முகவுரை
ஒரு மனிதன் மறுபிறப்பு எய்தும்போது மெய்யான சீஷத்துவித்திற்கு வழி திறக்கிறது. கீழ் கூறப்பட்டுள்ளவை நிகழும்போது அவை தொடங்குகிறது.
- நான் கடவுளுக்கு முன் பாவமுள்ளவன், காணாமற்போனவன், குருடன், நிர்வாணி என்று ஒரு மனிதன் உணரும்போது.
- நற்குணத்தாலோ, நல்ல செய்கைகளாலோ, தன்னைத்தானே இரட்சிக்க முடியாது என்று அவன் விசுவாசிக்கும்போது.
- கர்த்தராகிய இயேசு தனக்குப் பதிலாகச் சிலுவையில் மரித்தார் என்பதை அவன் விசுவாசிக்கும்போது.
- இயேசுக்கிறிஸ்துவை தன் ஒரே ஆண்டவரும் இரட்சகருமாக, விசுவாசத்தின் திட்டமான தீர்மானத்தால் ஏற்றுக்கொள்ளும்போது.
ஒருவன் கிறிஸ்தவன் ஆவது இவ்வாறுதான். தொடக்கத்திலேயே இதனை வலியுறுத்தல் முக்கியமானது. கிறிஸ்தவ வாழ்க்கை நடத்தினால் கிறிஸ்தவர்கள் ஆகலாம் என்று எண்ணுவோர் மிகப் பலர். அப்படியல்லவே அல்ல! கிறிஸ்தவ வாழ்க்கையை நடத்துமுன் நீங்கள் கிறிஸ்தவர்கள் ஆகவேண்டும்.
வருகிற பக்கத்தில் சொல்லப்படுகிற சீஷத்துவ வாழ்க்கை இயற்கைக்கு மேலானதொன்று. அத்தகைய வாழ்வு நமக்குள் ஆற்றல் இல்லை. தெய்வீக சக்தி நமக்கு வேண்டும். நாம் மீண்டும் பிறக்கும்போதுதான் இயேசு கற்பித்தபடி வாழ்வதற்கான வலிமையைப் பெறுகிறோம்.
இதற்குமேல் வாசிக்குமுன் இக்கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், நான் மறுபடியும் பிறந்திருக்கிறேனா? கர்த்தராகிய இயேசுவைப் பற்றும் விசுவாசத்தால் நான் தேவனுடைய பிள்ளையாக ஆகியிருக்கிறேனா?.
அப்படியில்லாதிருந்தால் இப்போதே அவரை உங்கள் ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்கொள்ளுங்கள். பின்பு அவர் கட்டளை அனைத்திற்கும் – கிரயம் எதுவாயிருந்தாலும் – கீழ்படியத் தீர்மானியுங்கள்.
- சீஷத்துவத்தின் நிபந்தனைகள்
- எல்லாவற்றையும் வெறுத்துவிடல்
- சீஷத்துவத்தைத் தடுப்பன
- சீஷர்கள் உக்கிராணக்காரர்கள்
- வைராக்கியம்
- விசுவாசம்
- பிரார்த்தனை
- போராட்டம்
- உலக ஆளுகை
- சீஷத்துவமும் திருமணமும்
- கிரயத்தைக் கணக்கிடுதல்
- உயிர்த்தியாகத்தின் நிழல்
- மெய்யான சீஷத்துவத்தால் நாம் அடையும் பயன்











