- திராட்சத் தோட்டக்காரன்
மத்தேயு 21:33-46
வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாகவிட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிககை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரihத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் அந்த ஊழியக்காரihப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரih அனுப்பினான், அவர்களையும் அப்படியே செய்தார்கள். கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரih என்ன செய்வான் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: அந்தக் கொடியihக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளினகல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள், ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
இந்த உவமை கிறிஸ்துவைப் புறக்கணிப்பதை எடுத்துரைக்கிறது. திராட்சத்தோட்டக்காரன் ஊழியக்காரரைப் புறக்கணித்தான். இறுதியில் எஜமானின் குமாரனையும் தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி கொலை செய்தான்.
இதேபோல் தேவகுமாரனும் அவரது ஊழியக்காரர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர்.
- உவமை: வசனம் 21:33-41
(அ) உவமை: வசனம் 33 – வீட்டெஜமானாகிய மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஓர் ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி அதைக் குத்தகையாக விட்டுச் சென்றான்.
(ஆ) கனிகாலம்: வசனம் 34 – கனிகாலம் வந்ததும் கனிகளை வாங்கிவரும்படி தன் ஊழியக்காரரை அனுப்பினான்.
(இ) தீமைசெய்தல்: வசனம் 35-39 – ஓர் ஊழியக்காரனை அடித்தனர். ஓருவனைக் கொன்றனர். ஒருவனைக் கல்லெறிந்து கொன்றனர். கடைசியில் எஜமான் தன் குமாரனை அனுப்பினான். அவனையும் கொன்றனர்.
(ஈ) திட்டம்: வசனம் 40-41 – திராட்சத் தோட்டத்தின் எஜமான் வந்து கொடியரைக் கொடுமையாய் அழித்து வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான். இதுவே அவனது திட்டம்.
- இரட்சகர்: வசனம் 21:42-44
கிறிஸ்துவைப் பணிந்து ஏற்றுக்கொள்கிறவர்கள் இரட்சிப்பை அடைவார்கள். பிலி.2:10-11. இல்லையேல் அவர்கள் இரட்சிப்பை இழந்து போவார்கள்.
- உவமை தங்களைக் குறிப்பதாக எண்ணுதல்: வசனம் 21:45-46
(அ) உருவக்குத்தும் பட்டயம்: பிரதான ஆசாரியரும், பரிசேயரும் அவருடைய உவமைகளைக்கேட்டு தங்களைக் குறித்து சொல்லுகிறார் என அறிந்தனர்.
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக்குத்துகிறதாயும் இருக்கிறது. எபி 4:12, ரோம 1:16, எபேசி. 6:17.
(ஆ) திட்டமிடுதல்: வசனம் 46 – அவரைப்பிடித்து அழித்துவிடத் திட்டமிட்டார்கள். ஆனால் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.
கிறிஸ்துவைச் சொந்த ஜனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர் அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், யோவான் 1:12. அவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்- யோவான் 5:24.










