- விதைக்கிறவனும் விதையும்
லூக்கா 8.5-15
விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான், அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்துமிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது, அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது, முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார். அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள், அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள், ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக் காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள், கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறவனைப் பற்றி விவரித்த விதைக்கிறவன், விதை, நிலம் என்பனவற்றை இவ்வுவமையில் இயேசு கூறியுள்ளார். அநேகர் தேவனுடைய வார்த்தையைக் கேட்கின்றனர். ஆனால் அதன்படி நடப்பவரே ஒரு சிலரே. பிறர் பாவத்திற்கு இடமளித்து தேவ வார்த்தையை விட்டு விடுகின்றனர்.
- விதைப்பவனும் நிலமும்: வசனம் 8:5-8
(அ) விதைக்கிறவன் – வசனம் 5 – விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப்புறப்பட்டான்.
(ஆ) நிலம் – வசனம் 5-8 – நான்கு வித நிலங்கள்.
(1) வழியருகான நிலம் – வசனம் 5 – பாதை ஒரம் கடுமையானதால் விதை முளைப்பதில்லை. பறவைகள் அங்கு விழுந்த விதைகளைத் தின்று விட்டன.
(2) கற்பாறை நிலம் – வசனம் 6 – கற்பாறையின்மேல் சிறிதளவு மண் உள்ளது. அதில் விழுந்த விதைகள் விரைவில் முளைத்து உலர்ந்து போயின.
(3) முள்ளுள்ள இடம் – வசனம் 7 – முள் கூட வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது.
(4) நல்ல நிலம் – வசனம் 8 – நல்ல நிலத்தில் விழுந்தவை முளைத்து நல்ல பலன் கொடுத்தன.
(இ) அடையாளம் – வசனம் 8 – இயேசு இவைகளைச் சொல்லி முடித்தபின் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக்கூறினார்.
- இரட்சகரும் உவமையும்;: வசனம் 9-10
(அ) ஆர்வம் – வசனம் 9 – அவருடைய சீஷர்கள் இந்த உவமையின் பொருள் அறிய ஆர்வத்தோடிருந்தனர்.
(ஆ) பொருளை விளக்குதல் – வசனம் 10 – தேவனுடைய இராஜ்யத்தின் இரகசியங்களை இவ்வுவமை விளக்குகிறது. தேவன் தமது வார்த்தையை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறார்.
(இ) அறியாமை – வசனம் 10 – அநேகர் உவமையின் பொருளை அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். 2.கொரி 4:14, 2.தீமோ.3:7. முற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையும் அநேகர் அறிந்து கொள்ளவில்லையே!
பவுல் தேவனைத் தேடாதவர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு அவர்களது அறியாமை இருளைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ரோமர் 3:11, எபேசி.4:18
- உவமையில் சொல்லப்பட்டுள்ளவை: வசனம் 11-15
(அ) விதை – வசனம் 11 – தேவனின் வார்த்தை. அது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ரோமர் 10:17. அவரது வார்த்தை பாவத்திலிருந்து நம்மைச் சுத்திகரிக்கிறது. சங்.119:9.
(ஆ) பாதை ஓரம் – வசனம் 12 – அவரது வசனத்தை ஏற்றுக்கொள்பவர். ஆனால் சாத்தான் ஏற்றுக்கொண்டவற்றை எடுத்துச்சென்று விடுகிறான். 1.பேது.5:8.
(இ) கற்பாறை – வசனம் 13. கற்பாறை உள்ளம் வசனத்தை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அது வேர்விடமுடியவில்லை. சோதனையும், பாவமும் அதனை உலர்த்திப்போடுகிறது.
(ஈ) முட்கள் – வசனம் 14 – முட்கள் நெருக்குவதால் பலன் கொடுப்பதில்லை. (1) கவலைகள் என்னும் முட்கள் (2) ஐசுவரியம் என்னும் செருக்கும் முட்கள்.
(உ) நல்லநிலம் – வசனம் 15 – சிலர் தேவவார்த்தையை ஏற்றுக்கொள்கின்றனர். நல்ல பலன் கொடுக்கின்றனர் . யோவான் 1:8. எல்லா கிறிஸ்தவர்களும் நல்ல நிலத்தில் விழுந்த விதையைப் போன்றிருக்க தேவன் விரும்புகிறார்.
அவரது வார்த்தை (1) நம்மை உறுதிப்படுத்துகிறது – 1.பேதுரு 3:15. (2) நமக்கு போதிக்கிறது – 2. தீமோ 2:15. (3) நம்மை சுத்திகரிக்கிறது – சங்.119:9. (4) நம்மை பாவத்திலிருந்து விலக்கி காக்கிறது – சங்.119:11.
அவரது வார்த்தை (வசனம்) உங்களில் வளரட்டும். அது உங்கள் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாயிருக்கட்டும். யாக்கோபு 1:22.










