அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா
அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா (2)
உம்மையே நாடி ஓடி வந்தேன் நின் பாதம்
இரக்கம் காட்டிடும் ஐயா
(அல்லேலூயா கல்வாரி சிலுவை….)
ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன் – எந்தனே ஐயா
ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு
நான் உன்னை விடுவிப்பேன்
நொறுங்குண்ட இதயத்தை நறுங்குண்ட ஆவியைப்
புறக்கணியாதிரும் நாதா
அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா
அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா
உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும்
நீர் எந்தன் சமீபமல்லோ தேவா தேவா
உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும்
நீர் எந்தன் சமீபமல்லோ
எந்தனின் பாரத்தை உந்தனில் வைத்து
ஆதரிப்பீர் இயேசு நாதா
அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா
அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா (2)












