- பெரிய விருந்து
லூக்கா 14:16-24
அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகih அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப்போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம் பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்குத் அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனihயும் சப்பாணிகளையும் குருடihயும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான். ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா, அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார்.
இரட்சிப்பிற்கான அழைப்பை விளக்குவதற்காக இயேசு கிறிஸ்து இந்த உவமையைச் சொன்னார். தேவன் தமது குமாரனைக் கொடுத்தார். குமாரன் தன்னையே சிலுவைக்கு ஒப்புக்கொடுத்து இரட்சிப்பை ஏற்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் நம் பாவநிலையைச் சுட்டிக் காட்டி இரட்சிப்படைந்து கொள்ள அழைப்புக் கொடுக்கிறார். அநேகந்தரம் அழைப்புக் கொடுக்கப்பட்டும் மனிதர் அழைப்பை ஏற்றுக்கொள்ளாத நிலை பரிதாபமே.
- விருந்து: வசனம் 14:16-17.
(அ) அழைப்பு அனுப்பப்படுதல்: வசனம் 16. அழைப்பு முன்னதாகவே கொடுக்கப்பட்டது. விருந்தில் பங்கெடுப்பதற்கு ஏற்று ஒருங்குகளை செய்ய அவர்களுக்குச் சமயமிருந்தது.
(ஆ) மீண்டும் அழைப்பு: வசனம் 17. அழைப்பைக் கொடுத்துவிட்டு சும்மா இருக்கவில்லை. ஆட்கள் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டார்கள்.
- இரட்சிப்பிற்கான அழைப்பு – மத்.11:28-31
- சேவை செய்வதற்கான அழைப்பு – மாற்கு 16:15 (சுவிசேஷம் கூறிவிட அழைப்பு)
- அர்ப்பணிப்பதற்கான அழைப்பு – ரோமர் 12:1-2
- தியாகம் செய்வதற்கான அழைப்பு – லூக்கா 9:23
- ஆதரவு கொடுப்பதற்கான அழைப்பு- ரோமர் 10:14-15.
- போக்குச் சொல்லுதல்;: வசனம் 14:18-20
விருந்திற்குப் போகாததற்கான காரணங்கள்
(அ) வயல் வாங்கியது: வசனம் 18 – ஒருவரும் பார்த்து அறியாததற்கு முன்னர் வயல் வாங்குகிறதில்லை. எனவே இக்காரணம் சரியானதல்ல.
(ஆ) ஐந்து ஏர்மாடு வாங்கியது: வசனம் 19 – இரவிலே சென்று மாட்டை சோதித்துப் பார்ப்பதில்லை. எனவே இது சரியான காரணமில்லை.
(இ) பெண்னை விவாகம் பண்ணியது: வசனம் 20 – விவாகமானவர்கள் வைபவங்களுக்குச் செல்லாமல் இருந்து விடுகிறதில்லை. எனவே இது சரியான காரணமல்ல.
போக்குச் சொல்லுதலைக் கர்த்தர் விரும்புகிறதுமில்லை. அவர் உண்மையான காரணத்தை அறிவார்.
- எதிர் பாராதவர்களுக்கு அழைப்பு: வசனம் 14:21-24
(அ) கட்டளை: வசனம் 21 – ஊழியக்காரன் நடந்ததைச் சொன்னபோது எஜமான் தெருக்களிலும் வீதிகளிலுமுள்ள ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைத்துவரக் கட்டளை கொடுத்தான்.
(ஆ) எனினும் இடமிருந்தது: வசனம் 22 – அக்கட்டளைபடி அழைத்து வந்த பின்னும் இடமிருந்தது.
நாம் எத்தனை பேரைக் கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்தாலும் மேலும் மேலும் அவரிடம் இடமுண்டு. எனவே நாம் அழைக்கப்பட்டவர்கள் போதுமென்று திருப்தியடைந்து விடக்கூடாது. மாற்கு 16:15.
(இ) அழைப்பு: வசனம் 23-24
- போ – எல்லா இடங்களுக்கும் சென்று யாவரையும் அழையுங்கள் – ரோமர் 10:13, பேதுரு 3:9.
நோக்கம் – விருந்துசாலை நிரம்ப வேண்டும். (தேவன் தமது ஆலயம் நிரம்பி வழிய விரும்புகிறார்).
பரிசுத்த வேதத்தை வாசிக்காதிருப்பதற்குப் போக்குச் சொல்லுகிறீர்களா? ஜெபிக்காததற்குப் போக்குச் சொல்லுகிறீர்களா? ஆத்துமாவை ஆதாயம் செய்யாதலிருப்பதற்குப் போக்குச் சொல்லுகிறீர்களா?. தேவன் எல்லாவற்றையும் அறிகிறார். போக்குச் சொல்லாதீர்கள். பொய்யைத் தேவன் அறிகிறார். நாம் உண்மையாயிருக்க தேவன் விரும்புகிறார். உண்மையான நிலையை அறிவிக்கும்போது நம்மை வலிமையுள்ள கிறிஸ்தவர்களாக்குகிறார்.










