சிலுவையின் மீதினில் தொங்கிடும் காட்சியே
சிந்தனை மீதினில் தோன்றிடுதே
இறைவா உந்தன் கருணையை என் சொல்வேன்
காரிருள் நீக்கினாய் காருண்யனே
(சிலுவையின் மீதினில் தொங்கிடும்……)
பாவத்தின் ஆழியில் மூழ்கிடினும்
என் பாவத்தை மன்னித்தாய் ஆண்டவனே
பாதையை காட்டிட வந்துதித்தாய் இறைவா இறைவா
பாதையை காட்டிட வந்துதித்தாய்
பாய்ந்திடும் குருதியில் மூழ்கினாயோ
(சிலுவையின் மீதினில் தொங்கிடும்……)
தாகத்தை தீர்த்தாய் ஆண்டவனே இன்று
தாகமாய் இருக்கிறேன் என்றுரைத்தாய்
தாயன்பு மீறிட வருந்தினாயோ இறைவா இறைவா
தாயன்பு மீறிட வருந்தினாயோ
தாரணி உயர்ந்திட மாண்டாயோ
(சிலுவையின் மீதினில் தொங்கிடும்……)
முப்பது வெள்ளியும் உன் விலையோ
அந்த மூப்பரின் சாட்சியும் உனக்கெதிரோ
முள்முடி சிரசினில் சூட்டினாரோ இறைவா இறைவா
முள்முடி சிரசினில் சூட்டினாரோ
முடிந்தது என்று நீ மரித்தனையோ
(சிலுவையின் மீதினில் தொங்கிடும்……)












