என்ன கொடுப்பேன் இயேசுவுக்கு
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே (3)
என்ன கொடுப்பேன்
மேய்ப்பனாய் நான் இருந்தாலோ – ஒரு
ஆட்டுக்குட்டி நான் தருவேனே (2)
புல்லுள்ள இடங்களில் என்னை
மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு (2)
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே (2)
என்ன கொடுப்பேன்
தூதனாய் நான் இருந்தாலோ – ஒரு
எக்காளம் முழக்கிடுவேனே (2)
வானவர் என் இயேசுவுக்கு
வாழ்த்து பாடி தருவதற்கு (2)
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே (2)
என்ன கொடுப்பேன்
ஞானியாய் நான் இருந்தாலோ – பசும்
பொன்னும் வெள்ளி நான் தருவேனே (2)
வெள்ளைப்போளம் தூபவர்க்கம்
அள்ளி அள்ளி தருவதற்கு (2)
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே (2)
என்ன கொடுப்பேன்
சின்னப் பிள்ளை போல் இருந்தாலோ – இரண்டு
மீனோடு அப்பம் கொடுப்பேனே (2)
சொந்தமென இயேசுவுக்கு எனக்குள்ளதெல்லாம்
தந்த பின்னே (2)
என்னில் ஒன்றும் இல்லையையா
எல்லாம் என் இயேசுவே (2)
என்னைக் கொடுப்பேன் என் இயேசுவுக்கு
ஜீவ பலியாக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையரே (2)
என்னைக் கொடுப்பேன்












