- உயிர்த்தியாகத்தின் நிழல்
உண்மையாக முற்றிலும் இயேசு கிறிஸ்துவுக்குத் தன்னைச் சமர்ப்பித்திருக்கிற ஒரு மனிதனுக்கு உயிரோடிருப்பதோ அல்லது மரிப்பதோ பெரிய காரியமல்ல. கர்த்தர் மகிமைப்படவேண்டும் என்பதுதான் முக்கியம்.
……….ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார்…… (பிலி. 1:20). ஜிம் எலியட் என்பவர் எழுதியுள்ளவற்றில் இந்தச் சத்தம் கேட்கிறது. வீட்டன் கல்லூரில் அவர் மாணவராயிருக்கும்போதே, அவுக்கா இனத்தினருக்காக மரிக்க நான் ஆயத்தமாயிருக்கிறேன் என்று தம் நாள்குறிப்பு ஏட்டில் எழுதிவைத்தார்.
பிதாவே, என் வாழ்க்கையை ஆம், உமக்குச் சித்தமானால் என் இரத்தத்தை, எடுத்து உம் அக்கினியால் எரித்துவிடும். நான் அதைப் பத்திரப்படுத்தி வைக்கமாட்டேன். ஏனெனில் அது என்னுடையதல்ல. எடுத்துக்கொள்ளும் ஆண்டவரே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும். உலகத்திற்காக என் ஜீவனைக் காணிக்கையாக ஊற்றிவிடும். உம் பலிபீடத்தின்முன் ஓடும்பொழுது மட்டுமே இரத்தத்திற்கு மதிப்புண்டு. இது அவர் மற்றொரு சமயம் எழுதியது.
கடவுளின் வீரரில் பலர் அவரோடு அடைந்த அநுபவத்தில் இதோ இடத்தை அடைந்தார்கள் என்று தோன்றுகிறது. கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் (யோவான். 12:24) என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அந்த கோதுமை மணியாயிருக்க அவர்கள் விரும்பினர். இரட்சகர் தம் சீடருக்குக் கற்பித்த உளப்பான்மை இதுதான். என்னிமித்தமாக தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான் (லூக்கா. 9:24).
இதைப்பற்றி அதிகமாகச் சிந்தித்தால் இது அதிக நியாயமாகவே தோன்றுகிறது.
முதற்கண், நம் ஜீவன் நம்முடையதே அல்ல. விலை மதியாத தமது இரத்தத்தைக் கிரயமாகச் செலுத்தி நம்மை மதித்தவருக்கே அது உரிமையானது. மற்றொருவருக்குச் சொந்தமான ஒன்றை சுயநலமாக நாம் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கலாமா? சீ.டி. ஸ்டட் தமக்குத்தாமே விடையளித்துக்கொண்டார்.
இயேசுவானவர் எனக்காக மரித்தார் என்பதே நான் அறிந்திருந்தேன். ஆனால் அவர் எனக்காக உயிர்துறந்திருந்தால் நான் எனக்குச் சொந்தமானவல்ல என்பது எனக்குப் புரியவேயில்லை. மீட்பு என்பது திரும்ப வாங்குதல் ஆகும். எனவே நான் உரியவன் என்றால் எனக்குச் சொந்தமல்லாத ஒன்றே வைத்திருந்து திருடனாக இருக்கவேண்டும். அல்லது அனைத்தையும் அவருக்கு ஒப்படைக்கவேண்டும். இயேசு கிறிஸ்து எனக்காக மரித்தார் என்பதை நான் அறிந்து பின்னர் அவருக்கு எல்லாவற்றையும் காணிக்கையாக்குவது கடினமாயிருக்கவில்லை.
இரண்டாவது, கர்த்தர் வரத் தாமதிப்பாரானால் எப்படியும் நாம் எல்லாரும் இறக்கப்போகிறோம். இராஜாவின் சேவையில் உயிர் துறப்பதா. அல்லது எல்லாரும் சாவதைப் போல சாவதா? எது துக்கத்துக்குரியது? இழக்க முடியாத ஒன்றைப் பெறுவதற்காகத்தான் பிடித்துவைத்துக்கொள்ளக்கூடாத ஒன்றை விட்டுவிடுகிறவன் அறிவற்றவன் அல்ல என்று ஜீம் எலியட் கூறியது சரி அல்லவா?
மூன்றாவது, கர்த்தராகிய இயேசு நமக்காக மரித்திருந்தால் அவருக்காக உயிர் நீப்பதுதான் நாம் செய்யக்கூடிய மிகச் சிறிய செயல். இது எதிரி பேசமுடியாத நியாயம். பணியாள் தலைவனைக் காட்டிலும் உயர்ந்தவனல்ல. அப்படியானால் கர்த்தராகிய இயேசு சென்ற வழியைக் காட்டிலும் சௌகரியமான ஒரு வழியில் விண்ணுலகினுள் நுழைய நமக்கு என்ன உரிமையுண்டு? இதைச் சிந்தித்துப் பார்த்ததின் பயனாகத்தான் ஸ்டட் பின்பருமாறு சொல்ல ஏவப்பட்டார். இயேசுக்கிறிஸ்து கடவுளாக இருந்து எனக்காக உயிர்விட்டிருப்பாரானால் அவருக்காக நான் செய்யும் எந்தத் தியாகமும் மிகப் பெரியதாகிவிடாது.
முடிவாக, நம் வாழ்க்கையைக் கட்டி அணைத்துக் கொள்ளுதல் குற்றமான செயல். ஏனெனில் அதைத் துணிந்து கைவிடுவதன் மூலம் நித்திய நன்மை பிறருக்குப் பாய்ந்தோடக்கூடும். மருத்துவ ஆய்வுக்காக சிலர் தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகின்றனர். தீப்பற்றியெரியும் கட்டடங்களிலிருந்து தங்கள் அன்புக்குரியவர்களை விடுவிக்க சிலர் உயிர்துறக்கின்றனர். பகைவனின் வல்லமையினின்று தங்கள் நாட்டைக் காக்கப் போரில் மடிகின்றனர். வேறு சிலர் மாந்தரின் ஜீவனுக்கு நாம் தரும் மதிப்பென்ன? மையர்ஸ் என்பவரோடு சேர்ந்து பின்வருமாறு நாமும் கூறமுடியுமா?
ஆன்மாக்களாகவே காண்கிறேன் மாந்தரை
ஆளப்பிறந்தோர் அடிமைகள் ஆயினர்
துளையிடப்படனர் வெற்றிக்குரியவர்
இளைப்புற்ற அவர்கள் நம்பிக்கை கண்டிலர்.
எனக்குள் எழுந்தது இந்நிலை கண்டதும்
மனத்தை உந்தும் மாளா வாஞ்சை
ஈடேற வேண்டுமே இவர்கள் அனைவரும்
ஈவேன் என்னுயிர் இவர்க்காய் மடிவேன்.
இரத்த சாட்சிகளாக மரிக்க எல்லாரும் கேட்கப்படுவதில்லை. ஈட்டியும், கழுமரமும், கழுத்தை வெட்டும் கருவியும் தெரிந்தெடுக்கப்பட்ட சிலருக்காகவே ஒதுக்கிவைக்கப்பட்டுள்னது. ஆனால் நாம் ஒவ்வொருவரும் இரத்த சாட்சியின் ஆவியை, இரத்த சாட்சியின் வைராக்கியத்தை, இரத்த சாட்சியின் பக்தியைப் பெற்றவர்களாயிருக்க முடியும். ஏற்கெனவே கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரைக் கைவிட்டு விட்டோர் போல நாம் ஒவ்வொருவரும் வாழமுடியும்.
நன்மையோ தீமையோ வருவது வரட்டும்
இன்னல் குருசோ பொன்டி தானோ!
அ;பின் இறைவன் மிதித்து உழுதிட
என்னுடல் உள்ளம் எறிந்தேன் கீழே.













