- புத்தியுள்ள மனுஷனும், புத்தியில்லாத மனுஷனும்
மத்தேயு 7:24-29
ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை, ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்தது, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகihப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
இயேசு கிறிஸ்து இந்த உவமையில் கேட்டலும் செய்ததும் என்ற இரண்டினைப்பற்றி வலியுறுத்தியுள்ளார். அநேகர் கேட்கின்றனர், ஆனால் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை. கேட்டல் ஒன்று. செய்தல் இன்னொன்று. அநேகர் பரிசுத்த வேதாகமத்தை அறிந்திருக்கின்றனர். ஆனால் அறிந்துள்ளவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.
- புத்தியுள்ள மனிதன்: வசனம் 7:24-25
(அ) அடையாளம்: வசனம் 24 – கிறிஸ்து சொன்னபடி செய்ய வேண்டும். அதுவே அடையாளம்.
- கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் – யோவான் 14:15. அவரிடத்தில் அன்பாயிருக்கிறவன் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளுவது அதிக நிச்சயம்.
- கிறிஸ்துவின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் – யோவான் 14:23. அவரிடத்தில் அன்பாயிருப்பவன் அவரது வசனத்தைக் கைக்கொள்வான்.
(ஆ) உறுதிநிலை – பெருமழையும் பெருவெள்ளமும் காற்றும், புயலும் வந்தபோது அவர் சொற்படி கேட்டு கட்டினவனின் வீடு நிலைத்து நின்றது. அவ்வாறு நாம் அவர் சொற்படி கேட்டு நடந்தால் தேவவல்லமையால் நாம் பாதுகாக்கப்படுவோம். நாம் அழிந்து போவதில்லை. நிலைத்து நிற்போம். 1.பேதுரு 1:5, 1.தீமோ 1:1, யூதா 24.
- புத்தியில்லாத மனிதன்: வசனம் 7:26-27
(அ) அவரது வார்த்தையை மதியாதவன்: வசனம் 26 – அவரது வார்த்தையை மதியாது, அதற்குக் கீழ்ப்படியாது இருந்தால் நாம் மணலின்மேல் கட்டினவனுக்கு ஒப்பாவோம்.
- பாவம்: யாக்.4:17 – சரி என்று தெரிந்திருந்தும் அதனைச் செய்யாதவன் பாவம் செய்கிறான்.
- பிடிவாதம்: நீதி.14:12 – சரியான வழியை மறுக்கிறவன் மரணத்தை நோக்கிச் செல்கிறான். யோவான் 14:6. அவரே வழி, அவ்வழியில் செல்லமாட்டேன் என்ற பிடிவாதம் வேண்டாம்.
(ஆ) அழிவு: வசனம் 27 – பெருமழை சொரிந்து பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியபோது அது விழுந்தது.
மனிதரிலும் அநேகர் இப்படியே இருக்கிறார்கள். இயேசு சொல்லுவதைக் கேட்டுள்ளனர். ஆனால் அவரைப் பின்பற்றி நடக்க மறுக்கின்றுனர். யோவான் 6:66.
(1). 2தீமோ.4:10 – தோமா கிறிஸ்துவை விட்டு விட்டான்.
(2) வெளி. 20:11-15 – இயேசுவை மறுதலிப்பதால் அவர் சொற்படி நடவாததால் அநேகர் தண்டனைக்குரியவராவர்.
- ஞானமுள்ள உபதேசம்: வசனம் 7:28-29
(அ) போதகர்: வசனம் 28 – இயேசு கிறிஸ்து தேவனால் அனுப்பப்பட்டபோதகர். அவர் அதிகாரமுடையவராகப் போதித்தார். ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
அவர் தேவனிடமிருந்து வந்தவர் என்பதை நிக்கொதேமு அறிந்திருந்தான் – யோவான் 3:2.
(ஆ) போதனை: வசனம் 29 – அவர் போதித்தவை மனிதனுக்குப் போதுமானது. அவரது போதனைப்படி கட்டுகிறீர்களா?
நீங்கள் எவ்வாறு கட்டுகிறீர்கள்? அவருடைய வாக்கை இருதயத்தில் வைத்து வைக்கிறோமா? தாவீது அவ்விதம் செய்தான் – சங்.119:11, எனவே அவன் பாவத்திலிருந்து சுத்தமாக்கப்பட்டான். சங்.119:9.
பவுல் இருதயத்தில் நம்புகிறதைக் குறித்து கூறுகிறார். ரோமர் 10:9-10. ஒருவன் இருதயத்தில் நம்புகிறபோது நிச்சயமாய் செயல்படுத்துவான். நாமும் கர்த்தரின் வாக்கை இருதயத்தில் பதித்து கட்டிட துவக்குவோம். 1.யோவான் 2:17.












