• பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
Sunday, November 9, 2025
  • Login
Tamil Christian Assembly
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி
No Result
View All Result
Tamil Christian Assembly
No Result
View All Result

15. திருப்தியுள்ள வாழ்வு

August 18, 2018
in கிறிஸ்தவ நூற்கள், கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
0 0
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  1. திருப்தியுள்ள வாழ்வு

தியான வாசிப்பு: யோசுவா 13:29-33

லேவி கோத்திரத்திற்கு மோசே சுதந்திரம் கொடுக்கவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி அவரே அவர்களுடைய சுதந்திரம் (யோசு.13:33).

யோசுவா பதின்மூன்றாம் அதிகாரத்தில் சீட்டு என்ற பதம் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகச் சீட்டுகளை மாத்திரம்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும். இக் கானான் தேசத்தை ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சீட்டுப்போட்டு பங்கிடு என்று கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார். அவ்வாறே யோசுவா சீட்டுப்போட்டு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுத்தான். ஆனால், லேவியரின் கோத்திரத்துக்கு மாத்திரம் அவன் சுதந்திரம் கொடுக்கவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்திரம். கர்த்தரே அவர்களுடைய சுதந்திரம். லேவிகோத்திரத்தார் கர்த்தருடைய சித்தத்தைத் தாங்கள் பாக்கியமாகக் கருதி, அவரையே தங்கள் மகத்தான சுதந்திரமாகக் கொண்டார்கள்.

எப்பொழுதுமே கர்த்தர் தெரிந்து கொடுப்பது, மனிதன் தெரிந்து எடுப்பதைவிட நிலைவர பாக்கியம் உடையதாய் இருக்கும். ஆபிரகாமுக்குக் கர்த்தர்தாமே எல்லாவற்றையும் தெரிந்து கொடுக்கவேண்டுமென்று, அவன் அவரையே வேண்டிக்கொண்டான்.

தனது எல்லாவற்றிற்காகவும், அவன் கர்த்தரையே நம்பியிருந்தான். தனக்குத்தானாகத் தெரிந்துகொள்வது அல்ல. கர்த்தர்தாமே தனக்குத் தெரிந்து கொடுப்பதே அழியாத பரம ஆசீர்வாதமாய் இருக்கக் கண்டான். ஆகவே, அவன் தன் வாழ்வில் ஒவ்வொரு சின்னக் காரியத்துக்காவும் கர்த்தரையே நோக்கி, கர்த்தரையே நம்பியிருந்தான். இத்தகைய விசுவாசமுள்ள பக்தனாகிய ஆபிரகாம், விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பொருத்தம். கர்த்தரை விசுவாசித்த அவன் ஒருக்காலும் வெட்கப்பட்டுப்போனதில்லை. கர்த்தரை நம்பியிருந்த அவன், ஒருநாளும் ஏமாற்றம் அடைந்ததில்லை. கர்த்தரை நம்பினவர் கைவிடப்படமாட்டார். அன்றோ!

ஆனால், லோத்துவோ தனக்கு வேண்டியதையெல்லாம் தானே தெரிந்து கொள்ள முந்திக்கொண்டான். அவன் கர்த்தரைக் கேட்டு, தனது சுதந்திரத்தைத் தெரிந்துகொள்ளவில்லை. தானாகவே தனக்கு நல்லது எது என்று எண்ணினானோ, அவற்றையெல்லாம் தன் இஷ்டப்படி தெரிந்துகொண்டான். அவன் தனக்கு ஆசீர்வாதமாய் இருக்குமென்று எதையெல்லாம் தன் விருப்பப்படி தெரிந்துகொண்டானோ, அவையெல்லாம் அவனுக்குச் சாபமாய் முடிந்தன. காரணம், எது எது உண்மையாகவே சதாகாலமும் நன்மை பயக்கக்கூடியது என்பது கர்த்தர் ஒருவருக்கே வெட்ட வெளிச்சம். அவர் சரி என்று தெரிந்தெடுத்துக் கொடுப்பதெதுவோ அதெல்லாம் நீடித்து நன்மை தந்து நிற்கும். மண்ணான மனிதனான லோத்து தெரிந்து கொண்ட மண்ணெல்லாம் மண்ணாகவே முடிந்தது. அவன் தெரிந்து கொண்ட அத்தனையும் அழிந்தொழிந்தது.

முதலில் நன்மைபோல் காட்சியளித்த அத்தனையும் பின்னர் அவனுக்குத் தீமையாகவே விளைந்தது. முதலில் அவன் மாணிக்கக் கற்கள் என்று எண்ணியவையெல்லாம் பின்னர் மண்ணாங்கட்டிகளாய் மாறிவிட்டன. மனிதன் மனிதனே, தெய்வம் தெய்வமே. தெய்வம் கொடுப்பதே அழியா பாக்கியம் அன்றோ!

உனக்கு வேண்டியவைகளையெல்லாம் நீயே தெரிந்து கொள்ள முனைந்து நிற்கிறாயோ, அந்தோ! உனக்கு எதுதான் நன்மையென்று உனக்குத் தெரியாதே, பொல்லாத மனிதனே, நீ நல்லதென்று நினைப்பதெல்லாம் உனக்குப் பொல்லாப்பாகவே முடியாலாம். கர்த்தர் ஒருவரே நல்லவர். அவர் உனக்குத் தெரிந்து கொடுப்பதே நல்லது. மேல்பார்வைக்கு உனக்கு ஒருவேளை அவர் தருவது கசப்பாகத் தோன்றினாலும், பாவவியாதி படைத்த உனக்கு அவர் தருவதோ மாமருந்தாகும். அவர் கரத்திலிருந்து புறப்படுவதெல்லாம் நன்மையாகவே இருக்கும். எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணருமானவர் அவர் ஒருவரே. இதுகாறும் நன்மை அடைந்தவர்களெல்லாம் அவரிடமிருந்தே நன்மை பெற்றுள்ளார்கள். உனக்கென்று நீ தெரிந்துகொள்வதும், உனக்கென்று சாத்தான் தருவதும் பார்வைக்கு தேனாமிர்தமாகத் தோன்றினாலும் உள்ளேயோ விடம் பொருந்தியிருக்கும். ஆகையால், உன் வாழ்வில் வேண்டும் எல்லா நன்மைக்கும் அவரையே நோக்கிப் பார். அவர் சித்தமே உன் பாக்கியம். அவர் தெரிந்து கொடுப்பதே உன் ஆசீர்வாதம். ஆகையால் சீட்டுப்போட்டு அவர் கொடுப்பதைத் திருப்தியோடு வாங்கிக்கொள். திருப்தியுள்ள வாழ்வே தேவாமிர்த வாழ்வு.

நீ எந்த அலுவல் பார்க்கவேண்டுமென்பதைக் கர்த்தர் தெரிந்து கொள்ளட்டும். நீ எத்துறையில் இறங்கவேண்டும் என்பதை இறைவனே தெரிந்துகொள்ளட்டும். நீ எந்தக் கல்வி கற்கவேண்டும் என்பதைக் கடவுளே தெரிந்துகொள்ளட்டும். நீ என்ன சேவை செய்யவேண்டும் என்பதைத் தெய்வமே தெரிந்துகொள்ளட்டும். நீ எதை எதைச் சாதிக்கவேண்டும் என்பதை அவரே தெரிந்து கொள்ளட்டும். உன் வாழ்க்கையின் போக்கை ஆண்டவரே தெரிந்துகொள்ளட்டும். உன் வாழ்க்கையின் துணையை அவரே தெரிந்துகொள்ளட்டும். ஒவ்வொரு சிறு காரியத்திலும் அவர் தெரிந்துகொள்வதையே நீ தெரிந்துகொள்ளவேண்டும். உன் இஷ்டப்படி எதையும் தெரிந்துகொள்ளாதே. நீ இம்மையிலும் மறுமையிலும் வாழவேண்டுமாயின் எல்லாவற்றையும் தேவன்தாமே உனக்குத் தெரிந்துதருமாறு, எல்லாவற்றையும் தேவகரத்தில் ஒப்புவித்துவிடு. அவர் ஒருவரே உனக்கு நல்வாழ்வு தருபவர். அவர் ஒருவரே நீ இம்மையிலும் மறுமையிலும் வளம் பெற்று வாழவேண்டுமென விரும்புகிறவர். சாத்தானோ உன் உயிருக்கு உலை வைக்கிறான். உன் வாழ்வுக்கு நெருப்பு வைக்கிறவன். உன் முக்தி இன்பத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறவன். ஆகவே, நண்பனே! நீ எந்நாளும் நலம் பெற்று நன்றாய் வாழவேண்டுமெனின் சாத்தானை நம்பாதே. உலகத்தை நம்பாதே. உன்னையும் நீ நம்பாதே. உலகத்தை நம்பாதே. இயேசு ஒருவரையே நம்பு. அவர் தெரிந்துகொள்வதையே நீ விரும்பி வாங்கிக் கொள். அவர் தந்ததில் திருப்தி கொண்டிரு. அவர் கொடுப்பதையே திருப்தியோடும் பெற்று அனுபவி. போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து.

ஒருகால் நீ இதுகாறும் நீயே தெரிந்துகொண்ட பாதையில் சென்று மனம் நொந்து போனாயோ? நீ மலர் என்று கருதினது காலப்போக்கில் முள்ளாக மாறினது என்று கண்டு உள்ளம் உடைந்து போனாயோ? நீ தங்கம் என்று நினைத்து வெறும் பித்தளையாக இருக்கக் கண்டு தாங்கொணாத் துக்கத்துள் ஆழ்ந்துள்ளாயோ? ஐயோ! ஆண்டவரைக் கேளாது தானாக இஷ்டப்படி தெரிந்துகொண்டதெல்லாம் இப்பொழுது ஈட்டி முனையாக மாறி எனைவாட்டி வதைத்துத் துன்புறுத்துகிறதோ? இதற்கு இனி ஒரு விமோசனமே இல்லையா? என் மனம்போன போக்கில் சென்று மலைபோல் துயர்தனை என் தலைமேல் குவித்துக்கொண்ட எனக்கு இனி ஒருகாலும் ஈடேற்றமே இல்லையா? என் வாழ்நாளெல்லாம் என்னுடைய தவறான தெரிந்துகொள்ளுதற்காக நான் நலிந்து நைந்து, துயர் கடலில் ஆழ்ந்து தவித்துக்கொண்டேதான் இருக்கவேண்டுமா? இனி இதற்கு மருந்தே இல்லையா? இருண்டுபோன என் வாழ்வில் மீண்டும் ஒருநாளும் ஒளிச்சுடர் மிளிராதோ?

அந்தோ! எனது இளமையில் எண்ணிய எண்ணமெல்லாம் சிதைவுற்று, சீர்குலைந்து சின்னாபின்னமாகத் சிதறுண்டு போய்விட்டனவே. இளமை என்றுமே அழியாது. மென்மேலும் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக அழகாய் வளர்ந்துகொண்டே போகும் என்று நினைத்த எண்ணமெல்லாம் அழிந்துவிட்டதே? வனப்பெல்லாம் வாடிவிட்டதே? பலமெல்லாம் குறைந்து விட்டமே? எதிர்பாரா விபத்தில் சிக்கி, கால் கையெல்லாம் அறவே முறிந்துபோய் விட்டனவே. தீராத் தொத்துநோய் கண்டு அல்லும் பகலும் அவதியுறுகிறேனே? நெஞ்செல்லாம் நோய், உடம்பெல்லாம் வியாதி, மேனியெல்லாம்பிணி, கண்ணெல்லாம் புண், காதெல்லாம் செவிடு, படுத்த படுக்கையாகக் கட்டில் கிடையாகக் கிடக்கிறேனே. என்னைக் கவனிப்பாரே இல்லையோ? கடவுளுக்கு கண் இல்லையா? ஆண்டவருக்குக் காதே இல்லையோ? தெய்வத்திற்கு நெஞ்சமே இல்லையோ? அவருக்குத் துளி அன்பும்கூட இல்லையா? அவர் மனம் என்ன கருங்கல்லா? எனக்கு உறைவதற்கு ஓர் உறைவிடமும் இல்லை. உறவாட உற்றார் உறவினர் இல்லை. பேரன்பு காட்ட பெற்றோர் இல்லை. ஆதரிக்க யாருமே இல்லை. இல்லத்தில் இல்லாள் இல்லை. கணவன் இல்லை. கைச்செலவுக்குக் கையில் காசு இல்லை. பசியும் பட்டினியும் என்னை வாட்டிக் கொத்தித் தின்கின்றனவே. கவலையும் கண்ணீருமாக, கவனிப்பாரற்று இருக்கிறேனே. என் கவலையைப் போக்குவார் யாருமே இல்லையா? என் நோயைப் போக்குவார் யாருமே இல்லையா? என்று புலம்புகிறாயோ! உன் பெருமூச்சுகள் மத்தியில் ஒன்றை மறந்துவிட்டாதே.

உன் இடையூறுக்கெல்லாம் காரணம் நீ உன் இஷ்டப்படி மனம் போன போக்கிலே போனதே காரணம். கர்த்தரிடம்தான் நீ கலந்து ஆலோசிக்கவில்லையே. பின்னை எப்படி உன் வாழ்வில் ஆசீர்வாதம் இருக்கும் ? எனினும் சோர்ந்து போகாதே. உனக்கு ஒரு விமோசனம் உண்டு. உனக்கும் ஒரு நம்பிக்கைச் சுடர் உண்டு. உனக்கும் ஒரு நல்ல காலம் உண்டு. எப்பொழுது? நீ இதுகாறும் மறந்துவிட்ட, அவமதித்துத் தள்ளிவிட்ட ஆண்டவரிடம் சென்று அவரையே உன் ஆசீர்வாதமாகச் சுதந்தரித்தக் கொண்டால், உன் வாழ்வில் ஆசீர்வாதம் ஊற்றெடுக்கும். பேரின்பம் பெருக்கெடுக்கும். வளம் வழிந்தோடும். மறுமலர்ச்சி மீண்டும் உன் வாழ்வில் பூத்துக் குலுங்கும். ஒருகால் சோரம் போன லேவியர் கர்த்தரைத் தங்கள் சுதந்திரமாகத் தெரிந்து கொண்டபொழுது அவர்கள் வாழ்விலோர் மகத்தான திருப்பம் ஏற்பட்டது. கருகிப்போன அவர்கள் வாழ்வு மீண்டும் மலர்ந்தது. பொலிவுற்றுத் திகழ்ந்தது.

லேவி கோத்திரத்திற்கும் மோசே சுதந்திரம் கொடுக்கவில்லை. இஸ்ரலேவின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி கர்த்தரே லேவியருடைய சுதந்திரம். உபாகமம் 10:8-9 வசனங்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை. அக்காலத்தில் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள் வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியில் நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். ஆகையால் லேவிக்கு அவன் சகோதரருடன் பங்கும் சுதந்திரமும் இல்லை. உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடியே கர்த்தரே அவனுக்குச் சுதந்திரம்.

லேவி கோத்திரத்தாருக்கு மாபெரும் கௌவரம் கிட்டியது. காரணம் அவர்களுக்கு தேவாராதனை நடத்தம் மாசிறந்த வாய்ப்பு கிடைத்தது. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்லும் பாக்கியம் கிடைத்தது. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி கர்த்தருடைய பிரசன்னத்தைக் காட்டும் சின்னம் அன்றோ? மேலும், கர்த்தருடைய வல்லமையான நாமத்தைக் கொண்டு ஆசீர்வாதம் கூறும் மகிமையான பாக்கியமும் பெற்றார்கள். ஆகவே, கர்த்தரே அவர்களுடைய சுதந்திரம் ஆனார். இதைவிட பெரிய சுதந்திரம் வேறே என்ன இருக்கிறது? இதைவிட ஆசீர்வாதம் பிறிதென்ன வேண்டும்? கர்த்தருக்கு உரியவைகள் எல்லாம் லேவியருக்கு உரியவைகள் ஆயின. காணிக்கைப் பொருள்கள் எல்லாம், பலியிடும் பொருள்கள் எல்லாம் லேவியரையே சார்ந்தன. எவ்வளவ மகத்தான உரிமை. ஆ! கர்த்தருக்கு ஆராதனை செய்யும் மம்னிதன் எத்துணை பாக்கியவான். கர்த்தருடைய பிரசன்னத்தை உணர்த்தும் மனிதன் எவ்வளவு உத்தமன். கர்த்தரின் நாமத்தினால் மக்களை ஆசீர்வதிக்கிறவன் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன்.

கர்த்தருடைய சந்நிதியிலே நின்று கர்தருக்கு ஆராதனை செய்யும் வேலை லேவியருக்குக் கொடுக்கப்பட்டது. கர்த்தருடைய சந்நிதியில் லேவியர்கள் நின்றார்கள். பொது மக்களுக்கும் தேவாதி தேவனுக்கும் நடுவாக நின்று மத்தியஸ்த ஜெபம் செய்யும் பொறுப்புப் பெற்றார்கள்.

விண்ணுலகத்திற்கும் மண்ணுலகத்திற்கும் மத்தியில் நின்று மனிதருக்காகத் தேவனிடத்தில் மன்றாடும் மாபெரும் திருப்பணியாற்றினார்கள். லேவியர்கள் அவர்கள் பரமமண்டலத்துப் பராபரனை நோக்கி மனிதருக்காகப் பிரார்த்தனை புரிந்ததுமன்றி, எல்லாம் வல்ல ஏகத் தெய்வத்தின் நாமத்தினால் மனுப் புத்திரர்க்கு ஆசீர்வாதம் கூறும் அரிய சிலாக்கியமும் பெற்றார்கள். தெய்வத்தையும் மாந்தரையும் இணைக்கும் பாலம் ஆனார்கள். கர்த்தர் மக்களிடத்திற்கு வரவும், மக்கள் கர்த்தரிடத்திற்குச் செல்லவும் தக்கதான இணைக்கும் ஏணிபோல் விளங்கினார்கள். தெய்வச் சித்தத்தை மானிடர்க்குத் தெரியப்படுத்தவும், மாந்தரின் குறைவைக் கடவுளுக்குத் தெரியப்படுத்தவும், தெய்வாசீர்வாதத்தை மக்கள்மீது பொழியப்பண்ணும், ஏற்றதான இரு வாயையுடைய வாய்க்கால்போல திகழ்ந்தார்கள் .

இம்மகத்தான திருப்பணியாற்றிய லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்கள் கொடுக்கப்பட்டன. அந்தப்பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளி நிலங்களும் லேவியருக்கு கொடுக்கப்பட்டன. அந்தப் பட்டணங்கள் லேவியர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திக்கும், அவர்களுடைய சகல மிருகஜீவன்களுக்கும் ஒதுக்கப்பட்டன. லேவியருக்குக் கொடுக்கப்பட்ட பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலப் பட்டணங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கொலைசெய்தவன் அங்கே தப்பி ஓடிப்போவதற்கு அவைகள் நியமிக்கப்பட்டன. அவைகளையெல்லாம் மேலும் நாற்பத்திரண்டு பட்டணங்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆகமொத்தம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும், அவைகளைச் சுற்றியுள்ள வெளிநிலங்களும் லேவியருக்கு சுதந்திரமாக வழங்கப்பட்டன.

வேதாராதனை நடத்தும் திருப்பணியினின்று ஓய்வுபெறும் லேவியர்கள் இப்பட்டணங்களுக்குச் சென்று வசித்தார்கள். தேவசமூகத்தில் எப்பொழுதும் நின்று திருப்பணிவிடை செய்வதால் அவர்கள் முகங்களில் பரம ஒளி வீசியது. தெய்வஅருள் பொங்கி வழிந்தது. இத்திவ்விய அருள் மணக்கும் வதனங்களோடு, தெய்வப் பக்தி பிரவாகத்தோடும் இதயங்களோடு, தெய்வமணங்கமழும் திருமேனியோடு, தெய்வச் சமுகத்தில் பரிசுத்தச் சேவைசெய்த லேவியர்கள் ஓய்வுற்ற காலத்தில் இப்பட்டணங்களுக்குச் சென்று வசித்துவந்தார்கள். அவர்கள் வசித்த பட்டணங்களில் இப்பரிசுத்தத் தெய்வ மணம் கமழுமன்றோ? பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் அல்லவா! லேவியர்கள் சென்ற பட்டணங்களில் தெய்வமகிமை விளங்கியிருக்கும். அவர்கள் வாழ்க்கையெல்லாம் தெய்வத்திருப்பணி. அவர்கள் வாழ்வெல்லாம் தெய்வப் பிரசன்னம். அவர்கள் செய்வதெல்லாம் தெய்வ வணக்கம். அவர்கள் சுதந்தரமெல்லாம் தெய்வம். கர்த்தரே அவர்களுடைய சுதந்திரம்.

ஆனால் இவ்வளவு மகத்தான சுதந்திரத்தையும் பாக்கியத்தையும் பெற்ற லேவி ஆரம்பத்தில் இப்பொறுப்புக்கு சிறிதும் அருகதையற்றவனாகவே இருந்தான். இச்சிலாக்கியத்திற்கேற்ற சீரிய பண்பு அவன் வாழ்வின் தொடக்கத்தில் அவனிடத்தில் இருந்ததில்லை. லேவியின் வாழ்வின் தொடக்கத்தைப் பார்த்தால் அவன் முடிவில் இவ்வளவு சீரும் சிறப்பும் எப்படிப் பெற்றுவிட்டான் என்று ஆச்சரியப்பட்டுவிடுவோம். ஆரம்பத்தில் அற்பமாக இருந்த இந்த லேவியர்கள் இறுதியில் இத்துணை தலைசிறந்த ஆசீர்வாதம் பெற்றுவிட்டார்கள் என்று வியப்படைவோம். ஆம், லேவியர்கள் கெட்ட வாழ்வை முதலில் பார்ப்பவர்கள், முடிவில் அவன் இத்தனை மேம்பட்ட ஆசீர்வாதத்தை எப்படி பெற்றுவிட்டான் என்று ஆச்சரியப்படலாம். ஆறாத் துயரத்தில் ஆழ்ந்து, இனி எனக்கு விமோசனம் இல்லையா என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு லேவியின் இகழ்ச்சியான ஆரம்ப வாழ்க்கையையும் நோக்குமிடத்து நல்லதொரு நம்பிக்கையொளி பிறக்கவே பிறக்கும். ஒரு புத்துயிர் உண்டாகவே உண்டாகும். ஒரு மறுமலர்ச்சி மலரவே மலரும்.

ஆதியாகமம் 34:25-31 வசனங்களை வாசித்தால், சிமியோனும் லேவியும் எவ்வளவு கொலை பாதகர், கோபக்காரர், கொடுரமானவர்கள் என்பது விளங்கும். சிமியோனும் லேவியும் ஏகசகோதரர்கள். அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே! உக்கிரமான அவர்கள், கோபமும் கொடுமையுமான அவர்கள், சபிக்கப்படக்கடவர்கள். யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன் என்று தங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் சாபத்தை வாங்கியவர்கள் இந்தச் சிமியோனும் லேவியரும் ஆவர் (ஆதி.49:5,7). இவ்வாறு சிமியோன், லேவியின் ஆரம்ப வாழ்க்கை வெட்கக்கேடாய் இருந்தது. அவர்களுடைய மூர்க்கமான வாழ்க்கையால் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், கோத்திரத்திற்கும் இகழ்ச்சியே வந்துற்றது. அவர்களுடைய ஆரம்ப வாழ்க்கை அருவருக்கப்படத்தக்க வாழ்க்கையாகும். எனினும் ஆண்டவர் இவர்களையும் இரட்சித்து ஆசீர்வதித்தார். இத்தகைய தாழ்வான லேவிக்கும் நல்வாழ்வு காலம் கிடைத்தது. காரிருள் சூழ்ந்த அவன் வாழ்விலும் ஒருநாள் பேரொளி பிரகாசித்தது. விழுந்துபோன லேவி ஒருநாள் கர்த்தரால் தூக்கி நிறுத்தப்பட்டான். பாவச் சேற்றில் ஆழ்ந்து கிடந்த அவன் ஒருநாள் வாரியெடுக்கப்பட்டு, கன்மலையின் மேல் உயர்த்தப்பட்டான். ஆம், லேவிக்கும் ஓர் ஈடேற்றம்! எப்பொழுது? யாரால்? ஏன் ? எவ்வாறு?

லேவியோடுகூட சாபம்பெற்ற சிமியோன் எக்காலத்தும் சபிக்கப்பட்டே போனான். ஆனால், லேவியின் சாபம் எவ்வாறு அகற்றப்பட்டு, ஆசீர்வாதம் பிறந்தது? சாபமான லேவிக்குப் பின்னர் கர்த்தரே ஆசீர்வாதம் ஆனது எப்படி? கர்த்தரே லேவிக்கு சுதந்தரம் ஆகும்வண்ணம் அப்படி என்ன விநோதம் நிகழ்ந்தது? யாத்.32:26ல் இதற்குத் தக்க விடை தரப்பட்டுள்ளது. பாளயத்தின் வாசலில் மோசே நின்று, பொன் கன்றுக்குட்டி வணக்கத்தில் ஈடுபட்ட இஸ்ரவேலின் மக்களை நோக்கி: கர்த்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். மோசே லேவியின் புத்திரரை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தை அரையில் கட்டிக்கொண்டு, பாளயம் எங்கும்போய், பொன் கன்றுக்குட்டி வணக்கத்தாரைக் கொன்றுபோடுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்.

படுபாதகமான பொன்கன்றுக்குட்டி வணக்கம் காலத்திலே லேவியர் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரையே தெரிந்துகொண்டார்கள். மற்ற அநேகர் பொன் கன்றுக்குட்டியைச் சேவித்த அக்கொடிய காலத்தில், லேவியர் ஒன்றான மெய்த் தெய்வத்தைச் சேவிக்க முன்வந்தார்கள். அவர்கள் கர்த்தருடைய பட்சத்தில் சேர்ந்தார்கள். கர்த்தர் சொன்னபடியே செய்தார்கள். பொன் கன்றுக்குட்டி வணக்கத்தால் புண்பட்டுப்போயிருந்த தெய்வநெஞ்சத்திற்கு ஆறுதல் அளித்தார்கள். கர்த்தருக்கென்று பலத்த காரியத்தைச் சாதித்தார்கள். அந்நேரத்தில் லேவியர் ஆற்றிய அரிய சேவையை ஆண்டவர் மறப்பாரோ? அப்பயங்கரமான காலத்தில் கர்த்தரின் பட்சத்தில் இருந்த லேவியர்க்கு இப்பொழுது கர்த்தர்தாமே சுதந்திரம் ஆனார். அக்கணத்திலிருந்து லேவியரின் சாபமான வாழ்க்கை ஆசீர்வாதமாய் மாறியது. அவர்கள் வாழ்விலே ஒரு புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டது. ஒரு பெரிய வாழ்க்கைத் திருப்பம் நிகழ்ந்தது. மனம் திரும்பினார்கள். ஆகையால் ஆசீர்வாதம் பெற்றார்கள். முற்காலத்துச் சாபம் அழிந்தொழிந்தது. மனந்திரும்பி கர்த்தரையே சேவிக்க முற்பட்ட லேவியர்க்கு கர்த்தரே சுதந்திரமானார். அவர்கள் வாழ்நாட்களெல்லாம் கர்த்தருடைய பரிசுத்த உட்னபடிக்கைப் பெட்டியைச் சுமக்கும் பாக்கியம் பெற்றார்கள். கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, தேவாரதனை செய்யும் மாபெரும் பாக்கியம் பெற்றார்கள். எல்லாம் வல்ல தெய்வத்தின் நாமத்தைக்கொண்டு ஆசீர்வாதம் கூறும் அவ்வளவு பெரிய திவ்விய வாய்ப்பு பெற்றுவிட்டார்கள். ஒருகால் சாபத்தைத் தலையில் தாங்கிய அவர்கள், மனம் திரும்பிக் கர்த்தரையே சேவிக்கும்வண்ணம் தங்கள் வாழ்க்கையைக் கர்த்தருக்கே அர்ப்பணம் செய்தபொழுது, சாபம் நீங்கி கர்த்தரையே தங்கள் ஆசீர்வாதச் சுதந்திரமாகப் பெறுமளவுக்கு அவ்வளவு உயரம் உயர்ந்துவிட்டார்கள்.

உனக்கு இத்தகைய ஆசீர்வாதமான திருப்தியுள்ள வாழ்வு வேண்டுமா? லேவியரைப்போல நீயும் மனம் திரும்பாமல்போனால் நீங்களும் சிமியோனைப்போல கடைசிவரை சபிக்கப்பட்டவர்களாவேயிருப்பீர்கள். ஆனால், மனம் திரும்பி, இயேசுகிறிஸ்துவை உங்கள் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவர் ஒருவருக்கே உங்கள் வாழ்க்கையை காணிக்கையாய் படைத்து, அவர் ஒருவரையே சேவித்தால், லேவியரைப்போல் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள். அப்பொழுது கிறிஸ்துவே உங்கள் ஆசீர்வாதச் சுதந்திரம் ஆவார். அவ்வாறு கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்க்கை எத்துணை ஆசீர்வாதமான திருப்தியுள்ள வாழ்க்கையாகத் திகழும். திருப்தியுள்ள வாழ்க்கையின் இரகசியம் கிறிஸ்துவே. அவரே உனக்குப் பூரணத் திருப்தியான பேரின்ப வாழ்வு ஆவார்.

ShareTweetPin

Related Posts

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

12. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்; எபிரோன், சீயோன் என்பவைகளின்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

11. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும் பார்த்தோம். தெய்வீக விதிகளைக்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

10. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக நமக்கு ஏற்படுகிறது. இரட்சிக்கப்படும்...

00. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
கிறிஸ்தவ நூற்கள்

09. தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்

அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம் அமைக்கப்பட்டிருந்தது. எபூசியர் சீயோனில்...

Next Post
00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

16. சீடர்களின் பரிசு

00. கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை

17. வாழ்க்கையில் பெருகுதல்

Recommended

இயேசு கிறிஸ்துவின் வரலாறு

புதிய உடன்படிக்கை ஊழியன்

Song 206 – Nejamellam

பர்த்தலேமேயு சீகன்பால்க்

பர்த்தலேமேயு சீகன்பால்க்

00. மோட்சப் பயணம்

14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்

Categories

  • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
  • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • ஆராதனை கீதங்கள்
  • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
  • உட்காரு – நட – நில்
  • உண்மையான சீஷத்துவம்
  • எல்லாம் கிருபையே
  • எஸ்தர்
  • எஸ்றா
  • கிருபையின் மாட்சி
  • கிறிஸ்தவ நூற்கள்
  • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
  • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
  • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • துண்டுப் பிரதிகள்
  • தொகுக்கப்படாதவைகள்
  • நெகேமியா
  • பாக்கியவான்கள் யார்?
  • பாடல் புத்தகம்
  • பிரசங்கங்கள்
  • மாணவர் வழிகாட்டி
  • மிஷனறிகள்
  • மோட்சப் பயணம்
  • வேதாகம ஆய்வு

Instagram

நம்பினால் நன்மையடைவாய் – ஈசாக்கும் கிறிஸ்துவும் – யோசேப்பு அழுத ஏழு சந்தர்ப்பங்கள் – யோசேப்பும் கிறிஸ்துவும் – முற்பிதாக்கள் (ஆதாமில் இருந்து யாக்கோபு வரை…) – வேதாகமத்தில் ஆசாரியர்கள் –  தோல்வியில் அழைப்பு – உனக்கு எச்சரிக்கை – பலிதமாகும் அழைப்பு – தேவனுக்குக் கீழ்ப்படியாமை நன்மை தராது – தேவனை அறியும் அறிவு – தேவனுக்கேற்ற சிந்தை எது? – ஜெபமும் வேதாகம ஜெப வீரரும் – நான் நேர்மையுள்ளவனா ? புதிய உடன்படிக்கை ஊழியன் – அறிவிப்பு பலகைகள் – ஆனாலும்…. 

தின தியானங்கள்

பாலைவன நீரோடைகள் – அன்றாடக அமுதம் – விசுவாச தினதியானம் – இன்றைய இறைத்தூது
நாளுக்கொரு நல்ல பங்கு 2022 – நாளுக்கொரு நல்ல பங்கு 2023 – நாளுக்கொரு நல்ல பங்கு 2024 – நாளுக்கொரு நல்ல பங்கு 2025

வலைப் பதிவுகள் – பாடல் வரிகள் – வேதாகம அகராதி  – வேதாகம நூல்கள்

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோ.3:16)

Copyright © 2000 – 2025 All rights reserved. Tamil Christian Assembly

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • பாடல் புத்தகம்
    • ஆராதனை கீதங்கள்
    • ஆத்தும இரட்சிப்புக் கீதங்கள்
  • கிறிஸ்தவ நூற்கள்
    • கிறிஸ்தவ வெற்றி வாழ்க்கை
    • இயேசு கிறிஸ்துவின் உவமைகள்
    • எஸ்றா
    • நெகேமியா
    • எஸ்தர்
    • மோட்சப் பயணம்
    • பாக்கியவான்கள் யார்?
    • எல்லாம் கிருபையே
    • கிருபையின் மாட்சி
    • அடிப்படைக் கிறிஸ்தவப் பயிற்சி
    • மாணவர் வழிகாட்டி
    • கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு
    • உட்காரு – நட – நில்
    • உண்மையான சீஷத்துவம்
    • இயேசு கிறிஸ்துவின் வரலாறு
    • தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்
  • பிரசங்கங்கள்
    • பாஸ்கரதாசன்
    • சாமுவேல் கணேஷ்
    • சகரியா பூணன்
    • பவுல் டானியேல்
    • அகஸ்டீன் ஜெபகுமார்
    • சாது செல்லப்பா
    • தியோடர் வில்லியம்ஸ்
    • M.S. வசந்தகுமார்
    • R.ஸ்டான்லி
  • மிஷனறிகள்
    • டேவிட் லிவிங்ஸ்டன்
    • பர்த்தலேமேயு சீகன்பால்க்
    • வில்லியம் கேரி
    • டேவிட் பிரெய்னார்ட்
    • ஹட்சன் டெய்லர்
    • சாது சுந்தர் சிங்
    • சாள்ஸ் பின்னி
  • வேதாகம ஆய்வு
    • அப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்
    • பழைய ஏற்பாடு காட்டும் ஜெபவீரர்
    • ஆதாமிலிருந்து நோவா வரை
    • ஆபிரகாம்
    • பிலிப்பி பட்டணத்து சிறைச்சாலைக்காரன்
    • சிந்தனைத் துளிகள்
    • ஆசரிப்புக்கூடாரம்
  • துண்டுப் பிரதிகள்
    • இரயில் பயணம்
    • இரு வழிகள் இரு இலக்குகள்
    • இவரின் ஒரே பிழை
    • உங்களுக்கு ஒரு கடிதம்
    • உண்மையான விசுவாசம் என்ன?
    • நான் என்ன செய்யவேண்டும்?
    • மனம் மாறிய மாலுமி
    • ஒரே வழி
    • மெய்யான ஒளி

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.