அழைக்கும் தெய்வம் இயேசுவைப் பார்
உன் அன்பைக் கேட்கும் நேசரைப் பார்
உன்னைத் தாவியே அணைத்திடவே
அவர் எடுத்த கோலம் சிலுவையைப் பார் (1)
பாவிக்கு ஜீவ ஊற்றானார் – இந்த
பாருக்கு ஜீவ வழியானார் (2)
நேசர் அன்பு வழி சென்றிடுவாய் – அவர்
அழைப்பை ஏற்றுக் கொண்டிடுவாய் (2)
(அழைக்கும் தெய்வம்…….)
காயங்களாலே வழி திறந்தார் – அன்று
கல்வாரியிலே உயிர் துறந்தார் (2)
நீசன் உன்னைச் சேர்த்திடவே – அன்று
நேசனாகவே உயிர்த்தெழுந்தார் (2)
(அழைக்கும் தெய்வம்…….)














