எந்நாளுமே துதிப்பாய் – என் ஆத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந் நாள் வரையிலே உன்னதனார் செய்த (1)
எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது
(எந்நாளுமே துதிப்பாய்…….)
பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தார் – உன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் (1)
பாரினில் வைத்த மாதயவை நினைத்து
(எந்நாளுமே துதிப்பாய்…….)
எத்தனையோ கிருபை – உன் உயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி (1)
செத்திடாதபடி ஜீவனை மீட்டதால்
(எந்நாளுமே துதிப்பாய்…….)
பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள் (1)
சாலவும் தங்குமே சத்தியமேயிது
(எந்நாளுமே துதிப்பாய்…….)
தந்தை தன் பிள்ளைகட்கு – தயவோடிரங்காரோ
தந்தை தன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால் (1)
சொந்தம் பாராட்டியே தூக்கி சுமப்பாரே
(எந்நாளுமே துதிப்பாய்…….)













