங் 49: 7-8). கிறிஸ்து ஒருவரே மனிதனைப் பாவத்திலிருந்து இரட்சிப்பார்.
தேவன் யோனாவின்மேல் தயவு வைத்தார். மனந்திரும்புகிற பாவியின் மேல் அவர் தயை, வெள்ளம்போல் பெருகிவரும். அவர் ஒரு மீனுக்குக் கட்டளையிட்டார். யோனாவை அவர்கள் பெருங்கடலில் எறிந்தவுடனே அந்த மீன் அவனை விழுங்கி அவனைத் தன் வயிற்றிலே மூன்று நாளளவும் வைத்திருந்தது. மீனனி; வயிற்றிலேயிருந்து யோனா கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார். அது அவனைக் கரையிலே கக்கிற்ற. மறுபடியும் கர்த்தரின் வார்த்தை யோனாவுக்கு வந்தது. அவன் இப்பொழுது கீழ்ப்படிந்து நினிவேக்குச் சென்றான். கீழ்ப்படியாமை தனக்கு நன்மை தராது என்பதைத்தான் இப்பொழுது கறு;றுக்கொண்டுவிட்டான். இவையெல்லாம் நமக்கு முன்மாதிரிகளாய் இருக்கும்படி எழுதப்பட்டிருக்கின்றன. தேவனுக்கு கீழ்ப்படிதலே நமக்கு நன்மையையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
‘நம்பிக் கீழ்ப்படி இயேசுவின் மகிழ்ச்சி பெற வேறு வழி இல்லை.”













