உள்ளமெல்லாம் உருகுதைய்யோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இல்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டிரே
எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் இயேசைய்யா
எத்தனையாய் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் என் பாவமல்லோ
இரத்தம் சிந்த வைத்தனே நான்
அத்தனையும் என் பாவமல்லோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் சேவையே
மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் தோன்றும் நாளென்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் ஏசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் என்றோ?
















