சீர் திரியேக வஸ்தே நமோ நமோ – நின்
திருவடிக்கே நமஸ்தே நமோ நமோ (2)
பார் படைத்தாளும் நாதா பரமசற் பிரசாதா (1)
நாருறுந் தூய வேதா நமோ நமோ நமோ
(சீர் திரியேக வஸ்தே…….)
தந்தை பராபரனே நமோ நமோ – எமைத்
தாங்கியதரிப்போனே நமோ நமோ (2)
சொந்தக் குமாரன் தந்தாய் சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்கும்மெந்தாய் நமோ நமோ நமோ
(சீர் திரியேக வஸ்தே…….)
எங்கள் பவத்தினாசா நமோ நமோ – புது
எருசலேம் நகர் இராசா நமோ நமோ (2)
எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ் கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ
(சீர் திரியேக வஸ்தே…….)
பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ – திட
பலமளித் தெமைக் கா வா நமோ நமோ (2)
கரிசித்துத் தா நற்புத்தி கபடற்ற மனச்சுத்தி
திருமொழி பற்றும் பக்தி நமோ நமோ நமோ
(சீர் திரியேக வஸ்தே…….)














