கர்த்தரை பாடுவோம் கானானின் தேசத்தில் காணக் கிடைக்காத
தங்கம் இயேசு ராஜன் நாமத்தினால் (2)
கர்த்தரை பாடுவோம்
பாலும் தேனும் ஆறாய் ஓடுகின்ற தேசம்
பரிசுத்த பரமன் வாழும் ஜீவ தேசம் ஆ…. ஆ… (2)
மீட்கப்பட்ட கூட்டம் மீட்பின் கீதம் பாடும் (1)
மேசியா இயேசுவின் முகம் கண்டு ஆனந்தம்
பரலோகில் ஆனந்தம் பரலோகில் ஆனந்தம்
(கர்த்தரை பாடுவோம்……)
நகரத்தின் வாசல் சுத்த பசும் பொன்னாகும்
நகரத்தின் அஸ்திபாரம் ரத்தின கல்லாகும் ஆ…. ஆ… (2)
சந்திர சூரியனின் வெளிச்சமோ அங்கில்லை (1)
இரட்சகர் இயேசுவே எந்நாளும் வெளிச்சமாம்
இயேசுவே வெளிச்சமாம் இயேசுவே வெளிச்சமாம்
(கர்த்தரை பாடுவோம்……)
பன்னிரண்டு முத்துக்கள் பரலோகில் ஜொலிக்கும்
வச்சிரக்கல் இந்திர நீலம் சந்திர காந்தம் ஆ…. ஆ… (2)
மரகதம் கோமேதகம் மனம் மகிழ் புதுராகம் (1)
பத்மராகம் சுவர்ண தங்கம் பரலோகில் பேரானந்தம்
பரலோகில் பேரானந்தம் பரலோகில் பேரானந்தம்
(கர்த்தரை பாடுவோம்……)












