கல்வாரி மலைமேல் என் தெய்வம்
குருசினின் மீது தொங்கினாரே (2)
நான் செய்த பாவங்கள் மன்னிக்கவே
அவர் எனக்காக மரித்தாரே (2)
(கல்வாரி மலைமேல்…….)
கிரீடம் அவர் சிரசில் சூட்டினாரே
மூன்றாணிகளால் அடித்தனரே (2)
எந்தன் பாடுகள் அவர் ஏற்றுக்கொண்டு
எனக்காகவே மரித்தாரே (2)
(கல்வாரி மலைமேல்…….)
கள்ளர்கள் மத்தியில் கள்ளன் போல் தொங்கி
காடியை குடிக்கக் கொடுத்தனரே (2)
பாவமறியா அவர் பாவமாய் மாறி
பாவி எனக்காய் இரத்தம் சிந்தினாரே (2)
(கல்வாரி மலைமேல்…….)













