- திராட்சத் தோட்டத்து வேலையாள்கள்
மத்தேயு 20:1-16
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது: அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலihக் கண்டு: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான், அவர்களும் போனார்கள். மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். பதினாராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலihக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். சாயங்காலத்தில், திராட்சத் தோட்டத்துக்கு எஜமான் தன் காரியகாரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வihக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி: பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள், பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை, நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான். இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள், அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
சில சமயம் நம் வாழ்வில் நிகழும் காரியங்கள் அநியாயமானவைகளாய்த் தோன்றுவதுண்டு, ஆனால் அவற்றைத் தேவன் நமது நன்மைக்காகவே அனுமதிக்கிறார். இவ்வுவமையில் சொல்லப்பட்டுள்ளவை நமக்கு அநியாயமாய்த் தோன்றுகிறது. தேவன் அநியாயம் செய்கிறவரல்ல. அநியாயத்தைப்பற்றி நாம் கவலைகொள்ள வேண்டியதில்லை. தேவன் நியாயாதிபரர். அவர் பார்த்துக்கொள்வார்.
- உவமையில் கூறப்பட்டுள்ள நபர்கள்: வசனம்; 20:1-7
(அ) நிகழ்ந்தவை: திராட்சத்தோட்டத்து எஜமான் காலை 6 மணி, 9 மணி, நண்பகல் 12 மணி மாலை 3மணி, 5மணி ஆகிய நேரங்களில் திராட்சத்தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களை நியமித்தான். அனைவருக்கும் ஒவ்வொரு பணம் வீதம் கூலி கொடுத்தான்.
(ஆ) ஆவிக்குரிய படிப்பினை: தேவன் தனது திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்ய ஆட்களை நியமிக்கிறார். அவர்களை அழைத்து வந்து நியமிக்கிறார்.
(1) பணிபுரிய அழைக்கிறார் : யோவான் 15:16. தேவன் நம்மை பணிபுரிய அழைக்கிறார்.
(2) பணிபுரிய கட்டளைகொடுக்கிறார் : மாற்கு 16:15
(3) வருந்தி கூட்டிக்கொண்டு வருகிறார் : லூக்கா 14:23
(4) மனதுருக்கத்துடன் வருகிறார் : மத்தேயு 9:36
(இ) மனிதர் தேவ அழைப்பிற்குச் செவிகொடுப்பதில்லை. காரணம்
(1) தரிசனம் இல்லை : நீதி 29:18
(2) வாழ்க்கையில் வெற்றி இல்லை : தோல்வியான வாழ்க்கை
(3) கனிகள் இல்லை : கனியற்ற வாழ்க்கை – கலா5:22-23
- உவமையில் காணப்படும் பிரச்சனை: வசனம் 20:8-12
(அ) இழப்பீடு: வசனம் 8-9 வேலையிலமர்த்தப்பட்ட யாவருக்கும் கூலி கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் தேவநியமனப்படி கூலி பெறுவர். மற்றவர்களுக்குக் கிடைக்கும் கூலியைக் குறித்து கவலைவேண்டாம். 1.கொரி. 3:8, 2.கொரி.8:6, மத்.6:20-21.
(ஆ) முறுமுறுப்பு: வசனம் 10-11 முந்தி வந்தவர்களுக்கும் பிந்தி வந்தவர்களுக்கும் ஒரே அளவு கூலி கொடுக்கப்பட்டது. முந்தி வந்தவர்கள் எஜமான் கூறிய கூலிக்கு சம்மதித்துதான் வேலைக்கு வந்திருந்தனர். எனினும் பிந்தி வந்தவர்களுக்கும் தங்களுக்கும் ஓரே அளவு கூலி கொடுத்ததால் குறை கூறினர் – மத்.16:27, 2.கொரி 5:10, வெளி 22:17.
- உவமையில் கூறப்பட்டுள்ள கூலி : வசனம் 20:13-16
(அ) அது ஓர் உடன்பாடு – வசனம் 20:13. எஜமான் கூறிய கூலிக்குச் சம்மதித்துதான் வேலைக்கு வந்தனர். மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலியைப்பற்றி இவர்கள் அக்கறை கொள்ள வேண்டியதில்லை. (நமக்கு இது ஒரு படிப்பினை).
(ஆ) கூலி – வசனம் 14. பேசியபடி கூலி கொடுத்தார். தேவன் நீதிபரர். முன்னரே கிறிஸ்;துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கும், அண்மையில் அவரை ஏற்றுக்கொண்ட பாவிகளுக்கும் நியாயமானபடி கூலி வழங்குகிறார்- வெளி 20:11-15, 2.கொரி 5:10.
(இ) அதிகாரம் – வசனம் 15. எஜமான் தன் பணத்தைத் தன் இஷ்ரம்போல் கொடுக்கலாம். அதற்குரிய அதிகாரம் எஜமானுக்கு உண்டு. ஏசாயா 55:8.
(ஈ) வாக்குத்தத்தம் – பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பர் என்பது ஒரு வாக்குத்தத்தம்.
தேவனே நியாயம் வழங்குகிறார். அவரே பலனும் அளிக்கிறார். நாம் அவரது நியாயத்தீர்ப்பைக் குறித்துக் குற்றம் சாட்ட இயலாது. குறைகூறவும் முடியாது. எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்துக்கொண்டார். குறை கூறுதல் தேவனைவிட்டு வழிவிலகிப்போவதற்கான ஒரு வழி. அவரது சித்தத்திற்கும் நடத்துதலுக்கும் ஒப்படைத்து விடுவதே நமது கடமை.










