• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

02. தேவன் பயன்படுத்தும் மனிதன்

August 18, 2018
in கிறிஸ்தவ நூற்கள், கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
0 0
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  1. தேவன் பயன்படுத்தும் மனிதன்

தியான வாசிப்பு: யோசுவா1:10-18

யோசுவாவின் புத்தகம் குறிப்பிடும் உட்கருத்தைக் கவனித்தோம். நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள் என்பது தேவ கட்டளை. இதனால் இதுகாறும் இஸ்ரவேலர் நடத்திவந்த வனாந்தர தோல்வி வாழ்வினின்று அவர்கள் விடுதலை பெற்று கானான் வெற்றி வாழ்வுக்குள் பிரவேசிக்கப்போகிறார்கள் என்ற நிச்சயம் மலர்ந்தது. மேலான வாழ்வுக்குரிய ஒளி மிளிர்ந்தது. கானானில் முதலில் போர்புரியவேண்டியதிருந்தபோதிலும், இறுதியில் ஜெயமும் இளைப்பாறுதலும் கிடைப்பது திண்ணம்.

தேவன் பயன்படுத்தும் மனிதன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் நம் இதயத்தில் எழலாம். தேவன் என்னை உபயோகிக்கவேண்டுமெனின், நான் எத்தகைய பண்புகள் படைத்தவனாயிருக்கவேண்டும்? நல்லது, கடவுள் பயன்படுத்திய யோசுவா எத்தகைய மனிதனாக இருந்தான் என்று ஆராய்வோம். யோசுவாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை யாதெனில் நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே! கலங்காதே! நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார் (யோசு.1:9).

பலங்கொண்டவர்கள் மாத்திரந்தான் தேவனால் பயன்படுத்தப்பட அருகதையுள்ளவர்களோ? அங்ஙனமாயின், நம்மில் அநேகர் அருகதையற்றவர்களே. பவுல் கூறியது போல, நாம் எம்மாத்திரம். ஆனால் ஒரு தடவை மாத்திரமன்று, அநேக தடவைகளில் கர்த்தர் யோசுவாவோடு பேசி, பலங்கொண்ட திடமனதாயிரு என்று தைரியம் ஊட்டுகிறார். ஏன் யோசுவா தன்னுடைய பலவீனத்தையும், தகுதியின்மையையும் உணர்ந்து கலங்கியிருந்தான். இவ்வளவு மகத்தான பொறுப்பை ஏற்க, கடவுள் அபாத்திரனாகிய தன்னை அழைப்பார் என்று அவன் கிஞ்சித்தும் நினைக்கவில்லை. ஆனால் எல்லாம் வல்ல தெய்வம் தன்னை இம் மாபெரும் பதவிக்கு அழைத்தபோது, குருவித் தலையில் பனங்காயை ஏற்றியதுபோல் அவனுக்குத் தென்பட்டது. ஆகவே, அவன் திகைத்தான், கலங்கினான். இதுகாறும் மோசேக்குப் பணிவிடை செய்யும் ஊழியக்காரனாக இருந்ததே தனக்குக் கிடைத்துள்ள அதிவுன்னத கௌரவம் என்று எண்ணியிருந்தான் யோசுவா. மோசேயின் ஊழியக்காரனாய் இருப்பதைவிட இன்னும் ஒரு பதவியை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவன் கர்த்தருடைய தாசனாகிய மோசேக்குப் பணிவிடை செய்யும் சேவையில் பரமதிருப்தி கொண்டிருந்தான். ஆனால் ஒருநாள் கர்த்தர் ஒரு மகத்தான அழைப்பை யோசுவாவுக்கு விடுத்தார். கர்த்தருடைய தாசனாகிய மோசே ஆற்றிவந்த திருப்பணியை அவனுடைய ஊழியக்காரனாகிய தான் ஏற்று நடத்த எவ்வளவு தகுதியுடையவன் அல்லன் என்று உள்ளம் நடுங்கினான் யோசுவா.

கர்த்தர் அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே என்று அவனைத் தேற்றினார். நம்மில் அநேகர் உள்ளபடியே பெரும் பொறுப்புகளை ஏற்கக்கூடாதபடி பலவீனராயிருந்தும், பலமுள்ளவர்கள்போல் பாசாங்கு பண்ணுகிறோம். நமது பலவீனத்தை நாம் உணர்ந்துகொள்வதில்லை. நமது தகுதியின்மையை நாம் ஒத்துக்கொள்வதில்லை. ஏதோ சில திட்டங்களை வகுத்து காரியங்களைச் சாதித்துவிடலாம் என்று வீண் மமதை கொள்ளுகிறோம். இவ்வாறு பலவீனராயிருந்து தங்களைப் பலமுள்ளவகள்போல் எண்ணிக்கொள்ளும் இறுமாப்புள்ளவர்களைக் கர்த்தர் தமது வேலையில் பயன்படுத்தமுடியாது. நான் பலவீனன் என்று உண்மையை ஒத்துக்கொண்டவர்களையே கடவுள் பயன்படுத்தமுடியும். கர்த்தர் தாம் பயன்படுத்தும் மனிதனுடைய உள்ளத்தில் உண்மையாயிருக்க விரும்புகிறார்.

கர்த்தர் ஒருவனைத் தமது வேலைக்கு அழைக்கும்போது, அதற்கு வேண்டிய பலத்தையும் அவனுக்குக் கொடுக்கச் சித்தமுள்ளவராயிருக்கிறார். நமது பலவீனத்தில் அவருடைய பலம் நம்மைத் தாங்கும். அவருடைய கிருபையின் பலம் நமக்குப் போதும். ஆனால் நாம் நம்மைத் தாழ்த்தி, விசுவாசக்கரம் நீட்டி, அவருடைய பலத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக மனத்தாழ்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும். தாழ்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் கிருபை அளிக்கிறார். ஆனால் பெருமையுள்ளவன் அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்ளமாட்டான். இவ்வுலகில் இதுகாறும் கடவுள் பயன்படுத்திய மனிதர் அத்தனைபேரும் மனத்தாழ்மை படைத்தவர்களே ஆவர்.

கர்த்தர் பயன்படுத்த விரும்பிய இந்த யோசுவாவிடம் காணப்பட்ட சிறந்ததொரு பண்பு யாதெனில்: அவன் உண்மையுள்ள ஊழியக்காரனாயிருந்ததான். மோசேயின் ஊழியக்காரன் என்று யோசுவாவைப்பற்றி முதல் வசனம் அறைகூவுகிறது. மோசேயாகிய ஒருவனுக்கு உண்மையாய் ஊழியம்செய்த யோசுவா, இஸ்ரவேல் புத்திரர் அத்தனைபேருக்கும் ஊழியம் செய்யும் மேலானபதவிக்குத் தெரிந்துகொள்ளப்பட்டான். கொஞ்சத்தில் உண்மையாய் இருந்த அவன் அநேகருக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டான்.

யோசபஸ் என்ற சரித்திர ஆசிரியர் கூறுவது உண்மையானால்;, யோசுவா எகிப்தின் அடிமைத்தனத்தில் 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தான். ஆகவே, அவனுக்கு எகிப்தியர் புரிந்த கொடுமைகள், இம்சைகள், அநியாயங்கள் அத்தனையும் தெரிந்திருக்கும். அதினின்று இஸ்ரவேலருக்கு விடுதலை கொடுக்க, கர்த்தர் ஆற்றிய அதிசயக் கிரியைகளையும், அவன் கண்கூடாகக் கண்டிருப்பான். அவன் மோசேயின் உத்தம ஊழியக்காரனாய் இருந்தபடியால் ஆண்டவர் செய்த எல்லா அற்புத செயல்களையும் நேரில் காணும் பெரும் பாக்கியம் பெற்றிருந்தான். வனாந்தரத்தில் 40 ஆண்டுகளாக இஸ்ரவேலர் தங்கள் முரட்டாட்டத்தினிமித்தம் அலைந்து திரிந்தபோது, யோசுவாவும் கூட அவர்களோடு அலைந்துதிரிந்தான். வனாந்தர வாழ்விலுள்ள தோல்விகளையெல்லாம் அவன் அறிந்திருந்தான். மேலும் இஸ்ரவேலர் அடைந்த வெற்றியையும் அவன் கண்டிருந்தான். இறுதியில் கர்த்தரால் வாக்களிக்கப்பட்ட பாலும் தேனும் ஓடும் கானான் தேசத்தை இரகசியமாக வேவு பார்க்கச் சென்றிருந்த சிலருள் அவனும் ஒருவனாயிருந்தான். கானான் தேசத்தில் குடியிருந்த இராட்சதர் போன்ற பலசாலிகளையும், அவர்கள் கட்டி வாழ்ந்த கோட்டை கொத்தளங்களையும் கண்டு மனம் இளக்கரித்துப்போகவில்லை. காரணம் அவன் கர்த்தர் பேரில் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கைதான். கானானிலுள்ள பலத்த பகைவர்களைப் பார்க்கிலும், தங்களை வழிநடத்திச் செல்லும் கர்த்தர் பராக்கிரமமுள்ளவர் என்று திட்டமாய் நம்பினான். இவ்வாறு 80 ஆண்டுகளாகத் திரைக்குப் பின்னால், உத்தமத்திருத்தொண்டாற்றிய யோசுவாவை, தமது தாசனாகிய மோசே மரித்தபிறகு கர்த்தர் அழைக்கச் சித்தம் கொண்டார். இதுகாறும் மோசேயின் உண்மையுள்ள உத்தம ஊழியக்காரனாய் சேவை செய்த யோசுவா இப்பொழுது இஸ்ரவேலின் தளபதியாக உயர்த்தப்பட்டான்.

எதற்காகக் கர்த்தர் நம்மை இப்பொழுது ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை நாம் அறியாதிருக்கலாம். இப்போது நாம் ஆற்றிவரும் துன்பம் மிகுந்த இன்னல் நிறைந்த சுவையற்ற வேலையில் திருப்தியில்லாது மனம் நொந்திருக்கும். ஆனால் இந்த ஊழியம் பின்னால் நமக்குப் பெரும் பதவியைக் கொணரும் என்பதை நாம் அறிந்தோமானால் நமது அன்றாடக கடமையில் அதிருப்தி கொள்ளமாட்டோம். நம்மைப் பொறுப்புள்ள ஒரு பெரிய பதவிக்குப் பக்குவப்படுத்தவே கடவுள் இப்பொழுது நம்மை ஒரு சிறிய வேலையில் அமர்த்தியுள்ளார். இந்தக் கொஞ்சத்தில் நாம் உண்மையாயிருந்தால், பின்னர் நம்மை மாபெரும் பதவிக்கு உயர்த்த அவர் சித்தம் கொள்வார். அதை அறிந்த விசுவாசி ஒருகாலும் அன்றாடகக் கடமை ஆற்றுவதில் முறுமுறுப்பு கொள்ளவே மாட்டான். இஸ்ரவேலரை வழிநடத்த மோசே அழைக்கப்படுமுன், ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபடவேண்டியதிருந்தது என்பதை நாம் நினைவில் இருத்திக்கொள்ளவேண்டும். கர்த்தரால் பெரிய காரியத்திற்குப் பயன்படுத்தப்படும் மனிதன் முதலாவது அவன் வைக்கப்பட்டுள்ள சிறிய வேலையில் உண்மையுள்ளவனாய் இருக்கவேண்டும். மேல் மெத்தைக்கு ஏறவேண்டியவன் ஒரே அடியாக மேலே பறந்துவிடமுடியாது. கீழே உள்ள ஏணியின் அடிப்படியில் கால் வைத்து, படிப்படியாக மேலேறுகிறவன்தான் மெத்தைக்குச் செல்லமுடியும். தாழ்ந்த அடிப்படையை அசட்டை செய்து, அதில் கால் மிதிக்க அலங்காரங்கொள்ளுகிறவன் எவ்வாறு மேல்மாடிக்குச் செல்லமுடியும். தாழ்ந்து நிற்பவனே உயர்ந்து நிற்பானன்றோ!

அற்ப வேலையாயிருந்தாலும் முதலில் உண்மையுள்ள உத்தமத் தொண்டாற்றியவர்களுக்கே பின்னர் உயர்ந்த பதவி கிடைக்குமானால், நான் இதுகாறும் என் கடமையில் உண்மையோடும், உத்தமத்தோடும், நடந்துகொள்ளவில்லையே, எனக்கு இனி நல்ல பதவி கிடையாது போய்விடுமே என்று அங்கலாய்க்கிறாயோ? உன் பழைய வாழ்க்கை பாழாய்ப் போயிருக்கலாம். உன் கடமையில் நீ தவறியிருக்கலாம். உனது தற்போதைய வேலையில் அதிருப்தியும் அசட்டையுமுள்ளவனாயிருக்கலாம். கடமையுணர்ச்சியற்றவன் என்ற கெட்ட பெயர் வாங்கியிருக்கலாம். ஆகவே, இனி எனக்கு உயர்வில்லை என்று உள்ளம் உடைந்து போனாயோ? எனக்கேது உயர்வு என்று முகம் தொய்ந்து போனாயோ? என் வாழ்வில் ஏது ஆசீர்வாதம் என்று இதயம் சோர்ந்துபோனாயோ? உண்மையில் உயர்வைப்பெற நீ அருகதையற்றவன்தான். ஆகவே, உனக்கு விமோசனம் உண்டு. உன்கு ஒரே ஒருவர்தான் அந்த விமோசனத்தை அளிப்பவர். அவர் அந்த விமோசனத்தை உனக்குத் தர அவர் காத்து நிற்கிறார். அவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் உனக்குக் கிருபையாகக் கொடுக்கும் அந்தவிமோசனத்தை விசுவாசக்கரம் நீட்டி இப்பொழுதே நீ பெற்றுக்கொள்வாயாக.

இயேசு கிறிஸ்து இந்த விமோசனத்தை உனக்காக எப்படிச் சம்பாதிக்கச் சித்தம் கொண்டார்? இயேசு தெய்வமாய் இருந்தும், உனக்காகத் தேவ மனிதனானார். அவர் மூன்றாண்டுகள் பகிரங்க தெய்வ ஊழியத்தில் முழுவதுமாய் இறங்கிவிடுமுன் 30 ஆண்டுகள் அந்தரங்கமாக நாசரேத்தில் தச்சு வேலையில் ஈடுபட்டிருந்தார். ஒருவரும் அறியாத தச்சுவேலைதானே, இந்த அற்ப வேலையை யார் கவனிக்கப் போகிறார்கள் என்று நினைக்காமல், தச்சு வேலையை மனிதரும் தெய்வமும் மெச்சும்படியாக உண்மையோடு செய்தார். கிராமத்தில் வசித்த தம் ஏழை பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். எல்லாவற்றையும் படைத்து ஆண்டு நடத்தி வருகிற எல்லாம் வல்ல அதிகாரம் படைத்த ஆண்டவர்தாமே நமக்காகத் தம் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். தம் வீட்டுச் சட்டத் திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தார். நாசரேத் கிராமத்திலுள்ள தேவாலயத்திற்கு ஒழுங்காய்ப் போய் வந்தார். ஓய்வுநாளைக் கைக்கொண்டார். இவ்வாறு தனது வீட்டார், கிராமப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள், ஜெப ஆலயத் தலைவர்கள் அத்தனை பேருடனும் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடுடனும் அடங்கி நடந்து வந்தார். இவ்விதம் 30 ஆண்டுகள் அந்த கிராமத்து வாழ்க்கையில் கடமை உணர்ச்சியுடன் ஒழுக்கமாய் நடந்து கொண்டார். அவ்வாழ்வை அவர் அற்பமாய் எண்ணினதில்லை. அதில் உண்மையோடும், உத்தமத்தோடும் நடந்து கொண்டார். இத்தகைய 30 ஆண்டுகள் கட்டுப்பாட்டு வாழ்விற்குப் பின்னர் அவர் ஒரு நாள் தமது பகிரங்க தேவ ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு தொடக்கமாக ஞானஸ்நானம் பெற்றார். அப்பொழுது வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவஆவியானவர் புறாவைப்போல இறங்கித் தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து பிதாவின் சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. ஆகவே, இயேசு கிறிஸ்து நாசரேத்தூரில் 30 ஆண்டுகள் அந்தரங்கமாக ஆற்றிய உண்மையுள்ள உத்தம ஊழியம் பரமபிதாவால் அங்கீகரிக்கப்பட்டது என்று ஐயம் திரிபற அறிகிறோம். அவரது கிராமக் கட்டுப்பாட்டு வாழ்வில் தெய்வ முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. பிற்கால மூன்றாண்டுத் தெய்வத் திருப்பணியைச் செய்ய அவர் தீவிரமாக முனையுமுன் 30 ஆண்டுகள் ஒரு கிராமத்துத் தச்சுப் பட்டறையில் அடங்கி, கட்டுப்பட்டு உண்மையான உத்தமப் பணி ஆற்றினார். இந்த 30 ஆண்டுக் காலமாக அவர் சம்பாதித்த புண்ணியத்தை நமக்கு இன்று இலவசமாக அருளக் காத்து நிற்கிறார். யார் யார் கடமையில் தவறியுள்ளவர்களோ, அவர்களுக்கெல்லாம் விமோசனம் அளிப்பதற்குக் கடமை தவறாத கிறிஸ்து ஒருவரே உரிமையுள்ளவர்.

இன்று வீட்டு வாழ்விலும், நாட்டு வாழ்விலும், சபை வாழ்விலும், சமூக வாழ்விலும், யார் யார் கடமையில் தவறியுள்ளவர்களோ, அவர்களுக்கெல்லாம் ஈடேற்றம் அளிக்க வல்லவர் இயேசு கிறிஸ்து ஒருவரே. அவர் தமது பரிசுத்த ஆவியின்மூலமாக நீ உயர்ந்து வாழ்வதற்கு வேண்டும் புண்ணியத்தையெல்லாம் உனக்கு வாரி வாரி வழங்க, இதோ உன் இதய வாசல் அருகே துடித்துக்கொண்டு நிற்கிறார். சீர்கெட்ட பாழான பழைய வாழ்வை நினைத்து நினைத்து, மனம் நைந்து, உள்ளம் கலங்கி நிற்பவனே! இதோ ஆண்டவர் உனக்கு இப்பொழுது சொல்லும் ஆறுதலான வாக்கைக் கேள். பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

தேவன் பயன்படுத்தும் மனிதனுக்கு இருக்கவேண்டிய இரண்டாவது அதிமுக்கிய அம்சம் யாதெனில், அவன் திட்டமாய்த் தெய்வ அழைப்பைப் பெற்றவனாய் இருக்கவேண்டும். மோசே இறந்தபின் இஸ்ரவேலரை நடத்திச் செல்லும் பொறுப்பை யோசுவா தானாகச் சென்று, துணிகரமாய் அதை அபகரித்துக்கொள்ளவில்லை. அந்த உயர் பதவியை அவன்தானே இச்சித்து, அதை ஆக்கிரமித்துக்கொள்ளவில்லை. அவன் பதவிமோகத்தால் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ளவில்லை. மோசே இறந்துபோனான். ஆகவே, இனி நான்தான் உங்கள் அதிகாரி என்று யோசுவா தானே விளம்பரம் செய்யவில்லை. அவன் அந்த உன்னத பதிவிக்குத் துணிகரமாய் ஏறவில்லை. கர்த்தரே அவனை உயர்த்தினார். கர்த்தரே அவ்வுன்னத பதவிக்கு அவனை அழைத்தார். கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின், கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனாகிய யோசுவாவை நோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப்போனான். இப்பொழுது நீ எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்கு இவர்களை அழைத்துக்கொண்டு போ. நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோட இருந்ததுபோல உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. பலங்கொண்டு திடமனதாயிரு. இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய் என்றார்.

கானான் தேசத்திலே நூற்றுக்கணக்கான விரோதிகள் உண்டென்று யோசுவாவுக்குத் தெரியும். தான் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடி மண்ணுக்காகவும் பகைவர்கள் எதிர்த்துப் போராடுவார்கள் என்பதும் அவன் அறிந்ததே. தனக்கு எதிரே தான் கடந்து செல்லவேண்டிய ஒரு பெரிய நதி இருக்கிறதென்பதையும் அவன் அறிவான். எதிரிகள் நகரங்களைச் சுற்றிக் கட்டி இருந்த பிரமாண்டமான மதில் கோட்டைகளையும் அறிவான். இஸ்ரவேல் புத்திரர் எவ்வளவு முரட்டாட்டமானவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். கானானியரைத் தோற்கடித்து, கானானில் குடியேறுமுன் தனக்கு நேரிடவிருக்கும் எதிர்ப்புக்கள், இன்னல்கள் எல்லாம் அவன் மனக்கண் முன் வந்து நின்றது. தானோ பலவீனன். எனினும் தன்னை அழைத்தவரோ கடவுள். எல்லாம் வல்ல கர்த்தர். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை. தேவனால் எல்லாம் கூடும். கர்த்தரை நம்பினவன் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போனதில்லை. ஆகவே, பலவீனனாகிய தன்னை அழைத்தவருக்கு தனக்கு வேண்டும் பலத்தையும் கொடுக்கமுடியும் என்று நம்பினான். தான் அழைக்கப்பட்ட பெரிய பதவிக்கு வேண்டும் பெரும் வல்லமையையும் தன்னை அழைத்த ஆண்டவர் கொடுப்பார் என்று திட்டமாய் நம்பினான்.

திருச்சபைக்கும் இவ்வாறு திட்டமாகத் தெய்வ அழைப்பைப் பெற்ற தலைவர்களே வேண்டும். தலைமைப் பதவிக்குப் போதிய குணாதிசயங்கள் ஒருவரிடம் இருக்கின்றனவா என்று சோதித்துப் பார்க்குமுன், அவர் அத்தலைமைப் பதிவிக்குத் தேவனால் நிச்சயமாய் அழைக்கப்பட்டவரா என்று பார்க்கவேண்டும். ஆள் அம்சத்தைவிட ஆண்டவர் அழைப்பே மேலானது. தேவனுடைய அழைப்பைப் பெறாத ஒரு பலவானைவிட தேவ அழைப்பைப் பெற்ற ஒரு பலவீனன் உத்தமம். அழைப்பவர் உண்மையுள்ளவர். வல்லமையுள்ளவர். அவர் ஒருவனை ஒரு பதவிக்கு அழைக்கும்போது, அவன் அப்பதவியைத் திறம்பட வகிப்பதற்கு வேண்டும் வல்லமையைக் கிருபையாய் அருளிச் செய்வார். இக்காலத்தில் அநேகத் தலைவர்களிடையே காணப்படும் வல்லமையின்மைக்குக் காரணம் அவர்கள் தேவ அழைப்பைப் பெறாது, தாங்களாகவே அப்பதவிக்கு வந்தவர்கள்.

தேவ அழைப்பைப்பெற்ற ஒரு தலைவன் முன் மலைபோன்ற துன்பங்கள் குறுக்கிட்டு ஓடலாம். அணைக்க முடியா பெரும் தீ அவன்முன் கொழுந்துவிட்டு எரியலாம். இராட்சதர் போன்ற பகைவர்கள் எதிர்த்து வரலாம். வானளாவும் கோட்டை கொந்தளங்கள் அவன் வழியை மறித்து நிற்கலாம். கண்டனங்களும் கேலி நையாண்டிகளும் அவனுக்கு எதிராக நிற்கலாம். இன்னல்கள் இருள்படலம்போல் அவன் பாதையைக் கவிந்து காணப்படலாம். எனினும், கர்த்தரால் அழைக்கப்பட்ட மனிதனோடு கர்த்தர் குடிகொண்டிருப்பதால் மலைகள் நகரும். ஆறுகள் விலகும். தீ அணையும். அரக்கர் மடிவர். பகைவர் வீழ்வர். கோட்டை கொந்தளங்கள் இடிந்து நகர்ந்து விழும். இன்னல்கள் இறக்கை கட்டிப் பறக்கும். சூரியனைக் கண்ட பனிபோல் அல்லல்கள் அகன்றுபோம். காரணம் கர்த்தர் அவனோடு இருக்கிறார். தற்காலத் திருச்சபை வாழவேண்டுமாயின், கர்த்தருடைய அழைப்பைப் பெற்ற கர்த்தருடைய மக்கள் தலைவர்களாக வேண்டும்.

காத்தர் பயன்படுத்தும் மனிதனிடம் காணப்படவேண்டிய மூன்றாவது அம்சம் யாதெனில், அவன் கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமுள்ள மனிதனாயிருக்க வேண்டும். என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் பலங்கொண்டு திடமனதாயிரு. நீ போகுமிடமெல்லாம் புத்திமானாயும் நடந்துகொள்ளும்படிக்கு, அதைவிட்டு வலது இடது புறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு, திடமனதாயிரு. திகையாதே கலங்காதே, நீ போகுமிடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.

கர்த்தர் தமது வசனத்தின்மூலம் நம்மோடு பேசுகிறார். தினந்தோறும் பரிசுத்தாவியின் மூலமாகக் கர்த்தருடைய பேச்சைக் கேட்கவிரும்புகிறவர்கள், தினந்தோறும் பரிசுத்த வேதாகமத்தைத் தவறாது வாசித்துத் தியானிக்கவேண்டும். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். உமது வேதம் என் கால்களுக்குத் தீபம். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும்.

வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. என்னைக் குறித்து (இயேசுவைக் குறித்து) சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே.

இதுகாறும் தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதர்கள் அத்தனை பேரும் தினந்தோறும் ஒழுங்காக வேதம் வாசித்து, தியானம் செய்தவர்களே ஆவர். வேத வசனத்தின்மூலம் கர்த்தர் நாள்தோறும் அவர்களோடு உறவாடினார். அவர்களைப் பலப்படுத்தினார். அவர்களைத் திருத்தினார். அவர்களை வழிநடத்தினார். அவர்களைத் திடப்படுத்தினார். அவர்கள் வேததியானத்தின்மூலம் அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்தது. இன்றோ, எங்கும் தோல்வி, எங்கும் அவமானம், எங்கும் இகழ்ச்சி, எங்கும் குறைவு. செழிப்பில்லை, வெற்றி இல்லை. அற்புதச்சாதனையில்லை. காரணம்? கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருக்கும் அரும் பெரும் பரம கலையைத் தற்காலவாசிகளாகிய நாம் இழந்துவிட்டோம். என்னெல்லாமோ செய்கிறோம். ஆனால் அதிகாலையில் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்க மறந்துவிடுகிறோம். அல்லது அதற்கு நேரமில்லாது போய்விடுகிறது. அல்லது அசட்டையாய்ச் சோம்பேறித்தனமாய் இருந்துவிடுகிறோம். வேதத் தியானம் இல்லாமலே கர்த்தருக்குப் பிரியமாய் வாழலாம் என்று நினைக்கிறோம். பரிசுத்த வேதாகமத்தை வாசித்து, பரிசுத்தாவியானவர் நம்மோடு பேசும் அமர்ந்த மெல்லிய சத்தத்தைப் பக்தி விநயமாகக் கேட்க நேரம் செலவழியாதவர்கள் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை ஆற்றமுடியும்? பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்குக் குறுக்கு வழியே கிடையாது. அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த வழி கிறிஸ்துவே. அவருடைய வசனத்தைப் பரிசுத்தாவியானவர் ஒத்தாசையால் கண்ணும் கருத்துமாக வாசித்து, கேட்டு கற்றறிந்து உட்கொள்வதே, ஒரு பரிசுத்தவான் கைக் கொள்ளவேண்டிய நெறி. அதிகாலையில் திறந்த வேதாகமத்தோடு முழங்காலில் நிற்கப் பழகாதவர்கள் புனித வாழ்வில் தோல்வியுறுவது திண்ணம். தேவன் பயன்படுத்திய பக்தர்கள் அத்தனைபேரும் அதிகாலையில் வேதம் வாசித்து, தியான ஜெபத்தில் நெடுநேரத்தைச் செலவழித்தவர்களேயாவர். ஆனால் தற்காலத்திலோ வேலை, ஓய்வு ஒழிவு இல்லாத வேலை என்று சொல்லி, மாபெரும் மகத்தான வேலையாகிய வேதத்தியானத்திற்கு நேரமில்லாது போய்விடுகிறது. அதிகாலையில் வேதத்தியானத்தில் மூழ்கிவிடுவதே ஒரு கிறிஸ்தவனின் அதிமுக்கிய வேலையாகும். இப்பரம வேலைக்கு இடையூறாக இருக்கும் வேறு எந்த வேலையையும் நாம் ஒழித்துக்கட்ட தயங்கவே கூடாது. வேததியானத்திற்கு முட்டுக்கட்டை போடும் சாத்தானின் சோதனைகள் என்ன என்று இன்றே துருவி ஆராய்ந்து அச்சோதனைகளையெல்லாம் மேற்கொள்ள நாம் இயேசுவை நோக்கி மன்றாடவேண்டும். நமது தோல்விக்கு முதற்காரணம் நாம் அதிகாலையில் வேதவாசிப்பையும் தனி ஜெபத்தையும் மறந்ததேயாகும். பரிசுத்த வாழ்க்கை நடத்துவதற்குப் பலம் ஊட்டுவது, வேத வசனப்பாலேயாகும். வேதத்தையும் தனி ஜெபத்தையும் அசட்டை செய்தவர்கள் உடனே திரும்பி வேதத்தியானத்தில் ஈடுபட கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக.

இயேசு கிறிஸ்து சென்ற வழி இதுதான். வேதநெறியே வேதநாயகன் நெறி. அவரிடமிருந்து புறப்பட்ட வேதம். அவர் இதயத்தில் எப்பொழுதும் தங்கி இருந்தது. வேதம், இயேசு கிறிஸ்து இதயத்தினின்று பொங்கி வழிந்தது. பரிசுத்த விவாக ஐக்கியத்தைக் குறிப்பிடும் இடத்து வேதத்தினின்று ஆதாரம் தந்தார். தாம் மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பும் அற்புத நிகழ்ச்சியைக் கூறுங்கால், யோனாவின் நிகழ்ச்சியை எடுத்துரைத்தார். தான் சாத்தானால் சோதிக்கப்பட்டபொழுது வேத வசனப் பட்டயத்தால் அவனை வெட்டி வீழ்த்தினார். வேதத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறதே, வேதத்தில் இவ்வாறு கூறியிருப்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? என்று அடிக்கடி சத்திய வேதாகமத்தையே சுட்டிக்காட்டினார் சத்தியபரன். வேதமே அவருக்குப் பலத்த ஆயதமாக இருந்தது. வேதத்தின் முதலும் அவர், வேதத்தின் பொருளும் அவரேயாவார். வேதத்தில் பழுத்த செழுங்கனி கிறிஸ்துநாதரே. அவருடைய நெஞ்செல்லாம் வேதம் பொங்கியது. வாயெல்லாம் இனித்தது. வேதத்தின் மகிமை இயேசு கிறிஸ்துவே.

இயேசு கிறிஸ்து மொழிந்த வேத வாக்கு. அவர் வாயினின்று புறப்பட்ட ஒவ்வொரு வசனமும் வேதவசனம். இயேசு கிறிஸ்துவின் வார்த்தை ஆவியாயும் ஜீவனுள்ளதாயும் இருக்கிறது. அவருடைய ஒரு சொல்லால் செத்து நாறிப்போன மனிதனும் உயிரோடு எழுந்தான். அவருடைய சொல்லுக்கு கடல் அடங்கியது. புயல் அமர்ந்தது. நோய் தீர்ந்தது. பேய் பறந்தது. அவருடைய சொல்லுக்கு அவ்வளவு ஆற்றல் உண்டு. அந்த ஜீவ வார்த்தைகளை வேதத்தின் வாயிலாக இன்றும் படிக்கலாம். இன்றும் தியானிக்கலாம். அந்த வார்த்தையால் இன்றும் உயிர்பெறலாம். ஊக்கம் பெறலாம், ஒளி பெறலாம். திருத்தம் பெறலாம், மயக்கம் தீரலாம், ஆறுதல் அடையலாம், தூக்கம் நீங்கலாம், புத்துயிர் பெறலாம். புது புது சாதனைகளைச் சாதிக்கலாம். சாத்தனைக் கொன்று வீழ்த்தலாம். வெற்றி பெறலாம். ஆகவே, வெற்றியுள்ள பரிசுத்த ஜீவியம் செய்வதற்கு வேதத் தியானம் அத்தியாவசியம்.

நீ ஒரு கால் இதுகாறும் கடமையில் தவறியிருக்கலாம். தெய்வ அழைப்பை அசட்டை செய்து துணிகரமாகச் செயலாற்றியிருக்கலாம். வேத வசனமாகிய பட்டயம் இன்றிப் போருக்குச் சென்றிருக்கலாம். தோல்விமேல் தோல்வி அடைந்திருக்கலாம். சோர்வுற்றிருக்கலாம். வாடிப்போன வறண்ட என் வாழ்விலே இனி ஒருக்காலும் மலர்ச்சி மலராது என்று மயங்கி இருக்கலாம். நீ இதுவரை உன்னையே பார்த்தாய். இனிக் கிறிஸ்துவை நோக்கிப் பார். அவர் மறுமலர்ச்சி தருவார். புத்துயிர் ஊட்டுவார். பரிசுத்தாவியானவர் உன் இருதயத்தில் ஊற்றெடுப்பார். கிறிஸ்து உன்னோடு இருப்பார். ஆகவே கலங்காதே, திகையாதே. அவர் உன்னை உயர்த்துவார். சேறான உளையிலிருந்து உன்னைத் தூக்கி எடுத்து, உன்னதமான கன்மலையிலே உன்னை உயர்த்துவார். அவர் உன்னை உயர்த்தும்பொழுது பிறிதார் உன்னைத் தாழ்த்தமுடியுமோ? ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சம் அவன் கிறிஸ்துவைத் தன் நாயகராக்கிக் கொள்வதே. கிறிஸ்துவின் ஆவி இல்லாதவன் அவருடையவன் அல்ல. தேவன் பயன்படுத்தும் மனிதனுக்கு இருக்கவேண்டிய மாசிறந்த பண்பு கிறிஸ்து அவனோடே இருப்பதே ஆகும். யாருடைய உள்ளத்தில் கிறிஸ்து உறைகிறாரோ, அவனே உத்தமன். அவனே உயர்வுக்குத் தகுதிபெற்றவன். கிறிஸ்து இல்லாமல் நீ கிறிஸ்துவின் தொண்டனாக வாழ்க்கை ஆற்ற முடியாது.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

03. கிரயம் எண்ணிப் பார்த்தல்

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

04. ஆசீர்வாதம் அடைவதற்கு ஒரே வழி

Recommended

Song 172 – Karthar Naamam

00. பொருளடக்கம்

11. எருசலேமில் வாழ்ந்த மக்கள்

(0) கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு

(2) சினம்

Song 043 – Thuthippen Thuthi

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.