- புளித்த மா
மத்தேயு 16:6-12
இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும், ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
பரிசேயர் சதுசேயர் ஆகியோரின் பொய்யான உபதேசத்தைப்பற்றி இவ்வுவமை எச்சரிக்கிறது. இருபிரிவினரும் மார்க்கப்பற்றுடையவர்கள். ஆனால் அவர்களுடைய இருதயம் தேவனுக்கு தூரமாயிருந்தது. அவர்கள் ஆவிக்குரியவர்களாயிராததால் அவர்களால் கிறிஸ்துவின் ஆவிக்குரிய உபதேசத்தைப் புரிந்துகொள்ளமுடியவில்லை.
- எச்சரிக்கை: வசனம் 16:6 பரிசேயர் சதுசேயர் என்பவர்களி;ன் புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இவ்விரு பிரிவினரின் உபதேசங்கள் புளித்தமாவிற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. (அ) சமயவாசிகளாகிய பரிசேயர். அவர்கள் சுயநீதி உள்ளவர்கள் – லூக்கா 18:10-12. அவர்கள் உபவாசித்தார்கள், ஜெபம் செய்தார்கள். தசமபாகம் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் தங்களைத் தேவனுக்குக் கொடுக்கவில்லை.
அவர்கள் தேவ பக்கியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்கள் – 2.தீமோ.3:5.
- வீணான எண்ணம்: வசனம்16:7-10
சீஷர்களும் இவ்வுமையினு; ஆவிக்குரிய கருத்தை அறிந்துகொள்ளவில்லை. அப்பத்தைப்பற்றியே எண்ணினார்.
(அ) குழப்பம்: வசனம் 7 – இயேசு ஆகாரத்தைக் குறித்து பேசவில்லை. அவர் ஆவிக்குரிய சத்தியத்தை உவமை மூலம் குறிப்பிட்டார். ஆனால் அவர்கள் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படி சொல்லுகிறார் என்று குழப்பமடைந்தனர் – யோவான் 8:32. சத்தியம் விடுதலையாக்கும் வல்லமையுள்ளது. இயேசு சத்தியம் – யோவான் 14:6.
(ஆ) கண்டித்தல்: வசனம் 8 – அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக் குறித்து நீங்கள் யோசனை பண்ணுகிறனெ;னவென்று இயேசு அவர்களைக் கண்டித்தார்.
(இ) ஞாபகமூட்டுதல்: வசனம் 9-10 – இரண்டு தடவை அவர் ஜனத்திரளை அற்புதமாய் போஷித்ததைப் பற்றி அவர்களுக்கு ஞாபகமூட்டினார்.
(1) 5000 பேர் போஷிக்கப்பட்டார்கள். 12 கூடை நிறைய மீதி வந்தது- மத் 14:15-21.
(2) 4000 பேர் போஷிக்கப்பட்டார்கள். 7 கூடை நிறைய மீதி வந்தது-மத் 15:32-39.
இயேசு நம் தேவைகளைச் சந்தித்தார்- பிலி 4:19, மத் 6:30.
- தப்பான விளக்கம்: வசனம் 11-12 (அ) தப்பெண்ணம் – வசனம் 11 – அவர் அப்பத்தைக் குறித்துச் சொல்லுகிறார் என்று அவர்கள் தப்பெண்ணம் கொண்டனர். ஆனால் இயேசு நான் அப்பத்தைக் குறித்து சொல்லவில்லை என்று உரைத்துத் தப்பெண்ணத்தைப் போக்கினார். பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவாகிய உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருக்கக் கூறினார். அவர்களது உபதேசம் உயிர்த்தெழுதல் இல்லை என்பதாயிருந்தது. அந்தத் தப்பெண்ணம் புளத்தமாவுபோல் பரவக்கூடாது என்றுரைத்தார்.
(ஆ) செய்தி – வசனம் 12. சீஷர்கள் இயேசு பரிசேயர் சதுசேயர் ஆகியோரின் தவறான உபதேசத்தைக்குறித்துப் பேசினார் என்பதை அறிந்து கொண்டார்கள்.
தேவன் நமது வாழ்வில் எல்லாக் காரியங்களிலும் கரிசனையுள்ளவராயிருக்கிறார். அவர் நமது சரீர, ஆவிக்குரிய உலக தேவைகளைக் பூர்த்தி செய்வார். நாம் வளமாய் வாழ்ந்து மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்யவே இயேசு வந்தார் – யோவான் 10:10.
அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள நாம் அவரோடு நெருங்கி வாழவேண்டும். அவரது வார்த்தைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுது நமது வாழ்வில் அவரது சித்தம் என்ன என்பதைக் கண்டுகொள்ளலாம்.












